உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, March 7, 2013

குண்டுவெடிப்புகளுக்கு முஸ்லீ்ம்களைக் குறை கூறுவதை நிறுத்துங்கள் -கட்ஜூ

டெல்லி: நாட்டில் நடக்கும் அத்தனை குண்டுவெடிப்புச் சம்பவங்களின்போதும் உடனடியாக முஸ்லீம்களை குறை கூறி செய்தி வெளியிடுவதை மீடியா நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் வேண்டும் என்று பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.
 
 
கட்ஜூவுக்கு தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் வஜாஹத் ஹபிபுல்லா ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதற்குப் பதில் அளித்து கட்ஜூ வெளியிட்டுள்ள கடிதத்தில், குண்டுவெடிப்புச் சம்பவங்கள், தீவிரவாதத் தாக்குதல்கள் போன்றவற்றின்போது மீடியா நிறுவனங்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன், நிதானத்துடன் செயல்பட வேண்டும். யார் மீதும் எந்த துவேஷ உணர்வும் ஏற்படாத வகையில் செய்திகளை வெளியிட வேண்டும்.
 
யாருக்கும் சார்பாகவோ அல்லது யாருக்கும் எதிராகவோ செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக இன்னும் விசாரணை முடியவில்லை. ஆனால் அதற்குள் பல மீடியாக்கள் குறிப்பிட்ட சமுதாயத்தைத் தொடர்புப்படுத்தி செய்திகள் வெளியி்ட்டு வருகின்றன. அது தவறானதாகும்.
 
முஸ்லீம்கள்தான் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவது போன்ற ஒரு இமேஜை சிலர் உருவாக்கி வைத்து விட்டனர். இதனால் எந்தத் தாக்குதல் நடந்தாலும் உடனே இஸ்லாமியர்களை சந்தேகப்படும் அவல நிலை உருவாகியுள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
 
மேலும் எந்த ஒரு வழக்கிலும் முஸ்லீம் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டால் அவருக்கு ஜாமீன் கிடைப்பது பெரும் சிரமமாக உள்ளது. அவர் அப்பாவியாகவே இருந்தாலும் தன்னை நிரூபிக்க அவர் கடுமையாக போராடும் நிலை ஏற்படுகிறது. இது மிகவும் வருத்ததிற்குரியதாகும். ஒருவரை காரணமே இல்லாமல் சிறையில் நீண்ட காலம் அடைத்து வைக்க யாருக்கும் உரிமை கிடையாது. நமது நாட்டில் தவறான, பொய்யான வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் முஸ்லீம்கள் அதிகம் உள்ளனர்.
 
ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே டிவி சேனல்கள் ஒரு முஸ்லீம் அமைப்பின் பெயரைச் சொல்லி இதுதான் நடத்தியது என்று செய்தி வெளியிட ஆரம்பித்து விட்டனர். இது பொறுப்பற்ற போக்காகும். இப்படிச் செய்வதன் மூலம் எங்காவது குண்டுவெடிப்பு நடந்தால் அது முஸ்லீம்களின் செயல்தான் என்று மக்கள் தவறாக கருத ஆரம்பிக்கும் நிலை ஏற்படும். மேலும் முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள், குண்டு போடுபவர்கள் என்ற தவறான கருத்தும் மக்கள் மனதில் பதிவாகி விடும்.
 
எனவே மீடியாக்கள் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகும் என்று கூறியுள்ளார் கட்ஜூ.
 
http://tamil.oneindia.in/news/2013/03/07/india-stop-targeting-muslims-blasts-katj-171096.html

Tuesday, March 5, 2013

ADT நடத்திய பொதுக்கூட்டத்தில் கோவை அய்யூப் ஆற்றிய உரையின் காணொளி

அதிரை பிலால் நகரில் நடைபெற்ற தாருத் தவ்ஹீத் நிகழ்ச்சியில் கோவை அய்யூப் அவர்கள் ஆற்றிய உரை Thanks to: adiraipost

Friday, March 1, 2013

அதிரை பிலால் நகரில் ADT யின் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் !

இன்று [ 15.02.2013 ] மாலை 5.30 மணியளவில் அதிரை பிலால் நகரில் முதன் முதலாக அதிரை தாருத் தவ்ஹீத் [ ADT ] சார்பாக மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் ADT யின் அங்கமான இஸ்லாமிய பயிற்சி மையம் [ ITC ] அருகே நடைபெற்றது.
 
