உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, July 27, 2011

அதிரை முஸ்லீம் சமுதாயமே ! வேண்டாம் இயக்கப் பிறைகள் !!

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அதிரை முஸ்லீம் சமுதாயமே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...   وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا
وَلَهُ عَذَابٌ مُّهِينٌ
4:14. எவன் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு.

இன்னும் சில தினங்களில் நாம் புனித ரமலான் மாதத்தை அடைய இருக்கின்றோம். புனித ரமலானையும் பெருநாளையும் கொண்டு நன்மையடைய வேண்டிய மக்களை குழப்பும் இயக்கங்கள் பெருகிவிட்ட நிலையில், அவர்கள் குறித்து எச்சரித்து நபிவழி எது என தெளிவுபடுத்தவே இச்சிறிய ஆக்கம்.

இயக்கப் பிறைகள்

4:27   وَاللَّهُ يُرِيدُ أَن يَتُوبَ عَلَيْكُمْ وَيُرِيدُ الَّذِينَ يَتَّبِعُونَ الشَّهَوَاتِ أَن تَمِيلُوا مَيْلًا عَظِيمًا
4:27. மேலும் அல்லாஹ் உங்களுக்குப் பாவமன்னிப்பு அளிக்க விரும்புகிறான்; ஆனால் தங்கள் (கீழ்தரமான) இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டுமென்று விரும்புகிறார்கள்.

இன்று புதர்போல் மண்டிவரும் இயக்கங்கள் என்பது முஸ்லீம்களின் அத்தாரிட்டிகள் அல்ல மேலும் அவர்கள் இந்திய அரசியமைப்பு சட்டப்படி செயல்படுகின்ற அறக்கட்டளை அல்லது சங்கமாகும். இயக்கங்கள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் வழிகாட்டலாமே ஒழிய பொதுமக்களை கட்டாயப்படுத்தும் அதிகாரம் பெற்றவர்கள் அல்ல. இவர்களுக்கு கட்டுப்பட வேண்டிய எந்த அவசியமும் முஸ்லீம்களுக்கு இல்லை.

இருந்தாலும், இன்றைக்கு இயக்கங்கள் பிறை குறித்து தங்களுக்கென தனித்தனி ஃபார்முலாக்களை வைத்துள்ளன. அதாவது கணக்குப் போடுவது, கணிப்பது, வடநாட்டை பார்ப்பது, தென்னாட்டை பார்ப்பது, தமிழ்நாட்டுப் பிறை, சவூதி பிறை, சர்வதேச பிறை, உள்ளூர் பிறை, அடுத்த இயக்கம் பிறை பார்த்து / கேட்டு அறிவித்த நாளில் கொண்டாடுவதில்லை என ஏட்டிக்குப் போட்டியாய் மார்க்கத்தில் விளையாடுவது என ஒவ்வொருவரும்   தங்களுக்கென வசதிக்குத்தக்கவாறு ஒரு வழிமுறையை வகுத்துக் கொண்டு ஷியாக்களைப் போல் தனித்து செயல்படுகின்றனர். 

பெருநாள் நோன்பும் 3 மாயப் பிறைகளும்

அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் எனக்கு நான்கு விஷயங்களைக் கூறினார்கள்.
1. இரண்டு நாள்கள் பயணம் செய்யும் பெண்மணி கணவனோ மணம் முடிக்கத்தகாத ஆண் உறவினரோ துணையாக இல்லாமல் பயணம் செய்யக்கூடாது.
2. நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாள்களும் நோன்பு நோற்கக்கூடாது.
3. ஸுப்ஹுத் தொழுதததிலிருந்து சூரியன் உதிக்கும் வரையும் அஸர் தொழுததிலிருந்து சூரியன் மறையும் வரையும் தொழக்கூடாது.
4. மஸ்ஜிதுல் ஹராம் மஸ்ஜிதுன்னபவி மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர (அதிக நன்மையை எதிர் பார்த்து) பயணம் மேற்கொள்ளக் கூடாது! நூல் : புகாரி - 1197.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நோன்புப் பெருநாள் தினத்திலும் ஹஜ்ஜுப் பெருநாளன்றும் நோன்பு நோற்பதும் முலாமஸா முனாபதா என்ற இரண்டு வியாபார முறைகளும் தடை செய்யப்பட்டுள்ளன. நூல் : புகாரி - 1993.

நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் கலந்துகொண்ட அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளைச் செவியுற்றேன். அவை என்னைக் கவர்ந்தன.
அவை: 'ஒரு பெண் தன் கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத நெருஙகிய உறவினர் ஒருவர் தம்முடன் இருக்கும் நிலையில் தவிர (மற்ற நிலைகளில்) இரண்டு நாட்கள் தொலைவுள்ள பயணத்தை மேற்கொள்ளக் கூடாது! நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப்பெருநாள் (ஈதுல் ஃபித்ர்இ ஈதுல் அள்ஹா) ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது! சுப்ஹுக்குப் பிறகு சூரியன் உதிக்கும் வரையும் அஸ்ருக்குப் பிறகு சூரியன் மறையும் வரையும் தொழக் கூடாது! (அதிக நன்மையைப் பெற நாடி) மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா) பைத்துல் முகத்தஸ் (ஜெருசலேம்) எனது இந்த (மஸ்துதுந் நபவீ) பள்ளி வாசல் ஆகிய மூன்று பள்ளி வாசல்களைத் தவிர வேறெதை நோக்கியும் பயணம் மேற்கொள்ளக் கூடாது!'நூல் : புகாரி - 1995.

என மேற்படி நபிமொழிகள் பெருநாள் தினத்தன்று நோன்பு நோற்கக்கூடாது என எச்சரித்துள்ளதை நமக்கெல்லாம் பாடம் நடத்தியவர்களே வசதியாக மறந்து விட்டு ஊரெல்லாம் முதல் நாள் பெருநாள் கொண்டாட, இயேசு உயிர்தெழுந்த கதைபோல் மூன்றாம் பிறை நாளில் இயக்கத்தின் பெருநாளை ஊருக்கு ஊர் சில விடலைகளை ஏவி இஸ்லாமிய பெருநாளாக திரிக்க முனைந்த கேலிக்கூத்துக்களை கண்டோம்.

மிகச்சமீபமாக, குறிப்பாக தமிழகத்தில் இயக்கங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பிறைகளும் பெருகிவிட்டன. அதாவது பிற மதத்தினர் கடவுள்களையும், ஜாதிகளையும் கணக்கற்று  வைத்திருப்பது போல் நாங்கள் பிறையையும் பெருநாட்களையும் அதிகம் வைத்துள்ளோம் என இஸ்லாத்தின் பெயரிலேயே அரங்கேற்ற முயலும் ஆணவம்.

அதிரை பிறை

அல்ஹம்துலில்லாஹ், நமதூரைப் பொறுத்தவரை இரண்டுபடாத மக்களாகவே நோன்பு நோற்று பெருநாள் கொண்டாடி வருகிறோம். (சென்ற வருடம் மட்டும் விரலுக்குள் அடங்கும் சில இயக்கவாதிகளை தவிர).

இதுவரை நம்மை மக்கா பிறையோ, மாலேகவ்ன் பிறையோ, மண்ணடி  பிறையோ அல்லது அரசு காஜிக்களின் பிறையோ அதிரையை கட்டுப்படுத்தியதில்லை. மாறாக, நமதூரைப் பொறுத்தவரையில் தொன்றுதொட்டு நாம் பிறை பார்த்தும், அக்கம் பக்க ஊரில் காண்பதையும், (International) இலங்கை பிறையையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமுண்டு. நமதூர் மார்க்க அறிஞர்கள் அறிவிப்பார்கள் ஏற்றுக்கொண்டு செயல்பட்டுவந்துள்ளோம். சென்ற வருடத்திற்கு முன் வரை சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் சொன்னது என்று எந்த இயக்கவாதிகளும் நிராகரித்த சரித்திரமுமில்லை. பலவேளைகளில் சுபுஹூ தொழுகைக்கு வந்து பெருநாள் அறிவிப்புடன் திரும்பிய நெகிழ்ச்சியான நாட்களுமுண்டு.

