உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, February 12, 2015

தாய் மதம் திரும்புவாரா? "தறுதலைகளின் தலைவர்"


'மொள்ளமாறி தனம் பண்ணினாலும் முடிசவிக்கி தனம் பண்ணினாலும் உலகம் நம்மை உத்துப் பார்க்க வேண்டும்' என சிலர் விளம்பர பித்துப் பிடித்து அலைவதையும் அத்தகையர்களுக்கு கடைசியாக மக்களிடமிருந்து கிடைக்கும் செருப்படியையும் நிதர்சனமாக கண்டுவருகிறோம். அப்படிப்பட்ட சின்னப்புத்தி கொண்ட ஒருவர் போகிறபோக்கில் சம்பந்தமில்லாத இடத்தில் வீண்வம்பிழுத்து சென்றுள்ளதால் அவருக்கு புரியும் பாஷையிலேயே திருப்பித் தரப்படுகிறது.

குறிப்பு: வழிகேடன் வரம்பு மீறிய அதே அளவுக்கு நாமும்; பதிலுக்கு பதில் வரம்பு மீறியுள்ளோம் என்பதை கவனத்தில் கொண்டு தொடர்ந்து படிக்க வேண்டுகிறோம்.

சில பேருக்கு விளக்குமாற்று அடி வாங்கவில்லை என்றால் பொழுதுபோகதாம் அப்படிப்பட்ட ஒரு சிலர் தலைநகரில் இருக்கின்றார்கள், அவசரப்பட்டு டெல்லியை கற்பனை பண்ணாதீங்க! நம் தமிழ்நாட்டு தலைநகரில் உள்ள ஒரு மத வியாபாரியை பற்றித் தான் சொல்கிறோம்!

மிக சமீபத்தில் நடந்து முடிந்த விவாதத்தில் வழிகேடனால் நடத்தப்படும் மூடர்கூடம் வழமைபோல் இங்கேயும் ஸஹீஹான ஹதீஸ்களை ஹாயாக மறுக்க வந்து முட்டுசந்துக்குள் மாட்டிய அந்த 'ஜந்து' மாதிரி விழிபிதுங்கி நின்றதன் சாட்சிகளாக வீடியோ பதிவுகள் இணையம் முழுவதும் முழுமையாக பரவிக்கிடக்கின்றன. இப்படி கண்ணுக்கு முன் சாட்சிகள் இருக்கும் போது அதையே தனது வெற்றியின் சின்னங்களாக சித்தரிக்கின்ற துணிவு வருகிறதென்றால் இவர் எப்பேற்பட்ட நெஞ்சழுத்தமுள்ளவராக இருப்பார் என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஒருவேளை கோயபால்ஸ் பிறப்பதற்கு முன்னால் இவர் பிறந்திருந்தால் அந்த இடத்தை கண்டிப்பாக இவர் பெயரே நிரப்பி இருக்கும், பாவம் கோயபல்ஸ்.

கடைசியாக மவ்லவி அன்சர் தப்லீகி அவர்களுக்கு பதில் என்ற பெயரில் கிறுக்கிய கடித்தை படித்தால் நீங்கள் கண்டிப்பாக இப்படித் தான் முடிவு செய்திருப்பீர். ஓன்று இந்த கடிதத்தை அல்லாஹ்வால் 'இல்ம்' பறிக்கப்பட்ட ஒரு ஞானசூனியம் எழுதியிருக்க வேண்டும் அல்லது அவர்கள் குல வழக்கப்படி எவனோ எழுதிக் கொடுத்த பேப்பரில் ஆத்திரம் உச்சிக்கேற அறிவிழந்த நிலையில் கையெழுத்திட்டிருக்க வேண்டும் என்பதாகவே முடிவு செய்வீர்.(இன்னும் எத்தனை நாளைக்குத் தான் அடுத்தவர்களின் பிள்ளைகளுக்கு தன்னுடைய இனிஷியலை போட்டு அழகு பார்ப்பாரோ. உம்: மவ்லவி அப்பாஸ் அலியின் ஆன்லைன் பதில்கள்)

பொய் புரட்டையும், அவதூறுகளையும் அள்ளித் தெளித்திருக்கின்ற அந்த கடிதத்தில் முன்னுக்குப்பின் முரணாக எதற்காக தேவையற்ற விஷயங்களை கிறுக்கித் தள்ளியுள்ளார் என தெரியவில்லை. உங்களுக்கு தேவையற்ற விஷயங்களை மவ்லவி அன்சர் தப்லீகி அவர்கள் குறிப்பிடுவதாக சாடும் வழிகேடர்களின் தலைவரே அதை நீங்களும் தானே பின்பற்றியிருக்க வேண்டும் என்ற சிற்றறிவு கூட இல்லாமல் போனதேன், இப்போதும் ஊருக்கு மட்டும் தான் உபதேசமா?

