புண்ணிய
மாதத்தை வரவேற்போம்!
என் அன்பிற்குரிய சொந்தங்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.
இதோ, வந்துவிட்டது இவ்வாண்டிற்கான رمضان المبارك எனும் மாதம். இம்மாதத்தில் அளவற்ற
அருளாளன் அல்லாஹ் அமைத்து வைத்துள்ள நற்செயல்களுக்கான கூலிகள் – அவரவர்
உளத்தூய்மைக்கு ஒப்ப – அளவற்றவை;
அருமையானவை!
கடந்த மாதங்களில் அறிந்தோ அறியாமலோ சிந்தித்த,
செய்த, செய்யத் தூண்டிய, பிறர் செய்ததைப் பாராட்டிய மாற்றமானவற்றை விட்டுத் ‘தவ்பா’
செய்வோம்!
இன்ஷா அல்லாஹ், இந்த ரமழானில்,
அவற்றை விட்டு ஒதுங்கி, நல்ல சிந்தனைகளில், நற்செயல்களில், அவற்றைச் செய்யத்
தூண்டுவதில், பிறர் செய்வதைப் பாராட்டுவதில் முனைந்து பாடுபடுவோம்!
உள்ளங்களைத் திறந்து
வைத்துக்கொள்ளுங்கள்! அவற்றில் தூய்மையை
நிரப்புங்கள்! அருளாளன் அல்லாஹ் அளவற்ற
நன்மைகளை அள்ளித் தரக் காத்திருக்கின்றான்.
முறித்த உறவுகளை, முயன்று
சேர்த்துக் கொள்ளுங்கள். அப்படிச்
சேர்க்காவிட்டால், சுவனத்துச் சுகந்தம் நம் பக்கம் வீசாது! ‘ரஹ்ம்’ எனும் இரத்த உறவுகள் – அவர்களை நாம் சேர்த்துக்கொள்ளாத
வரை - சுவனத்தில் தொங்கிக்கொண்டே
இருக்கும்.
நின்றுவிடும் உலக வாழ்க்கையைவிட,
நிலையான சுவன வாழ்க்கை மேலல்லவா? அந்த
அருள் பேற்றை அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்கி அருள்வானாக!
அன்புடன்,
அதிரை அஹமது
ADT / அமீர்
No comments:
Post a Comment