உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, July 20, 2014

அதிரை டீயென்டீஜே(வுக்கும்) நன்றி

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அதிரை டீயென்டீஜேயின் சுவற்று விளம்பரத்திற்கு பதில்
 

 
சூனியத்தின் உண்மை நிலை
 


கடந்த ரமலான் பிறை 1 முதல் நேற்றைய இரவு 20 வரை அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினரால் புனிதமிகு ரமலான் இரவுகளில் அதிரையின் மத்தியில், நடுத்தெருவில் மார்க்க விளக்கவுரையாற்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததை தாங்களெல்லாம் அறிவீர்கள் மாஷா அல்லாஹ் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்ததற்கு மேலாகவே சிறப்புடனும் மிக்க பயனுடனும் அமைந்தன, அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்.

சீராகவும் சிறப்பாகவும் சென்று கொண்டிருந்த நிகழ்ச்சியை குழைப்பதற்காக தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி என்ற அடிப்படையில் அதிரை டீயென்டீஜே கிளையினரால் சிறுபிள்ளைத்தனமான பல்வேறு சில்மிஷங்கள் சவால் போஸ்டர் வடிவிலும், கமெண்ட்டுகள் வடிவிலும், சுவற்றில் கிறுக்கி வைத்தும், இணைய தளங்கள் மூலம் கழிசடை எழுத்துக்களை பிரயோகித்தும் தொடர்ந்து வம்புக்கிழுத்து வந்தனர்.(தேர்தல் செருப்படிக்குப் பின், இனி யாரையும் திட்டுவதில்லை என்று எடுத்த தீர்மானத்தின் மை இன்னும் காயவில்லை என்பதை நினைவில் கொள்க)

அவர்களின் தொடர் முயற்சி பூமாரங்காக திரும்பி அவர்களையே பதம்பார்த்து விட்டதுடன் இனி அவர்கள் சூனிய விஷயத்தில் அதிரையர்களை மடையர்களாக்க முடியாது என்பதும் நிரூபிக்கப்பட்டுவிட்டது, மிக அமைதியாகவே முடிந்திருக்க வேண்டிய நம் தொடர் நிகழ்ச்சி அவர்களின் குர்ஆன் திரிப்பு மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களை மறுக்கும் மடத் தலைவரையும் கண்களை மூடிக்கொண்டு உலகம் இருட்டாகிவிட்டதாக கருதும் பூனை புத்தியுடைய அடிப்பொடிகளின் அறிவின்மையையும் மக்களுக்கு தெளிவுபடுத்திவிட்டது, தங்களின் கண்மூடித்தனமான நடவடிக்கைகளால் அதிரை தாருத் தவ்ஹீத் ஏற்பாடு செய்த ரமலான் இரவு பாயன் நிகழ்ச்சியை மேலும் பலநூறு அதிரையர்களிடம் கொண்டு சேர்த்ததற்காக அவர்களுக்கு ஒரு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

துபை சர்வதேச குர்ஆன் விருது விழாவில் நடைபெற்ற தமிழ் பயான்


 அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்




கடந்த வெள்ளியன்று (18.07.2014) பின்னேரம் இரவு சுமார் 10.30 மணிமுதல் 12.30 வரை அல் கிஸஸ் ஜமியத் அல் இஸ்லாஹ் அரங்கில், துபை அரசின் 'இன்டெர்நேஷனல் ஹோலி குர்ஆன் அவார்ட்' கமிட்டியினரால் புனிதமிகு ரமலான் மாதங்களில் நடத்தப்பெறும் குர்அன் ஓதும் போட்டியை ஒட்டி பல்வேறு சர்வதேச மொழிகளிலும் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் சேர்த்து நடத்தப்படுகின்றன, அதில் ஒன்றாக நமது தமிழ் மொழியிலும் கடந்த வருடம் முதல் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.





