உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, February 19, 2011

அதிரையில் நடைபெற்ற மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையால் 18.02.2011 வெள்ளிக்கிழமை மாலை தக்வா பள்ளி அருகே அதிரை இஸ்லாமிக் மிஷன் சார்பாக மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில், அதிரை ஜூம்ஆவிற்காக வருகை தந்திருந்த மவ்லவி. மீரான் முஹைதீன் ஸலாஹி அவர்கள் கலந்து கொண்டு 'கலாச்சார சீரழிவுகள் - ஒர் ஆய்வு' என்ற தலைப்பில் உரை நிகழ்த்த, தொடர்ந்து பேசிய சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் 'மனிதனுக்குத் தேவை மறுமைச் சிந்தனை' என்ற தலைப்பின் கீழ் எழுச்சிமிகு பேருரையாற்றினார்கள்.

குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் பேருரைகள் நிகழ்த்தபட்டபோது பொதுமக்கள் அனைவரும் எத்தகைய வீண் அசைவுகளுமின்றி, நிகழ்ச்சியின் இறுதிவரை கலையாமல்,உரையோடு ஒன்றியிருந்தனர் மேலும் நடுத்தெரு மற்றும் கீழத்தெரு பகுதிகளில் பெண்கள் தங்களின் வீட்டுவாசல்களில் அமர்ந்தும் சொற்பொழிவுகளை செவிமடுத்தனர். ஆண்கள் மேடை முன்பு அமர்ந்தும், இருக்கைகள் போதாமல் சூழ நின்றவர்கள் போக ஏராளமான சகோதரர்கள் தக்வா பள்ளியினுள்ளும் தஞ்சமடைந்திருந்தனர்.

முன்னதாக, AIM பொருளாளர் சகோதரர் அப்துல் காதர் அவர்கள் வரவேற்புரையாற்ற, அதிரை அன்வர் BA அவர்கள் தலைமையுரையாற்றினார்கள் இறுதியாக சகோதரர் (சாந்தா) சாகுல் அவர்கள் நன்றி நவிழ துஆவுடன் இனிதே நிறைவடைந்தது.

கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் மீட்டெடுக்கப்பட்டு, தற்போது எத்தகைய அமைப்பிற்குள்ளும் அடகுவைக்கப்படாமல் குர்ஆன் ஹதீஸை மட்டுமே ஆதாரமாக ஏற்று செயல்பட்டு வரும் அதிரை இஸ்லாமிக் மிஷன் இயக்க பேதங்களை துடைத்து தூர எரிந்துவிட்டு இன்ஷா அல்லாஹ் இதுபோன்ற சிறந்த தாயிக்களை கொண்டு தொடர் பிரச்சாரங்களை தன் சக்திக்கேற்ப செய்திட உறுதியேற்கின்றது.

குறிப்பு:
1. . இந்த பொதுக்கூட்டம் வெற்றியடைய எங்களோடு தோளோடு தோள் நின்ற ஏகத்துவ சகோதரர்கள் மற்றும் அனைத்து இயக்கத்தினருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
2. இன்ஷா அல்லாஹ் பொதுக்கூட்ட வீடியோ பதிவுகள் நம் வலைப்பூவில் விரைவில் உங்கள் பார்வைக்கு.


தகவல்
அதிரையிலிருந்து
M. அப்துல் ரஹ்மான் (SP)

3 comments:

  1. அறிஞர் அயூப் அவர்கள் மறுமையை பற்றி பேசியபோது என்னோட அழுகையை மறைக்க திரும்பினால் பின்னால் இரண்டு பெரியவர்கள் கலங்கி கொண்டிருந்தார்கள் இந்த மாதிரி பயான்கள் நம்ம ஊருக்கு இன்னும் நெறைய தேவை - சைபுதீன்

    ReplyDelete
  2. நூர் முகமது எழுதியது
    நான் ஒரு அமைப்பில் உள்ளேன் என்றாலும் உங்களுடைய கூட்டத்தில் கலந்து கொண்டேன் யாரையும் ஏசாமல் தலைப்பை பற்றி பேசிய பேச்சும் பேசியவர்களும் அனைவரின் சிந்தனையையும் மறுமையை பற்றி சிந்திக்கவைத்தது. யா அல்லாஹ் எங்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டுவாயாக!

    ReplyDelete
  3. 'நன்மைக்கும் இறையச்சத்திற்கும் உதவுங்கள்' என்ற இறைவாக்கின் அடிப்படையில், பிற அமைப்பினர் யாரையும் சாடாமல், சர்ச்சைக்குரியவற்றின் பக்கம் போகாமல், மறுமை நம்பிக்கையை மட்டுமே கருத்தாய்க் கொண்டு அமைந்த முத்திரைப் பேச்சு! இது போன்ற நல்லுபதேசங்கள்தாம், மறுமையை மறந்த மக்களுக்குத் தேவை.

    ReplyDelete