உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, November 25, 2013

உள்ளங்களை உலுக்கிய மனங்களின் சாட்சி

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

கண்கவரும் பொருட்காட்சி, கண்காட்சி என எத்தனையோ கண்டுகளித்திருப்போம் ஆனால் இதற்கு மாற்றாக உள்ளங்களால் உணர்ந்து பார்ப்பதற்காக கடந்த நவம்பர் 2013, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் துபை ஜமியத்துல் இஸ்லாஹ் அரங்கில் 'இஸ்லாத்தை ஏற்க 100க்கு மேற்பட்ட காரணங்கள்' என்ற பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்துக்காட்சி, குறிப்பாக துபை மாநகரில் இஸ்லாத்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் தழுவிய சகோதர, சகோதரிகளின் உள்ளத்து உணர்வுகள் காட்சியாய் ஏற்பாடு செய்யப்பட்டு காண்போரின் மனசாட்சியை உலுக்கும் நிறைவான நிகழ்வாய் அமைந்திருந்தது, அல்ஹம்துலில்லாஹ்.
 
துபை மாநகரில் உயர்பதவிகள், தொழிலாளர்கள் என பல மட்டங்களிலும் பணிபுரிந்த, பணியாற்றுகின்ற நூற்றுக்கணக்கான சகோதர, சகோதரிகள் தங்களின் வாழ்வியலாக இஸ்லாம் எனும் பொக்கிஷம் கிடைத்த தருணங்களை, காரணங்களை, விவரித்த விடயங்களை இரத்தினச்சுருக்கமாக தொகுத்து, எளிய ஆங்கிலத்தில், கருத்துக்களையே காட்சிகளாக்கி அழகுற பேனர் வடிவில் வரிசைபடுத்தியிருந்தனர்.
 
இரு தினங்களும் நிறைந்த அரங்கமாக, ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்களும், தஃவா பணியாளர்களும், மொழி, நாடு, நிறம், பேதமின்றி சர்வதேச மக்களும் திரளாக கலந்து பயன்பெற்றுச் சென்றனர்.
 
அரங்கில் பம்பரமாக சுழன்ற இறை மார்க்கத் தொண்டர்களில் அனேகர் பெண்களே! அதிலும் இஸ்லாத்தை ஏற்ற புதிய சொந்தங்களே வழிகாட்டி, வந்தோருக்கு விளக்கி உவந்தனர். அரபி, ஆங்கிலம், தகலோக் என சர்வதேச மொழிகள் பலவற்றுடன் ஹிந்தி, மலையாளத்துடன் நம் தமிழிலும் விளக்கமளித்தனர்.

துபை அவ்காஃப் அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்விலும் 3 பேர் இஸ்லாத்தை தங்களின் வாழிவியல் நெறியாக ஏற்றனர், அல்லாஹூ அக்பர்.
 
பேரதிர்ச்சி தரும் உண்மை
 
பொதுவாக, இன்றைய முஸ்லீம்களின் நடவடிக்கைகளை பார்க்கும் ஒருவன் ஒருபோதும் இஸ்லாத்திற்கு வரமாட்டான் என்ற அவச்சொல் நிலவுவதை யாவரும் அறிவோம் என்றாலும் இங்கே பலரும் இஸ்லாத்தை தழுவுவதற்கு சில முஸ்லீம்களின் தூய இஸ்லாமிய செயற்பாடுகளே காரணமாக அமைந்ததென சான்று பகர்ந்துள்ளனர் நமைமிகைத்த நம்மின் புதிய சகோதர, சகோதரிகள். அப்படியாயின் நம்முடைய வாழ்க்கை???
 
அதிரைஅமீன்
 
 

























 












 

அமீரகத்தை குளிரூட்டி சென்ற மழை

மழையை நேசிக்கும் மண்ணிலிருந்து வந்த நமக்கு வருடத்திற்கு ஒருமுறை வானம்; அது வருஷித்தால் நிச்சயம் மகிழ்ச்சிகரமான செய்தி தான். 

