உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, June 8, 2012

முகத்திரை முன்மாதிரி!


முகத்திரை முன்மாதிரி!

(அண்மையில் எனக்கு வந்த மின்னஞ்சல் தகவலின்படி)

அது பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற சூப்பர் மார்க்கெட்.  தனக்கு வேண்டிய பொருள்களைத் தள்ளு வண்டியில் நிறைத்துக்கொண்டு, காசாளரிடம் கணக்குப் பார்த்துப் பணத்தைச் செலுத்துவதற்காக நின்ற வாடிக்கையாளர்களுள் முழுமையாக ‘ஹிஜாப்’ அணிந்த முஸ்லிம் பெண்மணியொருவர்!

பிரான்சில் ‘ஹிஜாபு’க்கு இருக்கும் எதிர்ப்பு பற்றித் தெரியுமல்லவா?

சில நிமிடங்களில், இந்த முஸ்லிம் பெண்ணின் முறை வந்தது.  தான் வாங்கிய சாமான்களை ஒவ்வொன்றாகக் காசாளர் (கேஷியர்) முன்னால் எடுத்துவைக்கத் தொடங்கினார் இந்தப் பெண்மணி.

அந்தக் கவுண்டரின் காசாளரும் முஸ்லிம் பெண்தான்!  ஓர் அரபு நாட்டிலிருந்து பிரான்சில் குடியுரிமை பெற்று வாழுபவர்!  தன் முன்னாள் நிற்கும் வாடிக்கையாளர் முழுமையாக ‘ஹிஜாப்’ அணிந்து (‘நிகாப்’ எனும் முகத்திரையுடன்) இருப்பதைப் பொறுக்க முடியாத காசாளப் பெண், அவரை முறைத்துப் பார்த்தாள்!

“இந்த நாட்டில் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளுகின்றோம்!  எல்லாம், உங்களைப் போன்றவர்களால்தான்!  ‘ஹிஜாப்’, ‘நிகாப்’ எனும் தீவிரவாத அடையாளங்கள்!  வெளிநாட்டிலிருந்து வந்து இங்கு வேலை செய்யும் நாம், சம்பாதிக்கும் நோக்கத்தில்தான் வந்துள்ளோம்;  மாறாக, நமது மார்க்கத்தை அடையாளம் போட்டுக் காட்டவல்ல!  நமது வரலாற்றை இங்கு வெளிச்சம் போட்டுக் காட்ட அல்ல!  நீ உன் மார்க்கத்தை நடைமுறைப் படுத்த நாடினால், உனது அரபு நாட்டுக்குப் போகவேண்டியதுதானே!?  அங்கே போய், நீ விரும்பியபடி நடந்துகொள்!”  பொரிந்து தள்ளினார், பொறுமையிழந்த அந்தக் காசாளப் பெண்.

இத்தகைய ஏச்சு ஏவுகனையைக் கேட்ட அந்த முஸ்லிம் பெண்மணி, தான் எடுத்து வைத்துக்கொண்டிருந்த சாமான்களை நிறுத்தினார்.  காசாளரைக் கண்களால் சந்தித்தார்!  ஒன்றும் மறுமொழி பேசவில்லை!  அமைதியாகத் தனது ‘நிகாபை’த் தூக்கிக் காட்டினார்!

அரபு நாட்டுக் காசாளப் பெண் அதிர்ச்சியில் உறைந்து போனாள்!

தனக்கு முன்னால் நின்ற பெண்ணோ, பிரெஞ்சுக்காரி!  இதை, அப்பெண்ணின் செம்பட்டை முடியும் நீலக் கண்களும் வெளிச்சம் போட்டுக் காட்டின!

அடுத்து அமைதியாகச் சொன்னாள் அந்த முஸ்லிம் பெண்மணி:  “நான் பிரெஞ்சுக்காரி.  உன்னைப் போன்ற அரபு நாட்டவள் இல்லை!  இது எனது நாடு!  இஸ்லாம் எனது மார்க்கம்!  இஸ்லாத்தில் பிறந்த நீங்களெல்லாம் தீனை விற்றுவிட்டீர்கள், உலகைத் தேடுவதற்காக!  நாங்கள் அந்த உண்மை மார்க்கத்தைத் தேடி, விலை கொடுத்து வாங்கிக்கொண்டோம்!”

அசடு வழியத் தன்னைப் பார்த்துக்கொண்டிருந்த காசாளப் பெண்ணைப் பார்த்து, அமைதியாகக் கூறினார் அந்தப் பேறு பெற்ற பெண்மணி:

“சரி, போகட்டும். இப்போது என் கணக்கைப் பார்!”


-       அதிரை அஹ்மத்

No comments:

Post a Comment