உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, July 22, 2014

முஸஃபாவில் நடைபெற்ற தஃவாவுடன் கூடிய இஃப்தார்

ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபி, முஸஃபா, ஐகாட் சிட்டி 2ல் அமைந்துள்ள போர்ஸிலான் மற்றும் ஜிப்செம்னா கம்பெனி சகோதரர்களால் இந்த வருடமும் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி 20.07.2014 ஞாயிறன்று ஏற்பாடு செய்யப்பட்டது. 



இந்நிகழ்ச்சியில் முஸலீம்களுடன் ஏராளமான தமிழ் சகோதரர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர், இந்நிகழ்வில் முக்கிய நோக்கமே பிற மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைப்பதும் ஒன்றாகும் அதனடிப்படையில் இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள மவ்லவி முஹமது நாசர் அவர்கள் கலந்து கொண்டு 'இஸ்லாம் கூறும் மனிதநேயம்' என்ற தலைப்பின் கீழ் இஸ்லாத்தின் சிறப்புகளை எடுத்துக் கூறினார்.





இறுதியாக, ஏற்கனவே இஸ்லாத்தை தழுவியிருந்த முஹமது என்ற சகோதரர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிற மத சகோதரர்களுக்கு தஃவா தொடர்புடைய இஸ்லாமிய புத்தகங்களை வழங்கினார்.

பயன் தரும் நினைவூட்டல்‏

ரமளானில் தவிர்க்கப்பட வேண்டியவைகள் (v)

ஜும்ஆ குத்பா பேருரை
வழங்கியவர்: அஷ்ஷைஹ் முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம்.
நாள்: 18 ஜூலை 2014 வெள்ளிக்கிழமை.
இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப்

___________________________________________________________________

இளைஞர்களும் இணைய தளமும் (v)
ரமளான் முழு இரவு நிகழ்ச்சி
வழங்கியவர்: மெளலவி, பக்ருதீன் இம்தாதி,
அழைப்பாளர் SKS கேம்ப் அல்-ஜுபைல்
இடம்:  அல்-ஜுபைல் தஃவா நிலையம்
நாள் : 17 – 07 – 2014 வியாழக்கிழ‌மை

____________________________________________________________________

மறுமையும் அந்த நான்கு கேள்விகளும் (v)

ரமளான் முழு இரவு நிகழ்ச்சி
வழங்கியவர்: அஷ்ஷைஹ் எம். என். நூஹ் மஹ்ழரி, அழைப்பாளர், IDGC தஃவா நிலையம்
இடம்:  அல்-ஜுபைல் தஃவா நிலையம்
நாள் : 17 – 07 – 2014 வியாழக்கிழ‌மை

______________________________________________________________________

வறுமை ஒழிப்பில் இஸ்லாம் (v)

ரமளான் முழு இரவு நிகழ்ச்சி
அஷ்ஷைஹ் முஜாஹித் இப்னு ரஸீன் 
அழைப்பாளர் ராக்கா தஃவா நிலையம், அல்கோபார்
இடம்:  அல்-ஜுபைல் தஃவா நிலையம்
நாள் : 17 – 07 – 2014 வியாழக்கிழ‌மை

_________________________________________________________________________
__._,_.___

Posted by: Suvana Cholai <suvanaccholai@gmail.com>

'அதிரையை பரபரபாக்கும் உண்மையான தவ்ஹீத்வாதிகள்?!' - மறுப்பும் விளக்கமும்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

அதிரைநியூஸ் என்ற வலைதளத்தில் 'அதிரையை பரபரபாக்கும் உண்மையான தவ்ஹீத்வாதிகள்?!' என்ற தலைப்பில் வெளிவந்திருந்த தலையங்கத்திற்கு அனுப்பிய மறுப்பு (கமெண்ட் பகுதியில் பதியப்பட்டுள்ளது).


நுனிப்புல் மேய்ந்த ஆய்வு!