ஒரு வருடம் கழித்து மீண்டும் கடந்த சில தினங்களுக்கு முன் அதிகாலையில் பலத்த காற்றுடன் அமீரகத்தில் மழை பெய்தது சிறப்புச் செய்தியாக ஊடகங்களில் மகிழ்ச்சி பொங்க வெளியிடப்பட்டன, தொடர்ந்து மேகமூட்டத்துடனும் அவ்வப்போது தூறலுடனும் காணப்பட்ட வானம் நேற்று காலை 9 மணியளவில் அபுதாபி, முஸஃபா, ஐகாட் சிட்டி 2 பகுதியில் மீண்டும் மழையாய் கொட்டியது. 

அமீரக மழையில், 

1. மழைக்குப்பின், துளிர்த்து சிலிர்த்து நிற்கும் கண்களுக்கு குளிர்ச்சியான பசுமை இல்லை. 

2. சிறிய தூறலிலும் மனதை மயக்கும் மண்வாசனை இல்லை. 

3. மழையால் மருத்துவருக்கும் லாபமில்லை.

4. பெய்யும் மழையை டிவியில் காண்பித்து 'விவசாயிகள் மகிழ்ச்சி' என்ற ஒற்றை வரியை திரும்பத் திரும்ப சொல்ல யாருமில்லை. 

5. சென்டிமீட்டர் கணக்கில் மழையை அளவிட தேவையில்லை. 

6. மழையால் ரோடுகள் காணாமல் போனதாக செய்திகள் இல்லை. 

7. மழை வெள்ளம் வாரக்கணக்கில் தேங்கி நிற்கும் அவலம் இல்லை. 

8. நாமறிந்து இந்த மழையை நம்பித்தான் இந்த பாலைமண் என்று எதுவுமே இல்லை, 

என்றாலும் அமீரகத்தில் பெய்யும் மழையால் நம் சிற்றறிவுக்கு இன்னும் எட்டாத நன்மைகளை ஏக இறைவன் மறைத்தே வைத்துள்ளான். 

மழைக்கு முன் புழுதிக்காற்றால் துவண்டிருந்த அமீரகத்தில் திடீர் மழைக்குப்பின் சென்ற வார புழுதிப்படலம் அடங்கி துவங்கியது குளிர். 

இந்த குளிரோட அருமை அமீரக வெயிலில் வெந்தவர்களுக்கு தான் தெரியும் என்றாலும் பைக் ஓட்டுனர்களுக்கு இரண்டுமே ஒன்று தான். 

அமீரகம் என்றவுடன் மாட மாளிகைகளையும் கூட கோபுரங்களையும் கற்பனை செய்து வைத்திருப்பவர்களுக்கு இப்படங்கள் சமர்ப்பணம் ஆகுக! 











அதிரையின் மைந்தன்

Saturday, November 23, 2013

Sydney - Auburn Community Centerல் திருக்குர்ஆன் விரிவுரை வகுப்பு - பெண்களுக்கு தனியிட வசதி உண்டு‏

بسم الله الرَّحمن الرَّحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் .இன்ஷா அல்லாஹ்  சனிக்கிழமைகளில் மாலை 5:30 மணிக்கு தொடர் திருக் குரான் விளக்க உரை வகுப்பு நடைப் பெறுகின்றது -
பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 
Time: Every Saturday 5:30 pm to 7:30 pm
Venue: Auburn Community Center

இத் திருக்குரான் விளக்க உரையை சகோதரர் இம்தியாஸ் மௌலவி அவர்கள் மிகத் தெளிவாக ஆதரப்பூர்வமான ஹதிதுகளின் அடிப்படையில் அறிவுப்பூர்வமான விளக்கங்களுடன் சொற்பொழிவை நிகழ்த்தி வருகின்றார்கள்.

இவ்வறிய சந்தர்பத்தில் அனைவரும் இச்சொற்பொழிவில் கலந்துகொண்டு பயன்பெறவும் மேலும் மற்ற உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இத் தகவல்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்

தங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் சொல்ல தோனுமாயின் மேலும் இச் சொற்பொழிவு சம்மந்தமாக அறிவுரைகள் அல்லது கேள்விகள் கேட்க எண்ணம் ஏற்பட்டால் மௌலவி அவர்களிடம் நேரடியாக ஒதுக்கப் பட்ட நேரத்திலும் மேலும் தனிப்பட்ட முறையில் அணுகுவதாக இருந்தால் கீழே உள்ள மின்அஞ்சல்(email ) மூலமும் தொடர்பு கொள்ளலாம்.





