உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, October 20, 2011

உள்ளாட்சி சூறாவளி துபையில் கரை கடந்தது

அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் ?  என்று சொல்வார்கள் அதேபோலதான், துபைக்கும் தேர்தலுக்கும் உள்ள சம்பந்தம், இது எல்லோருக்கும் தெரியும். ஒருவேளை துபை அரசாங்கமே தேர்தல் நடத்த முன் வந்தாலும் வெளிநாட்டுக்காரன் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும். கடந்த சில தினங்களாக தேரா துபையில் தேர்தல் பிரச்சார அனல் பறந்தது என்றால் நம்புகிறீர்களா ஆனால் அதுதான் உண்மை.

நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலையொட்டித் தான் இவ்வளவு கூத்தும். ஒரு பக்கம் துபையில் வசிக்கும் வலைத் தோழர்கள் வரிந்து கட்டிக் கொண்டு பக்கம் பக்கமாய் பரப்புரை எழுதித் தள்ள, இன்னொரு பக்கம் கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்தமே நடந்து முடிந்தது. அதாங்க, மைக் இல்லை ஆட்டோ இல்லை பேரணி இல்லை போஸ்டர் இல்லை ஆனாலும் தங்களுக்கு வேண்டிய வேட்பாளருக்கு தேவையான பிரச்சாரம் மட்டும் கண ஜோராக நடந்து முடிந்தது.

குறிப்பாக, நம் அதிரை சகோதரர்களின் பிரச்சாரம் கொடி கட்டி பறந்ததென்றே சொல்லலாம். ரூம் ரூமாக ஏறியும், வழிகளில் சந்திக்கும் போதும் மறந்து விடாமல் வீட்ல சொல்லி ஓட்டுப்போட சொல்லச் சொன்ன பாங்கு, எஸ்.எம்.எஸ் பிரச்சாரம், ஈமெயில் வேண்டுகோள்கள் என சூழல, இன்னொரு பக்கம் அதிரை வாக்காளர்களின் வீடுகளுக்கே போன் செய்து குடும்ப ஓட்டுக்களை திரட்டி விதம் அப்பப்பா... தேர்தல் என்னவோ துபையில் நடக்கிறதோ என்ற எண்ண அலைகளை எழுப்பின.

வேட்பாளர்களே! நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வெற்றியோ தோல்வியோ ஆனால் நீங்கள் வாங்கியுள்ள வாக்குகளுக்கு பின் உங்கள் துபை வாழ் சகோதரர்களின் கடும் உழைப்பும் இருக்கின்றது என்பதை மறவாதீர்கள்.

ஊர் ஒற்றுமையில் ஆரம்பித்து பிறகு தெரு ஒற்றுமைக்கு இறங்கி பின் சங்கத்துக்காக பிரச்சாரமும் கடைசியாக சிந்தித்து வாக்களிக்க வேண்டிய சுவராஸ்யங்களும் இன்னும் மனதை விட்டு அகலவில்லை. மொத்தத்தில் உள்ளாட்சி தேர்தல் உள்ளூரை மட்டுமல்ல துபை மாநகரையும் ஒரு மவுனப்புரட்சிக்குள் ஆழ்த்திவிட்டே முடிந்துள்ளது.

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் தந்து கொண்டுள்ள அதிரை வலைத்தளங்களுக்கு ஒரு சல்யூட்.

சகோதரன்
அன்வர்தீன்

புனிதமிக்க பதிமூன்று நாட்கள்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!

கண்ணியமிக்க சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இறைவன் படைத்த நாட்கள் யாவும் சிறப்புக்குரியவையாகும். அவற்றுள் அடியார்கள் வணக்கங்கள் புரிந்து அதன்மூலம் மாண்பைப்பெற சில நாட்களை இறைவன் சிறப்பித்துள்ளான். ஏனைய சமுதாய மக்களின் வாழ்நட்களை ஒப்பிடும்போது நமது ஆயுள் மிகவும் குறைவானதாகும். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :-
'எனது சமுதாய மக்களின் ஆயுட்காலம் அறுபது முதல் எழுபது வயது வரையாகும்' (திர்மிதி, இப்னு மாஜா)

