உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, February 1, 2015

அதிரையில் இணைவைப்பு இல்லாத 'தூய்மை மஸ்ஜீத்' திட்டம் செயல்படுத்தப்படுமா ?

பிஸ்மில்லாஹ்…

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது நபி முஹம்மத் ஸல்லால்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் காட்டித்தராத மௌலூது இணைவைப்புப் பாடல்களை இபாதத்தாக மஸ்ஜித்களில் அரங்கேற்றுவதன் மூலம் நம்மைச் சுற்றியுள்ள மஸ்ஜித்கள் ஒவ்வொன்றாக ஓரிறைவனான அல்லாஹ்வை வணங்குவதற்குத் தகுதியற்றதாகி வருவது வேதனையளிக்கிறது!

இந்த மாதம் செக்கடி பள்ளியில் நடந்தது போல், சென்ற மாதம் இவ்வாறான நிகழ்சி நடந்ததை விமர்சித்து இணையதளத்தில் வந்த இரு கருத்துக்கள் இங்கு குறிப்பிடத்தக்கவை.

1. "இது ஒரு செய்தியா,
(நானும் முதலில் இவ்வாறான கருத்தையே கொண்டிருந்தேன்! இப்படியான (கெட்ட)செய்தியும் இங்கு வருவதால் தானே அதற்கு மறுப்பாக/மாற்றாக அத்"தீமை"யைத் தடுக்கச் சொல்லி நல்ல செய்திகள் எழுத வாய்ப்பு கிடைக்கிறது!)

2.  "****ஹஜ்ரத் அவர்கள் (இப்பள்ளியின் இமாம்) கடந்த வருடம் ஹஜ் செய்து பாவமன்னிப்பிலிருந்து பாலகனாக சென்ற பின்னும் இந்த ஷிர்கான மௌலூதை விடுவதாக இல்லையா? ஷிர்க்கைவிட்டு அல்லாஹ் பாதுகாப்பானாக.."

இரண்டாமவரின் கருத்தைப் படித்த உடன் "எய்தவனிருக்க அம்பை நோகலாமா?" என்ற முதுமொழியே என் நினைவில் வந்தது.

நம் பள்ளிகளுக்குத் தொழ வருபவர்களும் பள்ளி நிர்வாகத்தினரும் மார்க்க விழிப்புடன் இருந்தால் அந்த இமாமே விரும்பினாலும் இவ்வாறான மார்க்கத்தில் இல்லாத அனாச்சாரங்களான மௌலூது என்ற இணைவைப்புப் பாடல்களை அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளில் அரங்கேற்ற இயலாதல்லவா?

அந்த இமாமை விமர்சித்து கருத்து எழுதியிருந்தவர் கவனிக்கத் தவறியவை சில நம் சிந்தனைக்கு:
1. அந்த இமாம் இணைவைப்புச் செயலை முன்னின்று நடத்துகிறாரே அவரைப் பின்பற்றி நாம் தொழலாமா?

2. அந்த மௌலூது நிகழ்வில் கலந்து கொண்ட, அந்த நிகழ்ச்சி குறித்த புகைப்படத்தொகுப்பில் இடம்பெற்ற ஒருவர் நமதூரில் பிரபலமான ஹஜ் சேவை நிறுவனம் நடத்துகிறார்! அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவருக்கு நாம் ஆதரவளிக்கிறோம்! அவரது ஹஜ் சேவை நிறுவனத்தின் மூலம் நாம் ஹஜ்/உம்ராவுக்குச் சென்று அவரது வியாபாரத்திற்கு ஆதரவளிக்கலாமா? மற்றும் அதில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் அல்லாஹ்வின் முன் தண்டனையில் இருந்து தப்ப முடியுமா?

3. இதே நம் பள்ளி நிர்வாகத்தினர், மார்க்க/கல்வி விழிப்புணர்வு கருத்தரங்குகளை எல்லாம் நடத்துகின்றனர்! இவை எல்லாம் சொல் ஒன்று, செயல் வேறான முரணான (முனாஃபிக்கான) நயவஞ்சகச் செயல்களில்லையா?

