உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, November 10, 2013

முத்துப்பேட்டை லகூன் எனும் சதுப்பு நிலக்காடுகளுக்குள் ஓர் உலா

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அமீரகத்துல கிடைக்கின்ற சொற்ப லீவுல, வேலைப்பளுவால் மண்டை காய்ந்து ஊருக்குப் போகின்ற நமக்கு ஆறுதல் நம்ம குடும்பம் குட்டிகள் தான், அதுவும் அவர்களுடன் சேர்ந்து ஒரு சுற்றுலாவோ, பிக்னிக்கோ போய் வந்தால் அது இன்னும் மன இறுக்கங்களை குறைக்கும் ஒரு அருமருந்துங்க.
 
 

சுனாமியை அழிவின் சின்னமாக நாம் அறிவோம் ஆனால் அதே சுனாமியால் அழகையும் ஏற்படுத்த முடியும் என்பதன் சின்னஞ்சிறு சாட்சியே நமதூரை ஒட்டியுள்ள கீழத்தோட்டம் கடற்கரை மணற்பரப்பு.

அழிவையும், அழகையும் ஏற்படுத்த வல்ல சுனாமியையே மண்டியிடச் செய்யும் சதுப்புநில காடுகள் அதிரை வரை படர்ந்திருப்பது எல்லாம் வல்ல ரஹ்மான் நம் மீது கொண்டுள்ள கருணையே அன்றி வேறில்லை.

சதுப்புநில அலையாத்திக் காடுகளையும் கடலையும் ஒட்டி சூழ்ந்துள்ள நண்ணீர் பகுதியே லகூன் என அறியப்படுகின்றது.
 

 


முத்துப்பேட்டை லகூன் என்ற பெயரை சிறுவயது முதல் அறிந்திருந்தாலும் போக வாய்க்கவில்லை ஆனால் இந்த வருட ஹஜ்ஜூப் பெருநாளைக்கு கிடைத்த ஒரு வார கேப்புல ஊருக்கு போன நமக்கு தலைக்கு மேல சொந்த வேலைகளும், நிலத்திருடர்களின் தொந்தரவுகளும் ஏராளம் இருந்தாலும் நண்பன் அப்துல் ரஹ்மான் கை கொடுக்க, குடும்பத்துடன் முத்துப்பேட்டை லகூனுக்கு சென்று வந்தோம்.

 


லுகூனுக்குச் செல்ல வனத்துறையிடம் முன் அனுமதி பெறவேண்டும் என கேள்விப்பட்டிருந்ததால், நண்பர் அப்துல் ரஹ்மான் தன் உறவினர் மூலம் அறிமுகமான முத்துப்பேட்டையை சேர்ந்த ஒரு சமுதாய இயக்க சகோதரரை மொபைலில் தொடர்பு கொண்டு உதவி கேட்க, அவரும் உங்களுக்கான முன்அனுமதி மற்றும் படகு எல்லாம் ரெடி என துண்டை போட்டு தாண்டாத குறையாக வாக்குறுதியளிக்க, அடுத்த நாள் காலையிலும் மீண்டும் அவரிடம் மறுஉறுதி செய்து கொண்டு பகல் 12 மணிக்கெல்லாம் ஸபாட்டுக்குப் போனா... அந்த இடத்துல ஒரு சில மீனவ சகோதரர்களை தவிர வேற யாரையும் காணோம். மீண்டும் மீண்டும் மொபைல்ல உள்ள நம்பர் தேய்கிற அளவு அடிக்க அடிக்க ரிங் மட்டும் தாங்க போனது, எடுத்துப் பேச நாதியில்லை. சரி அவருடைய இயக்க சகாக்கள் மூலம் என பல்வேறு வகையிலும் முயற்சித்த போதும் இன்று வரைக்கும் ஆளாக்காணோம். நாமாவது பரவாயில்ல, பிக்னிக் என்பதால் சமாளித்து விட்டோம் ஆனால் இவர்களை நம்பிச் சென்ற சமுதாய பிரச்சனைகள், சமுதாய சகோதரர்கள் என எத்தன பேர இப்படி டீல்ல விட்டிருப்பார்கள் என நினைக்கும் போதே கண்ண கட்டிருச்சுங்க. நாமும் தான் ஒரு காலத்துல இதே இயக்கத்துக்கு நகரத் தலைவரா இருந்தோம்னு தேவையில்லாத ஒரு நினைப்பு வேற வந்து தொலச்சது. ஒரு தகவலுக்காக சொன்னேன், சரி விடுங்க நாம பார்க்க வந்த லகூன பார்ப்போம்.
 