இந்த மணிவாசகம் மிகவும் சிந்திக்கத்தக்கதாகும். எனவே குறைந்த ஆயுளில் நிறைந்த ஆயுளின் மாண்பைப்பெற, முஹம்மது நபி(ஸல்) அவர்களின் சமுதாய மக்களுக்கு இறைவன் புரிந்துள்ள மாபெரும் அருட்கொடைகளே சிறப்புக்குரிய சில நாட்கள்! அத்தகைய நாட்களில் தலையாயது ரமளானின் லைலத்துல் கத்ரு எனும் இரவு. இது ஆயிரம் மாதங்கள் வணக்கம் புரிவதை விட சிறந்தது என்று அல்குர்ஆனில் சூரா கத்ர் மூலம் அல்லாஹ் தெளிவுப்படுத்தியுள்ளான்.

அந்த வரிசையில், வல்ல அல்லாஹ்வின் திருப்பொருத்தங்களை பெற்றுத்தரவல்ல புனிதமிக்க நாட்களே துல்ஹஜ் மாதத்தின் முதல் 13 நாட்களாகும். ஹஜ்ஜுடைய கிரியைகள் அனைத்தும் இந்த 13 நாட்களினுள் அடங்கியுள்ளது. இந்நாட்களில் ஹஜ் நிய்யத்துடைய ஹாஜிகளின் ஒவ்வொரு செயலும் வணக்கங்களாகும். அவர்களுக்கு மட்டுமல்லாது ஹஜ்ஜுக்கு செல்லாத ஏனைய இஸ்லாமிய பெருமக்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வல்ல அல்லாஹ்வால் சிறப்பித்துக் கூறப்பட்ட இந்நாட்களில் செய்ய வேண்டிய நல் அமல்களை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நமக்கு செயல்படுத்திக் காட்டியுள்ளார்கள். இந்நாட்கள் துல்ஹஜ் மாதத்தின் தலைப்பிறையிலிருந்து ஆரம்பமாகின்றது.
துல்ஹஜ் முதல் பத்து நாட்கள்
 முதலில், 'அய்யாமு அஷ்ரு தில்ஹிஜ்ஜா' (துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள்) மிகவும் முக்கியமான நாட்களாகும். அல்லாஹ் வான்மறை அல்குர்ஆனில்...

Tuesday, October 18, 2011

அதிரைவாசிகள் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் !

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். ( ஸூரத்துன்னிஸா 4:59)

நமது நாட்டின் மத்திய-மாநில அரசுகள் செயல்படுத்த நினைக்கும் மக்கள் நலத் திட்டங்களை மாவட்ட நிர்வாகம், நகர பஞ்சாயத்(பேரூராட்சி) நிர்வகம் வழியாகவே நிறைவேற்றி வருகின்றன. அதன்படி தமிழகத்தில் உள்ள 561 பேரூராட்சிகளில் - நமதூர் அதிராம்பட்டிணம் 21 வார்டுகளை கொண்ட ஒரு பேரூராட்சியாகும்.

Monday, October 17, 2011

விரலிலே மை! மனசுல வை!! – அதிரை வாக்காளர்களுக்கு AIM ன் அன்பான வேண்டுகோள்

அன்பார்ந்த அதிரை வாக்காள பெருமக்களே, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இது தேர்தல் பரப்புரையல்ல! மாறாக, உங்கள் விரல்களில் மை படுமுன் மனதில் இறுதியாக உறுதியாக தீர்மானிக்க கோரும் ஒரு வேண்டுதல் மட்டுமே.

இன்றுடன் பிரச்சாரங்கள், பேரணிகள் ஓய்ந்துவிட்டன. நாளைய தினம் உங்கள் சிந்தனைக்கான தினம், ஆம் நமது வார்டுகளை, நமது ஊரை குறித்து உங்களின் பொன்னான வாக்குகள் மண்ணாகி போய்விடாமல் சிந்திக்க வேண்டிய முக்கிய தருணம் என்பதை மறவாதீர்.

Sunday, October 16, 2011

தனிப்பட்ட ஓரு அதிரை வாக்காளனின் மனநிலை

இதோ நம்ம ஊர் தலை எழுத்த நிர்ணயிக்க க்யூ இன்னும் கொஞ்ச நேரத்தில ஆரம்பிச்சிடும். இப்போ ரெண்டு பன்னிரண்டா பெருகி  வருகிற 21ந்தேதி வரை கனவு காண வச்சுடுச்சி.