4. நம் பள்ளிகளின் நிர்வாகத்தினர் இஸ்லாத்தின் ஓரிறைக்கோட்பாட்டிற்கே குந்தகம் விளைவிக்கும் இவ்வாறான இணைவைப்புச் செயல்களை அரங்கேற்ற அனுமதிப்பதன் மூலம் அல்லாஹ்வின் இல்லங்களான மஸ்ஜிதுகளை அல்லாஹ்வை வணங்கத் தகுதியற்றதாக்குகின்றதை அவர்கள் உணர்ந்து நம் மஸ்ஜிதுகளை இவ்வாறான இணைவைப்புத் தீமைகளில் இருந்து தடுத்துத் தூய்மைப் படுத்துவது எப்போது?!

5. இஸ்லாத்தில் "நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பது" பிரித்துப் பார்க்க முடியாத ஒரே செயல். நமதூர் அனைத்து மஸ்ஜிதுகளிலும் தடையில்லாது நன்மையை எத்திவைக்கும் தப்லீஃக் ஜமாஅத்தினர் நன்மையை ஏவுவதோடு நின்று விடாமல் நம் மஸ்ஜிதுகளில் நடக்கும் இவ்வாறான இணைவைப்பு மௌலூதுத் "தீமை"களைத் தடுக்க வேண்டாமா?

6. நன்மையை ஏவுவது எளிது. எவரும் எதிர்க்கமாட்டார்; தீமையைத் தடுப்பதே கடினம். அதிலும் அதிக நன்மை இருக்கிறது. தீமை அகன்று விட்டாலே இன்ஷாஅல்லாஹ் நாமும் முயன்றால் நன்மை தானாக வந்து விடும். தீமைகளிருக்க அதைத்தடுக்காது நன்மைகளை மட்டும் ஏவிக்கொண்டிருந்தால் இவ்வாறான இணைவைப்புத்தீமைகளோடு சேர்ந்த நன்மையால் என்ன பயன் ?

7. இவ்வாறான அநியாயங்களை எல்லாம் நம் ஊர் மக்கள், அறிஞர்கள், பெரியவர்கள், இளைஞர்கள் ஆகியோர் கண்டுகொள்ளாமல் இருக்கலாமா?

இன்னும் பல…

"மக்கள் எவ்வழியோ அவ்வாறே தலைவனும்" என்பது போல நமதூரின் பெரும்பாலான மக்களின் மனநிலைக்கேற்றவாறே நம் மஸ்ஜிதுகளின் இமாம்களும் இருக்கிறார்கள். மஸ்ஜித்களில் நடக்கும் இவ்வாறான இணைவைப்புச் செயல்களுக்கு பொதுமக்களான நாமும் அந்தந்த மஸ்ஜித் நிர்வாகமும் தான் பொருப்பேற்க வேண்டும். அதை விடுத்து ஏழை ஊழியரான அந்த மஸ்ஜிது இமாமை மட்டும் குற்றம் சொல்வது பொதுமக்களான நமது கடமையிலிருந்து தப்பிக்கும் செயல்! கயமையும் கூட.

எவருக்கும் அஞ்சாமல் நமக்கு இஸ்லாத்தை எத்திவைத்த அறிஞர்கள் எல்லாம் நம்மை விட்டுச் சென்று விட்டார்கள். பொதுமக்களான நாம் மார்க்க விழிப்புணர்வு அடையாதவரை இதற்கு விடையில்லை.

மோடியின் ஆட்சியில் பம்மாத்து "தூய்மை இந்தியா" திட்டம் பிரபலமான இத்தருணத்தில் நமதூர்களிலும் இணை வைப்பில்லாத "தூய்மை மஸ்ஜிதுகள்" திட்டத்தை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

சிந்திப்போம்; செயல்படுவோம்.

- ஷாஃபி M I
Thanks to: http://www.adirainews.net/2015/02/blog-post_2.html

No comments:

Post a Comment