உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, November 6, 2011

CMP LANEல் நடைபெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை, காணொளி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!

அல்லாஹ்வின் பேரருளால் இன்று காலை சுமார் 7.30 மணியளவில் அதிரை ஈத் கமிட்டி ஏற்பாட்டில் EPS என்று அழைக்கப்படுகின்ற ALMS பள்ளி வளாகத்தில் பொதுமக்களின் பேராதரவுடன் நடைபெற்றது.

பயமுறுத்திக் கொண்டிருந்த மழை தூறல்கள் சற்றே ஓய்வெடுக்க சரியான நேரத்தில் தொழுகையும் அதனைத் தொடர்ந்து குத்பா உரையும் நிகழ்த்தப்பட்டன. பெண்களுக்கு வகுப்பறை பகுதியிலும் ஆண்களுக்கு விளையாட்டுத் திடல் பகுதியிலும் தனித்தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சகோதரர் (காயல்) ஹசன் அலி அவர்கள் இஃலாஸ் என்ற தலைப்பில் பெருநாள் குத்பா உரை நிகழ்த்தினார்கள். இத்திடல் தொழுகையில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பெருமளவில் கலந்து கொண்டு தங்களின் கடமையை நிறைவேற்றினர்.

காணொளி காண (Thanks to adiraibbc) : கீழ்க்காணும் அதிரைபிபிசி வலைதளத்தின் சுட்டிக்குள் செல்லுங்கள்.

http://adiraibbc.blogspot.com/2011/11/blog-post_7689.html

Saturday, November 5, 2011

துபாயில் ஹஜ் பெருநாள் : அதிரைவாசிகள் ஒன்றுகூடல்

அஸ்ஸலாமு அலைக்கும். இன்று (06-11-2011)  ஞாயிற்றுக்கிழமை துபாய் டேரா ஈத்கா மைதானத்தில் அதிரைவாசிகள் 300க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடினர். அல்ஹம்துலில்லாஹ்.

காலை 6:50 மணிக்கு ஹஜ் பெருநாள் தொழுகை முடிந்து பராஹா சாலை வாசல் அருகே கூடிய அதிரைவாசிகளை அதிரை எக்ஸ்பிரஸ்,அதிரை.இன்,அதிரை அனைத்து முஹல்லா,அதிரை ஃபேக்ட் மற்றும் அதிரை நிருபர் இணைய தளங்களின் சார்பில் புகைப்படம் மற்றுக் காணொளிகள் எடுக்கப்பட்டது.

அதிரை அனைத்து முஹல்லா சார்பில் ஹஜ் பெருநாள் வாழ்த்து அட்டையும் சாக்லெட்டும் இணைக்கப்பட்ட வரவேற்பு அன்பளிப்பு வழங்கப்பட்டது.சுமார் 350 எண்ணிக்கையில் விநியோகிக்கப்பட்டதாக அனைத்து முஹல்லா ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 
அனைத்து முஹல்லா ஜமாத் கூட்டமைப்பு சார்பில் மேலத்தெரு,கீழத்தெரு, நெசவுத்தெரு,தரகர் தெரு,கடற்கரை தெரு,மிஸ்கீன் பள்ளி மற்றும் சம்சுல் இஸ்லாம் சங்க துபை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.












இந்த நிகழ்ச்சியை அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் சகோ.சிராஜுதீன் மற்றும் அதிரை நிருபர் சார்பில் சகோ.தாஜுதீன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்தனர். இதன் காணொளி மற்றும் புகைப்படங்கள் அதிரையின் பிரபல வலைத்தளங்கள் அனைத்திலும் பதிவேற்றம் செய்யப்படும்.
Thanks to : adiraixpress

Friday, November 4, 2011

அதிரையில் ஹஜ்ஜூப் பெருநாள் திடல் தொழுகை

இன்ஷா அல்லாஹ் இந்த வருட ஹஜ்ஜூப் பெருநாள் திடல் தொழுகை வரும் 07.11.2011 அன்று காலை சரியாக 7.30 மணியளவில் CMP லைன் பகுதியில் அமைந்துள்ள ALMS (EPS) பள்ளி வளாகத்தில் நடைபெறும்.

