அஸ்ஸலாமு அலைக்கும்.
நேற்று மாலை பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் கந்தூரிக் கமிட்டியினருக்கும் தாருத் தவ்ஹீத் அமைப்பினருக்கும் இடையே நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் விபரங்கள் தொகுக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் தனிப்பதிவாக வரும்.
பேச்சுவார்த்தையின்போது, கந்தூரிக்குப் பொதுமக்கள் ஆதரவு பெருவாரியாக இருப்பதாகவும் எங்களைப் போன்ற நாலைந்து பேர்கள்தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் க.கமிட்டியின் சார்பாகத் தெரிவிக்கப்பட்டது.
அது போலியானது என்பதை உணர்த்த கந்தூரியை எதிர்க்கும் ஒவ்வொருவருக்கும் அரிய வாய்ப்பு.
கீழ்க்காணும் மாதிரி மின்னஞ்சல் அல்லது உங்களுக்குத் தோன்றுவதை ஆங்கிலத்திலோ தமிழிலோ எழுதி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரின் மின்னஞ்சல் முகவரிகளான
collrtnj@nic.in, மற்றும் spthanjavur@yahoo.com
எனும் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மாதிரி:
______________
SUBJECT: REQUEST TO BAN KANDURI IN ADIRAMPATTINAM.
Dear Sir,
Kanduri is Un-Islamic. I register my protest for Kanduri which will take place on 11th May 2013 in Adirampattinam.
Thanks,
______________
கந்தூரியை வீழ்த்த வேண்டுமாயின் அதன் பொருளாதார வேரைப் பிடுங்க வேண்டும்.
(1) கந்தூரி என்பது ஹராம் என்று நம்புபவர்கள், கந்தூரி வசூல் எனக் கேட்டு யார் வந்தாலும் ஹலால் சம்பாத்தியப் பணத்தை ஹராமுக்குக் கொடுப்பதை ஹராமாக்கிக் கொள்ளவேண்டும்.
(2) மலிவு விலையில் சாமான் வாங்கப் போவதாகக் கந்தூரிக்குக் கடைக்குச் செல்வதற்குக் காரணம் கூறுபவர்களிடம், சற்றே விலை கூடுதலாக இருந்தாலும் வெளியில் வாங்கிக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்த வேண்டும்.
இந்த இரண்டிலும் நாம் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. ஈட்டியைச் சரியான இலக்குக்கு எறிந்தால் மட்டுமே இன்ஷா அல்லாஹ் வெற்றி கிட்டும்.
உறுதியுடன் முயல்வோம்; அல்லாஹ் துணை நிற்பான்.
ஜஸாக்கல்லாஹு கைரா!
SEC-ADT
No comments:
Post a Comment