உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, January 15, 2015

முஸ்லிம்கள் ஏன் தமிழர் திருநாளான பொங்கலை கொண்டாடுவதில்லை ?

தமிழர் திருநாள் எனும் பொங்கலை கொண்டாடுவதையோ வாழ்த்து சொல்லதையோ ஏன் முஸ்லிம்கள் தவிர்க்கிறார்கள் எனும் கேள்வி நிறைய தமிழ் சொந்தங்கள் மத்தியில் இருக்கிறது! 

முதலாவதாக பண்டிகை எனில் அது தத்துவங்களின் அடிப்படையில் சரியாக இருக்க வேண்டும்! இஸ்லாம் கூறும் இரண்டு பண்டிகைகளுமே இறைவனை வணங்குதல், இல்லாதவற்கு வழங்குதல் எனும் இரண்டின் அடிப்படையில் அமைந்து இருக்கும்!

பொங்கல் என்பது தமிழர்கள் திருநாள் அல்ல! அது உழவர்களின் திரு நாள்! விவசாயிகள் கொண்டாடினால் பரவாயில்லை! அனைவரும் கொண்டாடுவது எப்படி சரியாகும்! தமிழர்கள் எத்தனை பேர் விவசாயத் தொழில் செய்கின்றனர்?

அடுத்ததாக ஒருவரின் மத நம்பிக்கையை இன்னொரு சாராரும் ஏற்க வேண்டும் என்பதே தவறாகும்!

ஒரு அய்யரையோ, ஜெயினையோ, வள்ளலார் பக்தரையோ அழைத்து நாங்கள் பக்ரீத் பண்டிகைக்கு ஆடு அறுக்கிறோம்! நீங்கள் வந்து எங்களோடு கொண்டாட வேண்டும் என அழைத்தால் அதை நல்லிணக்கத்துக்கான அழைப்பு என்று கூறுவோமா ?

மற்றவர்கள் மத உணர்வுகளை மதிப்பது தான் நல்லிணக்கமாகும்! முஸ்லிம்களை பொறுத்தவரை வணக்கத்திற்கு உரியவன் இறைவனைத் தவிர யாரும் இல்லை எனும் கொள்கையை உயிராக கொண்டவர்கள்! அவர்கள் சூரியனை வழிபடும் பொங்கலையோ , அல்லது ஆடு மாடுகளை வழிபடும் விழாவிலோ பங்கேற்க வேண்டும் என நினைப்பது அய்யரை ஆடறுக்கும் விழாவுக்கு அழைப்பதைப் போன்றதாகும்!

முஸ்லிம்களிலும் சிலர் கொண்டாடுகின்றார்களே ? என்றால் அய்யர்களிலும் சிலர் அசைவம் சாப்பிடலாம் ! அதை அனைவருக்கும் பொதுவாக்க முடியாது!

வணங்கவில்லை நாம் நன்றிதான் செலுத்துகிறோம்! எனும் வாதமும் தவறு ! சூரியன் நாம் செலுத்துகின்ற நன்றியை உணருமா? ஆடு மாடுகள் நாம் செலுத்தும் நன்றியை உணர்ந்து கொள்ளுமா ? நன்றி செலுத்தப் படவேண்டியவன் இறைவன்!

முஸ்லிம்களை பொறுத்தவரை வணக்கம் படைத்தவனுக்கே தவிர படைப்பினங்களுக்கு அல்ல! 

தான் விரும்பாத ஒரு விஷயத்துக்கு வாழ்த்து சொல்வது என்பது நடிப்பாகவே இருக்கும்! 

மற்ற படி மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் உங்களோடு உறவு பேணுவதில் எங்களுக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை! 

ஆகையினால் எங்களின் தமிழ்ச சொந்தங்கள் எங்களின் நிலையை புரிந்து கொள்ள வேண்டும்! 

-செங்கிஸ்கான்.

No comments:

Post a Comment