குற்றமும் குற்றவாளிகளும் முறையாக அடையாளப்படுத்தப்படாமல் ஏதோ ஏட்டிக்குப் போட்டியான அமைப்புகள் என்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஃபலஸ்தீன சகோதரர்களுக்காக குறைந்தபட்சம் நாம் இறைவனிடம் முறையிட வேண்டும் என்பதை இயக்க அடிப்படையில் தான் செய்ய வேண்டுமா? இந்த ரமலானில் ADT அங்கத்தினர்கள் சுயமாக செய்திருக்க மாட்டார்கள் என எப்படி நீங்கள் முடிவு செய்தீர்கள் மேலும் ஃபலஸ்தீன பிரச்சனையில் மட்டும் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும் என ஏன் எதிர்பார்க்கின்றீர்கள்?!

மிக சமீபத்தில் ADT மீது திணிக்கப்பட்ட விடயங்களில் மட்டுமே பதில் நிகழ்வுகள் அமைந்திருந்தன என்பதை நடுநிலையான, சிந்திக்கின்ற அதிரையர் அனைவரும் அறிந்த ஓன்றே!

ADT என்றுமே தாங்கள் தான் உண்மையான தவ்ஹீத்வாதிகள் என்று வாதிட்டதில்லை ஆனால் யாரென்று தீர்மானிக்க அல்லாஹ் போதுமானாவன்.

ஓரு தனி மனிதனின் அறிவுக்கு எட்டவில்லை என்பதற்காக தமிழக அளவில் ஒரு பெருங்கூட்டமே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்கும் வழிகேட்டுக் கொள்கையில் இறங்கியிருப்பதை தடுக்கும் கடமை உங்களுக்கு இல்லை? அட்லீஸ்ட் ADT செய்யும் போதாவது மௌனமாக ஆதரவு தரலாமே!

ADT ஒரு அமைப்பல்ல மாறாக அது குர்ஆன் ஹதீஸை மட்டும் தங்கள் வாழ்வியலாக ஏற்றவர்களின் நமதூருக்கான (அமைப்பு எனும் தோற்றத்தில் அமைந்த) சங்கமம் அன்றி வேறில்லை. ஏனெனில் இங்கே,

தக்லீது கிடையாது அதனால் எங்களுக்கே உறுப்பினர்கள் அதிகம் என்ற தம்பட்டம் கிடையாது

கட்சி நிலை கிடையாது அதனால் கொடியும் கிடையாது

தலைவனின் சொல்லுக்கு அப்பீல் கிடையாது என்ற நிலையும் இல்லை

சொல்வதும் செயல்படுத்தப்படுவதும் குர்ஆன் ஹதீஸ் மட்டுமே.

இயக்க உறுப்பினர்கள் மட்டுமே சுவர்க்கம் செல்ல முடியும் என மதமதப்பில் திரிவதும் கிடையாது.

யரோடும் நீயா? நானா? போட்டியில் இறங்குவதும் கிடையாது.

யாரிடமும் வீண் வம்புக்கும் போவதும் கிடையாது ஆனால் பல் பிடித்து பார்ப்பவர்களை விடுவதும் கிடையாது.

ADT யில் எந்த அமைப்பினர்களும் குர்ஆன் ஹதீஸை (அதிரையர்கள்) தங்கள் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டால் உறுப்பினர்கள் ஆகலாம் ஆனால் எந்த அமைப்பின் நிர்வாகிகளும் இங்கே ADT நிர்வாகத்திற்குள் வர முடியாது.

எனவே, ADT யை பத்தோடு பதினொன்றாக பார்க்க வேண்டாம் என்று கூறி இத்துடன் நிறைவு செய்கிறேன், மீண்டும் தேவையெனில் வருவேன் ஆனால் இயக்கவாதிகளின் சவடால்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க மாட்டேன். வஸ்ஸலாம்.

குறிப்பு: இது எங்கள் தரப்பு விளக்கமே மற்றவர்கள் உங்கள் விமர்சனத்து உரியவர்களா என்பதை அனைத்து நிகழ்வுகளையும் நடுநிலையுடன் உற்று நோக்கி வரும் நடுநிலை அதிரையர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும்.

 அதிரை அமீன்

Monday, July 21, 2014

ஆத்திரத்தில் அறிவிழந்த அதிரை டீயென்டீஜே


மவ்லவி முர்ஷித் அப்பாஸி அவர்களை தனியாகத் தான் சந்திப்போம் என அதிரை டீயென்டீஜே வழிய, பெருந்தன்மையாக அதிரை தாருத் தவ்ஹீதும் வழிவிட பேச்சுவார்த்தையை சந்தைக்கடாக்கிய காட்சிகளை காண..

