உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, August 29, 2012

இமாம் ஷாஃபி பள்ளியின் ஆரம்ப நிறுவனர்களில் ஒருவரான கா.மு. குழந்தை சேக்காதி அவர்கள் வஃபாத்தானர்கள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

நமதூர் இமாம் ஷாஃபி பள்ளியின் ஆரம்ப நிறுவனர்களில் ஒருவரான கா.மு. குழந்தை சேக்காதி அவர்கள் இன்று பகல் 12.15 மணியளவில் திருச்சி கிரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் வஃபாத்தானர்கள். அன்னாரின் ஜனாஸா ஜூம்ஆ பள்ளி மையவாடியில் இன்று இரவு 9 மணியளவில் இஷா தொழுகைக்குப்பின் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ 
"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

அன்னாரை பற்றிய சில நினைவுகள்:

சிலர் பாரம்பரியத்தால் சிறப்பிடம் பெறுவதுண்டு ஆனால், பாரம்பரியமிக்க ம.மீ.செ. குடும்பக்கிளையில் தோன்றியிருந்தாலும் தன்னுடைய கல்விப்பணி, அமைதியான ஆளுமைகுணம், அல்லாஹ்வின் பள்ளிகளுக்காக உழைத்தல் என தனிச்சிறப்பியல்புகளால் மக்கள் மனதில் மேலும் நிறைந்திருந்தார்கள். குறிப்பாக...

1. இமாம் ஷாஃபி எனும் இன்றைய ஆலமரம் தழைக்க வித்திட்ட நிறுவனர்களில் ஒருவர்.

2. பட்டுக்கோட்டையில் முதன்முதலாக டுட்டோரியல் கல்வியகத்தை ஆரம்பித்து நடத்தியவர்.

3. மேலத்தெருவில் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளி அமைய காரணியாக இருந்தவர்களில் ஒருவர், மேலும் அப்பள்ளி உருவாக அமீரகத்தில் தலைமையேற்று பொருளாதராத்தை திரட்டி வழங்கியவர்.

4. சமீபத்தில் சிறிது காலம் அப்பள்ளியின் நிர்வாகிகளில் ஒருவராக பங்காற்றியவர்.

5. மேலத்தெரு ஜூம்ஆ பள்ளி கட்டுமானத்தின் போதும் அதற்காக தன் நேரத்தை ஒதுக்கி நன்கொடைகள் பெற்றுத் தந்தவர்.

6. அன்னாருடைய சகோதரரும் மேலத்தெரு ஜூம்ஆ பள்ளியின் நிர்வாகியாக இருந்துள்ளார்கள்.

7. இதற்கெல்லாம் மேல் தன்னுடைய அமைதி சுபாவத்தால் அனைவரின் உள்ளங்களை வென்றவர் என இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

குழந்தை சேக்காதி அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல நாடுவோர் அபுதாபியில் வசிக்கும் அன்னாருடைய மூத்த மருமகன் பஷீர் அஹமது அவர்களை 055-143963 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

யா அல்லாஹ் சகோதரர் குழந்தை சேக்காதி மறுமையில் வெற்றி பெற, மஃஷரில் உன்னால் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில் சுவர்க்கதிற்குரிய நல்லடியார்களில் ஒருவராக எழுப்புவாயாக! யா அல்லாஹ் நரகிலிருந்தும் பாதுகாப்பளிப்பாயாக. யா அல்லாஹ் ரஸூல் (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் எனும் பாக்கியத்தை அன்னாரின் மீது அருள்வாயாக.

தகவல்

குழந்தை சேக்காதி அவர்களால் அதிரை கிட்டங்கி தெருவில் ஆரம்பிக்கப்பட்ட இமாம் ஷாஃபி பள்ளியின் ஆரம்ப வருட மாணவனாக பயின்ற, பயன்பெற்ற நன்றியுடன்....

அதிரைஅமீன்

No comments:

Post a Comment