அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
துபை நிகழ்ச்சி
துபை நிகழ்ச்சி
அல்லாஹ்வின் அருளால் கடந்த 31.10.2013 வியாழன் பின்னேரம் இஷாவுக்கு பின் தேரா, துபையில் அமைந்துள்ள மதுக்கூர் தவ்ஹீத் மர்க்கஸில் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோதரர் A.G. முஹம்மது அவர்கள் 'அழைப்புப் பணியின் அவசியம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர் தனதுரையில், அழைப்புப்பணி என்றால் என்ன? அது யார் மீதெல்லாம் கடமை? அதனை எங்கிருந்து துவங்க வேண்டுமென சிறப்புடன் எடுத்துரைத்தார்கள்.
அதேபோல், தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள ஷைஹ். S. கமாலுதீன் மதனி அவர்கள் 'மரண வேதனை' என்ற தலைப்பில் மரணத்தை நினைவூட்டி, ஒரு மனிதன் தான் பிறக்கும் போதே தன்னுடன் கொண்டு வருவது மரணத்தை மட்டுமே, அது இறுதியாக எவ்வாறு, எப்படி நிகழும்? ஸகராத்து நிலையில் மனிதன் படும் மரண வேதனை, ஓர் முஃமீனின் மரணம் எவ்வாறு அமைய வேண்டும் என குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கினார்கள்.
முஸஃபா - பனியாஸ் நிகழ்ச்சி
கடந்த வெள்ளி பின்னேரம் 01.11.2013 இஷாவுக்குப்பின் அபுதாபி, முஸஃபா, பனியாஸ், சைனா கேம்ப் பகுதியில் அமைந்துள்ள MBM கேம்ப் பள்ளி வளாகத்தில் இஸ்லாமிய அறவுரை வகுப்புக்கள் இனிதே நடந்தேறின. நிகழ்ச்சியின் ஆரம்பமாக, A.G. முஹம்மது அவர்கள் 'பிரார்த்தனை' என்ற தலைப்பில் விளக்கவுரை நிகழ்த்தினார்கள்.
தொடர்ந்து உரையாற்றிய ஷைஹ். S. கமாலுதீன் மதனி அவர்கள் 'நேர்வழி எனும் அருட்கொடை' என்ற தலைப்பில் சிறப்பானதொரு விளக்கத்தை வழங்கினார்கள்.
இவ்விரு நிகழ்வுகளிலும் ஏராளமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து பயன்பெற்றனர்.
அபுதாபியிலிருந்து
அதிரைஅமீன்
No comments:
Post a Comment