உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, March 24, 2015

ததஜவின் அதிரடி பத்வா! பின்பற்றுவார்களா ததஜவினர்!!

அன்புநிறை அதிரை சொந்தங்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கடந்த 14.03.2015 அன்று அதிரை ததஜவினரால் நடத்தப்பட்ட கேள்வி பதில் நிகழ்ச்சியில் மூலமாக பல கொள்கை குழப்பங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அவற்றில் ஒரு சில முக்கிய சங்கதிகளை மட்டும் பொதுமக்கள் முன் சமர்பிக்கின்றோம்.

முழுமையாக வெளியிடும் 'திராணி' உண்டா?
ததஜவினர் அடித்துவிடும் தங்களுடைய பத்வாவில் உண்மையாளர்களாகவும், உறுதியானவர்களாகவும் இருந்தால் 14.03.2015 அன்று ததஜவினர் அதிரையில் நடந்திய நிகழ்ச்சியின் காணொளியை முழுமையாக பதிய வேண்டும் ஆனால் நமதூர் பெண்களால் நிகழ்ச்சியின் இறுதியில் எழுப்பப்பட்ட கீழ்க்காணும் முக்கிய கேள்வியையும் அதற்கான மவ்லவி அப்துல் நாசரின் பதிலையும் கத்தரித்து விட்டு காணொளியை பதிந்தது ஏன்? இனியாவது வெட்டி ஒழித்த பகுதிகளை மீண்டும் பதிவார்களா? என மக்களே கேளுங்கள்.

வெட்டி ஒழிக்கப்பட்ட நமதூர் பெண்களின் கேள்விகள்
இறுதியாக கீழ்க்காணும் கருத்துக்களில் பெண்கள் எழுப்பிய கேள்விகள் வருமாறு,
சூனியத்தை நம்பும் முஷ்ரிக்கான பெற்றோர்களுடைய சொத்தில் ததஜவினர் பங்கு வாங்கலாமா? 
ததஜ மவ்லவி. அப்துல் நாசருடைய பத்வா 'வாங்கக்கூடாது'! 
இந்த பத்வாவை எத்தனை ததஜவினர் நடைமுறைபடுத்த போகிறார்கள், வரதட்சணையை திருப்பி கொடுப்பது போல் முஷ்ரிக் சொத்தை எப்போது பெற்றோர்களிடத்தில் திருப்பி கொடுக்கப் போகின்றீர்கள் என மக்களே கேளுங்கள். இனி முஷ்ரிக்கான பெற்றோர்களிடமிருந்து ததஜவினர் சொத்து வாங்காமல் இருக்க என்ன முன்னேற்பாடுகள் செய்துள்ளார்கள் என மக்களே விசாரியுங்கள்.

சூனியத்தை நம்பும் முஷ்ரிக்கான வீட்டில் பெண் எடுக்கலாமா?

ததஜ மவ்லவி. அப்துல் நாசருடைய பத்வா 'கூடாது'!

எத்தனை ததஜவினர் சூனியத்தை நம்பும் குடும்பத்து பெண்களை தலாக் சொல்ல போகிறீர்கள், இனிமேலும் பெண் எடுப்பவர்களை என்ன செய்ய போகின்றீர்கள் என மக்களே கேளுங்கள்.

சூனியத்தை நம்பும் முஷ்ரிக்கான ரத்த பந்தங்களுடன் உறவை பேணலாமா?

ததஜ மவ்லவி. அப்துல் நாசருடைய பத்வா 'பேணக்கூடாது'!

எத்தனை ததஜவினர் உறவுகளை முறித்துவிட்டு செல்கிறார்கள் என கண்காணியுங்கள் மக்களே!

மேற்காணும் அடிப்படையில் தான் அல்லாஹ்வும் ரசூலும் (ஸல்) சொல்லும் சூனியத்தை நம்பும் முஸ்லீம்களை முஷ்ரிக்குகள், காஃபிர்கள் என்றும் பட்டம் சுமத்திக் கொண்டு ததஜவினர் திரிகின்றனர் மேலும் அதிரையில் நடந்த விவாதத்திலும் அதை உறுதிபடுத்தினர் என்பதை முஸ்லீம்களே அல்லாஹ்வுக்காக சிந்தித்து பாருங்கள்!

நமதூர் பெண்களின் மார்க்க அறிவு (மாஷா அல்லாஹ்)
அவர்கள் வெளியிட்டுள்ள கேள்வி பதில் நிகழ்ச்சியில் நமதூர் முஸ்லீம் பெண்களின் கிடிக்கிப் பிடியில் மாட்டிக் கொண்டு முழிக்கும் ததஜ மவ்லவி அப்துல் நாசரின் நிலையை காண அவர்களே வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவின் பாகம் 7 மற்றும் 8 ஆகியவற்றை கட்டாயம் பாருங்கள் என நாங்கள் பரிந்துரை செய்கின்றோம்.(அதற்காக மற்ற பாகங்களை நாம் ஒப்புக் கொண்டதாக அர்த்தமில்லை)

7 ஆம் பாகம்:

8 ஆம் பாகம்:
மேலும் இத்தகைய அறிவுப்பூர்வ கேள்விகளை தொடுத்த நமதூர் சகோதரிகளின் மார்க்க அறிவை இன்னும் அதிகப்படுத்தி தரும்படி ஏகன் அல்லாஹ்விடம் நீங்களும் துஆ செய்யுங்கள், நாங்களும் இறைஞ்சுகின்றோம்.