Husband's and Wife's Rights and Responsibilities - Part 1
01:34:55
Added on 17-11-2013
இஸ்லாம் கூரும்
கணவன் மனைவியின்
கடமைகள் பொறுப்புகள்

 has shared a video with you on YouTube
இஸ்லாம் கூரும்
கணவன் மனைவியின்
கடமைகள் பொறுப்புகள்

கணவன் மனைவிக்கு செய்யவேண்டிய கடமைகள்
1. (கணவன் / கணவன்வீட்டார்) மனைவிக்கு செய்யக் கூடிய அநியாயங்கள்
2. கணவனின் அனுமதி இல்லாமல் மனைவி பணம் எடுக்கலாமா, ஏன்?
3. மனைவியின் மாதபோக்கின் நாட்களில் நடந்து கொள்ள வேண்டியவை
4.கணவனும் மனைவியும் ஒன்றாக குளிக்கலாமா?
5.மனைவியின் / கணவனின் பெற்றோர்களை கவனிக்க வேண்டியவை
6.மனைவியின் விசயத்தில் சட்டத்தை கையில் எடுக்கலாமா?

மனைவி கணவனுக்கு செய்யவேண்டிய பொறுப்புகள்
1. கணவனின் பேச்சை கேட்கவேண்டிய இஸ்லாமிய பண்பாடுகள்
2. கணவன் மனைவியோடு சேர தேவைப்படும்பொது எந்த நேரமாக இருந்தாலும் ஒத்துழைக்கலாம?
3. கணவன் இல்லாத நேரத்தில் மகரம் இல்லாத ஆண்களை வீட்டில் அனுமதிப்பதையும் துணை இல்லாமல் வெளியில் செல்வதும் கூடாது
4. பெண்கள் அதிகமாக சதக்கா செய்தல் போன்ற நல்லறங்கள்


Husband's and Wife's Rights and Responsibilities - Part 1

by Team Tams Sydney
அல்லாஹ்வின் நாட்டப்படி உங்கள் அனைவரின் மேலான ஆதரவுடன்
Team
email- tafseer@tamsonline.org.au

நேரலையில் அகீதத்துத் தஹாவிய்யாஹ் வகுப்பு

அன்பு சகோதரர்களே!

இத்தொடர் வகுப்பு வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு  8.00 மணி முதல் 9.00 மணி வரை சாமி துகைர் ஹாலில் நடைப்பெறுகிறது. சகோதரர்கள் அனைவரும் இவ்வகுப்பில் பங்குப் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வகுப்பு கீழ்க்கண்ட இணைய முகவரியில் நேரலையில் சவூதி அரேபிய நேரம் இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பப் படுகிறது.


ராக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையம் - தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு
Rakah Islamic Cultural Center - Tamil & Sinhala language section
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ  صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. 1:5-7


கடற்கரைத் தெரு தர்கா ட்ரஸ்டிகளுக்கும் கந்தூரிக் கமிட்டியினருக்கும் ADTயின் கடிதம்

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!

அஸ்ஸலாமு அலைக்கும்.

கடற்கரைத் தெரு ஜமாஅத், கடற்கரைத் தெரு தர்கா ட்ரஸ்டிகள் மற்றும் கந்தூரிக் கமிட்டியினரைச் சந்தித்து, கந்தூரியின் தீமைகளை விளக்கிக் கடிதங்கள் கொடுப்பது எனும் அதிரை தாருத் தவ்ஹீத் ஆலோசனை அமர்வுத் தீர்மானத்தின்படி, முதலாவதாக கடற்கரைத் தெரு ஜமாஅத்தார்களுக்கு 3.11.2013இல் ஒரு கடிதம் கொடுத்தோம்.

கடற்கரைத் தெரு தர்கா ட்ரஸ்ட்டின் முன்னாள் தலைவராக இருந்தவரான சகோ. அலாவுத்தீன் சென்ற ஆண்டு கபுருக்கு சந்தனம் பூசுவதற்குப் போய் உயிர் நீத்துவிட்டதால் அன்னாரின் சின்னவாப்பா சகோ. அஹ்மது ஹாஜா அவர்கள் தர்கா ட்ரஸ்டுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரது உடல்நலக் குறைவால் தர்கா சம்பந்தப்பட்ட எதிலும் தலையிடாமல் இருந்து வருகிறார்.

