உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, May 15, 2015

16.05.2015 மதுக்கூர் இஸ்லாமிய மாநாடு - நேரடி ஒளிபரப்பு விபரங்கள்


நாளை சனிக்கிழமை 16.05.2015 அன்று மதுக்கூரில் நடைபெறவுள்ள ஒருநாள் இஸ்லாமிய மார்க்க விளக்க மாநாடு கீழ்க்காணும் தளங்களில் நேரலை செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்.

www.tmclivetelecast.com
www.qurankalvi.com
www.suvanacholai.com

www.jubaildawahtamil.blogspot.com



 

Thursday, May 14, 2015

துபையில் 15.05.2015 வெள்ளியன்று மார்க்க விளக்க நிகழ்ச்சி - உரை: அப்துல் பாசித் புகாரி

துபையில், மர்கஸ் அல் ஹுதா வழங்கும் மவ்லவி.அப்துல் பாஸித் புஹாரி அவர்களின் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியில் சொர்க்கத்திற்கு நற்செய்தி பெற்ற பத்து நபித்தோழர்கள் என்ற தலைப்பின் கீழ் மாதந்தோறும் ஒவ்வொரு நபித்தோழரை குறித்து சொற்பொழிவு நடைபெறும். 
 
அந்த வரிசையில் இன்ஷா அல்லாஹ் இந்த மாதம்  வெள்ளிக்கிழமை 15/5/2015  அன்று மாலை 7:30 மணி அளவில்  சிறப்பு மிக்க நபித்தோழர் உமர் பின் அல் ஹத்தாப் (ரழி) அவர்களை குறித்து அறிய உள்ளோம் . 
 
மேலதிக விபரங்களை  அறிய கீழ இணைக்கப்பட்ட போஸ்டரை பார்க்கவும் பகிரவும்.
 

Sunday, May 10, 2015

அதிரை நியூஸ் கல்வி விருது மற்றும் சாதனையாளர்கள் விருது அறிவிப்பு !‏

 
அதிரை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுமார் 10,000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நமதூர் அரசு பள்ளிகள், அரசு உதவி பெரும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் 1 ம் ஆம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர்.

கல்வியில் பின்தங்கிய நமது பகுதியை மேம்படுத்தும் நோக்கில் நமதூர் பகுதி பள்ளிகளில் நடப்பாண்டில் SSLC, +2 அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, முதல் நான்கு இடங்களை பெற்றுள்ள மற்றும் பெற இருக்கும் மாணவ மாணவிகள், கல்விச்சேவையில் சிறந்து விளங்கும் ஆசிரியை ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியோருக்கு 'அதிரை நியூஸ் கல்வி விருதுகள்-2015' என்ற பெயரில் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் நடைபெறும் மாபெரும் விழாவில் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.

அதிரை நியூஸ் கல்வி விருது கமிட்டியினரால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கீழ்கண்ட பரிசுத்தொகையோடு கேடயம், பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியன வழங்கி கெளரவிக்கப்பட இருக்கின்றனர்.

பன்னிரெண்டாம் வகுப்பு:
முதல் பரிசு ₹ 10,000/-
இரண்டாம் பரிசு ₹ 7,000/-
மூன்றாம் பரிசு ₹ 5,000/-
நான்காம் பரிசு ₹ 3,000/-

பத்தாம் வகுப்பு:
முதல் பரிசு ₹ 7,000/-
இரண்டாம் பரிசு ₹ 5,000/-
மூன்றாம் பரிசு ₹ 3,000/-
நான்காம் பரிசு  ₹ 2,000/-

மேலும் நமது பகுதியில் உள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த சிறந்த சாதனையாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் சிறந்த சேவைகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் சிறப்பு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட இருக்கின்றோம்.

