ஏகனின் கருணையால் இவ்வருட கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் மிகச்சிறப்புடன் 20.05.2011 அன்று பரிசளிப்பு விழாவுடன் நிறைவுபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
கடந்த பல வருடங்களாக அதிரை இஸ்லாமிக் மிஷன் பிற இயக்கங்களின் பெயரிலும் கடந்த 3 வருடங்களாக அமைப்பு சாராமல் தனித்தன்மையுடனும் நடத்தி வரும் கோடைகால பயிற்சி முகாமின் இவ்வருட வெற்றிக்கு அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி துணை நின்றவர்களை நெஞ்சார நினைவு கூறுகின்றோம்.
வருடா வருடம் அதிகரித்து வரும் பெற்றோர்கள், மாணவ மாணவிகளின் ஆதரவும் ALM பள்ளியின் தொடர் பங்களிப்பும் எமது 'ஆக்ஸிஜன்' என்று உவமைப்படுத்துவதில் தவறில்லை என்றே கருதுகிறோம்.
இவ்வருட முகாமின் இதயங்களான சகோதரர்கள் அதிரை அஹ்மத், அபுல் ஹசன், அப்துல் ரஸ்ஸாக் இவர்களுடன் இரத்த நாளங்களாய் வலம் வந்த அப்துல் ரஹ்மான், முபீன், சாகுல் ஹமீது, கமாலுதீன், நிஜார், ஜமால் (எ) ஆஷிக் அஹமது ஆகியோருடன் இணைந்து சூழன்ற ALM பள்ளியின் ஆசிரியர்கள், ஆசிரியைகள், ஊழியர்கள், இயக்கங்களாக முன்னின்ற இந்திய தவ்ஹீத் ஜமாஅத், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், எஸ்டிபிஐ, ஜாக், ஜமாஅத்தே இஸ்லாமி மற்றும் (தனிப்பட்ட முறையில்) தங்களின் குழந்தைகளை பெருமளவில் அனுப்பி ஆதரவளித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த சகோதரர்களுக்கும், குர்ஆன் ஹதீஸை மட்டுமே தங்களின் சுவசமாய் கொண்டுள்ள அமைப்பு சாரா சகோதரர்களுக்கும், தலையாய் பரிணமித்த காரைக்கால் ஆலிமா மற்றும் உஸ்தாத்மார்களுக்கும், அனைத்து நிலைகளிலும் பங்காற்றிய அனைவரின் மறுமை வெற்றிக்காகவும் மறையோனின் முன் எங்கள் நெற்றி பணிந்து பிரார்த்திக்கின்றோம்.
முன்னதாக, மிகக்குறுகிய விடுமுறையில் தாயகம் சென்றிருந்த பொருளாளர் அப்துல் காதர், என்றும் AIMன் முதுகெலும்பாய் திகழும் முன்னாள் தலைவர் ஜமாலுதீன் ஆகியோர் தங்களால் இறுதிவரை பங்கெடுக்க முடியாது என்ற நிலையிலும், முகாம் சிறப்புடன் நடந்திட மேற்காணும் சகோதரர்களை ஒருங்கிணைத்து, சுமார் 10 நாட்கள் வரை முழுமையாக பங்கெடுத்து வழிகாட்டி விடைபெற்றனர்.
மேற்காணும் அனைவருக்கும் அதிரை இஸ்லாமிக் மிஷன் மற்றும் அதன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் சார்பாகவும் உளமாற இதன்வழி நன்றி நவிழ்கின்றோம்.
பிற்சேர்க்கை:
அன்புச் சகோதரர்களே!
நம்முடைய கோடைகால பயிற்சி முகாம் குறித்த செய்திகளை உடனுக்குடன் தங்களின் வலைத்தளங்களின் ஊடாக உலகமெங்கும் கொண்டு சென்ற அதிரை நிருபர், அதிரை முஜீப், அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை TIYA, அதிரை பிரஸ் போன்ற சகோதர வலைத்தளங்களுக்கும் எங்களின் நன்றியை உரித்தாக்குகின்றோம்.
மேலும், முன்பு குறிப்பிடத் தவறியதற்காகவும் வருந்துகின்றோம்.

இவண்
முஹமது மீரா
தலைவர்
அதிரை இஸ்லாமிக் மிஷன்
Well done AIM
ReplyDeleteஉங்கள் வலைதளம் மூலமாகவும், இன்னும் பல அதிரையின் தளத்தின் மூலமாகவும்- உங்கள் சேவை அறிந்தேன் - வாழ்த்துகள்
ReplyDeleteபல நாட்கள் நிகழச்சியில் - கடைசி ஒரு சில நாட்களாவது (எல்ல தரப்பு-எல்ல மத) கலந்து கொள்ளும் வகையில் பொதுவான நீதி போதனை-ஆங்கில அறிவு போன்று மதச்சாற்பில்லமல் அமைத்திருக்கலாம் (உங்கள் நிகழ்ச்சியில் இருந்தாலும்-பொதுவாக இருந்து இருக்கலாம்)
இனிவரும் ஆண்டில் - ஒரு மாத நிகழ்ச்சியில்- கடைசி 5 நாட்கள் எல்லோரும் (எல்ல மத) கலந்து கொள்ளும் வகையிலும் அமைத்தால் - நல்லிணக்கம் ஏற்பட வழி வகுக்கும்
'அதிரை மக்கள்' அவர்களுக்கு,
ReplyDeleteஉங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
குர்ஆன் மற்றும் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்குட்பட்டு நல்லிணக்கத்தை பேண இஸ்லாம் ஒருபோதும் தடையில்லை. வரும் ஆண்டுகளில் பிற மத சிறார்கள் மற்றும் மாணவிகள் அவர்கள் விரும்பினால் முழுமையாகவே முகாமில் கலந்து கொள்ளலாம்.