வழமையாக பெருநாள் தொழுகை நடைபெறும் சானா வயல் திடல், பெய்துவரும் தொடர் மழையால் தொழுகை நடாத்திட தகுதியற்று இருப்பதால் இம்முறை ALMS (EPS) பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிரை ஈத் கமிட்டி அறிவித்துள்ளது.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் வழமைபோல் குறித்த நேரத்திற்குள் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அனைவருக்கும் இதயங்கனிந்த ஹஜ்ஜூப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இப்புனிதமிகு நன்னாளிலே ஏந்தல் ரஸூல் (ஸல்) அவர்கள் அரஃபா பெருவெளியில் ஆற்றிய, வரலாற்று சிறப்புமிக்க, இன்றளவும் முஸ்லீம்கள் பின்பற்றி வரும் உரையின் சாராம்சத்தில் சிலவற்றை கீழ்க்காணும் தொடுப்பை சுட்டி கேட்கலாம்.

http://www.srilankamoors.com/Media-centre/HAJJATHUL-VIDAH-VILAKKAM.html

ஹஜ்ஜின்போது கட்டாயமாக தவிர்க்க வேண்டிய தவறுகள்.







அ) இஹ்ராம் அணிவதில் தவறிழைப்பது
முழு அளவு படத்தைப் பார்1) சில ஹாஜிகள் ஜித்தா விமான நிலையத்தை அடையும் வரைக்கும் இஹ்ராம் அணிவதை தவிர்த்து விடுகின்றார்கள். அதாவது ஹஜ்ஜுச் செய்வதற்குண்டான நிபந்தனைகளில் தலையாததான இஹ்ராம் அணிதல் மற்றும் ஹஜ்ஜிற்கான நிய்யத் வைத்தல், இவற்றை அதற்குரிய மீகாத் என்ற எல்லைகளைக் கடப்பதற்கு முன்பாக நிறைவேற்றி விட வேண்டும் என்பது கட்டாயச் சட்டமாகும். ஆனால், சிலர் ஜித்தா விமான நிலைய எல்லையானது, மீகாத் அல்லவே என நினைத்து, ஜித்தா விமான நிலையத்தில் விமானம் இறங்கும் பொழுது இஹ்ராம் மற்றும் நிய்யத் வைக்காமல் இருந்து விடுகின்றார்கள்.
ஹஜ் மற்றும் உம்ரா செய்ய வருபவர்கள், அதற்குரிய எல்லைகளில் இஹ்ராம் அணிந்து விட்டு வருவதற்கு அந்தந்த பகுதிகளுக்கென்றே உள்ள எல்லைகளை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டி விட்டுச் சென்றிருக்கின்றார்கள்.

Thursday, November 3, 2011

துபையில் அதிரை அனைத்து முஹல்லா - ஹஜ் பெருநாள் சந்திப்பு -2011

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அன்பிற்கினிய அதிரை சொந்தங்களுக்கு,

    اَسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ

இவ்வழைப்பிதழ் தங்கள் அனைவரையும் பரிபூரண நலன்களுடனும், உயரிய சமுதாய சிந்தனையுடனும் சந்திக்க பிரார்த்திக்கிறோம். ஆமீன்!.

கடந்த நோன்புப் பெருநாளின் போது ஐக்கிய அரபு அமீகரத்திலுள்ள அதிரைவாசிகள் தேரா ஈத் திடலில், சிறுதுளியாக ஒன்றினைந்த நிகழ்வு நாம் அறிந்ததே (அல்ஹம்துலில்லாஹ்!.), இது போன்று இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளன்றும் அனைத்து முஹல்லாவாசிகள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நமதூரில் உள்ள தீனுல் இஸ்லாம் சங்கம்-கடல்கரைத் தெரு, இளைஞர் நற்பணி மன்றம்-தரகர் தெரு, மதரஸத்துன் நூருல் முஹம்மதியா சங்கம்-கீழத் தெரு, ஷம்சுல் இஸ்லாம் சங்கம், மிஸ்கீன் பள்ளி முஹல்லா சங்கம்-புதுத் தெரு, நெசவுத் தெரு பொது நல அமைப்பு மற்றும் தாஜுல் இஸ்லாம் சங்கம்-மேல்த் தெரு, ஆகிய முஹல்லாவாசிகளை AAMF(துபை) ஒருங்கிணைத்துள்ளது. அல்ஹம்துல்லாஹ்!

இதுபோன்ற சந்திப்புகளினால், நமக்குள் நல்ல இணக்கங்கள் தொடருவதற்கும், நம் எதிர்கால சந்ததிகளின் நலனில் அக்கரைக் கொள்வதற்கும், நமதூரின் பொதுவான நல்ல காரியங்களை ஒன்றிணைந்து செயல்படுத்துவதற்கு மிகவும் பயனளிக்கும் என AAMF கருதுகிறது. ஆகவே இன்ஷாஅல்லாஹ் வருகிற காலங்களிலும் ஒவ்வொரு வருடமும் இரு பெருநாட்களிலும் இதுபோன்ற பெருநாள் சந்திப்புகளை தொடர்ந்து நடத்துவது என AAMF முடிவு செய்துள்ளது.