அதிரை டீஎன்டீஜே யுடன் பேச்சுவார்த்தை



மவ்லவி ஹைதர் அலிக்கும் மவ்லவி முர்ஷித் அப்பாஸிக்கும் வித்தியாசம் தெரியாத அதிரை டீயென்டீஜே

மேலத்தெருவில் தினமும் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் தான் அல் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் பள்ளியில் உரையாற்றி வருகிறார். ஒருவேளை "அவரைத்தான் இவருன்னு" நினைத்து விட்டனரோ, காலக் கொடுமையடா!

மவ்லவி முர்ஷித் அப்பாஸி அவர்கள் அதிரையின் ஊர் மத்தியில் நடுத்தெருவில் தொடர்ந்து 20 நாட்கள் இரவு வேளையில் உரையாற்றிக் கொண்டிருந்த நிலையில், மேலும் அதே தினங்களில் காலை வேளையில் அதிரை டீயென்டீஜேயினரின் தக்லீத் மடத்திற்கு அருகிலுள்ள பிலால் நகர் ITC மர்கஸில் பெண்களுக்கான தொடர் பயான் நிகழ்த்திக் கொண்டிருந்த நிலையில், மேலும் பயான் இல்லாத மற்ற நேரங்களில் தக்வா பள்ளிக்கு அருகிலிருக்கும் ஓர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் அவர்கள் முர்ஷித் அப்பாஸி அவர்களை தேடியது 'ஒரு பழமொழி சொல்வார்களே! இடையன் ஆட்டை தோளில் போட்டுக் கொண்டு மந்தையில் தேடினான்' என்பது போல் மேலத்தெரு பாக்கியாதுஸ் ஸாலிஹாத் பள்ளிக்கு முன் போய் தேடி நகைப்பிற்குரிய செயலை அரங்கேற்றி மக்கள் மத்தியில் கேவலப்பட்டனர்.

பருக்குச் சோற்றில் சூனியத்தை மறைக்கும் அதிரை TNTJ கிளை

ஸூரத்துந் நாஸ்(மனிதர்கள்)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
 
114:1    قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
 
114:2   مَلِكِ النَّاسِ
(அவனே) மனிதர்களின் அரசன்;
 
114:3   إِلَٰهِ النَّاسِ
(அவனே) மனிதர்களின் நாயன்.
 
114:4   مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ
பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).
 
114:5   الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
 
114:6   مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.
 
ரமளான் மாதத்தின் தொடக்கத்திலிருந்தே அதிரையில் மார்க்கப் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் சகோதரர் முர்ஷித் அப்பாஸி அவர்களை சில மாதங்களாக ஒடி ஒழிந்திருப்பதாக தகவல் பலகையை நிரப்பி இருக்கின்ற அதிரை TNTJ-யின் ஈனச் செயல் முகம் சுழிக்க வைக்கிறது. இருட்டில் தொலைந்ததை வெளிச்சமாக இருப்பதால் வேறு ஒரு இடத்தில் தேடும் அதிரை TNTJ-யின் அதி மேதாவித்தனம்? இவர்கள் சிந்திக்கத் திறானியற்றவர்கள் என்பதையே பரைசாற்றுகிறது. அவ்வாறே தங்களுடைய தொண்டர்களும் எதையும் சிந்திக்காமல் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளாக இருப்பதால் தான் இப்படி முழுப் பூசனிக்காயை ஒரு பருக்குச் சோற்றில் மறைக்கும் சூனியத்தைச் செய்திருக்க வேண்டும்.

அதிரையில் பிரச்சாரம் மேற்கொன்டிருக்கும் நபரை அதிரை TNTJ கிளை ஓடி ஒழிந்துகொன்டார் என்றும் அழைத்து வருபவர்களுக்கு தக்க பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிப்பு செய்திருப்பதும், பொறுப்பேற்று இடப்பட்ட தொலைப்பேசி எண்ணிற்குரிய நபர் அது தொடர்பாக தனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லியிருப்பதும், TNTJ-யின் நம்பகத் தன்மையையும், இவர்களுடைய ஏனைய அறிவிப்புகளும் விவாத அறைகூவல்களும் எவ்வளவு போலியானது என்பதையும், மேலும் இது போன்ற சவடால்கள் அனைத்தும் ரசிகர்களைத் தக்க வைக்கும் சூனியம் என்பதையும் சிந்திக்கத் தெரிந்த எவரும் எளிதில் உணர்ந்துகொள்ள முடியும்.





