அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
கடந்த இரு வாரங்களாக அதிரை தாருத் தவ்ஹீத் ஏற்பாட்டில், அதிரை பிலால் நகரில் அமைந்துள்ள தர்பியா மையத்தில் சென்னை மஸ்ஜிதுல் முஃமீன் தாவா குழுவைச் சேர்ந்த சகோதரர் செங்கிஸ்கான் அவர்கள் 'தாவா ஏன்? எப்படி? என்ற தலைப்பிலும், சகோதரர் அப்துல் ஹமீது அவர்கள் 'தாவா செய்ய நம்மை நாமே தயார் செய்து கொள்வது எவ்வாறு? என்ற தலைப்பிலும் இளைஞர்கள் மற்றும் தாவா ஆர்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
சென்ற வாரத்தின் தொடர்ச்சியாக, வரும் வெள்ளிக்கிழமை 05.06.2015 அன்றும் மஃரிப் தொழுகையை தொடர்ந்து சகோதரர் அப்துல் ஹமீது அவர்களின் பயிற்சி வகுப்புக்கள் தொடரவுள்ளன. இந்த பயிற்சி களத்திற்கு வரும் சகோதரர்கள் மறவாமல் தங்களுடன் தமிழாக்க குர்ஆன் பிரதி ஒன்றையும் குறிப்பெடுக்க ஏதுவாக நோட்டு புத்தகம் ஒன்றையும் தங்களுடன் எடுத்து வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
கடந்த வாரத்தை போன்றே வரும் வெள்ளிக்கிழமை 05.06.2015 அன்றும் கீழ்க்காணும் வகையில் ஏகத்துவ அழைப்பாளர் அப்துல் ஹமீது அவர்களின் நிகழ்ச்சிகள் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.
1. ALM ஸ்கூல் ஜூம்ஆ உரை
2. பிலால் நகரில் அஸருக்குப் பின் பெண்களுக்கான பயான்
3. மஃரிப் தொழுகைக்குப் பின் பிலால் நகரில் 'தஃவா பயிற்சி வகுப்பு'
கடந்த வாரம் நிகழ்ந்த தாவா பயிற்சி வகுப்பின் புகைப்படங்கள்
இம்மை மறுமைக்கு நன்மை சேர்க்கும் இதுபோன்ற பயனுள்ள பயிற்சிகளில் அவசியம் கலந்து கொள்ள வேண்டுமாய் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.
அதிரை தாருத் தவ்ஹீத்
No comments:
Post a Comment