எனவே, தர்கா ட்ரஸ்ட்டின் செயலாளரான சகோ. அபுல் ஹஸன் அவர்களை, அவருடைய 'ஹஸன் ஹார்ட்வேர்' கடையில் கடந்த 17.11.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணியளவில் நான், தாருத் தவ்ஹீதின் அமீர் அஹ்மது காக்கா, பொருளாளர் நிஜாமுத்தீன் ஆகிய மூவரும் சென்று சந்தித்து இணைப்பில் உள்ள கடிதத்தைக் கொடுத்தோம்.

சகோ. அபுல் ஹஸன் அவர்கள் ஏறத்தாழ இருபது நிமிடங்கள் பேசினார். அதில் நமக்கு அறிவுரைகளும் ஆலோசனைகளும் அடங்கியிருந்தன. அதிர்ச்சி அளிக்கும் தகவல்களும் இடம்பெற்றன. அவற்றின் சுருக்கம்:

* "நாகூரிலும் முத்துப்பேட்டையிலும் இன்னும் பல பெரிய ஊர்களிலும் கந்தூரிகள் நடக்கின்றன. இந்தச் சின்னக் கிராமத்தில் நடைபெறும் கந்தூரியை எடுக்கக்கூடாது என்று ஏன் சொல்கின்றீர்கள்? அங்கே போய் சொல்வதுதானே?" என்ற கேள்வியை முன்வைத்தபோது நான் குறுக்கிட்டு, "எல்லா ஊர்களிலும், நாகூரிலும் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது. நாகூர் பிரச்சாரத்திற்கு நானும் போயிருக்கிறேன்" என்று சொன்னேன்.

* "எனக்கு ஒன்றும் தெரியாது; உங்களுக்கும் ஒன்றும் தெரியாது. முன்னோர்கள் 570 வருசத்துக்கு முந்தி கந்தூரி எடுத்திருக்கிறார்கள். அது, அப்படியே தொடர்ந்து வருகிறது" என்று முன்னோர்களை உயர்த்திப் பேசிவிட்டு, "தர்கா என்பது இறைவனை வணங்கும் இடம்" என்ற அதிர்ச்சியான தகவலைச் சொன்னார். "அல்லாஹ்வை தர்காவில் தொழ முடியாதே. எப்படிச் சொல்கிறீர்கள் காக்கா?" என்று நான் கேட்டதற்கு, "அப்படித்தான் நான் படித்திருக்கிறேன். எனக்குப் படித்துத் தந்தவர் அப்படித்தான் சொல்லித் தந்தார்" என்று விளக்கினார். முன்னோர்களின் வழிவந்த உஸ்தாதின் மார்க்க அறிவே இப்படி என்றால் அந்தக் காலத்து முன்னோர்கள் மார்க்கத்தை எப்படி விளங்கி இருப்பார்கள் என்று எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. அல்லாஹ்வின் (2:170) வார்த்தைகள் எத்துணை சத்தியமானவை என்று வியக்காமலும் இருக்க முடியவில்லை.

* தர்காவுக்குச் சம்பந்தமில்லாத ஒரு பெண்ணின் வீட்டில் ஐந்து பவுன் நெக்லஸ் காணாமல் போய்விட்டதாம். "இன்னார் வீட்டு தர்வாஜாவில் அது தொங்கிக் கொண்டிருக்கிறது. போய் எடுத்துக்கொள்" என்று கனவில் வந்து சொன்னாராம் ஜொகராம்மா. "கனவு கண்ட பெண், ஐந்து பவுன் நகையையும் விற்று, கபுர் கட்டினார். சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் குடும்பம். இந்தக் காலத்தில் ஐந்து பவுன் என்ன விலை? அதை விற்று அவர் கபுர் கட்டினால் உங்களுக்கென்ன?" என்ற கேள்வியை வைத்தார். உண்மைதான். அவருடைய கேள்வியில், "ஆலிம்கள் பெருத்த ஊர்; ஆறு குத்பா நடக்கும் ஊர். யாருமே வாய் திறந்து பேசாமல் இருக்கும்போது நீங்கள் மட்டும் குதிப்பது ஏன்?" எனும் உப கேள்விகள் பொதிந்திருந்தன. "கழிப்பிடத்தில் முளைக்கும் திடீர் கப்ரு என்று நோட்டீஸ் போட்டீர்களே என்ன நடந்தது? நோட்டீஸைப் படித்துவிட்டு, நீங்கள் கொடுத்த விளம்பரத்தால் நிறைய பேர் வர ஆரம்பித்துவிட்டார்கள்" என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

