உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, July 30, 2011

அழைப்புப் பணியின் அவசியம் - Part 1


بِشْمِ اللّهِ الرّحْمَنِ الرَّحِيْم

மனிதன் இயல்பிலேயே தவறு செய்யக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே! எனவே, தவறு செய்யும் இயல்புடைய மனிதனுக்கு நன்மையை ஏவுவதும், தீமை குறித்து எச்சரிக்கை செய்வதும் அவசியமாகும்.
நாலுபேர் எடுத்துச் சொன்னால் தனது நடத்தைகளையும், செயற்பாடுகளையும் மாற்றிக் கொள்ளும், அல்லது அதுகுறித்து நடுநிலையோடு சிந்திக்கும் மனோ நிலையுடனேயே மனிதன் படைக்கப்பட்டுள்ளான். இதைச் செய்யுங்கள்அல்லதுஅதைச் செய்யாதீர்கள்என பலரால் அல்லது பலவிடுத்தம் வேண்டப்பட்டால் அதற்கு இணங்கி நடக்க, தீயவன்கூட முற்படலாம். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது பழமொழியாகும். மனிதனது இந்த மனோ இயல்பைப் பயன்படுத்தி அவனிடம் எழுச்சி பெறும் தீய உணர்வுகளை அழிக்கவும், அடக்கவும் மங்கி மறைந்து செல்லும் நல்லனவற்றை துலக்கி மெருகூட்டவும் அழைப்புப்பணி அவசியமாகின்றது.
மனிதர்களிலேயே சிலர் இருக்கின்றனர். அவர்கள் மற்றவர்கள் மனதில் தீய சிந்தனைகளை விதைப்பதையே வினையாகக் கொண்டவர்கள். அத்தகையவர்கள் உலோபித்தனம் செய்வார்கள்; (மற்ற) மனிதர்களை உலோபித்தனம் செய்யும்படியும் தூண்டுவார்கள். அல்லாஹ் தன் பேரருளிலிருந்து தங்களுக்குக் கொடுத்ததை (பிறருக்குக் கொடுக்காமல்) மறைத்தும் கொள்வார்கள் அத்தகைய காபிர்களுக்கு இழிவுதரும் வேதைனையை நாம் சித்தப்படுத்தியுள்ளோம் (4:37)  (பார்க்க 57:24) என்று கூறுகிறான்.
அல்லாஹ்வின் பாதையைவிட்டும் மக்களைத் தடுக்கின்றான்” (4:167, 9:9, 47: 32)
இம்மறை வசனங்கள் தீமையை ஏவி நன்மையைத் தடுக்கும் சில மனிதர்களும் மக்கள் மத்தியில் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.
இவ்வாறே முனாபிக்கான ஆண்களும் பெண்களும் நன்மையைத் தடுப்பதிலும், தீமையை ஏவுவதிலும் ஒருவர் மற்றவருக்குத் துணையாக இருப்பதாகஅல்குர்ஆன் கூறுகின்றது. (9:67)
தீமையை ஏவி நன்மையத் தடுக்கும் இச்சூழலில் தஃவாவின் அவசியம் அத்தியவசியமாகின்றது.
மக்கள் நன்மைகளை விட்டும் வெகுவேகமாக வெருண்டோடிக் கொண்டிருக்கின்றனர். தீமைகளில் கிடைக்கும் அற்பசுகம், உலகாதாயம் என்பவற்றால் கவரப்பட்டு விளக்கை நோக்கிச் செல்லும் விட்டில்களாக தீமைகளை நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.
இதேவேளை ஷைய்த்தானின் தோழர்கள் நரகத்தின் வாயில்களில் நின்று கொண்டு அதன்பால் மக்களை அழைக்கும் பிரச்சாரத்தை மூலை முடுக்கெல்லாம் முடுக்கிவிட்டுள்ளனர்.
வட்டி ஹராம் என்பது இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாட்டின் அடிப்படையாகும். இந்த வட்டியின் பக்கம் வாருங்கள் என தொலைக்காட்சி, வானொலி போன்ற தொலைத் தொடர்பு சாதனங்கள் அழைப்புவிடுக்கின்றன. பத்திரிகையில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள், இனிப்பான திட்டங்கள் அன்றாடம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு தீமைக்காக தஃவா நடக்கின்றது. இஸ்லாமிய இரத்தங்கள் பலவும் வட்டியால் வார்த்தெடுக்கப்பட்டுள்ளன.
