உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, June 28, 2015

துபையில் வரும் வியாழன் (02.07.2015) ஷேக். இக்பால் மதனி ரமலான் சிறப்பு சொற்பொழிவு

துபையில் ரமலான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி Dubai Holy Quran Award, Awqaf Dubai என்ற துபை அரசுத் துறையால்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 02.07.2015 வியாழன் (பின்னேரம்) இரவு சுமார் 10.15 மணியளவில், தாயகத்திலிருந்து வருகைதரும் மூத்த மார்க்க அறிஞரும், அமீரக தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் ஏகத்துவ கொள்கை வளர்ச்சிக்கு வித்திட்டவருமான 'ஷேக் இக்பால் மதனி' அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு சொற்பொழிவாற்றவுள்ளார்கள்.

அதுபோது, தமிழ் பேசும் அமீரகவாசிகள் அனைவரும் அவசியம் கலந்து கொண்டு நற்பயன் அடைய வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.


Tuesday, June 23, 2015

அதிரையில் வரவேற்கும் மக்களும்! வாலாட்டும் பீஜே வணங்கிகளும்!!


அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மூன்றாவது ஆண்டாக புனிதமிக்க ரமலான் தொடர் மார்க்க விளக்க நிகழ்ச்சி அதிரை தாருத் தவ்ஹீத் ஏற்பாட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சிகளில் குர்ஆன் ஹதீஸை பின்பற்றி பிரச்சாரம் செய்பவர்கள் மட்டுமின்றி ஏனைய பொதுமக்களும் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.


இந்நிகழ்ச்சிகளில் பொதுவாக இலங்கையை சேர்ந்த தாயிக்கள் கலந்து கொண்டு உரையாற்றி வருகின்றனர். இலங்கை தாயிக்களை பொறுத்தவரை பீஜே என்கிற நவீன முஃதஸ்ஸிலா வழிகேட்டு தலைவனுடைய இஸ்லாத்திற்கு எதிரான கொள்கைகளை மக்கள் மத்தியில் குர்அன் ஹதீஸ் ஒளியில் சுட்டிக்காட்டி வழிகேட்டிலிருந்து மக்களை மீட்பதில் முன்னனியில் உள்ளவர்கள் என்றாலும் அதிரையில் தங்களுக்கு கொடுக்கப்படும் தலைப்புகளுக்குள் நின்று இஸ்லாத்தின் சிறப்புகளை எடுத்துச் சொல்கின்றனர் ஆனாலும் பீஜே வணங்கிகள் இலங்கை மவ்லவிகள் என்ற பெயரை கேட்டாலே 'நிலவேம்பு கஷாயம்' குடித்த குரங்குகளாய் ஆடத்தொடங்கி விடுகின்றனர். 


நல்லமுறையில் நடந்து கொண்டிருக்கும் இந்த வருட ரமலான் இரவு தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிகளை காவல்துறை மூலம் தடுத்திட தலைகீழாக நின்று முயன்று தோற்று வருகின்றனர், அல்லாஹ் மிகப் பெரியவன். 

பீஜே என்ற வழிகேடனின் மொழிபெயர்ப்பு மட்டுமே குர்ஆன், பீஜேயின் புத்திக்கு பட்டது மட்டுமே ஹதீஸ் என நம்பி இஸ்லாத்திலிருந்து வெளியேறி கொண்டிருக்கும் பீஜேயானிகளால் இலங்கை அர்ஹம் மவ்லவி மீது காவல்துறை, உளவுத்துறைகளில் தொடுக்கப்பட்ட புகார்கள், விசாரணைகள் பயனற்று போகவே தற்போது உயர்மட்ட அளவில் சென்று வெளியில் கட்டப்பட்டுள்ள ஒலிபெருக்கியின் பக்கம் தங்களின் பார்வையை திருப்பியுள்ளனர்.

இது புனிதமிகு ரமலானுடைய காலமென்பதாலும், துஷ்டனை கண்டால் தூர விலகி செல்ல வேண்டுமென்பதாலும் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் பொறுமையுடன் காவல்துறையின் வேண்டுகோளை ஏற்று வெளியில் கட்டப்பட்ட ஒலிபெருக்கிகளை அகற்றிவிட்டு இன்றைய பயானை தொடர்ந்துள்ளனர்.

