அபுதாபி: கடந்த மாதம் 9ம் தேதி முதல் அபுதாபி முரூர்
சாலையில் இந்திய பாஸ்போர்ட் சேவை மையம் செயல்படுகிறது என்று இந்திய தூதரகம்
அறிவித்துள்ளது.
அமீரகத்தில் இந்திய பாஸ்போர்ட் வழங்கும் சேவையினை
பி.எல்.எஸ். இன்டர்னேஷனல் என்னும் நிறுவனம் செய்து வருகிறது. அபுதாபியில்
செயல்பட்டு வரும் பி.எல்.எஸ். இன்டர்னேஷனல் நிறுவனம் மார்ச் 9ம் தேதி முதல் முரூர்
சாலையில் அபுதாபி கமர்ஷியல் வங்கியின் பின்புறம் அமைந்துள்ள போர்ட் சிட்டி ஜாவா
கட்டிடத்தின் 202 எனும் அலுவலகத்தில் செயல்படுகிறது என இந்திய தூதரகம்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகம் அதிக இடம் கொண்டதாக இருக்கும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanks to: Thatstamil
No comments:
Post a Comment