இந்த வருட நிகழ்ச்சியை ஒட்டி தமிழ் பிரிவின் சார்பாக சென்னையிலிருந்து 'முஃப்தி. உமர் ஷரீஃப் காஸிமி' அவர்கள் சிறப்பு அழைப்பாளாராக பங்கேற்று 'திருக்குர்ஆன் - மனித குலத்திற்கோர் வழிகாட்டி' என்ற தலைப்பின் கீழ் குர்ஆன் எவ்வாறெல்லாம் மனித குலத்திற்கு வழிகாட்டியாக திகழ்கிறது என்பதை குர்ஆன் வசனங்கள் மூலமும் நபி (ஸல்) அவர்களின் வாழ்விலிருந்து நடைமுறைகளை எடுத்துக்கூறியும் விளக்கினார்.





முதன்மையான அரங்கு விரைவாக நிறைந்த நிலையில் எஞ்சியோர்களுக்கு வெண்திரை மூலம் நிகழ்ச்சியை நேரிடையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும் பிரதான உரைக்குப் பின் நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
 
அதிரைஅமீன்

Saturday, July 19, 2014

அதிரை டீஎன்டீஜே பூச்சாண்டிகள் எங்கே?

இணையத்திற்குள் ஒழிந்து கொண்டு சீண்டிய அதிரை ததஜ சவடால் பேர்வழிகளை, அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக ஜமீல் காக்கா அவர்கள் 'கொள்கையற்ற கூட்டத்தினர் யார்?' தலைப்பில் பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்தும் விவாதிக்க முன்வராத, குர்ஆன் ஹதீஸ்களை மறுத்தும் மனம்போன போக்கில் திரித்தும் கூறித்திரியும் ததஜ வழிகேடர்கள் இப்போது தெருவில் கிறுக்கிக் கொண்டு கிறுக்குபிடித்து அழையும் பரிதாபம் பாரீர்!

யா அல்லாஹ், கண்மூடித்தனமாக பீஜே என்பவரை பின்பற்றும் இந்த ததஜவினரை பீஜேயின் சூனியத்திலிருந்து காப்பாயாக!  

(வசீகரிக்கும் பேச்சிலும் சூனியமிருக்கிறது என்று ஒரு காலத்தில் அவரும் சூனியத்தை பரப்பும் போது பேசியிருக்கிறார்)

டீஎன்டீஜேயின் திருகுதாளம் - By Brother Media Magic Nijam

http://www.murshidabbasi.com/?p=1592

அதிரை டீஎன்டீஜேயின் விவாத பூச்சாண்டியும் எனது விளக்கமும் - By Moulavi Murshid Abbasi
 
http://www.murshidabbasi.com/?p=1595

Wednesday, July 9, 2014

18-07-2014 வெள்ளியன்று துபையில் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

Dubai International Holy Quran Award நடத்தும் 
சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ்...

நாள்: 18-07-2014 வெள்ளிக்கிழமை இரவு 10:15 மணியளவில்
இடம்: ஜம்மியத்துல் இஸ்லாஹ் அரங்கம்- அல்கிஸஸ்-துபை
Near LULU Hypermarket. (Metro: STADIUM Green Line)

சிறப்புரை: முஃப்தி. உமர் ஷெரீப் காஸிமி அவர்கள்
தலைப்பு: திருக்குர்ஆன் மனிதகுலத்திற்கு ஓர் வழிகாட்டி

அனைவரும் வருக!

பெண்களுக்கு தனிஇட வசதி / Parking வசதி உண்டு

இஷா/இரவுத்தொழுகை அருகிலுள்ள மஸ்ஜிதில் இரவு 8:45 மணிமுதல் நடைபெறும்.

டெய்ரா-அல்கூஸ்-சோனாப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து வாகன வசதி உண்டு 

தொடர்புக்கு: 056-7371442 / 056-7371443


Sunday, July 6, 2014

துபையில் புதிய பேருந்து நிலையம் திறப்பு

ஏகப்பட்ட 'இல்லை'களுடன் புதிய பேருந்து நிலையம் வெளிநாட்டுத் தொழிலாளர்களும் வர்த்தக நிறுவனங்களும் நிறைந்த துபையின் தெய்ரா பகுதியில் கடந்த செவ்வாய் (01.07.2014) முதல் 'உடனடியாக' பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.