கடந்த வருடமும் இதுபோன்று பயான் தன்னுடைய பாதையில் நல்லமுறையில் சென்று கொண்டிருந்த போது தான் 50 லட்ச ரூபாய் சவால் போஸ்டர் ஒட்டியும், இணைய தளத்தில் வம்பிழுத்தும், காணவில்லை போர்டு வைத்தும் வாலாட்டியதன் விளைவாக விவாதம் வரை சென்று வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டதை இத்தனை சீக்கிரத்தில் மறந்துவிட்டார்கள் இந்த சொரணையற்ற பீஜே வணங்கிகள்.

பொறுமைக்கும் எல்லை உண்டு அது ரமலானுக்குப் பின் வெடித்தால் பீஜே வணங்கிகளே அதற்கு முழுப்பொறுப்பு!

==================================

கடந்த 4 தினங்களாக அர்ஹம் மவ்லவி அவர்கள் ஆற்றிய உரையின் யூடியூப் லிங்குகள்:

18.06.2015 முதல்நாள் அறிமுகவுரை


19.06.2015 இரண்டாம் நாள் மவுத்தின் சுவை


20.06.2015 மூன்றாம் நாள் இயற்கை மார்க்கம்


21.06.2015 நான்காம் நாள் மனிதனின் பலவீனம் 

Wednesday, June 17, 2015

புனித ரமலானுக்காக துபை போக்குவரத்து துறையின் சேவை நேர மாற்றங்கள்


சேவை நேர மாற்றங்களை "சாலை மற்றும் போக்குவரத்துத் துறை"யான துபை RTA புனிதமிகு ரமலானுக்காக கீழ்க்காணும் வகையில் மாற்றியமைத்துள்ளது.  

துபை மெட்ரோ


ரெட் லைன்: 

சனி முதல் புதன் வரை அதிகாலை 5.30 (AM) முதல் நள்ளிரவு 12.00 (AM) வரை இயங்கும்.

வியாழன் தோறும் அதிகாலை 5.30 (AM) மணிமுதல் நள்ளிரவு 1 (AM) வரை இயங்கும்.

வெள்ளிக்கிழமை பகல் 1 (PM) மணிமுதல் நள்ளிரவு 1 (AM) மணிவரை இயங்கும்.

கிரீன் லைன்:

சனி முதல் புதன் வரை அதிகாலை 5.50 (AM) முதல் நள்ளிரவு 12.00 (AM) வரை இயங்கும்.

வியாழன் தோறும் அதிகாலை 5.50 (AM) மணிமுதல் நள்ளிரவு 1 (AM) வரை இயங்கும்.

வெள்ளிக்கிழமை பகல் 1 (PM) மணிமுதல் நள்ளிரவு 1 (AM) மணிவரை இயங்கும்.

துபை டிராம்

சனி முதல் வியாழன் வரை அதிகாலை 6.30 (AM) முதல் நள்ளிரவு 01.30 (AM) வரை இயங்கும்.

வெள்ளிக்கிழமை காலை 9 (AM) மணிமுதல் நள்ளிரவு 01.30 (AM) மணிவரை இயங்கும்.

கட்டண நிறுத்தங்கள்: (Paid parking)

சனி முதல் வியாழன் வரை காலை 8.00 (AM) முதல் பகல் 01.00 (PM) வரையும் மீண்டும் மாலை 7 (PM) மணிமுதல் இரவு 12 (AM) மணிவரை.

மீன் மார்க்கெட் ஏரியா நிறுத்தங்கள் (CODE E):
வாரம் முழுவதும் காலை 8 மணிமுதல் பகல் 1 வரையும் மீண்டும் மாலை 4 மணிமுதல் இரவு 11 மணிவரை.

டீகோம் மற்றும் நாலேட்ஜ் வில்லேஜ் நிறுத்தங்கள் (CODE F):
சனி முதல் வியாழன் வரை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை.

அடுக்கு மாடி கட்டிட நிறுத்தங்கள் (Multi Level Parking) வழமைபோல் 24 மணிநேரமும் கட்டணத்திற்குரியது.

பேருந்து சேவை விபரங்கள்
 
கோல்டு சூக் மற்றும் அல் குபைபா (பர்துபை) பஸ் நிலையங்கள் அதிகாலை 5 (AM) மணிமுதல் நள்ளிரவு 12 (AM) மணிவரை இயங்கும்.

அல் கிஸஸ், சத்வா, அல்கோஸ் இன்டஸ்டிரியல், ஜெபல் அலி பஸ் நிலையங்கள் அதிகாலை 5.40 (AM) மணிமுதல் இரவு 10.30 (PM) மணிவரை இயங்கும்.

ஏனைய அனைத்து பஸ் நிலையங்களும் அதிகாலை 5 (AM) மணிமுதல் நள்ளிரவு 12.30 (AM) வரை இயங்கும்.

தடம் எண் C01 பேருந்து மட்டும் 24 மணிநேரமும் இயங்கும்.

மெட்ரோ இணைப்பு பஸ் நிலையங்களான ராஷிதியா, மால் ஆஃப் தி எமிரேட்ஸ், இப்னு பதூதா, புருஜ் கலீஃபா-துபை மால், அபுஹைல், எடிசலாட் நிலையங்கள் சனி முதல் புதன் வரை அதிகாலை 5.15 (AM) மணிமுதல் நள்ளிரவு 12.30 (AM) வரையிலும், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை5.15 (AM) மணிமுதல் நள்ளிரவு 1.10 (AM) வரையும் இயங்கும்.

பெரிய நகரங்களுக்கு பஸ் சேவை:(Inter-city bus services)

அல் குபைபா (பர்துபை) பஸ் நிலையத்திலிருந்து 24 மணி நேரமும் இயங்கும்.

யூனியன் ஸ்கொயர் மற்றும் சப்கா பஸ் நிலையங்களிலிருந்து அதிகாலை 5.30 (AM) மணிமுதல் நள்ளிரவு 12.00 (AM) வரை இயங்கும்.

தேரா சிட்டி சென்டர் மற்றும் கராமா பஸ் நிலையங்களிலிருந்து அதிகாலை 6.10 (AM) முதல் இரவு 10.15 (PM) வரை இயங்கும்.

ஷார்ஜா (ஜூபைல்) பஸ் நிலயத்திலிருந்து துபைக்கு 24 மணிநேரமும் இயக்கப்படும்.

அபுதாபி பஸ் நிலையத்திலிருந்து துபைக்கு அதிகாலை 5 (AM) மணிமுதல் நள்ளிரவு 12.30 (AM) வரை இயங்கும்.

ஃபுஜைரா பஸ் நிலையத்திலிருந்து துபைக்கு அதிகாலை 5.55 (AM) மணிமுதல் இரவு 9.30 (PM) வரை இயங்கும்.

அஜ்மான் பஸ் நிலையத்திலிருந்து துபைக்கு அதிகாலை 6 (AM) மணிமுதல் இரவு 10 (PM) மணிவரை இயங்கும்.

ஹத்தா பஸ் நிலையத்திலிருந்து துபைக்கு அதிகாலை 5.30 (AM) மணிமுதல் இரவு 9.30 (PM) மணிவரை இயங்கும்.

நீர்வழி போக்குவரத்துக்கள்

வாட்டர் பஸ்

துபை கிரீக் மற்றும் மரீனா நிலையங்களுக்கிடையே சனி முதல் வியாழன் வரை பகல் 12 (PM) மணிமுதல் நள்ளிரவு 12 (AM) மணிவரை இயங்கும்.

வெள்ளி மற்றும் பொது விடுமுறை நாட்களில் பகல் 2 (PM) மணிமுதல் நள்ளிரவு 1 (AM) மணிவரை இயங்கும்.
 
வாட்டர் டேக்ஸி

மரீனா நிலையத்திலிருந்து பகல் 2 (PM) முதல் இரவு 10 (PM) மணிவரையும்,

அல் குபைபா (பர்துபை) நிலையத்திலிருந்து மாலை 4 (PM) மணிமுதல் இரவு 10 (PM) மணிவரையும்,

பாம் (Palm) ஏரியா நிலையத்திலிருந்து மாலை 4 (PM) மணிமுதல் இரவு 10 (PM) மணிவரையும் இயங்கும்.

துபை பெர்ரி: (Dubai Ferry)

அல் குபைபா (பர்துபை) நிலையத்திலிருந்து மரீனா நிலையத்திற்கு காலை 11 (AM) மணிமுதல் மாலை 6.30 (PM) வரை இயங்கும். அதேபோல் மறுமார்க்கத்தில் மரீனாவிலிருந்து அல் குபைபாவிற்கும் காலை 11 (AM) மணிமுதல் மாலை 6.30 (PM) வரை இயங்கும்.

மரீனா நிலையத்திலிருந்து சுற்றுலா பயணிகளுக்காக மாலை 5 (PM) மணியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு சிறப்பு சேவை இயங்கும்.

