உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, August 10, 2011

அமீரகத்தில் ஏகத்துவ நிகழ்ச்சிகள்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இன்ஷா அல்லாஹ், வரும் 12.08.2011, 13.08.2011, 19.08.2011 ஆகிய தேதிகளில் கீழ்க்காணும் ஏகத்துவ நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.

குறிப்பாக 13.08.2011 அன்று அல் மனார் சென்டரில் முஃப்தி உமர் ஷரீஃப் காஸிமி அவர்களின் பயான் நிகழ்ச்சி அமீரக வரலாற்றில் முதன்முறையாக இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்று தமிழில் அரசாங்க அனுமதியுடனும் ஆதரவுடனும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைவரும் கலந்து பயனடைய அன்போடு அழைக்கின்றோம்.

12.08.2011 - வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் 11 மணி வரை

தேரா, துபை – நைஃப் ரோடு – அல் ஃபுத்தைம் மஸ்ஜித் எதிரில்
(DULF) டல்ஃப் ஹோட்டல் பின்புறம் அமைந்துள்ள  லூத்தா பில்டிங், அறை எண் : 109ல் செயல்படும்
 
தவ்ஹீத் இல்லத்தில்

தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள
மவ்லவி. முஹம்மது யூசுஃப் S.P. அவர்கள்
மார்க்கச் சொற்பொழிவாற்றவுள்ளார்கள் 

இந்நிகழ்ச்சியை நேரலையாக கீழ்க்காணும் வலைத்தளங்களில் காணலாம்

தொடர்புக்கு :  04 2981931 / 055 2177618 / 050 8480401

13.08.2011 - சனிக்கிழமை இரவு 10 மணி முதல் 11.30 மணி வரை


வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி ராஸ் அல் கைமாவில்
“ஏகத்துவ எழுச்சி மாநாடு”


அல்லாஹ்வின் அழகிய திருப் பெயரால்…
ராஸ் அல் கைமா மண்டல த.மு.மு.க மற்றும் 
தவ்ஹீத் பிரச்சாரப் பேரவை இணைந்து நடத்தும் 
“ஏகத்துவ எழுச்சி மாநாடு”

இடம் : அல் நக்கில், ராஸ் அல் கைமா

நாள் : ஆகஸ்டு – 19, வெள்ளிக்கிழமை, மாலை 5.30 அளவில் 

..: இஃப்தார் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது :..

சிறப்பு பேச்சாளர்கள் :
மவ்லவி யூஸுஃப் எஸ்.பி.அவர்கள்

மவ்லவி இலங்கை முஹம்மத் நாஸர் அவர்கள்
( இஸ்லாமிய அழைப்பாளர்)

கோவை ஜெய்னுலாபிதீன் அவர்கள்
நன்றியுரை :
கடியாச்சேரி ஹாஜா அவர்கள்
—————————————————————————
அல்லாஹ்வின் மார்க்கத்தை அதன் தூய வடிவில்
அறிந்துக் கொள்ள அழைக்கிறது… 

தவ்ஹீத் பிரச்சாரப் பேரவை – ராஸ் அல் கைமா, மற்றும்  த.மு.மு.க – ராஸ் அல் கைமா மண்டலம் 
——————————————————————————————
மேலதிக விபரங்களுக்கு :
055 1398 200 – 050 6903 993 – 055 9494653

Monday, August 8, 2011

எங்களை கவர்ந்த இஸ்லாம்

எங்களை கவர்ந்த இஸ்லாம்


வருடத்திற்கு சராசரியாக இருபதாயிரம் (20000) அமெரிக்கர்கள் இஸ்லாத்தை தழுவது ஏன்?

அன்று பாதிரியாராக கிருஸ்தவத்தை பரப்பிய மதப்போதகர் இன்று சேக் யூஸூப் எஸ்டெஸ் என மாறி இஸ்லாமிய முழு நேர அழைப்பாளராக ஆகியது எப்படி?

முஸ்லிம்களை ஒழிப்பதையே கொள்கையாகக் கொண்ட RSS இயக்கத்தின் ஊழியரை இஸ்லாம் எப்படி வென்றெடுத்தது?

