உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, December 12, 2012

அதிரை பிலால் நகர் மர்கஸில் 14.12.2012 ''மறுமைச் சிந்தனை''எனும் தலைப்பில் பயான்



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் …
அல்லாஹ்வின் பேரருளால் நமதூர் பிலால் நகரில் தொடங்கப்பட்டுள்ள ‘மர்கஸ் தர்பிய்யத்துல் இஸ்லாமிய்யா’ குர்ஆன்-ஹதீஸ் மற்றும் நல்லொழுக்கப் பயிற்சி மையத்தில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 14.12.2012 வெள்ளிக்கிழமை அஸ்ருத் தொழுகைக்குப் பின்னர் சிறப்பு பயானுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“மறுமைச் சிந்தனை”
எனும் தலைப்பில்
அஃப்ழலுல் உலமா. ஷஃபான், ஆலிமா ஸித்தீக்கிய்யா
(முதல்வர், அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி, அதிரை)
சிறப்புரையாற்றுவார்.ஆண்களுக்குத் தனியிட வசதியுண்டு.
அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுகிறோம்.
 
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 14.12.2012 வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப் பின்னர் பிலால் நகர் மர்கஸில் நடைபெறவுள்ள பயானுக்குத் தங்கள் குடும்பத்தவர் அனைவரையும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
வெளிநாட்டில் உள்ள சகோதர்கள் தங்கள் வீட்டு பெண்களை கலந்து கொண்டு பயனடை செய்ய வேண்டுகிறோம்.
அதிரை தாருத் தவ்ஹீத் ( ADT)

Monday, December 3, 2012

நடுநிலைச் சமுதாயத்தின் இன்றைய நிலை!

ஒன்று பட்டிருந்த மனித சமுதாயம் ஷைத்தானின் மேலாதிக்கத்தால், பகமை மேலோங்கி, மூடத் தனத்தில் மூழ்கி, நரக நெருப்புக்குழியின் கரையில் நெருங்கிய போதெல்லாம், இறைவன் தன் கருணையால் நபிமார்களை அனுப்பினான். நேர்வழி காட்டுதலையும் அந்நபிமார்கள் மூலம் சிதருண்ட மக்களுக்கு அவ்வப்போது அருளி சகோதரர்களாக்கினான்.
 
இவ்வாறு அருளப்பட்ட அனைத்து முந்தைய வேதங்களையும் உள்ளடக்கியதே இறுதி மறையாம் அல்குர்ஆன். இக்குர்ஆனில் முந்திய காலங்களில் நடந்த அனைத்து நல்லது கெட்டதுகளையும், மிகத்தெளிவாக விளக்கி எச்சரித்து, மக்களை பண்பட்ட இறை நெருக்கமுள்ளவர்களாக வாழ வகை செய்துள்ளான் வல்ல அல்லாஹ்.
 
இவ்வளவு தெளிவான இறுதி வேதமுள்ள நிலையிலும் உலக மக்களும், குறிப்பாக இதைப் பின்பற்றுகிறோம் என்று வானளாவ சொல்லும் முஸ்லிம்களும், இறைவழி காட்டுதலுக் கொப்ப வாழ்கிறார்களா? முந்தைய ஒன்றுபட்ட சமுதாயத்தைக் கூறு போட்டுச் சிதைத்து, மக்களைச் சுரண்டி தங்களின் வயிறுகளை நிரப்புவதோடு மறுமையில் மிகப் பெறும் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்கள் புரோகித பூசாரிகள் என்பதை இறைவன் தனது திரு மறையில் மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறான்.எனினும் நாம் எவ்வித படிப்பினையும் பெறாதவர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அன்றைய, இன்றைய யூத கிறிஸ்தவ சமுதாயங்கள் எப்படி புரோகித குருமார்களை சுய சிந்தனையற்று, குறுட்டுத்தனமாக நம்பி மோசம் போனதோ, இப்போதும் போய்க் கொண்டிருக்கின்றனவோ, அதே வழியில் இறுதிவேதம் கொடுக்கப்பட்ட நாமூம் மோசம் போய் கொண்டிருக்கிறோம்.
வல்ல அல்லாஹ் தனது திருமறையில் நன்மையை ஏவி, தீமயைத் தடுத்து அல்லாஹ்வைத் திடமாக நம்பும் இந்த உம்மத்தில் உள்ளவர்களைப் பார்த்து “மேன்மைமிக்க சமுதாயம்” என்கிறான் (3:110). மற்ற சமுதாயத்திலுள்ள மக்களுக்கு நம்மை சாட்சியளார்களாக ஆக்கி நம்மை “நடு நிலைச் சமுதாயம்” (2:143) என்று புகழாரம் வேறு சூட்டுகிறான்.
 
