உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, December 13, 2014

ஓர் துபை சரித்திரம் கரை மாறுகிறது

பல நூற்றாண்டு காலமாக துபையின் வணிக இரத்த நாளமாக விளங்கும், இன்றைய பிரம்மாண்ட பொருளாதார வளர்ச்சியின் அச்சாணியாக திகழும் துபை கிரீக் (DUBAI CREEK CHANNEL) எனும் கடல் சேனல் பகுதியில் அமைந்துள்ள வணிக அரபுகலங்களின் துறை (DHOW WHARFAGE) விரைவில் புதுக்குடித்தனம் செல்லவிருப்பதால் 2015 ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் முழுமையாக இழுத்து மூடப்படவுள்ளது. 
 

1960 ஆம் ஆண்டு அன்றைய ஆட்சியாளர் ஷேக் ராஷித் பின் சயீத் அல் மக்தூம் அவர்களால் சிறு கலங்களின் துறைமுகமாக கட்டியெழுப்பப்பட்ட 5 மீட்டர் ஆழமுள்ள கிரீக் சேனல் 1993 ஆம் ஆண்டு மறுநிர்மாணம் செய்யப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டன. ஆண்டுக்கு சுமார் 1.7 மில்லியன் டன் பொருட்கள் இங்கே ஏற்றி இறக்கப்படுகிறது. இந்த துறையிலிருந்து ஈரான், இந்தியா, பாகிஸ்தான், ஏமன், ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் சுற்றியுள்ள அருகாமை நாடுகளுக்கு இன்றும் DHOW என்கிற வணிக அரபுக்கலங்கள் இயக்கப்படுகின்றன. (DHOW என்கிற சொல்லுக்கு முக்கோண வடிவ அரபுக்கலம் என அர்த்தம்)


புதிய வணிக படகுத்துறை ஹயாத் ரீஜென்ஸி ஹோட்டல் பின்புறம் (உருவாக்கப்பட்ட) தேரா தீவுக்கு (பழைய பெயர் PALM DEIRA) அருகிலும் அமைந்துள்ளது. சுமார் 7 மீட்டர் ஆழமுள்ள இத்துறையில் ஒரே நேரத்தில் 450 கலங்கள் வரை நிறுத்த முடியும் மேலும் 90,000 சதுர மீட்டர் நீளபரப்பில் 30 ஏற்றி இறக்கும் தள வசதிகளுடன் அமையவுள்ளது. பல்வேறு நவீன வசதிகளுடன் இரவிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய கலத்துறை தற்போதுள்ள கிரீக் சேனல் அரபுக்கலத் துறையை (DHOW WHARFAGE) விட இருமடங்கு பெரியதாகும்.




தினம் ஒன்றுக்கு சிறிய கலங்களுக்கு 100 திர்ஹமும் பெரிய கலங்களுக்கு 200 திர்ஹமும் துறைமுக வாடகையாக வசூலிக்கப்படுகின்றன ஆனால் கடந்த வாரம் முதல் ஒரளவு செயல்பாட்டுக்கு வந்துள்ள புதிய கலத்துறையில் கட்டணங்கள் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை, இந்த நிலை துறைமுக கட்டுமானம் இன்னும் ஓரிரு மாதங்களில் பூர்த்தியாகும் வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய அரபுக்கலத்துறை விரைவில் சுற்றுலா முக்கியத்துவம் (TOURIST HUB) வாய்ந்த பகுதியாக மாற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எது எப்படியோ! கிரீக் சாலையின் கம்பீரமாக திகழ்ந்த சரித்திரம் ஒன்று இனி ஆவணங்களில் மட்டுமே இடம்பெற போகிறது. அதேவேளை அப்ரா எனும் பயணிகளின் இருகரை படகு பயணம் தொடரும்.

செய்தி மூலம்: கல்ஃப் நியூஸ்
படங்களுடன் தமிழில்: அதிரை அமீன்












 

No comments:

Post a Comment