ஆஸ்திரிரேலியாவில் 6 கிருஸ்தவ சகோதரிகள் பொதுமக்கள் மத்தியில் கலிமாவை முன்மொழிந்து இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொள்ளும் காட்சிகள் மற்றும்,

அன்று கார்த்திகா இன்று ஜூமானா ஹஸினாக, சுஸ்ருதா சகோ ஆயிஷாவாக, ஸ்ருத்தி சகோ ஃபுஸ்ஸிலத்தாக, இளையராஜா சகோஅப்துர்ரஹ்மானாக, மாறிய அனுபவங்களை வெளியுலகிற்கு பகிர்ந்து கொள்ளும் காட்சிகளையும் காண்பதற்கு கீழுள்ள தொடுப்பிற்கு செல்லவும்.


115A Scientist revert to Islam29Why 20000 Americans revert to Islam annually?
2A challenge to Dr.Zakir Naik at Colombo-Srilanka16Australian Christian girl revert to Islam30A Japanese Buddhist woman revert to Islam
3Daughter of American Christian minister..17A Muslim hater revert to Islam3115 people reverted to Islam at ones [Urdhu]
4Christian catholic nun reverted to Islam18A Christian professor revert to Islam32An Indian girl revert to Islam
5Madelin from Canada converted to Islam19An Orthodox Jew became Muslim33Karthika became Sister Jumana Hasin [Tamil]
6Sister reem converting to Islam in Hong Kong20A British Christian revert to Islam34Why Dr.meena has embraced Islam? [Malayalam]
7An Atheist accept Islam - Dr.Zakir Naik’s lecture21Islam-The fastest growing religion in the world35Why I came to Islam? – Hamza Yusuf
8My Journey to Islam-Sheikh Yusuf Estes22An American Christian revert to Islam36Atheism to Islam - A Japanese sister
96 Christian sisters revert to Islam23How Muslims get in to Islam?37A Hindu brother accept Islam @ peace [Urdhu]
1022 Australians revert to Islam24A Jew and Christian revert to Islam - Aljazeera38Ilayaraja became brother Abdrahman [Tamil]
11My Life before Islam!25Famous Celebrities accepting Islam-239Khaleel Rashid from-USA [Tamil]
12Evangelical Christian revert to Islam26A Mexican Christian sister revert to Islam40Malathi became Sister Aysha [Tamil]
13American couple revert to Islam27A non Muslim revert to Islam in pune-India41Surthi became Sister Fussilath [Tamil]
14A Hindu sister accepts Islam28RSS activist embraced Islam [Malayalam]42Sushrutha became Sister Aysha [Tamil]


To Continue : http://www.ottrumai.net/Muslims/index.htm

 Thanks to:

அலாவுதீன்

Sunday, August 7, 2011

புனித ரமலான் இரவு நிகழ்ச்சிகள் - நேரடி ஒளிபரப்பு (சென்னை)

புனித ரமலான் இரவு நிகழ்ச்சிகள்


இணையதளத்தில்
நேரடி ஒளிபரப்பு (சென்னை)


" இந்தியா நேரம் (இரவு 9:45 முதல் 10:45) "
 
