உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, May 2, 2011

வந்தார்கள், வருகிறார்கள், வருவார்கள் இன்ஷா அல்லாஹ்

கடைத்தெருவில் வைக்கப்பட்டுள்ள கண்கவர் பிளக்ஸ் போர்டு

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

சுட்டெரிக்கும் வெயில்,

பலருக்கோ தொலைதூரம்,

பகலிலும் விளக்கேற்ற தூண்டும் மின்சார வெட்டுகள்,

அண்மையில் தான் பள்ளிக்கூட சூழலிருந்து சற்றே விடுபடல்...


என மிரட்டும் மைனஸ் பாயிண்டுகளை கானல் நீராக்கிவிட்டு அலை அலையாய் மாணவ, மாணவிகள் வருகை தந்து கடந்த இருநாட்களாக மறைவழியில் தூதர் மொழியில் நிலை நின்று AIM & ALM சார்பாக ALM பள்ளிக்கூடத்தில் நடந்து வரும் கோடைகால பயிற்சி முகாமை 'ஓர் கோடை வாசஸ்தலத்திற்கு' ஈடாக்கி, சூழலும் களத்தினர், ஆசிரியப் பெருமக்கள், பள்ளி நிர்வாகிகள், அனுசரனையாளர் என அனைவரின் உள்ளங்களையும் குளிர வைத்துள்ளனர், அல்ஹம்துலில்லாஹ்.

மட்டையடி விளையாட்டுக்களை மறந்து விட்டு கடந்த ஆண்டை விட மாணவர்கள் வருகை அதிகரித்திருப்பதும் ஓர் இனிய நெகிழ்ச்சி.

அதிரையின் அனைத்துப் பகுதியிலிருந்தும் மாணவ, மாணவிகள் குவிய, எதிர்பார்ப்புகள் எகிற, ஆசிரியப் பெருமக்களையும் வாகன வசதிகளையும் இன்னும் அதிகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் ஏற்பாட்டாளர்கள். இன்ஷா அல்லாஹ் இந்த இனிய சவாலை ஏக இறைவனின் உதவி கொண்டு நிறைவேற்றிட சபதமேற்கிறோம்.


வேண்டுகோள்:

1. கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் இன்னும் சிறப்புடன் நடந்திட ஏக இறைவனிடம் பிரார்த்திக்க, தோள் கொடுக்க வாருங்கள் என ஏகத்துவ உள்ளங்களை அழைக்கின்றோம்.

2. ஆரம்ப கால AIM உறுப்பினர்கள் பலர் இன்னும் ஊரிலும் உலகின் பலமுனைகளிலும் பரவியுள்ளீர்கள் ஆனால் உங்களில் அனேகர் இன்று வெறும் பார்வையாளர்களாக!

தயவுசெய்து நமக்கிடையே ஏதும் முன் பின் கசப்புகளிலிருந்தால் அல்லாஹ்வுக்காக மறப்போம், மன்னிப்போம் மீண்டும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மட்டும் ஒன்றிணைவோம் வாருங்கள் என மனமுவந்து அழைக்கின்றோம்.

No comments:

Post a Comment