உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, December 9, 2013

துபையில் நடைபெற்ற மவ்லவி. இஸ்மாயில் ஸலஃபி (இலங்கை) அவர்களின் நிகழ்ச்சிகள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

தர்பியா

06.12.2013 வெள்ளியன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை துபை, தெய்ரா, அல்பரஹா பகுதியில் அமைந்துள்ள அல் மனார் சென்டர் கிளையில், கருத்து வேறுபாடுகளை களைவது எப்படி? என்ற தலைப்பின் கீழ் மார்க்க விவகாரங்களை எவ்வாறு அணுக வேண்டும்? குர்ஆன் ஹதீஸ்களின் முரணாக நமக்கு தெரிபவற்றை எவ்வாறு விளங்க வேண்டும்? கருத்து வேறுபாடுகள் என்பது புதிதா? அல்லது ரஸூல் (ஸல்) அவர்களின் காலத்திலேயே இருந்த ஒன்றா? ஸஹாபாக்கள் இடையே ஏற்படும் இருவேறு கருத்துக்களின் போது எவ்வாறு நடந்து கொண்டார்கள் என பல்வேறு விடயங்களையும் மிக மிகத் தெளிவாக குர்ஆன் ஹதீஸ் ஒளியில் எடுத்துரைத்தார்கள்.மார்க்க சொற்பொழிவு

06.12.2013 வெள்ளியன்று இஷாவுக்குப்பின், அல்கூஸ் பகுதியில் அடைந்துள்ள அல்மனார் சென்டரில் 'வாழ்க்கையே வணக்கமாக' என்ற தலைப்பின் கீழ் இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள மார்க்க அறிஞர் இஸ்மாயில் ஸலஃபி அவர்கள் அழகியதொரு அறவுரை நிகழ்த்தினார்கள்.

இஸ்லாமிய மார்க்கத்தில் வாழ்க்கை வேறு, வணக்கம் வேறல்ல மாறாக ஒவ்வொரு செயலுமே இறை வணக்கம் தான் என பல்வேறு தரவுகளை கூறி நிறுவினார்கள். உதாரணமாக, நம்முடைய தொழுகை மட்டுமல்ல வணக்கம் தனிப்பட்ட தேவைகளான உணவு சாப்பிடுதல், வியாபாரம், கழிப்பிடம் செல்லுதல், இல்லறம், உறக்கம் என ஒவ்வொன்றும் எவ்வாறு வணக்கமாக அமையும் விளக்கினார்கள்.

இறுதியாக, பேசப்பட்ட தலைப்பிலிருந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. நீண்ட நாட்களுக்குப்பின் நல்லதொரு சொற்பொழிவினை செவிமடுத்த நிறைவுடன் நிறைந்த அரங்கினர் கலைந்து சென்றனர், அல்ஹம்துலில்லாஹ்.
அதிரைஅமீன்

No comments:

Post a Comment