செய்யது இபுறாஹிம் பற்றி செய்யது இபுறாஹீம் கூறுவதை இந்த லிங்கில் கேளுங்கள்
ادْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ ۖ وَجَادِلْهُم بِالَّتِي هِيَ أَحْسَنُ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِ ۖ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ
16:125. (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய
உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான
முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத்
தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு
அறிவான்...
விவாதம் தொடர்பில் அல்லாஹ் மேலுள்ளவாறு குறிப்பிடுகின்றான்
மௌலவி அப்பாஸ் அலி அவர்களுடன் விவாதிக்க சீட்டு குலுக்கி போட்டதில் இவர் போதையில் தான் பேசுகின்றாரா...? என மக்களால் சந்தேகிக்கப்படும் செய்யத் இப்றாஹீம் தெரிவானாராம்..?
அல்லாஹ் விவாதம் செய்வோருக்கு இருக்க வேண்டிய பண்பு பற்றி குறிப்பிடும் பொது ஹிக்மத் எனும் அறிவு இருக்க வேண்டும் என்கின்றான் அந்த அறிவு இவரிடம் உள்ளதா..?
விவாதம் எதற்க்காக..?
மக்கள் தெளிவு பெறுவது தான் நோக்கம் என்றால் சத்தியத்தை மிக அழகாக சொல்லும் ஆற்றால் யாரிடம் உள்ளதோ அவர் தானே விவாதிக்க முன் வரவேண்டும்..?
அல் குர்ஆன் ஹதீஸை பொறுத்தவரை அதை சுயமாக ஆய்வு செய்து விளங்குவது என்றால் அரபு மொழி அறிந்திருப்பது அவசியம் அதே போல் அல் குர்ஆன் தொடர்பான சபபுன் நுசூல், நாஸிஹ். மன்சூஹ் போன்றவை பற்றி துல்லியமான அறிவு இருக்க வேண்டும் .ஹதீஸ் கலை தொடர்ப்பான அறிவு இருக்கவேண்டும் குறைந்த பட்சம் செய்யத் இப்ராஹீமிடம் ஒரு குர்ஆன் வசனத்தையோ ஹதீஸையோ சுயமாக மொழிபெயர்க்கும் ஆற்றலாவது உள்ளதா..?
ஆன்லைன் பீஜேயில் உள்ளதை அப்படியே மனனமிட்டு மக்கள் முன் தமிழால் குமுறுவதை தவிர வேறெதையும் இவரிடம் காண முடியாது என்பதே நிதர்சன உண்மை இப்படியாப்பட்டவர் விவாதிக்க வந்தால் சத்தியம் வெளிப்படுமா..? இயக்க வாதம் வெளிப்படுமா..?
இவருடன் விவாதிப்பதில் என்ன பலன்.?
டீ.என்.டி.ஜே மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் முதன்மையானவைகளில் குர்ஆன் மொழி பெயர்ப்பிலும் ஹதீஸ் மொழிபெயர்ப்பிலும் தில்லு முள்ளு செய்துள்ளனர் என்பதும் ஒன்றாகும் மொழி அறிவு அற்றவருடன் விவாதிப்பதில் இதற்க்கு விடை கிடைக்குமா..? தெருச்சண்டை நடக்குமா..?
وَعِبَادُ الرَّحْمَٰنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا
25:63. இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.
இப்படியாபட்ட அறிவிலிகளுடன் விவாதிக்காது ஸலாம் கூறி விடை பெறுமாறே அல் குர்ஆன் அறிவுரை கூறுகின்றது ஆகவே அப்பாஸ் அலி அவர்களே..
நீங்கள் உங்கள் ஆயுளில் அதிகமான காலத்தை டீ.என்.டி.ஜே யில் கழித்தவர் அங்கே உள்ளோரில் ஆய்வாளர் யார் பேச்சளவில் மேதாவி யார் என்பதை எல்லாம் நீங்கள் அறிந்திருப்பீர்கள் விவாதம் என்பது யாரில் பிழை உள்ளதோ அவர்கள் பிழையை திருத்திக்கொண்டு சத்தியத்தில் நடைபோட காரணமாக அமைய வேண்டிய ஓர் களம் அது கட்சி சண்டை புடிக்கும் களமாக மாறுவது விவாதிக்க முன்வருவோரை வைத்தே உள்ளது ஆகவே அறிவிலிகளை புறக்கணியுங்கள் ஹிக்மத் எனும் அறிவும் நல்ல பண்பும் உடையோருடன் விவாதியுங்கள் செய்யத் இப்ராஹீமின் பண்பு பற்றி குறிப்பட்டு என் பக்கத்தை நாறடிக்க செய்ய விரும்பவில்லை
https://www.facebook.com/aboohaathim
குலுக்கிப் போடப்படும் எல்லாத் துண்டுச் சீட்டிலும் செய்யது இப்ராஹீம் என்று எழுதப்பட்டிருந்தால், அவர்தானே வருவார்!
ReplyDeleteஎதிரணியைத் திட்டுவதற்கும், provoke பண்ணுவதற்கும் கலீல் ரசூலையும் செய்யது இப்ராஹீமையும்தான் டி என் டி ஜே வைத்திருக்கும் ரகசியம் தெரியாதா?