அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
ஒரு காலத்தில் விவாதங்கள் தான் நாள் கணக்கில், மணிக்கணக்கில் நடைபெறும் ஆனால் சமீபத்திய விவாத ஒப்பந்த அமர்வுகள் மாரத்தன் ஓட்டப்பந்தய தூர, நேர அளவுக்கு இழுத்தடிக்கப்படுகிறது (சமீபத்திய உதாரணம் அப்பாஸ் அலி விவாத ஒப்பந்த நிகழ்வு).
அன்சர் தப்லீகி அவர்களுக்கும் பீஜே அவர்களுக்கு இடையே இன்ஷா அல்லாஹ் நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ள விவாதம் சம்பந்தமான பெரும்பாலான விஷயங்கள் அவர்களுக்கிடையே நடைபெற்ற மின்னஞ்சல் பரிமாற்றம் மூலமே தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்றாலும் இடம், செலவினங்கள் மற்றும் அவை ஒழுங்குகள் ஆகிய சில விஷயங்களை மட்டுமே அன்சர் தப்லீகி அவர்களின் பிரதிநிதிகள் பீஜேயின் பிரதிநிதிகளுடன் இன்று பேசி கையெழுத்திட சென்றிருந்தனர்.
(06.12.2014, சனிக்கிழமை) இன்று மாலை சரியாக 4.30 மணியளவில் துவங்கிய பேச்சுவார்த்தை இரவு சுமார் 12 வரை நீண்டுடுடுடுடுடுடுடு...................... விவாதத்தை திருச்சியில் நடத்துவதாக முடிவுற்றது.
இனி அவர்களுடன் விவாத ஒப்பந்தம் செய்யச் செல்வோர் கட்டுச்சோறும், பாய் தலகாணியும் கொண்டு செல்வது நல்லது. 2,3 பாயிண்ட் பேசவே இவ்வளவு நேரமென்றால் 'அ' விலிருந்து 'ஃ' வரை பேசச்செல்வோர் நாட்கணக்கில் தங்க நேரிடலாம். பீஜே தரப்பினரின் இந்த இழுத்தடிக்கும் புது டெக்னிக் எதற்காக என்பது சொல்லாமலேயே அனைவருக்கும் விளங்கும்.
அன்சர் தப்லீகி அவர்கள் சார்பாக சகோதரர் அப்துல் ஹமீது அவர்களும் அதிரை மீடியா மேஜிக் நிஜாமுதீன் அவர்களும் கலந்து கொண்டனர்.
பீஜே தரப்பில் சகோதரர் யூசுப் மற்றும் சகோதரர் கலீல் ரசூல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விவாத ஒப்பந்த நகல்கள் மற்றும் அயற்சியை உண்டாக்கும் வீடியோ பதிவுகள் மிக விரைவில் இன்ஷா அல்லாஹ்.(சகோதரர்களே! வீடியோ வெறுப்பேற்றினாலும் தயவுசெய்து பாருங்கள் ஏனெனில் அலுச்சாட்டியம், பிடிவாதம், விதண்டாவாதம் செய்யும் அவர்களை சந்திக்க, சமாளிக்க இறுதியாக நம் வழிக்கு கொண்டு வர படிப்பினைகள் உள்ளன).
ஒரு வழியாக, ரொம்ப நாட்களாக போக்குகாட்டிக் கொண்டு வளைக்குள் ஒழிந்துள்ள எலியின் வாலை பிடித்தாகிவிட்டது இனி வெளியே இழுத்து விவாத மேடைக்கு கொண்டு வந்துவிடனும், அதற்குள் இன்னும் என்னென்ன தப்பிக்கும் முயற்சிகள் அரங்கேறப் போகிறதோ தெரியவில்லை.
விவாதம் சம்பந்தமாக அன்சர் தப்லீகி அவர்கள் பீஜே அவர்களுக்கு எழுதிய கடைசி இரு கடிதங்கள்.
No comments:
Post a Comment