 கட்டப் பஞ்சாயத்து, தாலி அறுக்குறது, பிடிக்காதவன போலிஸ்ட்ட போட்டுக் கொடுக்குறது பின்னால அவங்களே நல்லவேன் மாதிரி போய் வெளியே கூட்டிக்கிட்டு வர்றது, லேட்டஸ்டா குடும்ப பொம்பளைகள புடிச்சி லாக்கப்புல வக்கிறதுன்னு காலத்த ஓட்டிக்கிட்டு இருந்த ஒரு சில சங்கத்தை (எல்லா சங்கமும் அல்ல) சேர்ந்த ஓரு சில பேர், சங்கத்து வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கன்னு புதுப்படம் ஓட்டுறாங்க! நீதி சொல்ற சங்கமா இருந்தா கேக்கலாந்தான் ஆனா இருப்பவனுக்கு ஒரு மாதிரியும் இல்லாதவனுக்கு ஒரு மாதிரியும் பேசுறவங்க ஓட்டப்பத்தி பேச யோக்கியம் இருக்கா?

இந்த தேர்தல் நம்ம ஊருக்கு, நம்ம வார்டுக்கு ஏதாவது செய்வாங்க, நல்லது செய்யாட்டியும் பரவாயில்லை கொறஞ்சது கெடுதலாவது செய்யாம இருப்பானுவோன்னு ஓட்டுப் போடுறோம் ஆனா நம்மட்ட ஓட்ட வாங்குறவன் முஸ்லீம் சனத்துக்கு தான் மொதல் எதிரியா மாறுரான்வோ, ஊர நாறப் போடுறான்வோ.

ஏற்கனவே நம்ம ஊரு பேமஸ் தெரு வெறிய பத்தி சொல்ல வேணாம் ஆனா இப்ப நிக்கிற சில பேரு அத தூண்டிவுட்டு தானுங்க இந்த எலக்சன்ல போட்டியே போடுறான்வோ, தோத்தா தெருவொட மானம் போயிடுமாம்.  எலக்சன்ல நிக்கிறது நீ,  தெரு அல்ல ஜெயிக்கவோ தோவக்கவோ போறது  நீ. இந்த மான அவமானமெல்லம் உன்ன மட்டும் தான சேரும் அப்புறம் ஏன் தெருமானம்னு வெறியேத்துற, இப்பிடி சொல்லி சொல்லியே இன்னும் எத்தன வருசத்துக்கு எங்கள பிரிச்சி வைக்கப்போறீக பாவிகளா. நல்லவன் ஜெயிக்கனும் அப்பிடியே ஊரும் நல்லா இருக்கனும் நினக்கிற ஆளுங்க நாங்க. தெரு பித்து பிடிச்சி அலையிற எல்லா தெருகாரன்களும், புதுசா சங்க வெறிக்கு ஆளான எல்லாரும் திருந்தனும்.

வார்டை பொருத்தவரை நான் எந்த கச்சி, சங்கம் சொன்ன ஆளா, யாரு ஆதரிக்கிறன்னு பாக்க தயாரில்லைங்க இவன் இதுக்கு முன்னாடி என்ன செஞ்சான்னு பாத்து தாங்க நான் ஒட்டுப் போடலாம்னு இருக்கேன்.

ஊர பொருத்தவர அரசியல் கட்சியின் சார்பாக நிக்கிற யாரும் யோக்கியன் இல்லீங்க எச்சிக் கையாலா காக்கா விரட்டாதவனெல்லாம் இன்னைக்கி காச நம்பி நிக்கிறானுவோ அள்ளி எரைக்கிறனுவ, அதே மாதிரி சுயேச்சையா, சில்லற கச்சி சார்பா நிக்கிறவனெல்லாம் ஓட்ட தாங்க பிரிப்பானுவோ அதனால என் பார்வைக்கு நல்லவன தெரியற,   பஸ்ஸூ சின்னத்து காரணுக்கு தான் நான் ஓட்டுப் போட போறேன்.  இவரை நல்லவனா மட்டும் தான் நான் பாத்திருக்கேன் அவரு வல்லவான மாறனும்னு எந்த தெருவெறியும், சின்னப்புள்ள புத்தியும் இல்லாம சொல்றனுங்க. ஒருவேள ஜெயிச்ச அவரு கச்சி, இயக்க சார்பில்லாமலும் கே.கே.ஹாஜா பேச்ச கேக்காமலும் சுயபுத்தியோட நடந்துக்கிறனும் கேட்டுக்கிறேங்க.