சூதாட்டம் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட ஷைய்த்தானின் செயல்களில் ஒன்றாகும். அதிஷ்டலாபச் சீட்டு லொத்தர்கள் என்ற பெயரில் நிமிடத்துக்கு நிமிடம் வானொலி தொலைக்காட்சிகளில் இதற்காக தஃவத் நடக்கிறது. பத்திரிகைகளில் பரபரப்பான விளம்பரங்கள், வீதிகள் தோறும் ஒலிபெருக்கி வைத்து இதற்காக தஃவா செய்யப்படுகிறது. இந்த ஷைய்த்தானிய அழைப்பு வீட்டுக் கதவுகளைக்கூட தட்டத் தவறவில்லை. இலங்கையில் அதிகமாக இந்தச் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களாக எமது சமூகத்தினர் காணப்படுகின்றனர்.
மது, பாவங்களின் தலைவாயிலாகும். இந்த மது பானத்திற்கான அழைப்பும் பரவலாக நடைபெறுகின்றது. இதற்காக பத்திரிகைகளில் அரைப்பக்க முழுப்பக்க கலர் விளம்பரங்கள் என்ற பெயரில் தஃவா நடைபெறுகின்றது. இவ்வாறே புகைத்தலின் பக்கம் அழைப்பதற்கும் நவீன பிரச்சார யுக்திகள் கையாளப்படுகின்றன.
ஆபாசத்தையும், வன்முறையையும், கவர்ச்சியையும் சதையையும் மட்டுமே மூலதனமாகக் கொண்ட இன்றைய சினிமாக்கள் சமூகத்தை சீரழித்து வருகின்றன. பத்திரிகை, தொலைத் தொடர்பு சாதனங்கள், பாதையோர சுவர்கள் அனைத்திலும் இன்றைய இளம் தலை முறையினரை இந்த இழிவின் பக்கம் இழுத்தெடுப்பதற்கான கவர்ச்சியான ஆபாசமான அழைப்பு(தஃவா) நடந்து கொண்டிருக்கின்றது.
வீண் கேளிக்கைகள், ஆடல் பாடல், இசைக் கச்சேரிகள், ஆண் பெண் கலப்பு நிகழ்ச்சிகள் என்பவற்றின் மூலம் எல்லா வகையான தீமைகளின் பக்கமும் மக்களைக் கவர்ந்திழுக்க கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவளிக்கப்படுகின்றன, இதற்காக சகல விதத்திலும் தொடர் பூடகங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவ்வளவு பரவலாக தீமைக்கு ஆதரவான குரல் பலத்து ஒலிக்கும் போது நன்மையின் பால் அழைக்கும் குரல் மட்டும் பலமிழந்து போய் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தீமையின் பக்கம் மக்கள் இழுபட்டுச் செல்லும் வேகத்தையும், அதற்காக செய்யப்படும் முயற்சிகளையும் பார்க்கும் போது நன்மையின்பால் அழைத்து தீமைக்கு எதிராகக் குரல் கொடுப்பது எவ்வளவு அவசியமானது என்பதை விளங்கமுடிகின்றது.
தவறைத் தடுக்காதிருக்கலாமா?  மேலே குறிப்பிடப்பட்டது போன்று தீமைகள் புயலாய் வீசும் போது உண்மையான இறைவிசுவாசி தானுண்டு தன்பாடுண்டு என்று இருக்கமுடியுமா? அவனது உடன்பிறப்புக்கள், உற்றார் உறவினர்கள், ஊரார், மற்றார்கள் அனைவரும் அழிவின் பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கும் போது இவன் வெறுமனே பள்ளியில் முடங்கிக் கிடக்கலாமா? ஒரு நாளும் இருக்கமுடியாது. இதனைப் பின்வரும் சம்பவங்கள் எமக்கு உணர்த்துகின்றன.
சுலைமான்(அலை) அவர்கள் தன் பட்டாளத்துடன் போகும் போது ஒரு எறும்பு தனது மற்ற எறும்புக் கூட்டங்களைப் பார்த்து எறும்புகளே! நீஙகள் உங்கள் புதருக்குள் புகுந்து கொள்ளுங்கள்; சுலைமானும் அவருடைய படையினரும் தாம் அறியாமலேயே உங்களைத் திண்ணமாக மிதித்து விட வேண்டாம்எனக்கூறியது. (பார்க்க 27: 17-18)
