உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, April 5, 2014

அதிரையில் ADT நடத்தும் கோடைகால இஸ்லாமிய நல்லொழுக்க பயிற்சி முகாம் அறிவிப்பு !

அதிரை தாருத் தவ்ஹீத்தின் [ ADT ] அங்கமாகிய பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையம், கடற்ரைதெரு அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி, சிஎம்பி லேன் ஏ.எல். மெட்ரிக் பள்ளி ஆகியவை இணைந்து ஆண்டு தோறும் கோடை விடுமுறையில் நடத்துகின்ற பள்ளி மாணவ / மாணவியருக்கான இஸ்லாமிய நல்லொழுக்க பயிற்சி முகாம் எதிர்வரும் [ 03-05-2014 ] அன்று முதல் [ 15-05-2014 ] வரை மாணவர்களுக்கு பிலால் நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய பயிற்சி மையத்திலும், மாணவிகளுக்கு CMP லேனில் அமைந்துள்ள AL மெட்ரிக் பள்ளியிலும் வகுப்புகள் நடைபெற இருக்கிறது.

இதற்கான அறிவிப்பு தட்டிகள் நகரின் பிராதான பகுதிகளில் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த அறிவிப்பு தட்டிகளில் பயிற்சியில் சேர விரும்பும் மாணவ, மாண‌விகள் முன்பதிவு செய்துகொள்ளவும், விண்ணப்ப படிவங்களை பெற்றுகொள்ளவும், மேலததிக தகவல் பெறவும் அதிரை தாருத் தவ்ஹீதை அணுக அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Thanks to: The Adirai News


1 comment:

  1. கள்ள உறவுகளை களைவது எப்படி ? என்ற தலைப்பு அதிர்ச்சியாக உள்ளது.

    புகைப் பழக்கத்தை விடுவது எப்படி? மதுவிலிருந்து விடுதலையாவது எப்படி? என்று நாம் சொல்லும் போது,அதை விட்டு விட எண்ணுபவர்கள் ஒன்று புகைப் பழக்கம் அல்லது மதுப் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்.அதே போன்று தான் மேற்கண்ட தலைப்பும் இருக்கிறது.கள்ள உறவை கொண்டவர்கள் - இங்கு வந்தால்,அதை எப்படி விடுவது என்று சொல்லித் தருகிறோம் என்ற பாணியில் தலைப்பு அமைந்துள்ளது.

    அதற்கு பதிலாக,விபசாரம் அருகில் நெருங்காமல் இருக்க என்ன வழி?

    கள்ள உறவால்,சீரழியும் மக்களும்,அதற்கு பரிசாய் கிடைக்கப் போகும் நரகமும்,

    குடும்பம் சீர்பட,சுவர்க்கம் பெற்றிட,

    அந்தோ,கெட்ட செயலால்,மானமும் போனது,சொர்க்கமும் போனது

    இப்படி சிந்தித்தால் எத்தனையோ நல்ல தலைப்புகள் கிடைக்கும்.

    ஆனால்,மேற்கண்ட தலைப்பால்,அந்த நிகழ்ச்சிக்கு வரும் ஆணையும்,பெண்ணையும் பழிப்பது போலவும்,அந்த கெட்ட செயலை செய்பவர்கள் தான் அந்த கூட்டத்துக்கு வருபவர்கள் போன்று உள்ளது.வாசகத்தை திருத்தி அதிரை தாருத் தவ்ஹீத் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete