அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
அன்சர் தப்லீகி மற்றும் பீஜே இடையே ஏற்பட்டுள்ள விவாத ஒப்பந்தத்தின் அடிப்படையில் எதிர்வரும் 21.12.2014க்குள் மண்டபம் முன்பதிவு செய்யப்பட வேண்டும் என்பதும் ஓர் விதியாகும். அதனடிப்படையில் கடந்த 11.12.2014 அன்று இருதரப்பு பிரதிநிதிகளும் திருச்சியில் ஓர் மண்டபத்தை தேர்வு செய்து ததஜவின் இறுதி ஒப்புதலுக்காக காத்திருந்தோம்.
இன்று 13.12.2014 மண்டபம் முன்பதிவு செய்திட ததஜ தரப்பிலிருந்து இசைவு தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் 01.03.2015 - ஞாயிறு அன்றைய விவாதத்திற்காக முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது.
மண்டபம் குறித்த விபரங்கள் வருமாறு,
ஸ்ரீனிவாசா ஹால்
சென்ட்ரல் பேருந்து நிலையம் அருகில்
பெமீனா ஹோட்டல் எதிர்புறம்
வில்லியம்ஸ் ரோடு, திருச்சி
சென்ட்ரல் பேருந்து நிலையம் அருகில்
பெமீனா ஹோட்டல் எதிர்புறம்
வில்லியம்ஸ் ரோடு, திருச்சி
இன்ஷா அல்லாஹ், விவாதம் நல்லமுறை நடைபெற்று மக்களுக்கும் விவாதிப்போருக்கும் தெளிவு கிடைத்திடவும், தவறில் இருப்பவர் எத்தகைய மன சங்கடத்திற்கும் ஆளாகிவிடாமல் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்திற்கு வர வேண்டும் அதுவே இவ்விவாதத்தின் உண்மையான வெற்றி என்பதால் அனைவரும் அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டுகிறோம்.
மண்டபம் குறித்து முந்தைய செய்தியை படிக்க:
குறிப்பு:
மண்டபம் முன்பதிவு செய்வதற்காக ததஜவால் நியமிக்கப்பட்ட சகோதரர் நஸீர் கடைசி வரை நேரடியாக சீனுக்கே வரவில்லை மாறாக சகோதரர் மாபு ஜான் என்பவரே கலந்து கொண்டார்.
No comments:
Post a Comment