* கந்தூரியில் நடைபெறும் குத்துப்பாட்டு, கச்சேரிகளில் தமக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவை கந்தூரி கமிட்டியாரால் செய்யப்படுபவை என்றும் தெளிவாக்கினார். "கந்தூரி கமிட்டியார் யார் காக்கா?" என்று நான் கேட்டதற்கு, "இதுவரைக்கும் யாரெனத் தெரியவில்லை. என்னிடம் வந்து பர்மிஷன் கேட்பார்கள். நான் சரி என்பேன். அவ்வளவுதான்" என்று கூறினார்.

* "ஏழைச் சிறுவர்களுக்கு கத்னா செய்து வைக்க முன்வாருங்கள். ஏழைக் குமருகளுக்குக் கல்யாணம் செய்து வையுங்கள். அதை விட்டுவிட்டு கந்தூரியை நிறுத்து என்றால் நின்றுவிடுமா?" என்று ஆலோசனை வழங்கினார்.

* பேச்சு வாக்கில், "நாங்கள் ஹாஷிமிகள்" என்பதாக எனக்குப் புதுத் தகவல் ஒன்றையும் தெரிவித்தார். அந்த நேரத்தில் ஹாஷிமிகளான அபூஜஹ்லும் அபூதாலிபும் என் நினைவில் வந்தனர். இந்த ஹாஷிமி விபரத்தை 'ஸில்ஸிலா'வைப் படித்துப் பார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும், இன்ஷா அல்லாஹ். ஏனென்றால், ஹாஷிமிகளுக்கு தானமோ தர்மமோ கொடுப்பது முஸ்லிம்கள் மீது ஹராமாக்கப்பட்டது. வாங்குவதும் ஹாஷிமிகளுக்கு ஹராமாக்கப்பட்டதாகும்.

மக்ரிபுக்கு நேரமாகிவிட்டதால் விடைபெற்றோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டவேண்டும்.

தொடர்புடைய சுட்டிகள் : -
மடமையிலிருந்து விடுதலை பெறுவோம்
கழிப்பிடத்தில் முளைக்கும் திடீர் கப்ரு

ஜமீல் M.ஸாலிஹ் - SEC-ADT




 
Thanks to : adirainirubar

Sunday, November 10, 2013

முத்துப்பேட்டை லகூன் எனும் சதுப்பு நிலக்காடுகளுக்குள் ஓர் உலா

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அமீரகத்துல கிடைக்கின்ற சொற்ப லீவுல, வேலைப்பளுவால் மண்டை காய்ந்து ஊருக்குப் போகின்ற நமக்கு ஆறுதல் நம்ம குடும்பம் குட்டிகள் தான், அதுவும் அவர்களுடன் சேர்ந்து ஒரு சுற்றுலாவோ, பிக்னிக்கோ போய் வந்தால் அது இன்னும் மன இறுக்கங்களை குறைக்கும் ஒரு அருமருந்துங்க.
 
 

சுனாமியை அழிவின் சின்னமாக நாம் அறிவோம் ஆனால் அதே சுனாமியால் அழகையும் ஏற்படுத்த முடியும் என்பதன் சின்னஞ்சிறு சாட்சியே நமதூரை ஒட்டியுள்ள கீழத்தோட்டம் கடற்கரை மணற்பரப்பு.

அழிவையும், அழகையும் ஏற்படுத்த வல்ல சுனாமியையே மண்டியிடச் செய்யும் சதுப்புநில காடுகள் அதிரை வரை படர்ந்திருப்பது எல்லாம் வல்ல ரஹ்மான் நம் மீது கொண்டுள்ள கருணையே அன்றி வேறில்லை.