சங்கம் சொன்ன சரியாத்தான் இருக்கும்கிறது முழு ஊருக்கும் சரியா வராது, நீங்களும் தனித்தனிய சிந்திங்க, உங்களுக்கும் நல்லவேன்னு தெரியற ஆளுக்கு ஓட்டப் போட்டுட்டு வாங்க! தயவு செஞ்சு தலைவன் பதவிக்கு நிக்கிற அரசியல் கட்சிகார ஆட்களுக்கு மட்டும் ஓட்டுப் போடாதியன்னு உங்களில் ஒருவனா சொல்லிக்கிறேன்.

எம். ஜாஹீர் ஹீசைன்
மேலத்தெரு
அதிராம்பட்டினம்

உள்ளாட்சி தேர்தலும்,சுட்டி குழந்தைகளின் இறை நம்பிக்கை துஆவும்‏


பிஸ்மில்லாஹ் ஹிர்ரகுமான் நிர்ரஹீம் ...

அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலாஸய்யதினா முஹம்மதி வ் வ அலா ஆலிஹி வசஹ்பிஹி அஜ்மயீன்.

யா அல்லாஹ் எங்களின் பாவங்களை மன்னிப்பாயாக ..!

யா அல்லாஹ் எங்களின் பெற்றோர்களின் பாவங்களை மன்னிப்பாயாக ..!

யா அல்லாஹ் உலகில் உள்ள முஃமீன்களின் பாவங்களை மன்னிப்பாயாக ..!

யா அல்லாஹ் எங்களை முஃமீன்களாக   உண்மையான முஃமீன்களாக வாழக்௬டியவர்கலாக்குவயாக..!

யா அல்லாஹ் எங்களின் பாவங்களின் காரணமாக எங்களை சோதித்து விடாதே உன்னின் சோதனையை  எங்களால் தங்க இயலாதவர்களாய் உள்ளோம் ரப்பே ..!

யா அல்லாஹ் முஃமீன்களுக்கு மத்தியில் ஒற்றுயைமை ஏற்படுத்து வாயாக ..!

யா அல்லாஹ் குறிப்பாக எங்களின் ஊர்களுக்கு மத்தியில் ஒற்றுமையை நிலைக்க செய்வாயாக ..!

யா அல்லாஹ் நாங்கள் எதையும் அறியாதவர்களாக சிறியவர்களாக இருக்கின்றோம் எங்களுக்கு (ஓட்டு  போட) வாய்ப்பும் இல்லை. எங்களுக்கு தெரிந்தது உன்னிடத்தில் முறையிடுவதுதான் ரப்பே ..!
  
யா அல்லாஹ் நாங்கள் பார்க்கின்றோம் ஊர் மக்கள் இன்று  பல பிரிவுகளாக சிதறி கிடக்கின்றார்கள்,ஒவ்வொருவரும் கட்சி என்றும்,இயக்கங்கள் என்றும் பல பிரிவினையாக பிரிந்து கிடக்கின்றார்கள், அவர்கள் ௬ட்டத்தில் எங்களை சேர்த்து விடாதே ரப்பே ..!

யா அல்லாஹ் வழிகெட்ட,இன்னும் வழி கெடுக்க௬டிய ௬ட்டத்தில் எங்களை ஆக்கி விடாதே ரப்பே ..!  

யா அல்லாஹ் உன்னை பயப்படாத, எங்கள் மீது இறக்கம் கொள்ளாத நபரை எங்களின் மீதும்  ஊர் மீது (தலைவராக) சாட்டி விடாதே ரப்பே ..! 

யா அல்லாஹ் எங்களின் தலைவர் நபி (ஸல்) அவர்கள் ௬றியதை போல்  "செயிதுள் கவ்மி காதிமுஹா " மக்களின் தலைவர் மக்களுக்கு வேலை செய்ய ௬டியவர் என்று ௬றினார்களே அப்படி பட்ட தலைவரை எங்களுக்கு தந்தருள்வாயாக ..!

"ஸல்லல்லாஹ்  அலா ஸய்யதினா முஹம்மதிவ் வ அலா ஆலிஹி வாஸஹ்பிஹி அஜ்மயீன்..! (ஆமீன்) 

சுப்ஹான ரப்பிக்க ரப்பில் இஜ்ஜதி அம்மா யசிபூன் வஸலாமுன் அலல் முர்ஸலீன்  வால் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமின் . 

ஆக்கம் :சிராஜுதீன் -
பதிப்பு - அதிரைFACT

Saturday, October 15, 2011

உங்க WEBCAM ஜாக்கிரதை . . .

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
Posted: 09 Oct 2011 09:32 AM PDT
இந்த ரகசிய கேமராக்கள் பெரும்பாலும் முகம் பார்க்கும் கண்ணாடி பின்னாடி கூட மறைத்து வைக்கப்படுகிறது ஏனென்றால் அந்த இடம் தான் யாருக்கும் அவ்வுளவு சீக்கிரமாக சந்தேகம் வராத இடம் . இது எங்கு எல்லாம் நடக்கிறது என்று பார்த்தால் முன்பு சொன்னது போல பெரிய ஷொப்பிங் மால்களில் உள்ள பாத் ரூம்களில் , முக்கியமாக பெரிய துணிக்கடைகளில் பெண்கள் உடை மாற்றி சரி பார்க்கும் அறைகள் ( Trail Rooms ), பெரிய ஹோட்டல் ரூம்களில் உள்ள கண்ணாடிகள் மற்றும் ஹோட்டல் ரூம்களில் உள்ள குளியல் அறைகளில் உள்ள பெரிய கண்ணாடிகளின் பின்னால் வைக்க சாத்தியங்கள் அதிகம் . அதனால் பெண்கள் இனிமே கண்ணாடி முன்பு நின்று கொண்டு அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். முடிந்த வரை நிர்வாணம் ஆகாமல் தவிர்க்கவும். 

          இது போன்று ஹோட்டல் அறைகளில் வைக்கப்படும் கண்ணாடிகளை நீங்கள் சினிமாக்களில் கூட பார்த்து இருக்கலாம் . "பில்லா 2007" படம் அனைவரும் பார்த்து இருக்கலாம் அதில் ஒரு காட்சி வரும் பில்லா அஜித்தை கைது செய்து மலேசியா போலீஸ்சார், விசாரிக்க ஒரு தனி அறையில் உட்கார வைத்து இருப்பார்கள் அப்போது அந்த அறைக்குள் இரண்டு போலீஸ் ஆபீஸ் மட்டும் இருப்பார்கள் அந்த அறையின் ஒரு சுவற்றில் ஒரு பெரிய கண்ணாடி இருக்கும் , அந்த கண்ணாடி அறைக்குள் இருந்து பார்க்கும் போது முகம் பார்க்கும் கண்ணாடி போல இருக்கும் ஆனால் அந்த கண்ணாடிக்கு பின்னால் இருந்து ஒரு குழு விசாரணையை கவனித்து கொண்டும், பதிவு செய்தது கொண்டும் இருக்கும். இந்த வகை கண்ணாடிகள்தான் இந்த ரகசிய கேமராக்கள் வைப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். இப்போது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் . நீங்க எந்த கவலையும் இல்லாமல் ஹோட்டல் பாத் ரூமில் ஒய்யாரமாக நிர்வாணமாக குளித்து கொண்டு இருக்கும் போது அந்த பாத் ரூமில் உள்ள பெரிய கண்ணாடிக்கு பின்னால் யாராவது சாவகாசமாக நாற்காலி போட்டு உட்கார்ந்தது ரசித்து கொண்டு கூட இருக்கலாம், கேமராவில் வீடியோவாக பதிவு செய்தது கொண்டு இருக்கலாம் ஜாக்கிரதை. 