அப்ரா சேவை: (Abra Service)

புர்ஜ் கலீஃபா-துபை மால் சேவை இரவு 8 (PM) மணிமுதல் இரவு 11 (PM) மணிவரையும்,

அல் மம்ஸரிலிருந்து இரவு 8 (PM) மணிமுதல் இரவு 2 (AM) மணிவரையும்,

அட்லாண்டிஸிலிருந்து பகல் 1 (PM) மணிமுதல் இரவு 9 (PM) மணிவரையும் இயங்கும்.
 
வாகன சோதனை மற்றும் பதிவு மையங்கள்
 
சனி முதல் வியாழன் வரை காலை 9 (AM) மணிமுதல் பகல் 3 (PM) மணி வரையிலும் மீண்டும் இரவு 9 (PM) மணிமுதல் நள்ளிரவு 12 (AM) மணிவரையிலும் இயங்கும்.

துரித சோதனை மையம்: (Quick Testing Centre) 
காலை 8 (AM) மணிமுதல் மாலை 5 (PM) மணி வரையிலும் மீண்டும் இரவு 9 (PM) மணிமுதல் அதிகாலை 3.30 (AM) மணிவரையிலும் இயங்கும்.

ஷிராவி சோதனை மையம்: (Shirawi Testing Centre) 
காலை 9 (AM) மணிமுதல் மாலை 6 (PM) மணி வரையிலும் இயங்கும்.

வாடிக்கையாளர் சேவை மையங்கள்: (Customer service centres)
உம் அல் ரமூல், பர்ஷா, தேரா மற்றும் கராமா மையங்கள் காலை 9 (AM) மணிமுதல் பகல் 2 (PM) மணிவரையிலும்,

தவார், மனாரா, அவீர் மையங்கள் காலை 9 (AM) மணிமுதல் மாலை 5 (PM) மணி வரையிலும்,

ஜூமைரா (JBR) மையம் காலை 10 (AM) மணிமுதல் மாலை 3 (PM) மணிவரையிலும் இயங்கும்

என துபை RTA நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

msm.com உதவியுடன் தொகுப்பு:
அதிரை அமீன்

புண்ணிய மாதத்தை வரவேற்போம்! ADT அமீர் அதிரை அஹமது நினைவுறுத்தல்!!

புண்ணிய மாதத்தை வரவேற்போம்!

என் அன்பிற்குரிய சொந்தங்களுக்கு,  அஸ்ஸலாமு அலைக்கும்.

இதோ, வந்துவிட்டது இவ்வாண்டிற்கான        رمضان  المبارك    எனும் மாதம்.  இம்மாதத்தில் அளவற்ற அருளாளன் அல்லாஹ் அமைத்து வைத்துள்ள நற்செயல்களுக்கான கூலிகள் – அவரவர் உளத்தூய்மைக்கு ஒப்ப – அளவற்றவை;  அருமையானவை! 

கடந்த மாதங்களில் அறிந்தோ அறியாமலோ சிந்தித்த, செய்த, செய்யத் தூண்டிய, பிறர் செய்ததைப் பாராட்டிய மாற்றமானவற்றை விட்டுத் ‘தவ்பா’ செய்வோம்!

இன்ஷா அல்லாஹ், இந்த ரமழானில், அவற்றை விட்டு ஒதுங்கி, நல்ல சிந்தனைகளில், நற்செயல்களில், அவற்றைச் செய்யத் தூண்டுவதில், பிறர் செய்வதைப் பாராட்டுவதில் முனைந்து பாடுபடுவோம்! 

உள்ளங்களைத் திறந்து வைத்துக்கொள்ளுங்கள்!  அவற்றில் தூய்மையை நிரப்புங்கள்!  அருளாளன் அல்லாஹ் அளவற்ற நன்மைகளை அள்ளித் தரக் காத்திருக்கின்றான்.

முறித்த உறவுகளை, முயன்று சேர்த்துக் கொள்ளுங்கள்.  அப்படிச் சேர்க்காவிட்டால், சுவனத்துச் சுகந்தம் நம் பக்கம் வீசாது!  ‘ரஹ்ம்’ எனும் இரத்த உறவுகள் – அவர்களை நாம் சேர்த்துக்கொள்ளாத வரை -  சுவனத்தில் தொங்கிக்கொண்டே இருக்கும்.

நின்றுவிடும் உலக வாழ்க்கையைவிட, நிலையான சுவன வாழ்க்கை மேலல்லவா?  அந்த அருள் பேற்றை அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்கி அருள்வானாக!  

அன்புடன்,
அதிரை அஹமது
ADT / அமீர்