உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, September 11, 2011

நம்ம ஊரு பீச்சாங் கரை

கிழக்கு கடற்கரை சாலையில், புதுப்பட்டிணத்திற்கு சற்றே முன்பாக, அதிரையிலிருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ள வெளிவயல் கடற்கரை நமதூர் மக்களின் கோடைகேற்ற குளு குளு (Budget Beach) பீச்சாக உருவெடுத்துள்ளது.

ஒரு காலத்தில் என நினைவுகூறத்தக்க வகையில் அதிரை (செம்படவர் தெரு)கடற்கரை, மனோரா, ராஜாமடம் பாலம், மல்லிப்பட்டிணம் மீன்பிடித் துறைமுகம், (ஒரு பக்கம் அழிவு, ஒரு பக்கம் அழகு என சுனாமியால் அழகான) கீழத்தோட்டம் கடற்கரை மணல் என இளைப்பாரி வந்த நமதூர் மக்கள் தற்போது மாலைவேளைகளில், குறிப்பாக பெருநாட்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவயல் கடற்கரையில் வண்டி வண்டியாய் வாகனங்களில் வந்து பொழுதுபோக்கி மகிழ்கின்றனர்.




பாசி படர்ந்த, ஓரளவு கழிமண் கலந்த அழுக்கு கடல் தான் என்றாலும் ஆர்ப்பரிக்கும் அலைகளும், சில்லென்ற காற்றும், பரந்த மணற்பரப்பும், கடற்கரையினுள் நுழையுமுன் வரவேற்கும் சவுக்கு மர தோப்பு வழிகளும், பசுமையான அலையாத்தி காடுகளும் கண்களின் உற்சாக டானிக், மனங்களின் மருந்து, குழந்தைகளின் குதூகலம் என்றால் மிகையில்லை. 




செம்மண் சாலை, வாகனங்களை நிறுத்த இயற்கையான பார்க்கிங் என ப்ளஸ் பாயிண்ட்டுகள் நிறைந்திருந்தாலும், கருவாடு நாற்றமில்லாத இந்த கடற்கரையை குடும்பத்துடன், மார்க்கம் அனுமதிக்கும் ஆண் துணையுடன் வருபவர்கள் மட்டுமே பயன்படுத்துவது சாலச் சிறந்தது.




அழகிருந்தல் ஆபாத்தும் சேர்ந்திருக்கத்தானே செய்யும் எனவே, கீழ்க்காணும் விஷயங்களை கவனத்திற் கொள்ளுதல் நலம்.

1. ஐஸ்கிரீமுடன் மதுபானங்களையும் விற்கும் உ.பி.காரன்.
2. பார்க்கிங் பகுதியில் மரத்தடிகளில் குவிந்துள்ள ரொம்ப பிஸியான சூதாடிகள்.
3. வாப்பாக்கள் வாங்கித்தந்த பைக்கில் பவனி வரும் நமதூர் இளைஞர்கள்.
4. வயதுப்பிள்ளைகளை அந்நியரின் கண்களில் இருந்தும் பாதுகாத்து கொள்க, குறிப்பாக கடலில் இறங்கி குளிக்க அனுமதித்தல் கூடாது.
5. கடலில் குளிப்பவர்களுக்கு இலவச இணைப்பாய் கிடைக்கும் பாசியின் அரிப்பு.
6. வெளிவயல் கிராமத்தின் நடுவில், சாலையில் அமைந்துள்ள, தமிழக அரசின் பார் வசதியுடன் கூடிய சாராயக்கடையை ஈக்களாய் மொய்த்திருக்கும் குடிகார ஜென்மங்கள்.

என கண்ணில்படும் தீமைகளை இன்னும் பட்டியலிட முடியும் என்றாலும் பார்த்து, பதனமா, உங்க குடும்பத்தோட மட்டும் போயிட்டு வாங்க! 

பார்க்க: வட்டமிடப்பட்ட பகுதியில் குடும்பத்தையே அடகு வைக்கத்துணியும் சூதாடிகள்

பார்த்ததை பதிந்தவர்
அபு சுமையா

விஷூவல் சூட்ஸ்
ஆஷிக் அஹமது

Saturday, September 10, 2011

அதிரை மின் சாவு வாரியம்...? – Part 2

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

வருடக்கணக்கில் உறங்கும் அதிரை மின் வாரியத்தை கண்டித்து கடந்த வாரம் பிலால் நகர் மக்களின் குமுறல்களை பதிந்திருந்தோம். நியாயத்தை உணர்ந்த பல்வேறு சகோதரர்கள் வழிமொழிந்தும், சகோதர வலைதளங்கள் மீள்பதிவும் செய்திருந்தனர். அதேபோல் மின் வாரியத்தில் மனிதநேயமிக்க அதிகாரிகள் யாரேனும் இருக்கலாம்... இருந்தால் தீர்வு கிடைக்கலாம் இன்ஷா அல்லாஹ்.



நமது பதிவை தொடர்ந்து சகோதரர் ஜமீல் காக்கா அவர்களும் பாதித்துள்ளதாக பதிந்த கருத்துரையையொட்டி நேரடியாக அவர்களுடைய மனையை பார்வையிட்டபோது அதிர்ந்தோம். அவர்களுடைய மனையின் இருபுறத்திலும் ஏற்கனவே குடிகள் இருக்க, காக்கா அவர்களுடைய மனையின் நட்டநடுவில் அடிபாகம் மிகவும் பழுதடைந்த உயரழுத்த மின்சாரக் கம்பம்.

காற்றடித்தாலே விழும் நிலையில் உள்ள கம்பம் சாய்ந்தால் அருகில் குடியிருப்போருக்கு பாதிப்பு நிச்சயம், அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

வைக்கோல் போரில் படுத்திருக்கும் நாய் தானும் உண்ணாது, உண்ண வரும் ஆடுமாடுகளையும் அண்டவிடாது என்பார்களே அதுபோல் மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் யாரும் அந்த மனையில் குடியேறவும் முடியாது, யாரிடமும் விற்கவும் முடியாது ஏனென்றால் நாயாய் மனையின் நடுவில் உயரழுத்த மின்சாரக் கம்பம், மேலும் அடுத்த மனையிலுள்ள ஒரு மின்சாரக் கம்பம் ஏற்கனவே ஒரு பகுதி சாய்ந்துவிட்டது. மனிதர்களுக்கு பயனில்லாமல் முட்புதர் மண்டிப்போயுள்ள அந்த மனை தற்போது கீர்ப்பிள்ளைகளின் கோடை வாசஸ்தலம்.

பொறுத்தோர் பொங்கி எழுமுன் மின்சார வாரியம் பொறுப்புடன் நடந்து கொள்ளுமா?

செய்தி
அபு சுமையா

புகைப்படங்கள்
ஆஷிக் அகமது

Friday, September 9, 2011

சுகாதாரம் காக்குமா பேரூர் நிர்வாகம் ?

மேலத்தெருவிலிருந்து மஸ்ஜிதே மஃப்ரூர் பள்ளிக்கு போகும் வழியில் கடந்த சில மாதங்களாக குப்பைகளை அல்லாமல் கிடக்கிறது பல முறை பேரூர் நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்தும் ஒருமுறை கூட இப்பகுதியை சுத்தம் செய்ய வராததால்  இந்த பகுதி மக்களே  அவ்வபொழுது துப்புரவு தொழிலாளர்களை வைத்து சுத்தம் செய்து வந்தனர். 
அதுவும் கடந்த சில மாதங்களாக யாரும் செய்ய முன் வராததால் குப்பைகள் நிறைந்து துர்நாற்றமும் நோய் பரப்பும் கொசுக்களும் உருவாகி வருகிறது இந்த பகுதியிலிருந்து மறைக்கா குளத்து மேடு வழியாக ஏராளமானவர்கள் மஸ்ஜிதே மஃப்ரூர் பள்ளிக்கு தினமும் தொழுகைக்கு சென்று வருகிறார்கள். அவர்கள் சுபுகு தொழுகைக்கு செல்லுவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது குப்பை கூலங்களில் உள்ள கழிவுகளை தின்பதற்காக வரும் நாய்கள் தொல்லையும் அதிகரித்துள்ளது.
எனவே இது சம்பந்தமாக உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மேற்காணும் இடத்தில் குப்பை தொட்டி ஒன்று அமைத்து பராமரிக்க இப்பகுதி மக்கள் கேட்டுகொள்ளகிரார்கள்.
 
 
Nanri
adiraixpressl

Thursday, September 8, 2011

இணையதளத்தில் சமச்சீர் கல்வி புத்தகம்‏

6 முதல் 10 -ஆம் வகுப்புக்கான பாடதிட்டம் சம்மந்தான குழப்பம் முடிவுக்கு வந்த நிலையில் தமிழக அரசு பாட புத்தகங்களை மீண்டும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
 
இந்த இணையதளத்திற்க்கு சென்று பாட புத்தங்களை பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.
வெளி நாடுகளில் உள்ள பெற்றொர்கள் கவனத்திற்க்கு : உங்கள் பிள்ளைகளின் படிப்பை கண்கானிக்க, இணையதளத்தில் உள்ள புத்தகங்களை பதிவிறக்கம் (Download) செய்து தினமும் தங்கள் பிள்ளை எவ்வளவு படம் படித்து உள்ளது, என அறிந்து கொள்ளலாம், வாரம் ஒரு முறை இந்த புத்தகங்களை வைத்து கொண்டு குழந்தைகளிடம் கேள்வி கேட்டு அவர்களின் கல்வி திறன் எவ்வாறு உள்ளது என அறிந்து கொள்ளலாம், போதியபாடங்கள் படிக்கவில்லை என்றால் அதிக முயற்சி எடுத்து கண்கானிக்கலாம்.
வெளியூரில் இருந்தாலும் பிள்ளைகளின் கல்வி வளர்சியை கண்கானிக்க இந்த இணையதள புத்தகம் பயனுல்லதாக இருக்கும்.
 
-தகவல் எஸ்.சித்தீக் எம் டெக்

தவிர்க்கப்பட வேண்டிய மூன்று விஷயங்கள்:

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
''ஆணவம், மோசடி, கடன் ஆகிய மூன்றும் நீங்கிய நிலையில் ஒருவரின் உயிர் பிரிந்தால் அவர் சொர்க்கத்தில் இருப்பார்''     அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி),           நூல்கள்: அஹ்மத் (21356), திர்மிதீ (1497)
மனிதர்களிடம் நல்ல காரியங்கள் இருக்க வேண்டும் என்று கட்டளையிடும் இஸ்லாம்  பல விஷயங்கள் இருக்கக் கூடாது என்று கட்டளையிடுகிறது. அதில் முக்கியமாக மூன்று விஷயங்கள் இருக்கக் கூடாது. அவை இருந்தால் அவர் சொர்க்கம் புகமுடியாமல் போய்விடும். அதே நேரத்தில் இந்த மூன்றும் இல்லாவிட்டால் அவர் கண்டிப்பாக சொர்க்கம் போவார். அவை: 1. ஆணவம் (தற்பெருமை), 2. மோசடி, 3. கடன்.
ஆணவம் (தற்பெருமை)
எவனிடம் தற்பெருமை குடிகொண்டு விடுமோ அவன் அழிவின் விளிம்பிற்குப் போய் விட்டான் என்று கூறலாம். அவனிடம் நற்காரியங்கள் அனைத்தும் நீங்குவதற்கும், நற்செயல்கள் வராமல் இருப்பதற்கும் இந்தத் தற்பெருமை காரணமாக அமைந்து விடும்.
அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்- களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; ஏனெனில், பயபக்தியுடையவர்களுக்கே (மேலான) முடிவு உண்டு.  (அல்குர்ஆன் 28:83)
பூமியில், நான் தான் பெரியவன் என்று எண்ணி நடப்பவனுக்கு மறுமையில் சொர்க்கம் என்ற வீடு உறுதியாகக் கிடையாது என்று அல்லாஹ் எச்சரிக்கின்றான். இந்த எண்ணம் எவரிடம் குடிகொண்டு விடுமோ அது சொர்க்கம் செல்வதற்கு மிகப்பெரிய தடைக்கல்லாக அமைந்து விடும். இந்தத் தற்பெருமை இல்லையேல் அவர் சொர்க்கம் செல்வது இலகுவாகி விடும்.
''தமது உள்ளத்தில் கடுகளவு இறை நம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு ஆணவம் உள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத்(ரலி), நூல்: முஸ்லிம் (148)

Wednesday, September 7, 2011

பொறாமை கொள்ளாதீர்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.
 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
3:26. "(நபியே!) நீர் கூறுவீராக: 'அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.
             இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை. மறுமை வாழ்வுதான் உண்மையான வாழ்வாகும். அவர்கள் (மனிதர்கள்) அறியக்கூடாதா
 844. முகீரா இப்னு ஷுஅபா (ரலி) அறிவித்தார்.
'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் ஏகன் அவனுக்கு நிகராக எவருமில்லை. ஆட்சி அவனுக்கு உரியது. புகழும் அவனுக்கு உரியது. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்தலைக் கொடுப்பவன் இல்லை. எந்த மதிப்புடையவனும் உன்னிடம் எந்த பயனுமளிக்க முடியாது என்று நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் கூறக்கூடியவர்களாக இருந்தனர்.
  பொறாமை கொள்ளாதிருக்கும்படி உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் நெருப்பு விறகைத் தின்று விடுவதைப் போன்று பொறாமை நற்செயல்களைத் தின்று விடும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்: அபூதாவூத்;
  வயிற்றெரிச்சல்(பொறாமை) கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதில் நாம் அனைவருமே அனுபவம் உள்ளவர் தான்! உங்கள் அலுவலகத்தில் உடன் பணி செய்பவரை விட நீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால், சிலவேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்; உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிய உங்கள் தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில் துவங்கி ஒரு ஆண்டே ஆன உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம். இது போன்று நம் தினசரி வாழ்வில் பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காக நீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா? கூடாது!
 
நினைவில் கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு, அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது. நீங்கள் பணக்காரராக ஆகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்க முடியாது. நீங்கள் பணக்காரராக ஆவது விதிக்கப்பட்டிருக்கவில்லையேல், அவ்வாறு ஆவதற்கு எதுவுமே உதவவும் செய்யாது. உங்களின் பேறின்மைக்கு மற்றவர்களைப் பழிப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. பொறாமை-வயிற்றெரிச்சல் உங்களை எங்குமே கொண்டு சேர்க்காது; அது உங்களின் மன அமைதியைக் கெடுப்பது அல்லாமல்!