உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, March 21, 2014

இந்த ஆளை உங்களுக்கு தெரியுமா !?

இந்த ஆளை உங்களுக்கு தெரியுமா !?

கால காலமாக நமதூரில் இனம் தெரியாத ஆட்கள் எல்லாத் தெருக்களில் நடமாடுவதையும், தங்கி இருந்து வேலை செய்வதையும் பார்க்கலாம். நமதூர் மக்களுக்கு அவர்கள் மேல் சந்தேகம் வந்தாலும் அதை பற்றி யாரும் பெரியதாக எடுத்துக் கொள்வது கிடையாது, அப்படி என்றால் அவர்கள் யார்? உங்களுக்கு தெரியுமா? என்ற கேள்வியை உங்களிடம் கேட்டால், நீங்கள் தெரியாது என்றே சொல்வீர்கள், காரணம் அவன் எந்த ஊராக இருந்தா நமக்கென்ன என்ற தோரணையில் போய்விடுகின்றது, ஏனென்றால் நாமும் சிலவேளைகளில் வெளியூர்களில் நடமாடக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுவிடுகிறது, அதனாலாயோ! வேறு என்னவோ!!
சாதரணமாக நாம் வெளியூர் சென்றுவிட்டு ஊர் திரும்பி வரும் வரைக்கும் பஸ் டிக்கட்டை பத்திரமாக வைத்துருக்கவேண்டும், மேலும் நம்மை பற்றிய முழு விளக்கமும் தெளிவாக விளக்கும் வகையில் நமக்கு உண்டான அடையாள அட்டைகளையும் பத்திரமாக வைத்துக் கொள்ளவேண்டும்.
மேலும் சிலர் வெளியூர்களில் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து நிரந்தரமாக தங்கி இருந்து தொழில் நடத்தி வருவார்கள், மாதம் ஒருமுறை வீடு வந்து போவார்கள், இவர்களும் அவர்களுக்கு உண்டான அடையாள அட்டைகளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ன்னும் சிலர் தங்களிடம் எந்த ஒரு அடையாள ஆவணமும் இல்லாமல் தினம் தினம் ஒவ்வொரு ஊராக போய் வியாபாரம் செய்வார்கள், இது மிகவும் தவறு.
உதாரணத்திற்கு.
ருத்தன், குடிசை/சில்லறை தொழில் விஷயமாக வெளியூர்களில் உள்ள பல ஊர்களுக்கு சென்று தெரு தெருவாகவோ அல்லது ஊரின் ஒரு மையப்பகுதியிலோ வியாபாரம் செய்வதாக இருந்தால் கீழ்க் கண்ட நிபந்தனைகளை அவன் சரிசெய்து கொண்டு போக வேண்டும்.
நிபந்ததனை ஒன்று.
வனின் சொந்த ஊர் காவல் நிலையத்தில், குடிசை/சில்லறை வியாபார விஷயங்களையும்,  போகப் போகின்ற ஊரின் பெயரைச் சொல்லி (No Objection Certificate) தடையில்லா சான்றிதழை பெற விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் அவனிடம் எந்த வித குற்றச் செயல் இல்லை என்றும் வெளியூர் போய் வியாபாரம் செய்யலாம் என்று தடையில்லா சான்றிதழை வழங்குவார்கள். இதோடு சேர்த்து அவன், அவனுடைய எல்லா அசல் அடையாள அட்டைகளை பத்திரமாக தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும். 
நிபந்தனை இரண்டு.
ந்த தடையில்லா சான்றிதழை வைத்துக்கொண்டு, அவன் எந்த ஊருக்கு போக இருக்கின்றானோ அங்கு போய் அவனுடைய வியாபாரத்தை துவங்கும்முன் அங்குள்ள காவல் நிலையத்தில் இந்த தடையில்லா சான்றிதழை காண்பித்து (Endorsement) செய்ய வேண்டும், அதாவது தடையில்லா சான்றிதழின் பின் புறம் Approval-ஆதரவு, Support-சம்மதம் என்று ரப்பர் ஸ்டாம்ப்பினால் காவல் துறை முத்திரை இட்டு கையொப்பமிட்டு தருவார்கள்.
நிபந்ததனை மூன்று.
வைகளை பத்திரமாக வைத்துக் கொண்டு வியாபாரத்தை தெரு தெருவாகவோ அல்லது ஊர் மையப்பகுதியிலோ துவங்க வேண்டும். Consumer-நுகர்வோர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும், யாரும் சந்தேகப்பட்டு விசாரித்தால் தடையில்லா சான்றிதழை காண்பிக்க வேண்டும். மேலும் ஒருநாள் தங்க நேரிட்டால் காவல் துறையினரிடம் அனுமதி கோர வேண்டும். வேலையை முடித்துக் கொண்டு ஊரு திரும்பியதும், உள்ளூர் காவல் நிலையத்தில் திரும்பி வந்த செய்தியை தெரிவிக்க வேண்டும். இதுதான் முறை ஆனால் இதை யாருமே செய்வது கிடையாது. 
நமதூரில் என்ன நடக்குது?
மதூரில் ஒரு நாளைக்கு தெருத் தெருவாக ஆயிரத்து எட்டு பழ வண்டிகள், பழைய இரும்பு சாமான்கள் வண்டிகள், ஆடைகள்/துணிகள் இவைகளை சுமந்து செல்லும் வடநாட்டு இளைஞர்கள், நாங்க அங்குருந்து வருகின்றோம்/இங்குருந்து வருகின்றோம் என்று சொல்லி பதிவு இல்லாத சில எண்டர்ப்ரைசஸ் பெயரைச் சொல்லி சிறு சேமிப்பில் கவர்ச்சிகரமாக தங்க நகைகள்/வீட்டு சாமான்கள், ஏதோ ஒரு ஆசிரமத்தின் பெயரைச் சொல்லி பணம் வசூலிப்பது, யாசகம் என்ற பெயரில் வருவது, இன்னும் அநேகர் இப்படி வந்த வண்ணம் இருக்கின்றனர், இவர்களைப்பற்றிய விபரங்களை யாராவது குறுக்கு விசாரணை செய்தது உண்டா? இந்த விஷயத்தில் நாம் மெத்தனமாக இருக்கக்கூடாது, இதில் ஆண்கள் மட்டும் இல்லை, பெண்களுக்கும் உரிமை இருக்கின்றது, பெண்களும் எல்லா விஷயத்திலும் முழு விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.  
மதூரில் வீடுகளைக் கட்டுவதற்கு வெளியூர்களிலும், வெளி மாநிலங்களிலும் கட்டிடப் பணியாளர்களை வரவழைத்து இங்கேயே தங்க அமர்த்தி வேலைகளை வாங்கி வருகின்றனர். மேலும் பலர் வாடகைக்கு ஆட்களை அமர்த்தி வருகின்றனர்.
ப்படி வெளியூர்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் வேலைக்கு ஆட்களை வரவழைத்து அவர்களை நமதூரில் தங்க வைக்கும் உரிமையாளர்களும் சரி, ஒப்பந்தக் காரர்களும் சரி, நீங்கள் அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும், வேலையில் இருக்கும்போதும் வெளியில் நடமாடும்போதும் கண்ணியமாக நடந்துகொள்ள அறிவுறுத்த வேண்டும், அடுத்த வீட்டு கதவுகளை தட்டக்கூடாது என்று அவர்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும், அவர்களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்க வேண்டும், உங்களிடம்தான் வேலைசெய்கின்றனர் என்பதற்கு அத்தாட்ச்சியாக அவர்களுக்கு முறையாக அடையாள அட்டை வழங்க வேண்டும், அவர்களைப் பற்றிய எல்லா முழு விபரங்களும் உங்களிடம் இருக்க வேண்டும், அவைகளைப்பற்றிய விபரங்களை காவல் துறையில் கொடுத்து ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். நமதூரில் எத்தனை உரிமையாளர்கள், ஒப்பந்தக் காரர்கள் இப்படி நடந்து கொள்கின்றனர்? 
ரு இந்தியன், இந்தியாவின் எந்த ஒரு மூலையிலும் போய் வேலை செய்யலாம், தங்கலாம், அவனுக்கு முழு உரிமை உண்டு, எந்த ஒரு தடையும் இல்லை, ஆனால் பாதுகாப்பு கருதி ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று இந்திய காவல் துறை சட்டம் எச்சரிக்கின்றது.
வெளியூர்களிலும், நமதூரிலும் அவ்வப்போது நடக்கும் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்களை பார்க்கும்போது வெளியூர் கைவரிசை ஓங்கி இருப்பது நன்றாக தெரிகிறது. இது நாளுக்கு நாள் பல ஊடக வாயிலாக நாம் காணமுடிகின்றது, சந்தேகப்படும்படியாக அது யாராக இருந்தாலும் சரி, கொஞ்சம்கூட தயங்காமல் அவர்களை கூப்பிட்டு விசாரிப்பதில் தவறு ஏதும் இல்லை, முரண் உண்டாகும்படி இருந்தால் உடனே ஊர் காவல் துறைக்கு தெரியப்படுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சில வேளைகளில் வங்கி ஊழியர்கள், மின் வாரிய ஊழியர்கள், அஞ்சல்துறை ஊழியர்கள், வாக்கெடுப்பு ஊழியர்கள், அரசு சார்ந்த ஊழியர்கள், கேஸ் இணைப்பு ஊழியர்கள், இன்னும் பல நிறுவன ஊழியர்கள் நம் வீட்டுக்கு எதோ ஒரு வேலையாக வரக்கூடும், அவர்கள் அத்தனைபேரும் பார்த்தமுகமாக இருப்பார்களோ அல்லது இல்லையோ, எது எப்படி இருந்தாலும் அவர்கள் தங்களுடைய அடையாள அட்டையை காண்பித்து தங்களை யார் என்று உறுதி படுத்தின பின்னரே தாங்கள் வந்த நோக்கத்தை நம்மிடம் சொல்ல வேண்டும், இது தான் முறை.  
பொதுமக்களே நன்றாக சிந்தியுங்கள், பெரும்பாலும் இதுமாதிரி தவறுகள் நடக்க காரணமாக இருப்பவர்கள் அந்தந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்களே, எது எதுவுக்கோ நேரத்தை வீணாக செலவு செய்யும் நீங்கள் இதுக்கு கொஞ்சநேரம் செலவழித்தால் அது உங்களுக்கு மட்டும் இல்லை நம் ஊருக்கே நல்லதுதானே.
எடுத்துச் சொல்வது எங்கள் கடமை, விழிப்புணர்வுடன் இருப்பது உங்கள் கடமை.
இப்படிக்கு .
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.                           
த/பெ. மர்ஹூம். கோ.மு. முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை 13வாடி, வண்டிப்பேட்டை.

Thanks to: http://theadirainews.blogspot.ae/2014/03/blog-post_7216.html

No comments:

Post a Comment