செய்திகளை பார்வையிடும் நோக்கில் உலாவிக் கொண்டிருக்கும் போது கண்ணில் பட்ட செய்தி, மனதை உருக்க வைத்துவிட்டது. அல்லாஹ் போதுமானவன் Lankamuslim.org
மௌலவி A J M மக்தூம்
அஸ்ஸலாமு அலைக்கும் : றிஸானாவின் பெற்றோரின் கவனத்திற்கு, நீங்கள் ஷரீஆ சட்டப்படி உங்கள் மகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளீர்கள் என்ற செய்தியை வாசித்தவுடன் மிகவும் சந்தோசம் அடைந்தேன். இதன் மூலம் பொறுமையை கடைப்பிடித்து இறைவனின் நற்செய்திக்கு உரித்தானவர்களாகவும், பிறருக்கு முன்மாதிரியாகவும் ஆகிவிட்டீர்கள். இது போன்றவர்கள் பற்றியே இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:
وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
(அல்குர்ஆன்2:155(
الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். (அல் குர்ஆன் 2:156)
أُولَٰئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۖ وَأُولَٰئِكَ هُمُ الْمُهْتَدُونَ
இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். (அல் குர்ஆன் 2:157)
சவுதி அராபியாவில் பணிப் பெண்ணாக வேலை செய்து கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு பின் சென்ற புதன்கிழமை (09.01.2013) 11 மணியளவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட உங்கள் மகள் றிசானாவை அவருக்கு அத்தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஓரிரு மணித்தியாலங்களுக்கு முன் சந்தித்தோம்.
அவரின் இறுதி ஆசைகள் மற்றும் வசிய்யத் (மரன சாசனம்) பற்றி வினவவே இச்சந்திப்பு இடம்பெற்றது.
அவரை சந்தித்ததும் அவரின் இறுதி ஆசைகள் மற்றும் வசிய்யத் ஏதும் இருக்கிறதா? என்று வினவினேன். அவருக்குப் புரியவில்லை, விளங்கப் படுத்தினேன். அதற்கு பதில் சொல்லாது ஊருக்கு நான் எப்போது செல்வது? என்று வினவினார். அப்போது அவர் ஊருக்கு சென்று விடலாம் எனும் எதிர் பார்ப்பிலேயே இங்கு வந்துள்ளார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
சரி, எண்ணத் தீர்ப்பு உங்கள் மீது விதிக்கப் பட்டுள்ளது என்று வினவிய போது, அவரின் முழு கதையையும் சொல்லி விட்டு பின் மரண தண்டனை இப்போது விதிக்கப் பட்டுள்ளது என்று கூறினார். அந்த இறுதி நேரத்திலும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த கொலைக் குற்றத்தை அவர் மறுத்தார்.
உங்களுக்கு மரண தண்டனை இன்றுதான் நிறைவேற்றப்படப் போகிறது என்று தடுமாற்றத்துடன் கூறினேன். அதற்கு அவர் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார்.
அப்போது நான் உங்கள் பெற்றோர், சகோதரிகளுக்கு ஏதும் சொல்ல வேண்டுமா? என்று கேட்டேன். என்ன சொல்வது? என்று பதற்றத்துடன் என்னிடம் தாழ்ந்த குரலில் வினவினார்.
மரணம் என்பது எல்லோருக்கும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த உலகில் யாரும் நிரந்தரமாக வாழ்வதற்கு வரவில்லை. மறு உலக வாழ்வே நிரந்தரமானது என்பதை புரியப்படுத்தினேன்.
என்னை மன்னித்து விட்டுட சொல்லுங்க நானா? என்று கெஞ்சிய குரலில் அவர் கூறியது எனது உள்ளத்தை உருக்கிவிட்டது. அங்குள்ள அதிகாரிகளிடம் இது பற்றி கூறி, அவருக்காக பரிந்து பேசினேன். அவர்களும் மரணித்த குழந்தையின் பெற்றோரிடம் பேசி முயற்சி செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள்.
அப்படி அவர்கள் மன்னிக்க மறுத்துவிட்டால், உங்கள் மரண தண்டனை இன்று நிறைவேற்றப்படும். உங்களிடம் ஏதாவது பணம், பொருட்கள் இருந்தால் அதனை என்ன செய்வது? என்று வினவிய போது, மொத்தம் ஐநூறு சவுதி ரியால்கள் சொட்சம் இருப்பதாகவும், அதனை சதகா செய்திடுமாரும் வேண்டிக் கொண்டார்.