ஏற்கனவே உமது குஞ்சுகள் இணையத்தில் எடுத்த பித்த வாந்தியால் தான் அதிரையில் சரமாரியாக அவமானப்பட நேர்ந்தது, அல்லாஹ்விற்கே புகழனைத்தும். இப்போது நீரே களத்திற்கு வருகிறீர் என்றால் வாரும் இன்னொரு 4 நாட்கள் உங்களுக்கு பிடித்த விவாத விளையாட்டை ஆடிப்பார்ப்போம். தனியாக வர உங்களுக்கு தைரியமில்லை என்றால் உங்களுடைய இணை, துணை குஞ்சுகள் புடைசூழ வாரும்!

இதற்கிடையில், சகோதரர் மீடியா மேஜிக் நிஜாமுதீன் பல ஆண்டுகாலமாக உங்களின் வழிதவறிய மார்க்க விஷயங்கள் குறித்தும், உங்கள் தலைமை முதல் கிளை வரையுள்ள ஆசாமிகளின் யோக்கியதை பற்றியும் வைத்திருக்கும் பட்டியல் அடிப்படையில் விவாதிக்க தனிப்பட்ட முறையில் கொடுத்த கடிதத்திற்கு பதில் கூட தர முடியாத கோழைகள் நீங்கள் என்பதை நினைவில் கொள்க. 

உங்களின் மூடர்கூட 'பட்டும் திருந்தாத குஞ்சுகள்' மீண்டும் தங்களின் குல வழக்கத்தை ஆரம்பித்து வாங்கிக்கட்டிக் கொள்ள பழைய பாணியில் மீண்டும் வரிசைகட்டி நிற்கிறார்கள். குஞ்சுகளின் ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக மேலும் தாமதிக்காமல் சகோதரர் நிஜாமின் விவாத அழைப்புக்கு பகிரங்கமாக ஒப்புக்கொள்ளுங்கள்.

அதேவேளை குர்ஆன் சுன்னா அடிப்படையில் மார்க்கத்தை பின்பற்றும் எந்த மக்களுடனும் விவாதிக்க தகுதியோ தராதரமோ 'மார்க்கக் கல்வியறிவு' பிடுக்கப்பட்ட முஹ்தஸ்ஸிலா பாதை வழிகேடர்களுக்கு இல்லை என்பதையும் கனவிலும் மறக்க வேண்டாம் என்றாலும் இது உங்களுக்காக வழங்கப்படும் கடைசி ஸ்பெஷல் ஆஃபர்.

எதற்காக இந்த பதிலடி என தெரிந்து கொள்ள விரும்பும் சகோதரர்கள் கடைசியாக இந்த முஹ்தஸ்ஸிலா கும்பலின் தலைவர் கையெழுத்திட்டு மவ்லவி அன்சர் தப்லீகி அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தை, குறிப்பாக இரண்டாம் பக்கத்தை படித்து தெரிந்து கொள்க.

இறுதியாக ஒன்றை கூறி முடிக்கின்றோம், சிலவேளைகளில் உங்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக உங்களுடைய பாஷையிலேயே எழுதினாலும் அதை மனவலியுடனே வேண்டா வெறுப்பாகவே, உங்களுடைய மறைமுக அழுத்தத்தின் காரணமாகவே செய்கின்றோம் ஏனென்றால் எங்களைப் போன்றவர்கள் உங்களை அல்லாஹ்விற்காக மட்டும் நேசித்தவர்கள் என்பதை மறக்க வேண்டாம் இப்போதும் காட்டிக் கொடுக்கும் போக்கு, தரீக்கா கட்டமைப்பு, ஹதீஸ் மறுப்பு, முஹ்தஸ்ஸிலா கொள்கை போன்ற பல மார்க்க விரோத செயல்பாடுகளிலிருந்து விடுபட்டு மீண்டும் குர்ஆன் ஹதீஸ் எனும் தூய தாய் மதமாம் இஸ்லாமிய மார்க்கத்தின் பால் திரும்பினால் அல்லாஹ்விற்காக உங்களை மீண்டும் அரவணைக்கும் மார்க்க சகோதரர்களை பழையபடி காண்பீர். ஏனென்றால் இப்போது உங்களை சுற்றியுள்ளவர்களைப் போல் கொடிபிடிக்கவும், கோஷமிடவும், விளம்பரக்கூட்டம் காட்டவும் மட்டுமே தெரிந்த, சிந்திக்கத் தெரியாத முட்டாள் கூட்டமல்ல உங்களை விட்டும் அல்லாஹ்விற்காக பிரிந்தோர்.No comments:

Post a Comment