சதுப்புநில அலையாத்திக் காடுகளையும் கடலையும் ஒட்டி சூழ்ந்துள்ள நண்ணீர் பகுதியே லகூன் என அறியப்படுகின்றது.
 

 


முத்துப்பேட்டை லகூன் என்ற பெயரை சிறுவயது முதல் அறிந்திருந்தாலும் போக வாய்க்கவில்லை ஆனால் இந்த வருட ஹஜ்ஜூப் பெருநாளைக்கு கிடைத்த ஒரு வார கேப்புல ஊருக்கு போன நமக்கு தலைக்கு மேல சொந்த வேலைகளும், நிலத்திருடர்களின் தொந்தரவுகளும் ஏராளம் இருந்தாலும் நண்பன் அப்துல் ரஹ்மான் கை கொடுக்க, குடும்பத்துடன் முத்துப்பேட்டை லகூனுக்கு சென்று வந்தோம்.

 


லுகூனுக்குச் செல்ல வனத்துறையிடம் முன் அனுமதி பெறவேண்டும் என கேள்விப்பட்டிருந்ததால், நண்பர் அப்துல் ரஹ்மான் தன் உறவினர் மூலம் அறிமுகமான முத்துப்பேட்டையை சேர்ந்த ஒரு சமுதாய இயக்க சகோதரரை மொபைலில் தொடர்பு கொண்டு உதவி கேட்க, அவரும் உங்களுக்கான முன்அனுமதி மற்றும் படகு எல்லாம் ரெடி என துண்டை போட்டு தாண்டாத குறையாக வாக்குறுதியளிக்க, அடுத்த நாள் காலையிலும் மீண்டும் அவரிடம் மறுஉறுதி செய்து கொண்டு பகல் 12 மணிக்கெல்லாம் ஸபாட்டுக்குப் போனா... அந்த இடத்துல ஒரு சில மீனவ சகோதரர்களை தவிர வேற யாரையும் காணோம். மீண்டும் மீண்டும் மொபைல்ல உள்ள நம்பர் தேய்கிற அளவு அடிக்க அடிக்க ரிங் மட்டும் தாங்க போனது, எடுத்துப் பேச நாதியில்லை. சரி அவருடைய இயக்க சகாக்கள் மூலம் என பல்வேறு வகையிலும் முயற்சித்த போதும் இன்று வரைக்கும் ஆளாக்காணோம். நாமாவது பரவாயில்ல, பிக்னிக் என்பதால் சமாளித்து விட்டோம் ஆனால் இவர்களை நம்பிச் சென்ற சமுதாய பிரச்சனைகள், சமுதாய சகோதரர்கள் என எத்தன பேர இப்படி டீல்ல விட்டிருப்பார்கள் என நினைக்கும் போதே கண்ண கட்டிருச்சுங்க. நாமும் தான் ஒரு காலத்துல இதே இயக்கத்துக்கு நகரத் தலைவரா இருந்தோம்னு தேவையில்லாத ஒரு நினைப்பு வேற வந்து தொலச்சது. ஒரு தகவலுக்காக சொன்னேன், சரி விடுங்க நாம பார்க்க வந்த லகூன பார்ப்போம்.
 


அங்கிருந்த மீனவ சகோதரர்களை அணுகி, போட்டுக்கு ரேட்டு பேசி, அவர்கள் மூலமே வனத்துறையிடம் முறையான அனுமதியும் பெற்று புறப்படும் போது மணி மாலை 2.30யை தாண்டிவிட்டது. இருபுறமும் அலையாத்திக்காடுகள், தண்ணீரிலும் மரங்களிலும் அரிதாக காணப்படும் பறவைகள், ஆங்காங்கே அலையாத்திகாடுளால் உருவாக்கப்பட்ட குட்டி குட்டி தீவுகள், எங்கும் நீர்ப்பரப்பும், பசுமையும் என சுமார் ஒரு மணி நேரம் மெல்லச் செல்லும் அலுக்காத படகு பயணம், டிஸ்கவரி சேனல்ல நாமே போற மாதிரி ஒரு ஃபீலிங் வரும். ஆறும் கடலும் சேருமிடம் வரை செல்லும் படகு அப்படியே  "U" டர்ன் அடித்து திரும்புகிறது.