அவற்றை யாருக்கு? எங்கு? எந்த வழியில் சதகா செய்வது என்று கேட்கப் பட்டபோது, இங்கேயே, எந்த வழியிலேனும் சதகா செய்திடுங்கள் என்று உறுதிப்பட கூறி அவரே அவருக்கு அறிமுகமான இரு பெண்களை பொறுப்பு சாட்டினார்.
அவருக்கு “ஷஹாதா” (அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லாஷரீக லாஹ், வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு) என்னும் சாட்சிப் பிரகடனம் கூற சொல்லிக் கொடுக்கப்பட்டது.
அதன் பிறகு இரண்டு ரகஅதுகள் தொழவும், துஆ செய்யவும் அவருக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.
அங்கிருந்த அதிகாரிகள் வாக்குறுதி அளித்தது போன்றே இறந்த குழந்தையின் உறவினர்களுடன் நீண்ட நேரம் பேசியும் பலனில்லாமல் போய்விட்டது. அங்கிருந்த அனைவரின் எதிர்பார்ப்பும் ரிசானா மன்னிக்கப்பட வேண்டும் என்பதே. நீண்ட நேர உரையாடல் எந்த பலனும் அளிக்காத போதும், அவரின் தண்டனை நிறைவேற்ற நியமிக்கப்பட்ட இடத்திற்கு அழைத்து செல்லப்பட்ட போது கூட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த உயரதிகாரியிடம் ஒருவர் மன்னித்து விட்டார்களா? என்று கேட்டார், இன்ஷா அல்லாஹ் மன்னித்து விடுவார்கள் என்றே அவர் அதற்கு பதில் அளித்தார். அதாவது இறுதி நேரத்திலாவது மன்னித்து விடுவார்கள் என்பதே அவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. நாட்டு மன்னர், இளவரசர் சல்மான் போன்றோர் இதற்காக முயற்சித்தும் பலனளிக்காமை இங்கு சுட்டிக் காட்டத் தக்கது. மேலும் அங்கிருந்த யாரும் அவருடன் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. பண்பாகவும், பாசமாகவுமே நடந்து கொண்டார்கள்.
அதன் பிறகு அவருக்கு நியமிக்கப்பட்டிருந்தது போன்றே அல்லாஹ்வின் நாட்டத்துடன் சென்ற புதன்கிழமை காலை 11 மணியளவில் அவரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து, அவரை சுவர்க்கத்திற்கு சொந்தக்காரியாக ஆக்கியருள்வானாக. இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தி எனக்கு ஞாபகம் வந்தது. அது: “முழு உலகமும் சேர்ந்து உனக்கு ஒரு நன்மையை செய்திட முயற்சி செய்தாலும், இறைவனின் ஏற்பாட்டை மீறி ஒன்றும் செய்திட முடியாது. மேலும் முழு உலகமும் சேர்ந்து உனக்கு ஒரு தீமையை செய்திட நினைத்தாலும் இறைவனின் ஏற்பாட்டை மீறி எந்தவொன்றும் செய்திட முடியாது”
உங்கள் மகள் ரிசானா விடயத்திலும் இதனையே கற்றுக் கொண்டோம். முழு உலகமும் அவரின் உயிரைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொண்ட போதிலும். அவரின் உயிர் இங்கேயே பிரிந்திட வேண்டும் என இறைவன் நாடியுள்ளான். நான் கூட உங்கள் மகளுக்காக நிறையவே துஆ செய்தேன். உங்கள் மகளின் மரண தண்டனைப் பற்றிய செய்தி ஒரு நாள் முன்னதாகவே எனக்கு கேள்வி பட்டது. அதாவது மேற்குறிப்பிட்ட சந்திப்பிற்கான அழைப்பு வந்தபோது. அந்த நேரத்தில் இருந்து ஒவ்வொரு கணமும் அவருக்காக துஆ செய்தேன். எனக்கும் அந்த நேரத்தில் அவருக்காக துஆ செய்வதைத் தவிர வேறு வழியொன்றும் தென்படவில்லை. இறுதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்த பிறகு அவரை தண்டனை நிறைவேற்ற கொண்டு செல்லும் போது “இறைவா! இவர் அநியாயமாக தண்டிக்கப் படுகிறார் என்றால் அநியாயக்காரர்கள் மீது உனது தண்டனையை உடனே இறக்கிவிடுவாயாக” என்று கூட பிரார்த்தித்தேன்.
மேலும் அது பற்றிய செய்திகள் வருகிறதா? என்று அடிக்கடி இணைய தளங்களை பார்த்தேன். எனினும் அங்கே செல்லும் வரை எந்த செய்தியையும் காணவில்லை.
அங்கிருந்த அதிகாரிகளிடம் இது பற்றி வினவிய போது, உங்கள் நாட்டு தூதரகம் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும் என்று கூறினார்கள். எனவே உத்தியோகப் பூர்வமாக செய்தி வரும் வரை நான் வேறு யாரிடமும் கூறுவதைத் தவிர்த்துக் கொண்டேன்.
இது இவ்வாறிருக்க இன்று ஊடகங்களில் உண்மைக்கு மாற்றமான தகவல்கள் நிறைய பரிமாறப்படுகின்றன. சில முஸ்லிம் சகோதரர்கள் கூட ஈமானுக்கு புறம்பான கருத்துக்களை வெளியிடுகின்றனர். அல்லாஹ் எங்களை மன்னிக்க வேண்டும்.
உண்மையை விளங்கப்படுத்தும் நோக்கிலேயே இதனை எழுதினேன். நான் ஏற்கனவே றிசானாவின் வழக்கை மொழிப்பெயர்த்த இருவரையும் சந்தித்து இது பற்றி வினவினேன். முதலாம் மொழிப்பெயர்ப்பாளர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரிடம் கேட்டபோது றிசானா தன் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றத்தை ஏற்றுக் கொண்டார் என்று கூறினார். இரண்டாவது மொழிப்பெயர்ப்பாளர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் அவரிடம் கேட்ட போது அவர் அக்கொலைக் குற்றத்தை மறுத்தார் என்று கூறினார்.
நான் இது பற்றி அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி மொழிப்பெயர்ப்பில் உள்ள சிக்கல்கள் பற்றி அவர்களிடம் விவரித்தேன். அதற்கு அவர்கள் அப்படி அவர் அநீதி இழைக்கப்பட வாய்ப்பில்லை, ஏனெனில் மருத்துவ அறிக்கை அவர் கழுத்தை நசுக்கி கொலை செய்துள்ளதை உறுதி செய்துள்ளது என்று பதில் கூறினார்கள்.
எனினும் நான் அவர்களிடம் எனக்கு இது பற்றிய முழு தகவல்களும் கிடைக்க உதவி செய்யுங்கள் என்று வேண்டிக் கொண்ட போது, இன்ஷா அல்லாஹ் உதவுகிறோம் என்று கூறினார்கள். அதற்கான சந்தர்ப்பம் அமைந்தால் இன்ஷா அல்லாஹ் அதனை வெளி உலகுக்கு கொண்டு வருவேன். இங்கு விமர்சிக்கப் படுவது அல்லாஹ்வின் மார்க்கம், அல்லாஹ்வின் சட்டம் என்பதாலேயே இதற்கு முயற்சி செய்கிறேன். வேறு எந்த நோக்கமும் எனக்கு இல்லை.
உங்கள் மகள் ரிசானா அநியாயாமாக கொள்ளப் பட்டிருந்தால், தெரிந்து கொண்டே அவருக்கு அநியாயம் செய்தோரை இறைவன் தண்டிக்காமல் விடமாட்டான். மறுமையில் இதற்கு பதிலாக அநியாயம் செய்தோரின் நன்மைகளை எடுத்து இவரின் நன்மைகளில் சேர்க்கப்படவோ, அவர்களுக்கு போதியளவு நன்மைகள் இல்லாத சந்தர்ப்பத்தில் இவரின் தீமைகளை அவர்களின் மீது சுமத்தப்படவோ வாய்ப்புள்ளது. மேலும் இவருக்கு நிறைய வெகுமதிகளையும், சுவன பாக்கியத்தையும் இறைவன் வழங்குவான். அதே நேரம் இவர் தவறிளைத்திருந்தால் அந்த தவறு இத்தண்டனை மூலம் மன்னிக்கப்பட்டுவிடும் இன்ஷா அல்லாஹ். இறைவன் அல் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளான்.
وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ ۚ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ
மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான். 14:42
உயிரிழந்த அக்குழந்தையின் பெற்றோர் மன்னிக்கவில்லை என்பதற்காக அவர்களை விமர்சிப்பதற்கு எமக்கு எந்த உரிமையும் இல்லை. மன்னிப்பதற்கும், மன்னிக்காமல் இருப்பதற்கும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு.
மன்னித்திருந்தால் நிறைய நன்மைகளை அடைந்திருப்பார்கள் என்பதையும் இஸ்லாம் தெளிவுபடுத்த தவறவில்லை.
وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِّثْلُهَا ۖ فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ ۚ إِنَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ
இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது – நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.
42:40
அவர்கள் இக்குழந்தையை எவ்வளவு சிரமத்துடம் பெற்றெடுத்திருப்பார்கள் என்பது அவர்களுக்கே தெரியும். மேலும் அவர்கள் உங்கள் மகள் தான் இக்கொலையை செய்திருப்பாள் என்று உறுதியாகவே நம்பாமல் இப்படியான ஒரு நடவடிக்கைக்கு முன் வந்திருக்க முடியாது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் உங்கள் மகள் அந்த நேரம் சண்டைப் பிடித்துக் கொண்டு கோவத்துடன் இருந்தார் என்பதே. எது எப்படியோ மருத்துவ அறிக்கையும் அதனை உறுதி செய்து விட்டதாக கூறுகிறார்கள். இந்த உலகை படைத்து பரிபாலிக்கும் இறைவன் யாவற்றையும் நன்கு அறிந்தவன், மிகவும் ஞானமுள்ளவன். அவனுக்குத் தான் தெரியம் எதில் மக்களுக்கு நலவு இருக்கிறது, எதில் தீமை இருக்கிறது என்று. இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:
وَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ ۖ وَعَسَىٰ أَن تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ ۗ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். 2:216
உங்கள் மகள் உலகமறிய இவ்வாறு மரணத்தை சந்தித்ததன் மூலம் என்னென்ன மாற்றங்கள், நலவுகள் ஏற்பட போகிறதோ என்பதை இறைவன் மாத்திரமே அறிவான். உங்கள் மகள் ரிசானா விடுதலையாகி வந்திருந்தாலும் என்றோ ஒரு நாள் மரணமடைந்தே இருப்பார். ஆனால் அதனை யாரும் கண்டு கொண்டிருக்க மாட்டார்கள். எனினும் இப்போது முழு உலக முஸ்லிம்களும் அவருக்காக இருகரமேந்தி துஆ செய்கின்றார்கள். இது அவருக்குக் கிடைத்த பாக்கியமல்லவா?
பொதுவாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வரும் பணிப்பெண்கள் உள ரீதியாக, உடல் ரீதியாக மற்றும் பாலியல் ரீதியாக துன்பங்களுக்கு ஆளாகுவது உண்மையே. எனவே இந்த நிகழ்வின் மூலம் பாடம் கற்று பெற்றோர்கள், கணவன்மார்கள் உட்பட அனைவரும் தமது பொறுப்பிலுள்ள பெண்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
எந்நிலையிலும் இறைவனின் விதியை மீறி உங்கள் மகள் ரிசானாவின் மரணம் இடம்பெற்றிருக்க முடியாது. இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:
ۗ قُل لَّوْ كُنتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَىٰ مَضَاجِعِهِمْ
“நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும், யாருக்கு மரணம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் (தன் கொலைக்களங்களுக்கு) மரணம் அடையும் இடங்களுக்குச் சென்றே இருப்பார்கள்!” என்று (நபியே!) நீர் கூறும்.
(3:154)
இறைவன் ஒரு மனிதனுடைய மரணத்தை குறித்ததொரு பூமியில் வைத்து பிரிப்பதாக விதித்திருந்தால், அந்த இடத்திற்கு செல்வதற்கான தேவையை ஏற்படுத்துவான் என இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் நேரான வழியை காட்டுவானாக, உங்கள் பொறுமைக்கு நற்கூலி வழங்குவானாக, உங்கள் மகள் ரிஸானாவின் பாவங்களை மன்னித்து அவருக்கு சுவன பாக்கியத்தைத் தந்தருள்வானாக…
இப்படிக்கு
A J M மக்தூம்
முகநூல் வழியாக
--
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
Thanks to: adirainirubar.blogspot.com

No comments:
Post a Comment