உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, August 6, 2013

முஸஃபா ஐகாட் 2ல் நடைபெற்ற தஃவா உடன் கூடிய இஃப்தார்

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
 

இஃப்தார் எனும் நோன்பு திறத்தல் இஸ்லாத்தை பொறுத்தவரை ஒரு இபாதத், இந்த சங்கைக்குரிய இபாதத் இன்றைய உலகில் கின்னஸ் சாதனைக்காகவும், அரசியல் லாபங்களுக்காகவும், இயக்க வளர்ச்சிகளுக்காகவும், ஃபித்ரா மற்றும் நிதி திரட்டல்களுக்காகவும், சில தனிநபர் வணங்கிகள் இஃப்தாரின் பெயரால் தீனி கொடுத்து தரீக்காவிற்கு ஆள்சேர்க்கும் அவலம் என முறையற்று பயன்படுத்தப்படுகின்றது.

ஒரு சில இஃப்தார் நிகழ்வுகள் மேற்படி தவறான நோக்கமின்றி ஊர், தெரு, சொந்த பந்தமென என உறவாடும் ஒன்றுகூடல் நிகழ்வாகவும் நடந்தேறி வருகின்றன.

மேற்காணும் நிகழ்வுகளிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டு, கடந்த 05.08.2013 ஞாயிறன்று அபுதாபி, முஸஃபா, ஐகாட் 2ல் நடைபெற்ற தமிழ் தஃவா நிகழ்ச்சியின் இறுதியில் இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் ஆரம்பமாக 'ரமலானுக்குப் பின்னும் தொடர வேண்டிய நம் அமல்கள்' என்ற தலைப்பில், குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் சகோதரர் (நாகூர்) அபூ தாஹிர் அவர்கள் பயனுள்ளதொரு சிற்றுரை நிகழ்த்தினார்கள்.





 




இந்நிகழ்வில், இஸ்லாத்தின் பால் உள்ளம் ஈர்க்கப்பட்ட இந்து மத சகோதரர் ஒருவரும் நோன்பு நோற்ற நிலையில் கலந்து கொண்டார். அச்சகோதரருக்கும் இன்னும் ஏனையோர்களுக்கும் அல்லாஹ்வின் ஹிதாயத் விரைவில் கிடைத்திட, தூய இஸ்லாத்தை தழுவி அவர்களும் அல்லாஹ்வின் சிறந்த அடிமைகளாகிட, சொர்க்கதிற்குரியவர்களாகிட எல்லாம் வல்ல ரஹ்மானிடம் துஆ செய்திட வேண்டுகிறோம்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை போர்ஸிலான் மற்றும் ஜிப்செம்னா கம்பெனி ஊழியர்கள் நன்றே செய்திருந்தனர்.

அபுதாபியிலிருந்து
அதிரைஅமீன்

No comments:

Post a Comment