 

வரும் வழியில், ஒரு குட்டி தீவில் இறக்கிவிடுகிறார்கள். தீவின் குறுக்காக அமைக்கப்பட்டுள்ள நீண்ட மரப்பாலம் வழியாக நான்கு புறமும் குழந்தைகள் ஒடியாட, கரையோரம் அமைக்கப்பட்டுள்ள இளைப்பாறும் குடிசைகளில் தென்றல் தாலாட்ட, கொண்டு வந்த உணவை அங்கேயே பகிர்ந்து சாப்பிட்டு, சிறிது ஓய்வெடுத்துவிட்டு அனுமதிக்கப்பட்ட நேரமான மாலை 5 மணிக்கு அங்கிருந்து கிளம்பினோம்.




 

படகு திரும்பி வரும் வழியில் மழை பெய்ய, நனைந்ததும் இளமைக்காலம் நினைவுகளிலே வந்து சென்றது. திரும்ப வரும்போது மீனவர்கள் ஆங்காங்கே வலை விரித்து வைத்திருக்க அது அருபடாமல் லாவகமாக படகுகளை ஒட்டி வருகிறார்கள்.




கடந்த 06.06.2013 அன்று தமிழக முதல்வர் அவர்கள், முத்துப்பேட்டை லகூன் பகுதியை சுற்றுலாத்தலமாக மேம்படுத்த 2 கோடியே 17 லட்சத்து 80 ஆயிரம் (G.O.Ms.No.141 மூலம் ரூ.217.80 லட்சம்) நிதி ஒதுக்கியுள்ளார்கள். அதனை கொண்டு வனத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் அடிப்படை மற்றும் அதிகமான வசதிகளை செய்து தர வேண்டும், குறிப்பாக குடிநீர், டாய்லெட் வசதிகள் மற்றும் அரசே இயக்கும் படகு போக்குவரத்து, ஒரு சிறிய தீவில் லகூனில் காணப்படும் மீன், பறவை மற்றும் விலங்கினங்களை இயற்கை சூழலில் உலவவிடும் காட்சி சாலை அல்லது தற்போதைக்கு அதன் புகைப்பட காட்சி அரங்கு, இப்போதைக்கு சிறிய கேண்டீன் மற்றும் எதிர்காலத்தில் உணவகம் என அமைத்தல் வேண்டும்.

அதிரை வரை படர்ந்துள்ள அலையாத்தி காடுகளுக்குள்ளும் பிக்னிக் சென்று வர தஞ்சை மாவட்ட நிர்வாகமும் ஏற்பாடு செய்தல் நலம்.
 
டிப்ஸ்:

அதிக அளவில் குடி தண்ணீர், தேவையான உணவு, நொறுக்குத் தீனிகள் எல்லாம் அவசியம் எடுத்துக் கொண்டு செல்லுங்கள். பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை, குப்பைகள் போடவும், புகை பிடிக்கவும் அனுமதியில்லை.

கந்தூரி, திருவிழா, பொருட்காட்சி, சுற்றுலா என அதிகம் ஊர் சுற்றாத பெண்களுக்கும் பசுமை விரும்பும் ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும் லகூன் பிடிக்கும், மத்த பெண்களுக்கு என்ன இது வெறும் தண்ணியும், ஓரே காடாவும் இருக்கு என்ற சடைப்பு தான் மிஞ்சும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் தக்க ஆண் துணையின்றி செல்லவே கூடாது.

அதிரைஅமீன்

Thanks to : www.muthupetnews.com & Tiruvarur collector
 

14 & 15 Nov 2013 - In Dubai - Exhibition on more than 100 reasons for embracing ISLAM


மற்றும்

தஃவா பயிற்சி வகுப்பு

இடம்: ஜமியத் அல் இஸ்லாஹ் அரங்கம்

லூலூ ஹைப்பர் மார்க்கெட் பின்புறம்,
ஸ்டேடியம் மெட்ரோ ஸ்டேஷன் அருகில்,
அல் கிஸஸ், துபை.
நாள்:  14 மற்றும் 15 நவம்பர் 2013
நேரம்: காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரை
மேலும் விபரங்களுக்கு: 050 1644501

 
 
நாள்: 14 மற்றும் 15 நவம்பர் 2013
நேரம்: மாலை 6.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரை