உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, May 5, 2012

சாதிவாரி கணக்கெடுப்பில் நமது கடமை: ADT ’ன் விழிப்புணர்வு அறிவிப்பு!

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்!

சாதிவாரி கணக்கெடுப்பில் நமது கடமை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நம் நாடு விடுதலை அடைவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர் 1931இல் ஆங்கிலேய ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு முறையாக நடத்தப்பட்டதற்குப் பின்னர் - அதாவது 81 ஆண்டுகளுக்குப் பின்னர் - இந்த 2012ஆம் ஆண்டின் ஏப்ரல் 23 முதல் நம் நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு முறையாகத் தொடங்கியுள்ளது. விரைவில் நமதூருக்கும் கணக்கெடுப்பதற்கு அதிகாரிகள் வரவிருக்கின்றனர்.

முஸ்லிம்களின் இறைவேதமான அல்குர் ஆனின் (21:91; 23:52; 49:13) வசனங்களின் தீர்ப்புப்படி இஸ்லாத்தில் சாதிகள் என்பதே இல்லை. ஆனால்,  அப்போது நம் நாட்டை ஆண்ட ஆங்கிலேயராலும் இப்போது ஆளும் வர்க்கத்தினராலும் எல்லா மதங்களிலும் உள்ளதுபோல் இஸ்லாத்திலும் சாதிப் பிரிவுகள் திணிக்கப்பட்டு அவற்றின் அடிப்படியில்தான் கல்வி, உயர்கல்விக்கான உதவித்தொகை, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு,  போன்ற அரசின் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

அரசாங்கத்தின் பதிவுகளின்படி அரசின் சலுகைகள் பெறத்தக்க முஸ்லிம்களை
1. லெப்பை
2. ராவுத்தர்
3. மரைக்காயர்
4. ஷேக்
5. ஸையது
6. அன்ஸார்
7. மாப்பிள்ளா
8. தூதுகோலா
9. தக்னி

ஆகிய சாதிப் பிரிவுகளாகப் பிரித்து வைத்திருக்கின்றனர்.

சாதிவாரி கணக்கெடுப்புக்கு அரசு அதிகாரிகள் வந்து விசாரிக்கும்போது நாம் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள்:

* உள்ளூரிலும் வெளியூரிலும் வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் ஒருவர் விடாமல் அனைவரது பெயர், பாலினம், வயது, கல்வித் தகுதி ஆகிய விபரங்களைத் தெளிவாகத் தரவேண்டும்.

* அதிகாரிகளுக்கு முஸ்லிம் பெயர்களை எழுதிக்கொள்வதற்கு சிரமம் ஏற்படவும் பெயர்களைப் பிழையாகப் பதிவதற்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் அனைத்து விபரங்களையும் நாமே எழுதிக் கொடுத்து அதிகாரிகளுக்கு ஒத்துழைப்புத் தரவேண்டும்.

* மதம் எனும் இடத்தில் "இஸ்லாம்" என்று குறிப்பிடவேண்டும்.

* மேற்காணும் 9 பிரிவுகளுள் நமதூரில் பெருவாரியாக வாழும் 1,2,3 பட்டியலுக்குரிய லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் ஆகியவற்றுள் சரியான ஒன்றை "சாதி" எனும் இடத்தில் குறிப்பிடவேண்டும்.

* நம் மக்களின் கல்வித் தரம், பொருளாதாரம் போன்ற கூடுதல்  தகவல்களையும் அதிகாரிகள் கேட்டால், பெருமைக்காக உண்மைக்கு மாற்றமான தகவல்கள் தரமால் சரியான, உண்மையான தகவல்கள் தரவேண்டும். அரசின் எதிர்கால நலத் திட்டங்கள் நாம் தருகின்ற சரியான தகவல்களின் அடிப்படியில்தான் அமைந்திருக்கும் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

இதுவரை தோராயமாகக் கூறப்பட்டுக்கொண்டிருக்கும் இந்திய முஸ்லிம்களின் சதவீதமும் தமிழக முஸ்லிம்களின் சதவீதமும் இந்தக் கணக்கெடுப்பில் துல்லியமாகத் தெரியவரவிருக்கின்றது. எனவே, அந்தந்த வார்டு உறுப்பினர்கள், படித்த இளைஞர்கள் ஆகியோர் சிறு குழுவாக அதிகாரிகளோடு சென்று அவர்களுக்கு ஒத்தாசையாக நடந்துகொண்டால் கணக்கெடுப்பு விரைவாகவும் எளிதாகவும் துல்லியமாகவும் அமையும் என்பதை ஆலோசனையாகவும் வேண்டுகோளாகவும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கணக்கெடுப்பில் உதவிகள் தேவைப்படுவோர் அணுக வேண்டிய முகவரி: அதிரை தாருத் தவ்ஹீத், கடைத்தெரு, அதிராம்பட்டினம். மொபைல் : 9750569972, 9442038961

மனிதர்களே! நாமே உங்களை ஓர் ஆணிலிருந்து ஒரு பெண்ணிலிருந்தும் படைத்து, (பல) கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கியிருக்கிறோம் நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்வதற்காக! அல்லாஹ்வை அஞ்சி வாழ்வோர்தாம் அவனிடம் கண்ணியம் பெற்றவர். திண்ணமாக அல்லாஹ் பேரறிவாளன்; நுட்பமானவன் (அல் குர்ஆன் 49:13).

அதிரை தாருத் தவ்ஹீத், (ADT)
டைத்தெரு, அதிராம்பட்டினம்.

No comments:

Post a Comment