இடம்: மஸ்ஜிதுஸ் ஸலாம் (JAQH மர்கஸ்) 26 அய்யாசாமித் தெரு, புதுப்பேட்டை, சென்னை

அழைப்புப் பணியின் அவசியம் - Part 2


بِشْمِ اللّهِ الرّحْمَنِ الرَّحِيْم
ஈமானுக்கு சிறப்பு:
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். ஏனெனில், நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள், தீயதைவிட்டும் விலக்குகிறீர்கள். இன்னும் அல்லாஹ்வின் மீது திடமாக நம்பிக்கை கொள்கிறீர்கள்…” (3: 110)
என்ற மேற்படி வசனத்தை நோக்கும் போது ஏலவே நாம் குறிப்பிட்டதை உணரலாம்.
பற்று: அடுத்து ஒருவன் ஒரு கொள்கையில் எவ்வளவு தூரம் நம்பிக்கை வைத்தவன் என்பதை அந்தக் கொள்கைக்காக அவன் செய்யும் தியாகம், அது வாழ அவன் எடுக்கும் முயற்சி என்பவற்றின் மூலமே நாம் உணரமுடியும். அல்லாஹ்வை நான் ஈமான் கொண்டுள்ளேன். இஸ்லாத்தை என் வாழ்க்கைத் திட்டமாகவும், இறைதூதரை என் தலைவராகவும், வழிகாட்டியாகவும் ஏற்றுள்ளேன். நான் இந்த அடிப்படையில் வாழ்வேன் மற்றவர்கள் இப்படி வாழ்வதற்காக எந்த முயற்சியையும் நான் எடுக்கமாட்டேன். அதேவேளை நான் ஏற்ற கொள்கைக்கு எதிராக எவராவது செயல்பட்டால் எனக்கு எரிச்சலோ கோபமோ வராது. அதைத்தடுப்பதற்கு முற்படமாட்டேன் என்ற நிலையில் ஒருவர் வாழ்ந்தால் அவர் கொள்கைப் பற்றுடையவர் என்று எவரும் கூற மாட்டர். உண்மையும் அதுதான்.
இவ்வகையில் இஸ்லாத்தை இதயத்தில் ஏற்று அதைப்பிறருக்கும் எடுத்துச் செல்லும் போதுதான் ஒருவன் இஸ்லாம் என்ற கொள்கையில் பற்றுடையவனாக இருக்க முடியும். எனவே, இறைவன் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் தராதரத்தை மதிப்பிடும் சாதனமாக இந்த அழைப்புப்பணி அமைந்துள்ளது எனலாம்.
வாழ்க்கையின் வெற்றி: மனித வாழ்வின் வெற்றியே இதில் தங்கியிருப்பதாக அல்குர்ஆன் கூறுகின்றது.
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். ஆயினும் எவர்கள் ஈமான் கொண்டு (நல்ல) அமல்கள் செய்து சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக் கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)என்ற சூறா அல் அஸ்ரின் கூற்றை நோக்கும் போது அழைப்புப்பணி என்பது ஒரு இஸ்லாமியனின் இலட்சியத்துடன் இரண்டறக் கலந்ததாக இருக்க வேண்டும் என்பதை விளங்கலாம்.
முஸ்லிம் என்பதன் சிறப்பு: முஸ்லிம் என நம்மை நாம் அறிமுகம் செய்து கொள்வதில் பெருமிதம் கொள்கின்றோம். இந்த முஸ்லிம் என்ற பெயர் அழகைப் பெறவேண்டுமானால் நாமும் நல்லமல் செய்வதுடன் பிறரையும் அதன்பால் அழைத்துக் கொண்டு நம்மை நாம் ஒரு முஸ்லிமாகப் பிரகடனப்படுத்த வேண்டும். வெறுமனே முஸ்லிம் எனக் கூறிக்கொள்வதில் அழகோ சிறப்போ இல்லை என்பதை பின்வரும் வசனம் உணர்த்துகின்றது.
அல்லாஹ்வின்பால் (மக்களை) அழைத்து, (தானும்) நற்செயல்செய்து; நிச்சயமாக நான் முஸ்லிம்களில் உள்ளவன் என்று கூறுபவனை விட சொல்லால் மிக அழகானவன் யார்?” (41:33)
இதிலிருந்து நான் முஸ்லிம் எனக்கூறும் நமது வார்த்தை அழகு பெறவேண்டுமென்றால் தஃவாப் பணியில் நாம் ஈடுபடுதல் வேண்டும் என்பதை உணரலாம்.
மார்க்கக் கடமை: தஃவாப் பணிபுரிவது பர்ழுஅய்ன்அனைவரும் அவசியம் செய்தேயாக வேண்டிய கடமையாகும். இப்பணியைச் செய்யாதபோது குற்றவாளியாக நேரிடும் என்ற கருத்தை சில அறிஞர்கள் கூறுகின்றனர். மற்றும் சிலரோ இல்லை இது பர்ழுகிபாயா”, சிலர் செய்துவிட்டால் மற்றவர்கள் மீதுள்ள கடமை நீங்கிவிடும். அவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள்என்பர்.
தஃவாப் பணியைப் பொறுத்த வரையில் சில போது பர்ழுஅய்னாக உள்ளது. சிலபோது பர்ழுகிபாயாவாக மாறலாம். உதாரணமாக, ஒரு சபையில் மார்க்க முரணான செயல் நடை பெறுகிறது. ஒருவர் அதனைத் தடுக்கின்றார் அத்தோடு அந்தத் தவறு கைவிடப்படுகின்றது. இந்த வேளையில் அங்கிருந்த ஒவ்வொருவரும் அந்தத் தவறைக் கண்டிக்க வேண்டியதில்லை. இப்போது ஒருவர் செய்தால் மற்றவர்கள் மீதுள்ள பொறுப்பு நீங்கிவிட்டது எனலாம்.
மேற்குறித்த அதே சந்தர்ப்பத்தில் ஒருவர் கூறியபின்னரும் அத்தவறு நடைபெறுகின்றதென்றால் அங்கிருக்கக்கூடிய மற்றவர்களும் இவருக்குத் துணையாக தமது அதிருப்தியை வெளிக்காட்டக் கடமைப்படுவர். இப்போது தஃவா பர்ழு அய்னாக மாறும் எனக்கூறலாம்.
எது எப்படியிருப்பினும் தஃவத் பணி பர்ழு-கட்டாயமானது என்பதில் கருத்து வேறுபாடில்லை. நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றும் அனைவரும் இப்பணியைச் செய்ய வேண்டும் என்ற கருத்தை சூறா யூசுப்பின் 108-வது வசனம் கூறுகின்றது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...
By. Aduthurai S.Hameed

