உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, April 20, 2016

மதுக்கூரில் 25.04.2016 திங்கள் அன்று உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி


மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை சார்பாக இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 25 ஏப்ரல்' 2016 திங்கள் கிழமை அன்று மஸ்ஜித் இஃலாஸ் பள்ளி வளாகத்தில் கல்வி குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

மாணவர்கள் +2 வில் எந்த வகையான கோர்ஸ்களை தேர்தெடுப்பது அதன் தொடர்ச்சியாக என்ன படிக்கலாம் எங்கே படிக்கலாம் உயர் கல்வி வழிக்காட்டு மற்றும் ஆலோசனை என்பது தொடர்பாக மிக அவசரமான கண்ணோட்டம் செலுத்த வேண்டிய நிலை எழுந்துள்ளது.

மேலும் அடிப்படை ஸ்போகன் இங்கிலீஸ் இரண்டு மணி நேர வகுப்பாகவும் ஏற்படுத்த இருக்கின்றோம்.

மனிதவள மேலாண்மை பயிற்சியாளர் அபுதாலிப் அவர்களை கொண்டு மேற்கூறிய நிகழ்ச்சியை நடத்த உள்ளோம்.

10, +1 & +2 வகுப்பு மாணவர்களே பெற்றோர்களே உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.


For Madukkur Thowheed Charitable Trust

Wednesday, April 13, 2016

அதிரையில் புதிய பள்ளிவாசல் இயங்கத் துவங்கியது

அதிரையில் இன்று (14.04.2016) சுபுஹ் தொழுகை முதல் தனிநபர் ஒருவரால் கட்டப்பட்ட புதிய பள்ளிவாசல் (முஸல்லா எனும் தொழுகை கூடம்) புதிய குடியிருப்புக்கள் நிறைந்த சானா வயல் பகுதியில் இயங்கத் துவங்கியது. 

இந்தப்பள்ளி குர்ஆன் சுன்னா அடிப்படையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் எந்த ஒரு இயக்கத்தினரையும் சார்ந்ததல்ல, மேலும் இப்பள்ளி தொடர்ந்து இப்பள்ளியை கட்டிய தனிநபர் குடும்பத்தின் நிர்வாகத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் என தெரிவதை தொடர்ந்து இம்முடிவை இப்பகுதி மக்கள் முழுமனதோடு வரவேற்கின்றனர். எந்த இயக்கத்திற்கும் இப்பள்ளியை தாரைவார்க்கக்கூடாது என்கிற முடிவில் இப்பள்ளியை கட்டியவர் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும் எனவும் விரும்புகின்றனர்.





Photo credit: TIYA WhatsApp Group

துபையில் நாளை (15.04.2016) மாபெரும் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


Wednesday, March 16, 2016

துபை & ஷார்ஜாவில் CMN சலீம் அவர்களின் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

அன்பார்ந்த சகோதரர்களே...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

மார்க்க கல்வியுடன் தரமான உலக கல்வி கற்று இஸ்லாமிய ஆளுமைகளை உருவாக்க வேண்டும். மாவட்டத்திற்கு ஒர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியும் ஒவ்வொரு ஊரிலும் இஸ்லாமிய ஆரம்பப் பள்ளிகளை அமைக்க இஸ்லாமிய பெண் கல்வியாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நன்னோக்குடன் வளைகுடா நாடுகளிலும் தமிழகத்திலும் பல்வேறு கல்வி விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தி வரும் சகோதரர் CMN சலீம் அவர்களின் நிகழ்ச்சிகள் எதிர்வரும் 2016 மார்ச் 18 வெள்ளியன்று துபையிலும், மார்ச் 19 சனியன்று ஷார்ஜா மாநகரிலும் நடைபெறவுள்ளன இன்ஷா அல்லாஹ். கடந்த வாரம் வெள்ளியன்று அமீரகத் தலைநகர் அபுதாபியில் மக்களின் பேராதரவுடன் கருத்தரங்கு நிறைவுற்றது குறிப்பிடத்தக்கது. இன்ஷா அல்லாஹ் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய ஏகன் அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்தவர்களாக உழைப்போம், பிரார்த்திப்போம்.


Thanks to: TIYA

Saturday, February 27, 2016

வட்டிக்கு எதிராக ADTயின் இந்த மாத விழிப்புணர்வு பேனர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக அதிரையின் பிரதான இடங்களில் பிளக்ஸ் போர்டுகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் கடந்த மாதம் முதல் செய்யப்பட்டு வருவதை அறிவீர்கள். அதன் தொடர்ச்சியாக இந்த மாத பேனர் லோன், வட்டி போன்ற தீமைகள் குறித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த மாத பிளக்ஸ்களுக்கான ஸ்பான்ஷர் செலவை அதிரை மற்றும் பட்டுக்கோட்டையை சேர்ந்த 2 நிறுவனங்கள் பகிர்ந்து கொண்டுள்ளன. வரும் மாதத்திற்கான பிளக்ஸ் செலவை ஏற்றுக்கொள்ள முன்வருவோர் தொடர்பு கொள்ளவும்.

கமாலுதீன் 9543577794




Wednesday, February 24, 2016

நாளை துபையில் (26.02.2016) வெள்ளி காலை முதல் பகல் வரை சிறப்பு இஸ்லாமிய நிகழ்ச்சி

அன்புடையீர் , அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்மனார் சென்டர்-துபை
வழங்கும்
இஸ்லாமிய பயிலரங்கம் 

சிறப்புரைமெளலவிமுபாரக் மதனி
தலைப்புமாற்றுக் கருத்துடையவர்களுடன்
 நடந்துக்கொள்ளும் முறை

நாள்: 26-02-2016 - வெள்ளிக்கிழமை காலை 08.30 AM TO 12.00 PM.

 இடம்: அல்உவைஸ் அரங்கம்அல்பராஹா மருத்துவமனை வளாகம்அல்பராஹா தேரா -துபை

 அனுமதி இலவசம் பெண்களுக்கு தனி இட வசதி 
BUS ROUTE: RTA BUS # 17

தொடர்புக்கு056-7371442 / 056-7371449


இணைக்கப்பட்டுள்ள இந்த பயனுள்ள நிகழ்ச்சியின் FLYERயை பிறருக்கும் பகிர்ந்து பயன்பெறச் செய்ய வேண்டுகிறோம். 
அல்மனார் செண்டர்,
அல்பராஹாதேராதுபைஅமீரகம் 

-- 
அன்புடன்,
தவ்ஹீத் இல்லம் தஃவா குழு,
டெய்ரா, துபை
Tel: 00971 4 2981931