மார்க்கப் பிறை

1) பிறையைக் கண்டே நோன்பு நோர்க்கவும் விடவும் செய்யுங்கள். மேகம் (பிறையை) மறைத்துவிட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

பிறை பார்த்து நோன்பு..
நீங்கள் பிறை பார்த்தால் நோன்பு வையுங்கள் அடுத்த பிறையைப் பார்த்தால் நோன்பை விட்டு விடுங்கள் மேகம் (பிறையை) உங்களுக்கு மறைத்து விடுமானால் (ரமளானையும் ஷாஃபானையும்) முப்பது நாட்களாகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர் இப்னு உமர் (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதீ, தாரகுத்னீ, இப்னுஹிப்பான், இப்னுகுஸைமா, ஹாகீம்.

தகவலறிந்து நோன்பு..
மக்கள் எல்லாம் பிறை பார்க்க முயன்றார்கள் நான் நபி (ஸல்) அவர்களிடம் 'நான் பிறையைப் பார்த்தேன்' என்று கூறினேன் நபி (ஸல்) அவர்கள் தானும் நோன்பு நோற்றுதுடன் மக்களையும் நோன்பு நோற்கக் கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர் இப்னு உமர் (ரலி) நூல்கள்- அபூதாவூத், தாரமி, இப்னுஹிப்பான், ஹாகீம், பைஹகீ, தாரகுத்னீ.

அன்றும் அப்படித்தான்
ரமளானின் கடைசி நாள் பற்றி மக்கள் முடிவெடுக்கக் குழம்பினார்கள் (பிறை தென்படாததால் நோன்பும் நோற்றனர்) இரண்டு கிராம வாசிகள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று இரவு நாங்கள் பிறைப் பார்த்தோம் என்று சாட்சி கூறினார்கள் உடனே நபி (ஸல்) அவர்கள் மக்களை நோன்பை விட்டு விடுமாறு கட்டளையிட்டார்கள் பெருநாள் தொழுகைக்காக மறுநாள் தொழுமிடம் வருமாறு கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர் ரிப்யீ இப்னு கிராஷ் நூல்கள் - அபூதாவூத், அஹ்மத்.

ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியாக எதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற உரிமையை நபியவர்கள் மக்களிடம் கொடுத்துள்ளார்கள். இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.
'நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ

மேற்காணும் ஹதீஸ்களின் அடிப்படையில் எந்தப் பிறையை நமதூர் அறிஞர்கள் அறிவிக்கின்றார்களோ அதனையே ஏற்று நமது நோன்பையும் பெருநாட்களையும் வழமைபோல் அமைத்து கொள்வோமாக!

சென்னையில் இருந்து கொண்டு அதிரைக்கு நோன்பையும் பெருநாளையும் சிலர் நிர்ணயிக்கும் மடமையை மாய்ப்போம், நமதூருக்கு இனி எப்போதும் வேண்டாம் இயக்கப் பிறைகள்.

4:26   يُرِيدُ اللَّهُ لِيُبَيِّنَ لَكُمْ وَيَهْدِيَكُمْ سُنَنَ الَّذِينَ مِن قَبْلِكُمْ وَيَتُوبَ عَلَيْكُمْ ۗ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
4:26. அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும் உங்களுக்கு முன் இருந்த (நல்ல)வர்கள் சென்ற (நேரான) வழிகளில் உங்களைச் செலுத்தவும் உங்களுக்கு பாவமன்னிப்பு அருளவுமே விரும்புகிறான். இன்னும் அல்லாஹ் நன்கு அறிந்தோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

எண்ணமும் எழுத்தும்
அஷ்ஹது வாப்பா

1 comment: