உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, October 29, 2015

நாளை 30.10.2015 - துபையில் மார்க்க கல்வி விளக்க தொடர் நிகழ்ச்சி

மர்கஸ் அல்ஹுதா -மௌலவி.அப்துல் பாஸித் புஹாரி பயான் நிகழ்ச்சி


மர்கஸ் அல்ஹுதா - அல் தவார்-கிஸஸ்-துபை
வழங்கும்
மார்க்க கல்வி விளக்க தொடர் நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ்....


நாளை (30.10.2015) மதுக்கூரில் மவ்லவி. அப்பாஸ் அலி MISc. ஜூம்ஆ பேருரை

மதுக்கூர் மஸ்ஜில் இஃலாஸ் தவ்ஹீத் பள்ளியில் மவ்லவி. அப்பாஸ் அலி நாளை (30.10.2015) ஜூம்ஆ பேருரையை ' இஸ்லாமிய குடும்ப வாழ்வு' என்ற தலைப்பில் நிகழ்த்துகிறார்.

மதுக்கூர் சகோதரர்களின் வேண்டுகோளை ஏற்று மவ்லவி. அப்பாஸ் அலி அவர்களின் அதிரை ஜூம்ஆ குத்பா நிகழ்ச்சி மதுக்கூருக்கு மாற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து அதிரையில் வேறோரு தாஈ ஜூம்ஆ உரை நிகழ்த்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழமைபோல் வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் பிலால் நகர் மர்கஸில் வாராந்திர பெண்கள் பயான் நடைபெறும். 

31.10.2015 சனிக்கிழமை அன்று மஃரிப் தொழுகையை தொடர்ந்து மவ்லவி. அப்பாஸ் அலி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.

Wednesday, October 28, 2015

அதிரையில் மவ்லவி. அப்பாஸ் அலியின் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும்.,

அல்லாஹ் நாடினால்,


குறிப்பு: பெண்களுக்கு தனியிட வசதி உண்டு.

30.10.2015 வெள்ளிக்கிழமை அன்று ALM பள்ளிக்கூட மஸ்ஜிதில் நடைபெறும் ஜூம்ஆவில் மவ்லவி. அப்பாஸ் அலி கலந்து கொண்டு குத்பா பேருரையாற்றுகிறார்.

அனைவரும் வருக!

Tuesday, October 27, 2015

அதிரையில் நிறுத்தப்பட வேண்டிய 'ஜாவியா' எனும் வழிகேடு!

இந்தப்பதிவு புஹாரி இமாம் (ரஹ்) அவர்களின் உயரிய தொகுப்பான 'ஸஹீஹ் அல் புஹாரி ஹதீஸ் கிரந்தத்திற்கோ, அதன் உள்ளடக்த்திற்கோ அல்லது கண்ணியமிக்க புஹாரி இமாம் (ரஹ்) அவர்களுக்கோ எதிரானதல்ல மாறாக 'புகாரி ஷரீப் மஜ்லீஸ்' என்ற பெயரில் நடத்தப்பெறும் வழிகேட்டு சடங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கே.

நமதூர் அதிரையில், பல்லாண்டு காலமாக நன்மை என்ற பெயரில் மக்கள் நம்ப வைக்கப்பட்டு 'அஜ்ஜாவியத்துஸ் ஷாதுலியா' என்ற வழிகெட்ட ஷாதுலியா தரீக்கா கூட்டத்தால் 'புகாரி ஷரீஃப் மஜ்லீஸ்' என்ற பெயரில் சாப்பாட்டை பின்னனியாக கொண்ட நிகழ்ச்சி வருடந்தோறும் 40 நாட்கள் பக்தியுடன் நடத்தப்பட்டு வருகின்றன.