SMO
ஈமெயில் வாயிலாக

Sunday, July 20, 2014

இருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்!.



அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்!.
 
ஆக்கம்: அப்துல்லாஹ் மன்பஈ
 
 
நான் சரியான இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கிறேனோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

மார்க்க சம்பந்தமான அறிவு எனக்கு இருக்கிறதோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

என் மனைவி மக்கள், குடும்பத்தினருக்கு நான் இஸ்லாத்தைப் பற்றி கூறி நல்வழிப் படுத்துகிறேனோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

எனது இல்லத்தில் இஸ்லாத்திற்கு மாறான செயல்கள் நடப்பதைக் கண்டும் காணாமல் இருந்து விடுகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

மறுமை நாளைக்காக நான் எதை சேர்த்து வைத்திருக்கிறேன் என்று எண்ணிப் பார்க்க இந்த அவசர கால உலகத்தில் எங்கே முடிகிறது இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
 
ஐந்து வேளைத் தொழுவது கடமை என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் வேலைப் பளுவினால் என்னால் தொழமுடியவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

ரமலானில் நோன்பு வைப்பது கட்டாயம் என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும். இருப்பினும் பசி தாகம் சமாளிக்க.. நோன்பு வைக்க என்னால் முடியவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

என் தொழிலில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. எனினும் கணக்குப் பார்த்து ஜகாத் கொடுத்திட மனம் இடம் தரவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

என் வாழ்நாள் முழுவதும் ஓடி ஓடி உழைத்து ஓரளவு என் குடும்பத்திற்காக உழைத்து சேர்த்து ஓய்ந்து விட்டேன். இப்போது ஹஜ் செல்லும் அளவுக்கு என் உடலில் தெம்பு இல்லை இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

வீட்டில் அபிவிருத்தி வேண்டி மவ்லீது ராத்தீபுகளை புது புது மெட்டுகளில் ஓதி இறையருள் பெற முயற்சிக்கிறேன். இதெல்லாம் தவறு என்று உள்மனம் கூறுகிறது, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி கோருகிறோம்! என்று தொழுகையில் ஓதிவிட்டு அவ்லியாக்கள், பெரியார்களிடம் உதவி தேடுவது என் இரத்தத்தில் ஊறிப்போய்விட்டது, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

என் நாட்டம் நிறைவேற சலவாத்துன்னாறியா 4444 தடவை ஓதி துஆ கேட்கிறேன். இது குர்ஆன்-ஹதீஸில் இல்லை என்றாலும் என் மன ஆறுதலுக்காக, அபிவிருத்திக்காக இதை ஓதுவதற்கு ஏற்பாடு செய்கிறேன். இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

பால்கிதாப்-பில்லி-சூனியம்-ஏவல்-தகடு-தட்டு-தாயத்து-பேய்-பிசாசு-ஆவி எல்லாம் நம்புகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

பூனை குறுக்கே செலவது, பல்லி தலையிலே விழுவது, ஆந்தை அலருவது, காகம் கரைவது, ஸஃபர் பீடை மாதம்-கெட்ட சகுனம் என எல்லாம் பார்த்து பார்த்து ஒவ்வொரு வேலையும் செய்கிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

பலர் பாராட்ட கத்னா-பூப்புனித நீராட்டு விழாவை விமரிசையாக நான் நடத்துகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

புதுமனை புகுவிழாவிற்கு பால் காய்ச்சி விழா நடத்துகிறேன். குழந்தைக்கு தர்காவில் சென்று முடி இறக்கி மொட்டை போடுகிறேன். அவ்லியா சன்னிதானத்தில் ஆடு, சேவல் பலி தருகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

என் அம்மாவின் கடைசி ஆசைக்காகத்தான் மஹர் கொடுத்து மணம் புரியாமல் வரதட்சணை வாங்கிக் கொண்டு திருமணம் செய்தேன். என் மனைவியின் ஆசைக்காகத்தான் சுன்னத்தான தாடியை சிரைத்துவிட்டேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