         இந்த வகை கண்ணாடிகளுக்கு பொதுவான பெயர் Reflecting Glasses இதில் double reflecting , strong reflecting அப்படியென்று நிறைய வகை உண்டு. அதனால் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் Mirror க்கும் , Reflecting Glasses க்கும் உள்ள வித்தியாசத்தை.
சரி இந்த வகை தில்லாலங்கடி கண்ணாடிகளை எப்படி கண்டு பிடிப்பது?

Reflecting Glass -சை கண்டுபிடிக்க எளிய வழி முறைகள் :


1. ஹோட்டல் அறைகளில் அல்லது உடை மாற்றும் அறைகளில் உள்ள கண்ணாடி மேல் உங்கள் ஆள் காட்டி விரலை வையுங்க இப்போது உங்க ஆள்காட்டி விரலின் நுனிக்கும் , கண்ணாடியில் தெரியும் பிம்பம் ஆள்காட்டி விரலின் நுனிக்கும் சிறிய இடைவெளி இருக்கும் நுண்ணிப்பாக கவனிக்கவும் கண்டிப்பாக இடைவெளி சிறிய அளவில் இருக்கும் . அப்படி இருந்தால் அது முகம் பார்க்கும் சாதாரண கண்ணாடி . உங்களுக்கு சந்தேகம் என்றால் உங்க வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியில் செய்து பாருங்கள். ஆனால் இந்த Reflecting Glass வகை கண்ணாடிகளில் உங்கள் ஆள் காட்டி விரலை வைத்தால் இது போன்று உங்கள் ஆள் காட்டி விரலுக்கும் , பிம்பமாக தெரியும் ஆள்காட்டி விரலுக்கும் இடைவெளி இருக்காது.
அதனால் இது போன்று சூழ்நிலைகளில் உங்கள் கை பையில் எப்பவும் ஒரு சிறிய முகம் பார்க்கும் வைத்து கொள்ளவும் . உங்கள் சிறிய முகம் பார்க்கும் கண்ணாடியையும் , உங்கள் ஹோட்டல் அறைகளில் இருக்கும் கண்ணாடி இரண்டையும் இது போல் ஆள் காட்டி விரல் வைத்து சோதித்து பாருங்கள் உங்களால் ஒரு முடிவுக்கு வர முடியும்.

2. உங்கள் கைப்பையில் எப்பவும் ஒரு சிறிய டார்ச் லைட் வைத்து கொள்ளுங்கள் இது போன்று கண்ணாடிகளில் டார்ச் லைட் அடித்து பார்த்தல் அதில் ஒளி ஊடுருவுகிறதா என்று பாருங்க. ஒளி ஊடுருவினால் அது Reflecting Glass , இல்லை என்றால் அது முகம் பார்க்கும் கண்ணாடி.

3. இது ரொம்ப எளிய முறை , இது ரொம்ப சிம்பிள் உங்கள் முகத்தில் இரண்டு பக்கமும் குதிரைக்கு கடிவாளம் போல உங்கள் கைகளை வைத்து கொண்டு நீங்கள் சந்தேகம்ப்படும் கண்ணாடியில் முகத்தை வைத்து பார்த்தால் கண்ணாடிக்கு பின்னால் ஏதும் தெரிகிறதா என்று பாருங்கள். சூரிய ஒளியை குறைக்க கார் கண்ணாடிகளில் கருப்பு கண்ணாடிகள் பொருத்தி இருப்போம் இல்லையா அதில் நாம் சில நேரம் முகத்தை மிக அருகில் வைத்து பார்ப்போம் இல்லையா கார்க்குள் என்ன இருக்கிறதென்று அது போல கை வைத்து பாருங்கள். கண்டிப்பாக வித்தியாசத்தை பார்க்கலாம்.

சரி இது வரை பார்த்தது எல்லாம் மற்றவர்கள் நம்மை ரகசியமா படம் பிடிப்பதை பற்றி . ஆனால் இன்றைய நிலைமையில் இணையதளத்தில் பார்த்தீர்கள் என்றால் சிலர் அவர்களே சொந்தமாக எடுத்த அந்தரங்க புகைப்படமோ , வீடியோவோ அப்பட்டமாக வெளியிடப்படுகிறது. அதற்க்கு பெயர் Scandal videos அப்படின்னு நிறைய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்கள் உலாவருது இணையதளத்துல.

