உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, January 7, 2015

செடியன்குளம்: உடனடி நடவடிக்கை தேவை !

நமது அதிரைநியூஸ் தளத்தில் 'கானல் நீராகும் செடியன்குளம்'செடியன்குளம் செவிடன் காதில் ஊதிய சங்கா ? போன்ற தலைப்புக்களில் வெளிவந்த விழிப்புணர்வு கட்டுரைகளை தொடர்ந்து செடியன்குளத்தை நேரில் பார்வையிடும் வாய்ப்பு கிடைத்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அவசியத்தை அனுபவபூர்வமாக உணர்ந்தோம்.


ஜலதோஷம் பிடித்தவர் மருந்து எடுத்துக் கொண்டால் ஒரு வாரத்தில் குணமாகும் சும்மா இருந்தால் 7 நாட்களில் சரியாகும் என நாம் விளையாட்டாய் பேசிக் கொள்ளும் நிலையில் தான் இன்றைய செடியன்குளத்தின் நிலையும் உள்ளது. வீணாக கசியும் தண்ணீரால் எப்படியும் இன்னும் ஒரு மாத காலத்தில் தண்ணீர் தானாக பெருமளவில் குறையப்பேவாது நிச்சயம்.

நேற்று [ 06-01-2015 ] தொலைக்காட்சிகளில், இன்னும் தொடர்ந்து 40 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக செய்தி வாசித்தார்கள். எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக சம்பந்தபட்டவர்கள் அரசுத்தரப்பை அணுகி செடியன்குளத்திற்கு ஆற்றுநீரை மீண்டும் கொண்டு வருவதற்காக முறையான முன்னேற்பாடுகளை செய்து கொண்டு கசியும் நீரை நிறுத்துவதற்கான நடவடிக்கைளில் ஈடுபட்டால் ஒருவேளை செப்பனிடும் போது குளத்துநீர் உடைத்துக் கொண்டு வெளியேறினாலும் மீண்டும் நிரப்பிவிட வாய்ப்புள்ளது.

மேலும் வெளியாகும் செடியன்குளம் தண்ணீர் பிலால் நகருக்குள் சென்றுவிடாமல் செடியன்குளத்தையே நம்பி இன்னும் நிறையாமல் இருக்கும் செய்னாங்குளத்திற்குள் போகும் வகையில் அதன் வடிகால் பாதைகள் சரிசெய்யப்பட வேண்டும்.

அக்கரையுள்ளவர்கள் சுட்டிக்காட்டுகின்றோம் இனி அதிகாரமுள்ளவர்கள் தங்களின் பொறுப்பையும் திறமையையும் நிரூபிக்க வேண்டும். மேலத்தெரு, கீழத்தெரு தன்னார்வலர்கள், இளைஞர்கள், சங்கத்தினர்கள் என அனைவரும் முன்வர வேண்டும் இதற்கு அதிரை பேரூராட்சி நிர்வாகம் சகலவகையிலும் ஒத்துழைப்பு தர முன் வர வேண்டும். செய்வீர்கள் என இன்னும் நம்புகிறோம்.

அதிரை அமீன்

செடியன்குளம் தண்ணீர் கசிவின் காரணமாக விரைவாக வெளியேறி வருவதை உணர்த்தும் கரையோர மண் படிமானம்...


No comments:

Post a Comment