அதிரையில் இன்று (14.04.2016) சுபுஹ் தொழுகை முதல் தனிநபர் ஒருவரால் கட்டப்பட்ட புதிய பள்ளிவாசல் (முஸல்லா எனும் தொழுகை கூடம்) புதிய குடியிருப்புக்கள் நிறைந்த சானா வயல் பகுதியில் இயங்கத் துவங்கியது.
இந்தப்பள்ளி குர்ஆன் சுன்னா அடிப்படையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் எந்த ஒரு இயக்கத்தினரையும் சார்ந்ததல்ல, மேலும் இப்பள்ளி தொடர்ந்து இப்பள்ளியை கட்டிய தனிநபர் குடும்பத்தின் நிர்வாகத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் என தெரிவதை தொடர்ந்து இம்முடிவை இப்பகுதி மக்கள் முழுமனதோடு வரவேற்கின்றனர். எந்த இயக்கத்திற்கும் இப்பள்ளியை தாரைவார்க்கக்கூடாது என்கிற முடிவில் இப்பள்ளியை கட்டியவர் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும் எனவும் விரும்புகின்றனர்.
Photo credit: TIYA WhatsApp Group




No comments:
Post a Comment