தங்களை பொதுவில் அடையாளப்படுத்திக் கொள்ளாத இந்த தலைமறைவு தரீக்கா கும்பலின் வழிகேடு குறித்து போதுமான விளக்கங்களும் எச்சரிக்கைகளும் பொதுமக்களுக்கு சொல்லப்படாத காரணத்தால், நன்மை என்ற பெயரில் அதிரையில் நடத்தப்பெறும் கந்தூரி தேர்த்திருவிழாக்கள், நாசகார மவ்லீதுகள், ஸலவாத்து நாரியாக்கள் போல தான் இந்த புகாரி ஷரீப் மஜ்லீஸூம் என குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் எடுத்துச் சொல்லப்பட்டிருந்தால் அதிரை மக்களில் பெரும்பாலோர் இந்தப் பாவத்திலிருந்து என்றோ விலகியிருப்பர்.

வழிகெட்ட ஷாதுலியா தரீக்கா குறித்து அறிந்து கொள்ள கீழ்க்காணும் சுட்டிகளை தொடரவும்:

குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஷாதுலிய்யா தரீக்கா!

http://suvanathendral.com/portal/?p=816

http://suvanathendral.com/portal/?p=809

அல்குர்ஆன் எச்சரிக்கின்றது,

இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுங்கள்! நீங்கள் நேர்வழியில் இருந்தால் மற்றவர்களின் வழிகேடு உங்களுக்கு எந்தத் தீங்கையும் செய்திடாது. அல்லாஹ்விடமே நீங்கள் அனைவரும் திரும்பிச் செல்லவேண்டியுள்ளது. பின்னர் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவித்து விடுவான். 5:105

ஒரு கூட்டத்தாரை அவன் நேர் வழியிலாக்கினான்; இன்னொரு கூட்டதாருக்கு வழிகேடு உறுதியாகி விட்டது; ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வை விட்டு ஷைத்தான்களை பாதுகாவலர்களாக்கிக் கொண்டார்கள் - எனினும் தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என்று எண்ணுகிறார்கள். 7:30

(நபியே!) நீர் கூறுவீராக: “மக்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு சத்தியம் வந்துவிட்டது. ஆகவே, யாரேனும் நேரிய வழியை மேற்கொண்டால் அவருடைய நேர்வழி அவருக்கே நன்மை பயக்கும். யாரேனும் வழிகெட்டுப்போனால் அவனுடைய வழிகேடு அவனுக்கே தீங்கினை அளிக்கும்! மேலும், உங்களின் எந்த விஷயத்திற்கும் நான் பொறுப்பாளன் அல்லன்.” 10:108 

மேலும், நாம் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு தூதரை அனுப்பினோம். மேலும், “அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்; தாஃகூத்துக்கு அடிபணிவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்!” என்று (அவரின் வாயிலாக அனைவரையும்) எச்சரித்தோம். அதன் பின்னர் அவர்களில் சிலருக்கு அல்லாஹ் நேர்வழியை அளித்தான். வேறு சிலர் மீது வழிகேடு விதிக்கப்பட்டுவிட்டது. எனவே, பூமியில் சுற்றித்திரிந்து பாருங்கள் பொய்யாக்கியவர்களின் கதி என்னவாயிற்று என்பதை! 16:36

அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால், அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி) 

புஹாரி கிரந்தத்தை அல்குர்ஆனைப் போல் வாசிப்பதால் யாதொரு பயனொன்றும் இல்லை. அல்குர்ஆனுக்கு மட்டுமே எழுத்துக்கு ஒரு நன்மை என முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளதை மேற்காணும் திர்மிதி ஹதீஸின் வழியாக அறிகிறோம் மாறாக வஹியை / நபிமொழிகளை சுமந்து கொண்டுள்ள புஹாரி ஹதீஸ் கிரந்தம் நித்தம் நம் வாழ்வில் பின்பற்றப்பட வேண்டியதே அன்றி பரயாணம் செய்யப்பட அல்ல.