அங்கிருந்த மீனவ சகோதரர்களை அணுகி, போட்டுக்கு ரேட்டு பேசி, அவர்கள் மூலமே வனத்துறையிடம் முறையான அனுமதியும் பெற்று புறப்படும் போது மணி மாலை 2.30யை தாண்டிவிட்டது. இருபுறமும் அலையாத்திக்காடுகள், தண்ணீரிலும் மரங்களிலும் அரிதாக காணப்படும் பறவைகள், ஆங்காங்கே அலையாத்திகாடுளால் உருவாக்கப்பட்ட குட்டி குட்டி தீவுகள், எங்கும் நீர்ப்பரப்பும், பசுமையும் என சுமார் ஒரு மணி நேரம் மெல்லச் செல்லும் அலுக்காத படகு பயணம், டிஸ்கவரி சேனல்ல நாமே போற மாதிரி ஒரு ஃபீலிங் வரும். ஆறும் கடலும் சேருமிடம் வரை செல்லும் படகு அப்படியே  "U" டர்ன் அடித்து திரும்புகிறது.


 

வரும் வழியில், ஒரு குட்டி தீவில் இறக்கிவிடுகிறார்கள். தீவின் குறுக்காக அமைக்கப்பட்டுள்ள நீண்ட மரப்பாலம் வழியாக நான்கு புறமும் குழந்தைகள் ஒடியாட, கரையோரம் அமைக்கப்பட்டுள்ள இளைப்பாறும் குடிசைகளில் தென்றல் தாலாட்ட, கொண்டு வந்த உணவை அங்கேயே பகிர்ந்து சாப்பிட்டு, சிறிது ஓய்வெடுத்துவிட்டு அனுமதிக்கப்பட்ட நேரமான மாலை 5 மணிக்கு அங்கிருந்து கிளம்பினோம்.




 

படகு திரும்பி வரும் வழியில் மழை பெய்ய, நனைந்ததும் இளமைக்காலம் நினைவுகளிலே வந்து சென்றது. திரும்ப வரும்போது மீனவர்கள் ஆங்காங்கே வலை விரித்து வைத்திருக்க அது அருபடாமல் லாவகமாக படகுகளை ஒட்டி வருகிறார்கள்.




கடந்த 06.06.2013 அன்று தமிழக முதல்வர் அவர்கள், முத்துப்பேட்டை லகூன் பகுதியை சுற்றுலாத்தலமாக மேம்படுத்த 2 கோடியே 17 லட்சத்து 80 ஆயிரம் (G.O.Ms.No.141 மூலம் ரூ.217.80 லட்சம்) நிதி ஒதுக்கியுள்ளார்கள். அதனை கொண்டு வனத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் அடிப்படை மற்றும் அதிகமான வசதிகளை செய்து தர வேண்டும், குறிப்பாக குடிநீர், டாய்லெட் வசதிகள் மற்றும் அரசே இயக்கும் படகு போக்குவரத்து, ஒரு சிறிய தீவில் லகூனில் காணப்படும் மீன், பறவை மற்றும் விலங்கினங்களை இயற்கை சூழலில் உலவவிடும் காட்சி சாலை அல்லது தற்போதைக்கு அதன் புகைப்பட காட்சி அரங்கு, இப்போதைக்கு சிறிய கேண்டீன் மற்றும் எதிர்காலத்தில் உணவகம் என அமைத்தல் வேண்டும்.

அதிரை வரை படர்ந்துள்ள அலையாத்தி காடுகளுக்குள்ளும் பிக்னிக் சென்று வர தஞ்சை மாவட்ட நிர்வாகமும் ஏற்பாடு செய்தல் நலம்.
 
டிப்ஸ்:

அதிக அளவில் குடி தண்ணீர், தேவையான உணவு, நொறுக்குத் தீனிகள் எல்லாம் அவசியம் எடுத்துக் கொண்டு செல்லுங்கள். பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை, குப்பைகள் போடவும், புகை பிடிக்கவும் அனுமதியில்லை.

கந்தூரி, திருவிழா, பொருட்காட்சி, சுற்றுலா என அதிகம் ஊர் சுற்றாத பெண்களுக்கும் பசுமை விரும்பும் ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும் லகூன் பிடிக்கும், மத்த பெண்களுக்கு என்ன இது வெறும் தண்ணியும், ஓரே காடாவும் இருக்கு என்ற சடைப்பு தான் மிஞ்சும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் தக்க ஆண் துணையின்றி செல்லவே கூடாது.

அதிரைஅமீன்

Thanks to : www.muthupetnews.com & Tiruvarur collector
 

No comments:

Post a Comment