என் தந்தையின் வற்புறுத்தலால் என் மகன் திருமணத்தை மேள தாளத்துடன் யானை ஊர்வலத்துடன் மிக ஆடம்பரத்துடன் நடத்துகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

வட்டி வாங்கக்கூடாது என்று வான் மறைக்கூறினாலும் கூட என் தொழில் வளர்ச்சிக்காக குறைந்த வட்டியில் வீடுகட்ட, கடை ஆரம்பிக்க, பைக் சவாரிக்காக வட்டி வாங்க வேண்டிய நிர்பந்தம். என்ன செய்வது? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

லாட்டரி சூதாட்டம்தான். அரசு அதனை தடை செய்திருந்தாலும் என்ன? நான் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை வாங்கி மறைத்து விற்பனை செய்து வருகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

குடி குடியைக் கெடுக்கும்! மது ஹராம்தான், ஆனால் எனக்கு டாஸ்மார்க் கம்பெனியில்தான் வேலை கிடைத்தது. கைநிரைய சம்பாதிக்கிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

சினிமா பார்க்கக் கூடாதாம்! இந்த காலத்தில் நடக்கக்கூடிய காரியமா என்ன? பேரும் புகழும் பேரின்பமும் பெற்றுத் தரும் கனவுத் தொழிற்சாலையல்லவா அது! பாம்பு மட்டும்தான் படம் எடுக்குமா? மக்கள் பாராட்டும் விதமாக நான் கூட படம் எடுக்கிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

அளவு நிலுவையில் மோசடி கூடாதாம். வியாபாரத்தில் பொய் கூடாதாம். (பரக்கத்) இறையருள் கிடைக்காதாம். பொய் சொல்லாமல், மோசடி செய்யாமல் எப்படி விரைவில் பணக்காரன் ஆவதாம்? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

ஒரு சாண் நிலம் ஆக்கிரமிப்பு செய்தாலும் மறுமையில் ஒரு பூமி அளவு நிலத்தை நான் சுமக்க வேண்டுமாம். பலரின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த, அந்த நிலத்தை திரும்பக் கொடுத்து விட்டு என் பிள்ளைகளுக்கு எதைக் கொடுத்துவிட்டுப் போவதாம்? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கூடாதாம். பிறகு எதற்கு உலகத்தில் வாழ்வதாம்? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

என் குடும்பத்தில் என் நான்கு பிள்ளைகள், நான்கு மத்ஹப்களில் இருக்கின்றனர். நானும் என் தம்பிகளும் எல்லா அரசியல் அமைப்பிலும் அங்கம் வகிக்கிறோம், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

கடவுள், பாவம், புண்ணியம், நீதி, நியாயம், உண்மை என்கிறவற்றில் நம்பிக்கை கிடையாது. ஏதோ உலகத்திலே பிறந்துட்டோம். முளைக்கிற செடி வளர்ந்து மரமாகிற மாதிரி நாமும் வளர்ந்துட்டோம். ஏதோ வாழந்துட்டு இருக்கிறோம். ஊரோடு இணைந்து போகத்தானே வேண்டும். இஸ்லாமிய அடிச்சுவட்டில் இக்காலத்தில் வாழ்ந்தால் உலகம் நகைக்காதா? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

(
அல்ஜன்னத்) ஆசிரியர்: போதும்! போதும்!! கொஞ்சம் இடம் கொடுத்தா, பக்கம் பக்கமாக மானம்-விமானம் ஏற்றிடுவீங்க போலிருக்கே..?.

ரேசன் கார்டிலும், வாக்காளர் அட்டையிலும், பள்ளி கல்லூரி சான்றிதழ்களிலும் மட்டுமே முஸ்லிமாக வாழ்பவர்களே! சிந்தியுங்கள். நமது வாழ்வும். மரணமும் தூய இஸ்லாத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்திட வேண்டும் என்பதை உள்ளத்தில் பதித்துக் கொள்ளுங்கள்.

நன்றி: அல் ஜன்னத் (2011).

பகிர்வு: அறந்தை அப்துல் ஹக்கீம்