சிறப்பு விருதுகள்:
நல்லாசிரியர்
கல்விச்சேவை
சிறந்த கல்வி நிறுவனம்
சிறந்த பேச்சாளர்
சிறந்த எழுத்தாளர்
சிறந்த கவிஞர்
சிறந்த விளையாட்டு வீரர்
சுகாதார சேவை
மருத்துவ சேவை
அவசரகால மருத்துவ சேவை
இரத்ததான சேவை
சிறந்த சமூக சேவை [ நிறுவனம் ]
சிறந்த சமூக சேவை [ தனிநபர் ]
சிறந்த பத்திரிகையாளர்
சிறந்த காவலர்

தகுதியான சாதனையாளர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அதிரை நியூஸ் சார்பில் கல்வியாளர்கள் - சமூக ஆர்வலர்கள் ஆகியோரை கொண்டு அமைக்கப்பட்டுள்ள 'விருது கமிட்டியினர்' வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சாதனையாளர்களை தேர்ந்தெடுக்கும் பணிகளில் இவர்கள் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இறுதி வடிவம் பெற்றவுடன் இதுகுறித்த தகவல் முறையாக அறிவிப்பு செய்யப்படும்.

விருது பெற இருக்கும் சாதனையாளர்கள், விருது நடைபெறும் நாள் - இடம், விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள இருக்கும் சிறப்பு விருந்தினர்கள் - ஸ்பான்சர்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் விரைவில் அறிவிப்பு செய்யப்படும்.

மேலும் இது தொடர்பாக வாசகர்களிடமிருந்து சிறந்த ஆலோசனைகள் - கருத்துகள் வரவேற்கப்படுகிறது. மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு கீழ்க்கண்ட அலைப்பேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியில் அதிரை நியூஸ் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம்.

0091 9442038961 / 0091 9043140142
editoradirainews@gmail.com

அதிரை நியூஸ் குழு
 
அதிரை நியூஸ் உள்ளூர் நிகழ்வுகள் உடனுக்குடன்... 
http://www.adirainews.net/

Saturday, May 9, 2015

ADT வழங்கும் கோடைகால இஸ்லாமிய நல்லொழுக்கப் பயிற்சி முகாம்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அதிரை தாருத் தவ்ஹீத் வழங்கும்


கோடைகால இஸ்லாமிய நல்லொழுக்கப் பயிற்சி முகாம்

இன்னும்; உங்களைப்படைத்தவன் அல்லாஹ் தான்> பின்னர் அவனே உங்களை மரிக்கச் செய்கிறான்; கல்வியறிவு பெற்றிருந்தும் (பின்) எதுவுமே அறியாதவர்களைப்போல் ஆகிவிடக் கூடிய மிகத் தளர்ந்த வயோதிகப் பருவம் வரையில் வாழ்ந்திருப்பவர்களும் உங்களில் உண்டு - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும்> பேராற்றல் உடையவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன் 16:70.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எவன் மறுமையை பயந்து> தன் இறைவனின் அருளை எதிர்பார்த்து> இரவு காலங்களில் நின்றவனாகவும்> சிரம் பணிந்தவனாகவும் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கின்றானோ> (அவன் நம்பிக்கை கொள்ளாது நிராகரிப்பவனைப் போலாவானா? நபியே!) நீங்கள் கேளுங்கள்: கல்வி அறிவுடையவனும்> கல்வி அறிவில்லாதவனும் சமமாவார்களா? (இந்தக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுபவர்கள் எல்லாம் (கல்வி) அறிவுடையவர்தாம். அல்குர்ஆன் 39:9.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு மனிதனின் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவைகளாகி விடுகின்றன.

மரணத்த பின்பு மனிதன் கூடவே செல்லும் அம்மூன்று செயல்கள்-
 1.சதக்கத்துல் ஜாரியா (எனும் நிலையான தான தர்மங்கள்)
2.பலன் தரும் கல்வி (இம்மை மறுமை இரண்டிற்க்கும் நன்மை பயக்கும் கல்வி).
3.பெற்றோருக்காக துஆ செய்யும் (பிரார்த்திக்கும்) நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்ஷா அல்லாஹ்> இவ்வருட கோடைக்கால பயிற்சி முகாம் வழமைபோல்>

எதிர்வரும் 10.05.2015 முதல் 25.05.2015 வரை தினமும் காலை 9 மணிமுதல்

அதிரை> CMP லேன் பகுதியில் அமைந்துள்ள AL மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தகுதிவாய்ந்த ஆலிமாக்களை கொண்டு நடைபெறவுள்ளது.