Friday, August 5, 2011

ரமலான் நேரலை - அதிரை நிருபரிலும் காணலாம்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

துபை தவ்ஹீத் இல்லம் ஏற்பாட்டில், இலங்கை முஹம்மது நாஸர் அவர்கள் தொடர் சொற்பொழிவாற்றும் நிகழ்ச்சிகள் தினந்தோறும் துபை நேரம் இரவு 10 முதல் 11 மணிவரை நேரலையாக நமது http://www.aimuaeadirai.blogspot.com/ என்ற நமது வலைப்பூவில் மிகுந்த பேரார்வத்துடன் கண்டுவருகிறீர்கள். அனைவரின் ஆதரவுக்கும் நன்றி.

கூடுதலாக, தற்போது நமது சகோதர வலைத்தளமான http://www.adirainirubar.blogspot.com/ என்ற வலைத்தளத்திலும் நேரலை செய்யப்படுகின்றது.

அறிவிப்பு :
ரமலான் தொடர் சொற்பொழிவிலிருந்து தங்களுக்கு எழும் சந்தேகங்களை  thowheedillam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதி அனுப்பினால் இன்ஷா அல்லாஹ் நேரலையில் பதில் தரப்படும்.

பாருங்கள், பரப்புங்கள், நற்செயல்களில் ஒன்றுபடுவோம் மறுமை வெற்றிக்காக!

Monday, August 1, 2011

ஸதக்கத்துல் ஃபித்ர்

                                             
அஸ்ஸலாமு அலைக்கும்

கண்ணியமிக்க அல்லாஹ் தன் திருமறையில்... ' நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் புரிந்தோருக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் உண்டு என அல்லாஹ் வாக்களித்துள்ளான்' (அல்குர்ஆன் 5:9)

நோன்புப் பெருநாளை ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைவரும் மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக இஸ்லாம் காட்டியுள்ள அழகிய செயலே ஸதக்கத்துல் ஃபித்ர் என்னும் இந்த நோன்புப் பெருநாள் தர்மம். நோன்புப் பெருநாள் தர்மத்தை ஒவ்வொரு முஸ்லிமும் கொடுக்க வேண்டிய கட்டாயக் கடமையாகும்.

'அடிமைகள், அடிமை அல்லாதவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர், பெரியோர் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். பேரித்தம்பழம், தீட்டப்படாத கோதுமை ஆகியவற்றிலிருந்து ஒரு ஸாவு எனும்(அளவை) நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கிட வேண்டும் எனவும் நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்' அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்கள்: புஹாரி, முஸ்லிம்

மேலே கூறப்பட்ட ஹதீஸில், நோன்புப் பெருநாள் தர்மம் என்பது நமக்கெல்லாம் கட்டாயக் கடமை என்பதும், அதைப் பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் கொடுத்து விட வேண்டும் எனவும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் பெருநாள் தர்மத்தின் நோக்கம் பற்றி நபி(ஸல்) அவர்கள் கீழ்க்கண்டவாறு கூறினார்கள்.

'நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபட்டதற்கு பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பு நிறைவேற்றுகிறாரோ அது ஏற்கப்பட்ட கடமையான ஸகாத்தாக அமையும். யார் (பெருநாள்) தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்களில் ஒரு தர்மம் போல் அமையும்'   அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: அபூதாவூத்

மேலே கூறப்பட்ட ஹதீஸில் ஏழைகள் மகிழ்வுடன் பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான் பெருநாள் தொழுகைக்கு முன்பு கொடுப்பதையும், பின்பு கொடுப்பதையும் நபி(ஸல்) அவர்கள் வேறுபடுத்திக் காட்டியுள் ளார்கள். பெருநாள் தொழுகைக்குப் பினனால் கொடுத்தால் ஏழைகளுக்கு பெருநாள் கொண்டாட உதவாது என்பதால் அதை சாதாரண தர்மம் எனக் கூறுகிறார்கள்.

யாருக்குக் கடமை?