 
 கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக சிறுவர் சிறுமிகளுக்கான மார்க்க அறிவுத்திறன் போட்டிகள் நடைபெற்றன. இதில் பெரும்பாலான சிறுவர் சிறுமிகள் கலந்துகொண்ட தங்களின் தனித்திறமையை நிரூபித்தனர்.
 



 
 
பொதுக்கூட்டத்திற்கு ADT யின் தலைவர் 'தமிழ் அறிஞர்' அதிரை அஹமத் B.A. அவர்கள் தலைமையுரையாற்றி துவக்கி வைத்தார்

'மறுமைச் சிந்தனை' என்ற தலைப்பில் முதன்மை உரை நிகழ்த்தினார் மவ்லவி அப்துல் காதிர் மன்பயீ அவர்கள்.

ADT யின் செயலாளர் ஜமீல் M. ஸாலிஹ் அவர்கள் ADT உருவான வரலாறு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து தனது உரையில் விரிவாக எடுத்துரைத்தார்.

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த JAQHன் மாநில துணைத்தலைவர் சகோ. கோவை அய்யூப் அவர்கள் 'படைத்தவனின் சட்டங்களே படைப்பினங்களுக்குத் தேவை' என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

கூட்டத்தின் இறுதியில் ADT யின் துணைத்தலைவர் சகோ. B. ஜமாலுத்தீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெரும்திரளாக கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் பெண்களுக்கு என வாகன வசதிகளும், தனி இடமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதிரை காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

Thanks to: www.theadirainews.blogspot.ae & Brother Shaikana Nijam

Wednesday, February 27, 2013

நேரடி ஒளிபரப்பில் கோவை அய்யூப் உரையாற்றும் அதிரை பிலால் நகர் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்


இன்ஷா அல்லாஹ், கீழ்க்காணும் நோட்டீஸில் கண்டுள்ளபடி அதிரை பிலால் நகரில் முதன்முதலாக நடைபெறவுள்ள இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்  www.aimuaeadirai.blogspot.com உட்பட அதிரையின் பிரதான இணைய, வலைத் தளங்களில் நேரலை செய்யப்படும்.

அதிரை சகோதரர்களே!
 
உங்கள் குடும்ப உறுப்பினர்களை, நண்பர்களை தவறாது நேரடியாக கலந்து கொள்ளச் செய்யுங்கள்.




Thursday, February 7, 2013

சென்னையில் அழகிய இரு முன்மாதிரி இஸ்லாமிய அழைப்பு பணிகள்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

சமீபத்தில் சென்னை சென்றிருந்த போது அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைக்கும் நமது மக்களை காண முடிந்தது.

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் சென்னை மெரினா கடற்கரையில் சிற்றுந்தில் இஸ்லாமிய நூலகம் அமைத்து விற்பனையும் அழைப்புப் பணியும் மேற்கொண்டார்கள்.

அவர்களிடையே சுமார் அரை மணி நேரம் இருந்தபோது சுமார் 10 புத்தகங்கள் விற்பனையானது. இதில் 1 தமிழ் தர்ஜமாவும் 1 ஆங்கில தர்ஜமாவும் அடக்கம். இவர்கள் அனைவருமே இஸ்லாத்தை அந்த நிமிடம் வரை ஏற்காதவர்கள்.

அதுபோல், சென்னை சிட்டி சென்டர் உள்முகவாயிலில் சிறு டேபிள் அமைத்து அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்துக் கொண்டிருந்தார்கள்.
 
அவர்கள் எந்த இயக்கமும் சார்ந்தவர்கள் அல்ல. நிதியும் அவர்களுடையதே! அவர்களுக்கிடையில் நேரம் ஒதுக்கி இந்த அழைப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

இதில் முக்கியமாக அவர்கள் சிறு சிறு கையேடுகள், தமிழ், ஆங்கில தர்ஜமா குர்ஆனை இலவசமாக,அன்பளிப்பாக கொடுக்கிறார்கள் இவர்களிடையும் அரைமணி நேரம் இருந்தபோது, மக்களாகவே முன்வந்து இஸ்லாம் பற்றிய சந்தேகங்களை சொல்லி உண்மையான பதிலை பெற்றுச் சென்றார்கள். இந்த அழைப்பு பணியின் போது பலர் இஸ்லாத்தை ஏற்றுள்ளதாகவும் அவர்கள் சொன்னார்கள்.