உண்மையில் நாம் மேன்மைமிக்க சமுதாயமா? சுயசிந்தனையற்று ஆடுமாடுகளைப் போல் முல்லாக்களுக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டு குர்ஆன்-நபிவழிக்கு மாற்றமாக நடந்து கொண்டிருக்கும் நாம் நடுநிலைச் சமுதாயமா? சிந்தியுங்கள்! நம் நிலையைச் சீர்தூக்கிப் பாருங்கள்.
“முஸ்லிம்” என்ற அல்லாஹ் கொடுத்த ஒரே இயக்கமாக ஒரே தலைமயின் கீழ் ஒன்றுபட்டு இயங்கக் கடமைப்பட்ட முஸ்லிம் சமுதாயம் பிரிந்து பல இயக்கங்களாக பல தலைமைகளின் கீழ் செயல் படுவதால்தான் பதவி ஆசையால்தான் இந்த அலங்கோலம் என்பதை யாரால் மறுக்க முடியும்?

ஒன்றுபட்ட் சமுதாயத்தை பிளந்து சுய ஆதாயம் தேடும் மதப்புரோகிதர்களையும், அற்ப உலக ஆதாயத்தைக் குறிக்கோளாகப் கொண்டுள்ள அரசியல் வாதிகளான இயக்கங்களையும் புறக்கணிப்போம்.
மக்களை மடையர்களாக்கி, பிரித்து சின்னாப்படுத்தி, சிதைத்து வழி நடத்திக் கொண்டிருக்கும் அவர்களைக் கண்மூடி பின்பற்றும் நீங்கள் அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப் பிடித்திருக்கிறீரகளா? நமது நிலைகளை ஒரு கனம் எண்ணிப் பார்ப்போம், சீர்திருந்துவோம். முஸ்லிம்களாக ஒரணியில் ஒன்றுபடுவோம்; அணி திரள்வோம். வல்ல அல்லாஹ் நம்மை நேர்வழியில் நடத்திச் செல்வானாக
 
thanks to readislam.net

Saturday, December 1, 2012

பிலால் நகர் இஸ்லாமியப் பயிற்சி மையத்தில் 30.11.2012-ல் நடைபெற்ற நிகழ்ச்சிக் குறிப்புகள் - Photo updated



அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் அருளால், நேற்று மாலை 4:30-5:30 இஸ்லாமியப் பயிற்சி மையத்தில் நடைபெற்ற சிறப்புச் சொற்பொழிவு மிகவும் நேர்த்தியாக இருந்தது. 200 பேருக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர், அல்ஹம்து லில்லாஹ்!

"நம் பிள்ளைகளுக்கு ஏராளமாகப் பணம் செலவழித்து ஊட்டப்படும் கல்விகள், ஈமானுடைய அடிப்படை இல்லாமல் போகுமாயின் அவ்வகைக் கல்விகள், நம் சமுதாயத்தில் நடைபெறும் ஒழுக்கக் கேடுகளையும் தீமைகளையும் களைய உதவாது" எனும் கருத்தில் சிறப்புரை அமைந்திருந்தது. நம் இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தை ஈமான் உறுதியோடு கட்டமைப்பதால் மட்டுமே நம் சமுதாயத்தில் நிலவுகின்ற சீரழிவுகளைத் தடுக்க முடியும் என்பதாக அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியின் முதல்வர் ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

 



நிகழ்ச்சியின் இறுதியில், இஸ்லாமியப் பயிற்சி மையத்தில் பயில்வதற்காக 77 பெயர்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கை நாம் எதிர்பாராததாகும். மேலும், அடுத்த வாரம் மத்ரஸா தொடங்கலாம் என நினைத்திருந்த நமக்கு, "நாளைக்கே மத்ரஸா தொடங்கவேண்டும்" என்று வந்திருந்த பெற்றோர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டு, முதல்வரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப் பின்னரும் பயான் ஏற்பாடு செய்யவேண்டும் என்ற வருகையாளர்களின் வேண்டுகோள் ஏற்கப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக்கிழமை (07.12.2012) 'வட்டியின் விபரீதம்' என்றும் தலைப்பில் பயான் என்று அறிவிப்புச் செய்யப்பட்டது.





வெள்ளிக்கிழமை தவிர்த்து, எல்லா நாளிலும் பயிற்சி நேரம் அதிகாலை 6 மணிக்கு ஒரு ஷிஃப்ட்; மாலை 5 மணிக்கு மறு ஷிஃப்ட் என்று அவர்களுக்குள் ஆலோசித்து முடிவு செய்து கொண்டனர்.

இன்று காலையில் 114 மாணவியர் வந்திருந்தனர் &  மாலையில் 102 வந்திருந்தனர்.
 
Thanks to: ADT- ITC

Friday, November 30, 2012

துபாயில் வெளுத்து வாங்கிய கன மழை: மக்கள் பெரும் மகிழ்ச்சி

 Heavy Rain Lashes Dubai

துபாய்: துபாய் மற்றும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கன மழை பெய்து வருகிறது.

துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை.
எனினும் விடுமுறை தினத்தை குடும்பத்தினருடன் வெளியில் சென்று களிக்க திட்டமிட்டவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வெளியே செல்ல முடியாவிட்டாலும் வீட்டில் இருந்தபடியே வெளுத்து வாங்கும் மழையை மக்கள் ரசித்து வருகின்றனர்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் துபாயில் கனமழை பெய்து வருவது மக்கள் மனதை குளிர வைத்துள்ளது.

thanks to thatstamil