மேற்கண்ட ஹதீஸில், நோன்பில் ஏற்படும் தவறுகளுக்கு பரிகாரமாக இந்த தர்மம் கடமையாக்கப்பட்டதாக கூறினாலும், நோன்பு நோற்காதவர்களுக்கும் இது கடமையாகும். மேலும் நோன்பின் தவறுகளுக்கு பரிகாரமாக வேண்டும் என்றும், ஏழைகள் பெருநாளை மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்றும் இரு நோக்கங்கள் விளக்கப்பட்டுள்ளன. எனவே ஒருவர் தமக்காகவும், தமது பெற்றோர், மனைவி, பிள்ளைகள் மற்றும் தமது பராமரிப்பிலுள்ள அனைவருக்காகவும் இந்த பெருநாள் தர்மத்தை வழங்க வேண்டும்.

ஃபித்ராவின் அளவு
தமது பராமரிப்பிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு 'ஸாவு' அளவு என நபி(ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்துள்ளார்கள். ஸாவு என்பது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்த ஒரு முகத்தல் அளவையாகும். இரு கைகள் கொள்ளுமளவுக்கு அரிசியை நான்கு தடவை அள்ளினால் எவ்வளவு வருமோ அந்த அளவே ஒரு 'ஸாவு' (சுமார் இரண்டரை கிலோ) எனப்படும். இந்த அளவு அரிசி அல்லது அதற்கான கிரயத்தை வழங்க வேண்டும். தமது பராமரிப்பில் பத்துப்பேர் இருந்தால் பத்து ஸாவு தர்மத்தை வழங்கிட வேண்டும்.

'நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு ஸாவு உணவை நோன்புப் பெருநாள் தர்மமாக வழங்கி வந்தோம். எங்களின் அன்றைய உணவு தீட்டப்படாத கோதுமை, உலர்ந்த திராட்சை, பாலாடைக்கட்டி, பேரிச்சம்பழம் ஆகியவைதான்' அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) நூல்: புஹாரி
மேற்குறிப்பிட்ட ஹதீஸில் அன்றைக்கு எது உணவாக இருந்ததோ அதை வழங்கினார்கள் என்பதனால், நம்முடைய உணவு எதுவாக இருக்கிறதோ அதையே வழங்க வேண்டும்.

எப்படி, எப்பொழுது கொடுப்பது?
'ரமளானின் ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் நபி (ஸல்) அவர்கள் என்னை நியமித்தார்கள்' அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புஹாரி நாஃபிஉ(ரஹ்) கூறுகிறார்கள் .........மேலும் பெருநாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரே நபித் தோழர்கள் (இந்த தர்மத்தைக்) கொடுத்து வந்தார்கள். (புஹாரி 1511)
'நபி(ஸல்) அவர்கள் பேரீச்சம்பழத்தில் ஒரு ஸாவு  என்று நோன்புப் பெருநாள் தர்மத்தை நிர்ணயம் செய்திருந்தார்கள். ஒரு மனிதர் மட்ட ரகமான பேரிச்சம்பழங்களை கொண்டு வந்தார். அதை நபி(ஸல்) அவர்கள் (பெற்றுக் கொள்ளாமல்) இந்த பழத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று கூறினார்கள்' அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ரவாஹா(ரலி) நூல்கள்: ஹாகீம்.
இதன் மூலம் தர்மம் செய்யப்படும் பொருள் தரமானதாகவும், நிறைவானதாகவும் இருக்க வேண்டும். மேலும் ஃபித்ராவை குறிப்பிட்ட நேரத்திற்குள் கொடுத்துவிட வேண்டும் என்பதையும், கூட்டாக வசூலித்து வினியோகம் செய்யலாம் என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.
ஸதக்கத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மம் அனைத்து ஏழைகளுக்கும் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தந்த வழியில் ஆண்டுதோறும்  நமதூரில் அனைத்து முஹல்லாவிலும் உள்ள ஏழைகளைச் தேடிச்சென்று பெருநாளை அவர்களும் மகிழ்வுடன் கொண்டாட வழிவகை செய்யப்படுகிறது. எனவே தங்கள் மற்றும் தங்களை சார்ந்தவர்களின் ஃபித்ரா தொகை திர்ஹம். 20  வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அன்புடன்...
அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM)   

தொடர்புக்கு:
சகோ. அப்துல் காதர் 055-2829759   - Dubai  
சகோ. மீரா 050-5994180 - Sharjah
சகோ. அமீன் 050-8519008 - Abu Dhabi

நோன்பு

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

உரை: மவ்லவி. (இலங்கை) அப்துல் ஹமீது (ஷரயி)