உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, February 3, 2012

மர்ஹூம் அபுல்ஹசன் அவர்கள் சுன்னத்தான முறையில் நல்லடக்கம்


நமதூரின் தவ்ஹீத் சொந்தமான அபுல்ஹசன் காக்கா அவர்கள் நேற்று மாலை வஃபாத்தானர்கள், இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜியூன். அன்னாரின் ஜனாஸா இன்று (04.02.2012) காலை 10 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் சுன்னத்தான முறையில், நல்லடக்கம் செய்யப்பட்டது.

அனைத்து விதமான பித்அத்களும் (நூதன அனுஷ்டானங்கள், வழிகேடுகள்) ஜனாஸா நல்லடக்கத்தின் போது தவிர்ந்து கொள்ளப்பட்டன. மௌலவி. யூசுப் அவர்கள் தொழுகை நடத்தி ஜனாஸா குறித்து சிற்றுரை வழங்கினார்கள். குழுமியிருந்த மக்களில் பெரும்பாலோருக்கு இந்த நல்லடக்கம் ஒரு புதிய அனுபவமாய், இஸ்லாம் கூறும் நல்லடக்கத்தை கற்றுத் தரும் களமாய் அமைந்தது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் ஏற்பாடே, புகழனைத்தும் அல்லாஹ்விற்கே.

இறுதி வரை தன் வாழ்க்கையை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அமைத்துக் கொண்ட மர்ஹூம் அபுல்ஹசன் காக்கா அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படவும், மறுமையில் வெற்றி பெறவும் அனைவரும் பிரார்த்திக்க வேண்டுகிறோம்.

குறிப்பு : சிதறுண்டு போயிருந்த அதிரை தவ்ஹீத் சகோதரர்களை மீண்டும் அதிரை தாருத் தவ்ஹீத் டிரஸ்ட் என்ற குடையில் கொண்டு வர அரும்பாடுபட்ட சகோதரர்களில் மர்ஹீம் அபுல்ஹசன் காக்கா அவர்களும் ஒருவர்.

ALMS பள்ளியில் நடைபெற்று வரும் அதிரை ஜூம்ஆ கமிட்டியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர்.

தான் நடத்திய EPMS பள்ளியில் பயிலும் மாணவமணிகளை அடிப்படை வகுப்புக்களிலிருந்தே தவ்ஹீத் சிந்தனையில் வார்த்தெடுக்கும் அரும்பணியையும் செவ்வனே செய்து வந்தார்கள்,

அவர்கள் விட்டுச் சென்றுள்ள அரிய பணிகளை நாம் அவர்களின் குடும்பத்தாருடன் இணைந்து முன்னெடுத்து செல்வோமாக!

தகவல்: M. அப்துல் ரஹ்மான் (SP)

No comments:

Post a Comment