நாம் நசுக்கப்படுகிறோமே...அல்லாஹ் என்று சொன்னால் ஆயிரம் கஷ்டங்கள் வருகிறதே...  என்றெல்லாம் தாழ்வு மனப்பான்மை ஆட்கொள்ளும் இன்றைய காலகட்டத்தில்,

இந்த சகோதர்கள் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைக்கும் பணியும் அதற்கு மக்கள் தரும் மரியாதையும் பார்க்கின்றபோது...

நாம் தோற்கமாட்டோம்...அல்லாஹ் நம்மை மேன்மைப்படுத்துவான் சங்கைப்படுத்துவான் என்ற நம்பிக்கையும் நெஞ்சுறுதியும் ஏற்படுகின்றது.
அல்ஹம்துலில்லாஹ்!
 
Narration & Photos by Brother Hidayathullah - Adirai
Thanks to: ADT
 
இந்த இரு நிகழ்வுகளின் படங்கள்
 



 

08.02.2013 - அதிரை பிலால் நகர் மர்கஸில் பயான்


Friday, January 25, 2013

கழிப்பிடத்தில் முளைக்கும் திடீர் கப்ரு


அஸ்ஸலாமு அலைக்கும்.

அதிராம்பட்டினத்தின் கடற்கரைத் தெருவிலுள்ள தர்ஹாவில் பெண்கள் தங்குவதற்காக மண்டபம் என்றொரு பகுதி உள்ளது. தர்ஹாவும் அதன் பெண்கள் பகுதியான மண்டபமும் வக்ஃபு வாரியத்துக்கு உட்பட்டவை என்று கூறப்படுகிறது.

மண்டபத்தில் கழிப்பிட வசதி இல்லாததால், மண்டபத்தில் தங்கும் பெண்கள் அங்குள்ள ஓர் ஓரப்பகுதியை தங்கள் அவசரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள நீண்ட நாட்களாகப் பயன்படுத்தி வந்தனர்.

கடந்த 18.1.2013 வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுவதற்காகக் கடற்கரைத் தெரு ஜும்ஆப் பள்ளிக்குச் சென்றவர்களுக்கு அதிர்ச்சியான ஆச்சரியம் காத்திருந்தது!

தொழுகைப் பள்ளிக்குப் பின்புறத்திலுள்ள பெண்கள் மண்டபத்தில் கட்டுமான வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தன. தொழுகை முடிந்து, அங்குச் சென்று பார்த்தபோது பல்லாண்டு காலமாகப் பெண்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த இடத்தில் செங்கற்களைக் கொண்டு புதிதாகக் கபுரு ஒன்றைக் கட்டும் பணியில் பிறமதத்துப் பணியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.



அடுத்த நாளான 19.1.2013 அன்று திடீர் கபுருக்கு சிமெண்ட் பூசும் வேலை நடந்தது. மறுநாள் 20.1.2013இல் டைல்ஸ் அலங்காரங்கள் பதிக்கப்பட்டன.

கூடிய விரைவில் அங்கு ஓர் உண்டியல் முளைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இருக்கின்ற சமாதிகள் போதாதென்று புதிதாக சமாதிகளை உருவாக்கி வயிறு வளர்க்கும் கூட்டம் இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டிலும் தொடர்வது ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் அவமானமாகும்.

நபி (ஸல்) கூறினார்கள் :

نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُجَصَّصَ الْقُبُورُ وَأَنْ يُكْتَبَ عَلَيْهَا وَأَنْ يُبْنَى عَلَيْهَا وَأَنْ تُوطَأَ


"சமாதிகளுக்காகக் கட்டடம் எழுப்புவதையும் சமாதிகளின் மீது பூசுவதையும் எழுதி வைப்பதையும் சமாதிகளை மிதிப்பதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை செய்தார்கள்" ஜாபிர் (ரலி) - திர்மிதீ 972, அஹ்மது 14748.

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَائِرَاتِ الْقُبُورِ وَالْمُتَّخِذِينَ عَلَيْهَا الْمَسَاجِدَ وَالسُّرُجَ

"சமாதிகளைச் சந்திக்கச் செல்லும் பெண்களையும் சமாதிகளில் வழிபாடு செய்யும் பெண்களையும் சமாதிகளில் விளக்கேற்றும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் சபித்தார்கள்" இபுனு அப்பாஸ் (ரலி) : நஸயீ 2016, அபூதாவூது 2817, அஹ்மது 2952, இபுனுமாஜா 1564.

அன்பான தாய்மார்களே!

அல்லாஹ்வின் தூதரின் சாபம் என்பது சாதாரண மனிதர்களின் சாபம் போன்றதல்ல. ரஸூல் (ஸல்) அவர்களின் சாபத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; சமாதி வழிபாடுகளில் ஈடுபடுவதன் மூலம் அல்லாஹ்வின் பாவ மன்னிப்புக் கிடைக்காத ஷிர்க் எனும் இணைவைத்தலில் விழுந்து, நரகவாசிகளுடன் சேர்ந்துவிடாதீர்கள்.

அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வின் அச்சமின்றி திடீர் கபுரை உண்டாக்குபவர்கள், திண்ணமாக மார்க்கத்தின் வரம்புகளை மீறிவிட்டவர்களாவர். வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் எச்சரிக்கின்றான்:

நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது (85:12).

பிறந்த உயிர்கள் ஒவ்வொன்றுக்கும் இறப்பு நிச்சயம். இறப்புக்குப் பின்னர் நமக்கான கேள்வி கணக்குகள் அதைவிட நிச்சயம்.

அல்லாஹ்வின் கடினமான பிடியிலிருந்து நாம் அனைவரும் இம்மையிலும் மறுமையிலும் தப்பித்துக் கொள்ளவதற்கும் சமாதி வழிபாடு உட்பட அனைத்து வழிகேடுகளிலிருந்தும் விலகி, நேர்வழியில் வாழ்ந்து ஈமானோடு இறப்பதற்கும் வல்ல நாயன் நம் அனைவருக்கும் தவ்ஃபீக் செய்வானாக!.
ஃஃஃ
குறிப்பு:
இந்த நோட்டீஸின் பிரதிகள் தனி மடல்களில் இணைக்கப்பட்டு நிழற்பட சான்றுகளோடு வக்ஃபு வாரியத் தலைவர் தமிழ்மகன் ஹுஸைன், தலைமைச் செயலாக்க அலுவலர் அப்துல் ராஸிக் எம்ஏபிஎல், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முஹம்மது ஜான் மற்றும் வாரிய உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் கீழ்க்காணும் படிவத்தைப் பயன்படுத்தி, +91-44-25248888 எனும் எண்ணுக்குத் தொலைநகல் (Fax) அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

பொதுமக்களின் பயன்பாட்டுக்கு:

"--------- " --------- " --------- "--------- "--------- "--------- "--------- "--------- "-------- "--------

To
Janab F. Abdul Razick, M.A.B.L,
CEO, Tamilnadu Wakf Board,
1, Jaffer Syrang Street, Vallal Seethakkathi Nagar,
Chennai – 600001. 
Fax : +91-44-25248888

அஸ்ஸலாமு அலைக்கும்.
கடந்த 18.1.2013 அன்று தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரைத் தெரு தர்ஹாவின் பெண்கள் வளாகத்தில் இஸ்லாமிய மார்க்கத்துக்கு முரணாகவும் வக்ஃபு விதிமுறைகளுக்கு எதிராகவும் திடீரென்று புதிதாக உருவாகியுள்ள கபுரை அகற்றுவதற்கு உத்தரவிட்டு ஆவன செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,                                                                                                         
முகவரி : 

"--------- " --------- " --------- "--------- "--------- "--------- "--------- "--------- "-------- "--------
வெளியீடு : 5/0113 ; நாள்  25.1.2013


அதிரை தாருத் தவ்ஹீத்
பதிவு எண் 4/130/2012
28G, Market (East), P.O.Box 5 Adirampattinam – 614701
Tanjore Dist; Tamilnadu, India – Tel : +91-4373-240930; Email :salaam.adt@gmail.com