முஸ்லீம் பெண்களுக்கு வேண்டுகோள்
மார்க்கத்தை கற்ற அன்பான நமதூர் சகோதரிகளே! தயவுசெய்து ததஜவை சேர்ந்த மவ்லவி அப்துல் நாசர், மவ்லவி அல்தாபி, மவ்லவி எம்.ஐ.சுலைமான் போன்ற (முழுமையாக) மார்க்கம் கற்ற மவ்லவிமார்களை கொண்டு கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தினால் மட்டும் கட்டாயம் கலந்து கொண்டு உங்களுடைய கேள்விகளை எழுப்புங்கள்.

உங்களுடைய கேள்விகளின் வாயிலாக அவர்கள் இஸ்லாத்திற்கு எதிரான பீஜேயின் பகுத்தறிவு மற்றும் முஃதஸ்ஸிலா கொள்கைகளில் இருந்து விடுபட்டு நேர்வழி அடையும் பாக்கியத்தை அல்லாஹ் தரக்கூடும்.

மேலும் ததஜ அல்லாத குர்ஆன் ஹதீஸ் ஒளியில் விளக்கமளிக்கும் ஏனைய இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மார்க்க விஷயங்களில் தெளிவடைய தவற வேண்டாம்.

ததஜ மவ்லவிகளுக்கு அழைப்பு
சம்பளத்திற்கு வேலை செய்யும் பிற பள்ளிகளின் இமாம்கள், மவ்லவிமார்கள் பெறும் கூலிகள் குறித்து எத்தனை விமர்சனம் செய்திருப்பீர்கள், முத்தவல்லிகளுக்கு, ஜமாத்தார்களுக்கு பயந்து கொண்டு மார்க்கத்தை மறைப்பதாக எப்படியெல்லாம் விமர்சனம் செய்திருப்பீர்கள் என நினைத்துப் பாருங்கள். அத்தகையவர்களின் நிலையில் நீங்கள் இன்று உள்ளீர்களா? இல்லையா? என்பதை உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து பாருங்கள்.

ததஜ தலைமை கொடுக்கும் அற்ப ஊக்கத்தொகைக்காக ஏன் மார்க்கத்தை மறைக்கின்றீர்கள்? நீங்கள் உண்மையை உடைத்துச் சொன்னால் உங்கள் மீது பலவகையான அவதூறுகள் ததஜ தலைமையால் சுமத்தப்படும் என்பது நிதர்சனம் என்றாலும் அல்லாஹ்வையும், மறுமையையும் நம்பும் அடியானுக்கு எது பெரிதாக தெரிய வேண்டும்? நீங்கள் ஊக்கத்தொகையை உதறிவிட்டு வந்தால் பொருளாதார விஷயத்தில் அல்லாஹ் உங்களை கைவிட்டு விடுவான் என ஏன் அவநம்பிக்கை கொள்கின்றீர்களா?

ததஜ மவ்லவிகளே குறிப்பாக அப்துல் நாசர், அல்தாபி, எம்.ஐ. சுலைமான் போன்ற சகோதரர்களே துணிந்து மார்க்கத்தை அதன் தூயவடிவில் எடுத்துச் சொல்ல முஃதஸ்ஸிலா கொள்கையிலிருந்து வெளியே வாருங்கள் என அன்புடன் அழைக்கின்றோம். அல்லாஹ்வின் அருளின் மீது அவநம்பிக்கை கொள்ளாதீர்கள்.

உங்களுக்கெல்லாம் முன்னோடியாக சீரான இடைவெளியில் அலையலையாய் ததஜவிலிருந்தும் அதன் வழிகெட்ட முஃதஸ்ஸிலா கொள்கையிலிருந்தும் வெளியேறும் மவ்லவிமார்களை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களா?

பொதுமக்களுக்கான பொதுவான எச்சரிக்கை
ஒரு பெண் படித்திருந்தால் அவளது குடும்பமே கல்வி அறிவுபெறும் என்பது சான்றோர் சொல் இதையே ததஜ தலைமையினர் தலைகீழாக நடைமுறைப்படுத்திக் கொண்டுள்ளனர் அதாவது ஒரு பெண்ணை மார்க்க விஷயத்தில் வழி கெடுத்துவிட்டால் அவளது சந்ததியையே வழிகெடுத்து விடலாம் என்ற குருட்டு நம்பிக்கையில் சமீபகாலமாக பெண்களை குறிவைத்து இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர் கீழ் வரும் வசனத்தை மறந்தவர்களாக.

3:54   وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ ۖ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ
 (அவர்களும்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான். 3:54.

எனவே, இவர்கள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டியதும், உங்களின் பிள்ளைகளை குர்ஆன் வசனங்களின் பொருளை திரித்தும், ஸஹீஹான ஹதீஸ்களை மறுத்தும் வரும் ஷைத்தானிய சக்திகளிடமிருந்து பாதுகாத்து கொள்வது அனைத்து முஸ்லீம்களின் தலையாய கடமை என்பதை நினைவுறுத்துகின்றோம்.

இறுதியாக, ததஜ தொண்டர்களே, மேற்படி பத்வாக்களில் உங்களுக்கு உடன்பாடு உண்டா? என்பதை அல்லாஹ்வை முன்னிறுத்தி நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

1 comment:

  1. வரதட்சணையை திருப்பி கொடுப்பது போல் முஷ்ரிக் சொத்தை எப்போது பெற்றோர்களிடத்தில் திருப்பி கொடுக்கப் போகின்றீர்கள் .......


    முஷ்ரிக் சொத்தை திருப்பி கொடுப்பது இருக்கட்டும் (அதிரை tntj )இரண்டு கருப்பு ஆடுகள் வட்டிக்கு கொடுத்து வாங்கிய வட்டி பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு வட்டி யின் பாவத்தில் இருந்து மீளட்டும்

    ReplyDelete