இந்த சம்பவம் மூலம் ஓர் எறும்பு தனது மற்றைய எறும்புகள் அழிந்துவிடக் கூடாது என்பதில் காட்டியிருக்கும் அக்கறையை உணரமுடிகின்றது. ஓர் எறும்பே சமூக உணர்வுடன் நடந்திருக்கும் போது எமது சகோதரர்கள் அறியாமையால், ஷிர்க்கிலும் பித்அத்துக்களிலும் ஹராம்களிலும் மூழ்கியிருக்கும் போது மது, போதை, சினிமா, புகைத்தல், வட்டி, சூது என தம்மைத்தாமே அழித்துக் கொள்ளும் காரியங்களில் ஈடுபடும் போது நாம் அவற்றைத் தடுக்காது இருக்கலாமா? அப்படி இருந்தால் இந்த எறும்பைவிட கீழான நிலைக்கல்லவா சென்றுவிடுவோம்.
இதே அத்தியாயம் மற்றுமொரு நிகழ்ச்சியைக் கூறுகின்றது. சுலைமான்(அலை)அவர்கள் தனது படையைப் பார்வையிட்டுக் கொண்டு வருகின்றார்கள். அங்கே ஹுத்ஹுத்என்ற பறவையைக் காணவில்லை. இந்தப் பறவை தாமதித்து வந்து அதற்குரிய காரணத்தைக் கூறாவிட்டால் அதை அறுத்துவிடுவேன்; அல்லது கடுமையாகத் தண்டிப்பேன் என்று போபத்தோடு கூறுகிறார்கள். அப்போது அந்தப் பறவை வந்து சுலைமான் நபியிடம் பின்வருமாறு கூறுகின்றது.
நீங்கள் அறியாத ஒரு செய்தியை நான் அறிந்து வந்துள்ளேன். ஸபாவில் இருந்து உறுதியான ஒரு செய்தியை உங்களிடம் கொண்டுவந்துள்ளேன். அவர்களை ஒரு பெண் ஆட்சி செய்கிறாள். அந்த நாட்டில் சகல வளங்களும் காணப்படுகின்றன. மகத்தானதொரு சிம்மாசனமும் அவளுக்குண்டு. அவளும் அவளது சமூகமும் அல்லாஹ்வை வணங்காது சூரியனை வணங்குகின்றனர். ஷெய்த்தான் அவர்களது செயல்களை அவர்களுக்கு அழகாக்கி அவர்களை நேர்வழியைவிட்டு தடுத்துவிட்டான். அவர்கள் அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்க வேண்டாமா? என்று கூறியது. (பார்க்க 27: 20-26)
இந்தச் செய்தியைக் கேட்ட பின் அந்தப் பெண்ணுக்கு சுலைமான் நபி தஃவா செய்து, அவள் இஸ்லாத்தில் இணைந்ததை அல்குர்ஆன் தொடந்து கூறுகின்றது.
ஒரு நாட்டு மக்கள் சூரியனை வணங்குவதைக் கண்டு ஒரு பறவை கவலை கொண்டுள்ளது. எமது சகோதரர்களில் பலர் அறியாமல் கப்று வழிபாட்டிலும் ஷிர்க்கான சடங்குளிலும் மூழ்கியுளளனர். இவற்றால் தாம் செய்கின்ற நல்லமல்களை அழித்து கொள்வதுடன், தம்மைத்தாமே நரகிற்குத் தயார்படுத்திக் கொண்டுமிருக்கின்றனர்.
இதனைக் கண்டு எமக்கு சிறிதளவாவது கவலை வரவில்லையென்றால் நாம் இந்தப் பறவையை விடக் கீழானவர்களாகவல்லவா இருப்போம். சாதாரணமாக ஒருவன் தனது அரசியல் தலைவன் அவமதிக்கப்படுவதை தாங்கிக்கொள்வதில்லை. தனது தலைவர் போட்ட கடையடைப்பை யாராவது மீறினால் இவன் சீறுகிறான், தாக்குகிறான் சாதாரண தலைவனையே இப்படி ஒருவன் வெறி கொண்டு மதிக்கும் போது ஷிர்க் செய்வதன் மூலம் அல்லாஹவுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது. அல்லாஹ்வின் கட்டளைகள் பகிரங்கமாக மீறப்படுகின்றன. அப்போது அவன் சீறாமல் சிணுங்காமல் சின்னதொரு எதிர்ப்பையும் காட்டாது குறைந்தபட்சம் முகச் சுளிப்பையாவது காட்டாது கல்லுப்போல் நிற்கிறானெனில் இவனது இறை விசுவாசத்திற்கு அது ஒரு களங்கமாகிறது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...

By Aduthurai S.Hameed
 

No comments:

Post a Comment