இன்று [ 14-05-2013 ] இரவு 7 மணியளவில் அதிரை கடற்கரைத்தெரு ஜும்மாப் பள்ளி எதிரே அமைந்துள்ள மைதானத்தில் அதிரை தாருத் தவ்ஹீதின் [ADT] சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் ADTயின் அங்கமாகிய அதிரை இஸ்லாமிக் மிஷன் [ AIM ] நடத்திய கோடைகால பயிற்சி முகாமின் நிறைவு விழா இனிதே நடைபெற்றது.
கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக சிறுவர் சிறுமிகளுக்கான மார்க்க அறிவுத்திறன் போட்டிகள் நடைபெற்றன. இதில் பெரும்பாலான சிறுவர் சிறுமிகள் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை நிரூபித்தனர். பயிற்சியில் கலந்து கொண்டு சிறந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
சிறப்பு பேச்சாளராகக் கலந்து கொண்ட காயல்பட்டிணம் அன்னை ஆயிஷா சித்தீக்கியா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வர் மவ்லவி அப்துல் மஜீத் மஹ்லரி அவர்கள் 'இஸ்லாமிய கல்வியின் அவசியம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெரும்திரளாக கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் பெண்களுக்கு என தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நிகழ்ச்சிகுரிய ஏற்பாடுகளை அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக அதன் நிர்வாகிகள் சிறப்பாக செய்துருந்தனர்.
Thanks to: Bro. Shaikana Nijam
சலாம், என் தெருவில் நம் மார்க்கம் தொடர்பாக அதிரை தாருத் தவ்ஹீதின் [ADT] சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் ADTயின் அங்கமாகிய அதிரை இஸ்லாமிக் மிஷன் [ AIM ] நடத்திய கோடைகால பயிற்சி முகாமின் நிறைவு விழா நடத்தியதற்கு மிக்க நன்றி
ReplyDelete