  • ரிப்பன், கத்தரிக்கோல் இல்லை
  • தோரணங்கள் இல்லை, கல்வெட்டுக்கள் இல்லை
  • எந்த மந்திரி / விஐபியின் தேதிக்காகவும் காத்திருக்கவில்லை
  • தலைமை செயலகத்திலிருந்து கணொளி திரை மூலம் திறக்கப்படவில்லை
  • போஸ்டர் அடிக்கவில்லை
  • குத்து விளக்கு ஏற்றவில்லை
  • ஆட்சியாளர்களின் சாதனை பட்டியலில் இடம்பெறவில்லை
  • கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா தேதி கிடைக்காமல் பல மாத காலத்திற்கு மூடி வைக்கப்பட்டிருக்கவில்லை
  • விழாவும் இல்லை மேடையும் இல்லை
  • ஒருத்தரை ஒருத்தர் புகழ்ந்து சொரிந்து கொள்ளவில்லை
  • பத்திரிக்கைகளில் முழுப்பக்க விளம்பரங்கள் இல்லை
  • இதை வெளிநாட்டினர் தவிர ஒரு சதவிகித துபை குடிமகனும் பயன்படுத்த போவதுமில்லை 
  •  
  •  தொழிலாளர்கள் இடுபாடுகளில் சிக்கிச் சாவும் துயரமும் இல்லை

  • இது எங்கள் ஆட்சியில் தீட்டப்பட்ட திட்டம் என அறிக்கை அக்கப்போர்கள் இல்லை
  • நைஃப் போலீஸ் முதல் மீன் மார்க்கெட் ரோடு வரை தற்போது பேருந்து போக்குவரத்து நெரிசல் இல்லை
  • இந்த புதிய பயனை அனுபவிக்கப்போகும் யாரும் துபை ஆட்சியாளர்களை தேர்நதெடுக்க ஒட்டுப்போட போவதுமில்லை
  • புதிய பஸ் ஸ்டேஷன் மாதிரியை வைத்து தேய்காய் பூஜை செய்யும் மெத்த படித்த, விஞ்ஞான கோமாளிகளும் இல்லை
  • இந்த பஸ் நிலையத்திற்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக எந்த மீடியாவும் கதை விடவும் இல்லை
  • அட ஏன், திறந்தது கூட அருகே வசிக்கும் பலருக்கு தெரியவே இல்லை
என இன்னும் ஏகப்பட்ட 'இல்லை'களால் மக்கள் பயன் மட்டுமே 'உண்டு'.


இப்படி ஒரு இந்தியா எப்ப வரும்?!  இந்த புதிய பேருந்து நிலையத்தை பற்றிய செய்தியின் காரணத்தை இப்போழுது புரிந்திருப்பீர்களே!



ஏற்கனவே சுமார் 500 மீட்டர் தூரத்தில் 'கோல்டு சூக் பஸ் ஸ்டேஷன்' செயல்பட்டு வந்த நிலையில் பாரமரிப்பு மற்றும் மராமத்து பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டு இந்த பேருந்து நிலையம் 'கோல்டு சூக் பஸ் ஸ்டேசன் எக்ஸ்டெர்னல்' என்ற பெயரில் ஹயாத் ரீஜென்ஸி ஹோட்டல் எதிர்புறம், பாம் தெய்ரா மெட்ரோ ஸ்டேஷன் மிக அருகிலும், கோட்டைப்பள்ளி பாதையை பாம் தெய்ரா மெட்ரோ ஸ்டேஷனுடன் இணைக்கும் நடைபாலத்தின் கீழும் இந்த புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு மிகவும் வசதியான ஒன்றாக அமைந்துள்ளது.


மேலும் இதன் விர்வாக்கப் பணிகளும் தொடர்ந்து இரவு பகலாக நடந்து வருகின்றன.
அதிரைஅமீன்