இவ்வழைப்பிதழ் கிடைக்கப் பெறுகிற சகோதரர்கள் அனைவரும் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், துபை மற்றும் ஏனய அமீரக மாநிலங்களில் வாழ்கிற தாங்கள் அறிந்த நமதூர் சகோதரர்களுக்கு இந்நிகழ்வைத் தெரிவித்து இப்பெருநாள் சந்திப்பில் கலந்துக் கொள்ளச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஹஜ்ஜுப் பெருநாள் சந்திப்பு நம் உறவுகள் மேன்பட வழுவூட்டட்டும்!

குறிப்பு: பெருநாள் தெழுகை முடிந்த உடன் அரை மணி நேரத்திற்குள் நிகழ்ச்சி நிறைவுபெரும்.

அன்புடன்,
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு(AAMF)
துபை –  ஐக்கிய அரபு அமீரகம்

அமல்கள் ஏற்றுக் கொள்ளப்பட...

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!
கண்ணியமிக்க சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மனிதர்களும் ஜின்களும் படைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் அல்லாஹ்வை வணங்கவேண்டும் என்பதற்காகத் தானே தவிர வேறில்லை! நம்மைப் படைத்த ரப்புல் ஆலமீன் வல்ல அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்:-

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56)
அல்லாஹ்வை வணங்குவதற்காகவே நம்மைப் படைத்த இறைவன் அவனை நாம் எவ்வாறு வணங்க வேண்டும் என்பதையும், நமக்கு அவனது திருமறையின் மூலமும் அவனது தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மூலமாகவும் நமக்கு காட்டியிருக்கிறான். இந்த வழிகாட்டுதல்கள் இல்லாமல் வேறு ஒரு புதிய வழிமுறையைப் பின்பற்றி நாம் அவனை வணங்குவோமேயானால் அல்லாஹ் அதனை ஏற்றுக் கொள்வதில்லை.

அரஃபா நோன்பு

இன்ஷh அல்லாஹ், வருகின்ற 05-11-2011 சனிக்கிழமை அன்று அரஃபா தினமாக இருப்பதால் அன்றைய தினம் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.

நாம் எந்த ஒரு அமலைச் செய்வதாக இருந்தாலும் மூன்று நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது மிக மிக அவசியம்!. அவைகளாவன:-

Wednesday, November 2, 2011

RSS இயக்கத்தின் சூலாயுதமும்! விஜய்யின் வேலாயுதமும்


கடந்த சிலவருடங்களாக தமிழகத்தில் இஸ்லாமிய எதிர்புணர்வை ஏற்ப்படுத்த, ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை குலைக்க உன்னைப்போல் ஒருவன், வேலாயுதம் போன்ற படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருகின்றன.

இவை அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் சதி செயலாகவே பார்க்க முடிகிறது. தமிழகத்திலே தங்கள் இயக்கங்களை வளர்க்க ஹிந்துத்துவா சக்திகள் தொடர்ந்து முயன்று வந்தன. பெரியார், அண்ணா போன்ற சீர்திருத்தவாதிகளின் கடுமையான உழைப்பின் காரணமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் தமிழகத்தில் சரியாக கால்பதிக்க முடியாத ஒரு சூழல் இருந்து வந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்பவே இஸ்லாமிய எதிர்புணர்வை ஏற்ப்படுத்தும் இதுபோன்ற படங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

ஹிந்துத்துவா இயக்கத்தை ஒரு மாநிலத்தில் வேரூன்ற செய்ய வேண்டும் என்றால், அவர்களுக்கு இஸ்லாமிய எதிப்புணர்வு என்கிற சக்தி தேவைபடுகிறது. அந்த சிந்தனையை ஏற்படுத்தவே ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா இயக்கங்கள் தமிழ் சினிமாவை பயன்படுத்தி வருகின்றன. இதன் மூலம் தங்கள் ஹிந்துத்துவா சித்தாந்தத்தை தமிழகத்தில் பரப்பவும் அதேநேரம் முஸ்லிம் எதிர்ப்பு வெறி உணர்வை ஏற்படுத்தவும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. இதன் ஒரு பகுதிதான் ஜிஹாத் மற்றும் முஸ்லிம் பயங்கரவாதம் என்ற பூச்சாண்டி எல்லாம்.