விண்ணப்பப் படிவங்கள் இன்று பிலால் நகர் தர்பியா சென்டரிலும்> நாளை காலையில் முகாம் நடைபெறும் AL மெட்ரிக் பள்ளி வளாகத்திலும் கிடைக்கும்.

மாணவிகள் அனைவரும் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றது.

அதிரை தாருத் தவ்ஹீத்
அதிராம்பட்டிணம்.

Tuesday, May 5, 2015

16.05.2015 சனி அன்று மதுக்கூரில் நடைப்பெறும் மாபெரும் ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு!




வருகின்ற மே16ல் மாபெரும் ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு மதுக்கூர் இடையக்காட்டில் "வாருங்கள் நன்மையை நாடி" என்ற தலைப்பில் நடைபெறுகிறது...

 மார்க்க சொற்பொழிவுகள் 

 இஸ்லாமிய மக்கள் பயன்பெறும் வகையில் கண்காட்சி 

 மந்திரமா? தந்திரமா? மேஜிக் நிகழ்ச்சி

 புத்தக கண்காட்சி 

 கேள்வி பதில் நிகழ்ச்சி...

இன்னும் ஏராளமான நிகழ்வுகள் காலை 9 மணி முதல் இரவு 9 வரை நடைபெற இருக்கிறது...

ஏற்பாடுகள்... ஆயிரக்கணக்கான மக்கள் அமரும் வகையில் பந்தல்... கண்காட்சி அரங்கம்... ஆண் பெண் இருபாலருக்கும் தனி தனி இட வசதி.... மதிய உணவு இரவு உணவு என இன்னும் பல எற்பாடுகளை மாநாட்டு குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்து வருகின்றனர்... அல்ஹம்துலில்லாஹ்...

கோடை விடுமுறையில் ஒரு நாளை பயனுள்ள வகையில் கழிக்கும் விதமாக , ஈமானை அதிகரிக்கும் வகையில் நடைபெறும் இந் நிகழ்ச்சியில் குடும்பத்தோடு கலந்து கொண்டு பயனடையுமாரு அன்புடன் அழைக்கிறோம்...

இஸ்லாமிய பிரச்சார பேரவை - மதுக்கூர் , தஞ்சை தெற்கு...

தொடர்புக்கு- 9943145503, 9688885675, 9566993738, 8508102036
 
Thanks to: Adiraipirai

Sunday, May 3, 2015

அதிரையில் ADT நடத்தும் இஸ்லாமிய மகளிர் கல்லூரிக்கான புதிய மாணவிகள் சேர்க்கை துவக்கம் !

அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் ஒரு அங்கமாகிய அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி கடந்த சில ஆண்டுகளாக அதிரையில் இயங்கி வருகிறது. இந்நிலையில் நடப்பு 2015- 2016 ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவிகள் சேர்க்கை துவங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Courtesy:  
http://www.adirainews.net/2015/05/adt.html

Friday, May 1, 2015

அதிரையில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி !

 
அதிரை இளைஞர்கள் மற்றும் Terri Wear இணைந்து நடத்தும் 10th,11th,12th முடித்த மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வரும் (08-05-2015) வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருச்சி  காவேரி மகளிர் கல்லூரி பேராசிரியர் M. ஆசியதாரா M.A.,M.Phil.,Ph.D., அவர்கள் ( அடுத்து என்ன படிக்கலாம்? ) என்ற தலைப்பிலும் ,ACCESS INDIA COUNSELLOR வழக்கறிஞர் Z.முஹம்மது தம்பி B.A.,B.L., அவர்கள் (கல்வி சம்மந்தமாக பெற்றோர்கள்,மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்) அளிப்பார்.

மேலும் மாணவ,மாணவிகளுக்கு கல்வி சம்மந்தமான சிறப்பு பயிற்சிகளும் இந்த நிகழ்ச்சியில் அளிக்கப்படும்.இந்த நிகழ்ச்சியில் அதிரை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

குறிப்பு:பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Thanks to News Source:
http://www.adirainews.net/2015/05/blog-post_90.html