சில தம்பதிகள் தேனிலவுக்கு போகும் போதோ அல்லது இளம் காதல் ஜோடிகள் தனிமையில் சந்திக்கும் போதோ ஏதோ ஒரு ஆர்வத்தில் ,மன கிளர்ச்சிகாக வேண்டி அவர்களின் சொந்த மொபைல் போன் கேமராவிலோ அல்லது டிஜிட்டல் கேமராவிலோ படம் எடுக்கிறார்கள்.அப்படி படம் பிடிப்பது சரியா தவறா என்ற விவாதத்திற்கு நாம் போக வேண்டாம். அதெல்லாம் அவர்கள் சொந்த விருப்பங்கள் அதில் நான் தலை இட விரும்ப வில்லை . 

          ஆனால் சொந்த கேமராவில் எடுக்கப்படும் அந்தரங்க நிர்வாண படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருது? கண்டிப்பாக அதில் சம்பந்த பட்டவர்கள் வெளியிட்டு இருக்க மாட்டார்கள் . யாரும் அவருடைய அல்லது அவர் மனைவியுடைய அல்லது காதலியின் நிர்வாணத்தை மற்றவர்கள் பார்க்க விரும்ப மாட்டார்கள் , அவ்வுளவு ஏன் அப்படி நினைத்து கூட பார்க்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் இது எப்படி சாத்தியம் ஆகிறது ?

மேட்டர் ரொம்ப சிம்பிள் , முன்பெல்லாம் புகைப்படங்கள் பிலிம் ரோலிலும் , வீடியோக்கள் கேசட்களிலும் பதிவு செய்யப்பட்டன ஆனா இன்று நிலைமையே வேறு , எல்லாம் டிஜிட்டல் மாயம் . அதனால் நீங்க எடுக்கும் புகைபட்மோ , வீடியோவோ எல்லாம் மொபைலில் அல்லது டிஜிட்டல் கேமராவிலோ உள்ள மெமரி கார்டில் (memory card) தான் பதிவாகிறது . இந்த மெமரி கார்டு தான் நமக்கு நேரடி வில்லன்.

எதார்த்தமாக , தனிமையில் பின்னர் Delete பண்ணிவிடாலம் என்று தம்பதிகள் எடுக்கும் படங்கள் அனைத்தும் இந்த மெமரி கார்டில் தான் பதிவாகிறது. என்னதான் தம்பதிகள் கவனமாக பின்னர் தங்கள் அந்தரங்க படங்களை delete செய்தாலும் அது முழுமையாக அழிவது இல்லை . உதாரணத்துக்கு உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் delete செய்யும் File உடனே Recycle Bin யில் போய் உட்கார்ந்து கொள்ளும் அது மாதிரி இந்த மெமரி கார்டுளையும் நீங்கள் delete செய்த படங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு இருக்கும் . நீங்கள் எல்லாம் முழுமையாக delete செய்து விட்டதாக நினைத்து கொண்டு மற்ற புகைப்படங்களை பிரிண்ட் போட போட்டோ ஸ்டுடியோ வுக்கு குடுக்கும் போது அங்கே சிலர் இந்த மெமரி கார்டுயில் ஒளிந்து கொண்டு இருக்கும் படங்களை வெளியே எடுக்கிறார்கள். அதற்க்கு என்று பிரதேகமாக சாப்ட்வேர் இருக்கிறது. அதற்க்கு Recovery Software. இந்த சாப்ட்வேர் Delete ஆனா file களை திரும்ப வரவைக்கும். இது நமது கம்ப்யூட்டர் இருகின்ற மெமரியில் delete ஆனா file களை கூட திரும்ப பெற உதவும் சாப்ட்வேர் . இந்த மெமரி கார்டு யார் கையில் கிடைத்தாலும் பிரச்னை தான் . அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் நெருக்கின நண்பராக கூட இருக்கலாம் .இப்படிதான் தங்களுடைய கேமராவில் தங்கள் கைப்பட எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்தான் எடுத்தவர்களுக்கே தெரியாமல் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
சரி இதை எப்படி தவிர்க்கிறது?

டிஜிட்டல் கேமரா மற்றும் மொபில் கேமரா -கவனத்தில் கொள்ள வேண்டிய விஷியங்கள் :
1. முதலில் தங்களுடைய டிஜிட்டல் கேமராவிலோ அல்லது மொபைல் போன் கேமராவிலோ தங்களுடைய நிர்வாண படங்களை எடுப்பதை தவிர்த்து விடுங்கள் முக்கியமாக தேனிலவு தம்பதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2. ஒரு வேலை அப்படி தங்களுடைய அந்தரங்கங்களை படம் எடுக்கும் பட்சத்தில் அந்த மெமரி கார்டை கண்டிப்பாக யாரிடத்திலும் குடுக்க வேண்டாம். குறிப்பாக போட்டோ ஸ்டுடியோவுக்கு அதில் உள்ள வேற சாதாரண போட்டோவை பிரிண்ட் போட குடுக்க வேண்டாம்.

3. அந்த மெமரி கார்டில் உள்ள உங்கள் அந்தரங்க போட்டோக்களை Delete செய்தால் மட்டும் போதாது . கண்டிப்பாக மெமரி கார்டை Format செய்ய வேண்டும் அப்போதான் முழுமையாக எல்லாம் அழிந்து போக வாய்ப்பு இருக்கிறது.




உங்க WEBCAM ஜாக்கிரதை . . .


சரி இப்போது நான் இந்த பதிவின் தலைப்புக்கு வருகிறேன் . உங்கள் கம்ப்யூட்டர்லியோ அல்லது லேப்டாப்லியோ வெப்காம் இருக்குமாயின் அதை உங்கள் அனுமதி இல்லமால் யாரேனும் ஆன் செய்தது உங்களை பார்க்க முடியுமா? முடியும் என்கிறது Technology . ஆம் நீங்கள் Gtalk லியோ அல்லது Yahoo Messenger லியோ ஆன்லைனில் இருந்தால் உங்கள் Friends லிஸ்ட்யில் இருபவர்களால் உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் வெப்காமை ஆன் செய்ய முடியும். அதற்க்கு ஆதார வீடியோ கூட இருக்கிறது ஆனால் அந்த வீடியோவை நான் இங்கு இணைக்க வில்லை ஏனென்றால் அந்த வீடியோவில் எப்படி மற்றவர்கள் வெப்காமை அவர்கள் அனுமதி இல்லாமல் ஆன் செய்வது அதற்க்கு என்ன சாப்ட்வேர் டவுன்லோட் செய்ய வேண்டும் எல்லாம் இருக்கிறது . அப்புறம் தெரியாத ஒரு தப்பான விஷியத்தை நானே சொல்லி குடுத்தார் போல் ஆகிவிடும். அதனால் விஷியத்தை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் .

இதில் இருந்து தப்பிக்க :

1. நீங்கள் கம்ப்யூட்டரில் தனியாக வெப்காம் வைத்திருப்பார்களானால் , நீங்கள் வெப்காமை உபயோகிக்காத போது கம்ப்யூட்டரில் இருந்து வெப்காம் இணைப்பை துண்டித்து விட்டு தனியாக வைக்கவும் . அவசியம் இருக்கும் போது மட்டும் கம்ப்யூட்டர் உடன் இணைக்கவும் .

2. நீங்கள் லேப்டாப் உபயோகிப்பவரானால் அதில் வெப்காம் ஸ்க்ரீன் உடன் இணைக்க பட்டு இருக்கும் அதை தனியாக கழட்டி வைக்க முடியாது ஆனால் வெப்காம் லென்ஸ்சை மூடி வைக்கலாம் இல்லையா? ஆமா லேப்டாப் வெப்காம்மில் உள்ள லென்ஸ் மேல் ஒரு ஸ்டிக்கராய்அல்லது ஸ்டிக்கர் பொட்டை ஒட்டி வையுங்கள் . உங்கள் அனுமதி இல்லாமல் வெப்காம் ஆன் செய்தாலும் எதுவும் பார்க்க முடியாது .


 

என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.
அஸ்கர்
மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]
அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
=================================================================================
"எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.
எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல் குர்ஆன்-2:286)
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!” ஆமீன்.
ALAVUDEEN