மார்க்கத்தின் பெயரால் புதிதாக உண்டாக்கப்படுவை குறித்து நபிகளாரின் (ஸல்) எச்சரிக்கைகள்:

'நாளை மறுமையில் நபியவர்கள் ஹவ்ழிலிருந்து தனது திருக்கரத்தால் தண்ணீரைப் புகட்டிக் கொண்டிருப்பார்கள் 'அங்கு அந்தத் தண்ணீரை அருந்தியவருக்கு தாகமே ஏற்படாது' ஆனால் அங்கு வரும் சிலர் வானவர்களால் தடுக்கப்படுவர். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள், அவர்களை விடுங்கள் அவர்கள் எனது சமூகத்தினர் என கூறுவார், உங்களுக்குப் பின் இவர்கள் (மார்க்கத்தின் பெயரால்) உருவாக்கிய புதியவைகளை நீங்கள் அறியமாட்டீர்கள் என்று வானவர்கள் கூறுவர். எனக்குப் பின் மார்க்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியவர்களுக்கு கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும் என்று நபியவர்கள் கூறிவிடுவார்கள்'. (புஹாரி).

மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் அனைத்து பித்அத்துகளும் வழிகேடும், தடுக்கப்பட்டதுமாகும். 'நான் உங்களுக்கு புதியவைகளை எச்சரிக்கின்றேன், ஒவ்வொரு புதியவைகளும் பித்அத்தாகும், ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ தாவுத், திர்மிதி)

மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும் பித்அத்துகள் இது தடுக்கப்பட்டதாகும். ஏனெனில் மார்க்கம் என்பது பரிபூரணமானதாகும். 'எவர் மார்க்கத்தில் நாம் ஏவாத ஒன்றை புதிதாக ஏற்படுத்துகின்றாரோ அது நிராகரிக்கப்படும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்.)

மற்றோர் அறிவிப்பில்: 'எவர் நாம் கட்டளையிடாத ஒன்றை செய்வாரோ அது நிராகரிக்கப்படும்' (முஸ்லிம்)

ஆகா, மேற்காணும் எச்சரிக்கைகளின் அடிப்படையில் 40 நாட்கள் புஹாரி ஹதீஸ் தொகுப்பின் பெயரில் நடத்தப்பெறும் இந்த சாப்பட்டு சடங்கிற்கு அல்குர்ஆனிலிருந்து அல்லது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலிருந்து நேரடியாகவோ மறைமுகமாவோ எந்தவிதமான ஆதாரமும் இல்லை.

ஒரு வாதத்திற்காக சொல்வதென்றால், இந்த ஹதீஸ் கிரந்தத்தை தொகுத்த கண்ணியத்திற்குரிய புஹாரி இமாம் (ரஹ்) அவர்கள் கூட எங்கேயும் இப்படி ஒரு சடங்கை செய்யுமாறு சொல்லவில்லை (அப்படி சொல்லியிருந்தாலும் தூக்கியெறிபட வேண்டும் என்பதில் முஸ்லீம்களிடம் வேறு கருத்தில்லை) என்றால் இது கண்டிப்பாக ரசூல் (ஸல்) அவர்கள் சபித்த வழிகேடு அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

'அல்லாஹ் வின் மீது சத்தியமாக, உமக்கு முன்னிருந்த வகுப்பார்களுக்கும் நாம் (தூதர்களை) அனுப்பி வைத்தோம் – ஆனால் ஷைத்தான் அவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயல்களையே அழகாக்கி வைத்தான் – ஆகவே இன்றைய தினம் அவர்களுக்கும் அவனே உற்ற தோழனாக இருக்கின்றான் – இதனால் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு' (அந்நஹ்ல்: 63)

மேற்காணும் வசனத்தின் அடிப்படையில், ஷைத்தான் இதை நமக்கு அழகாக காட்டியுள்ளதன் விளைவாகத் தான் இது சம்பந்தமான செய்திகளும் போட்டோக்களும் கண்களை ஏமாற்றுகின்றன. மேலும், நன்மையாக நம்மை நம்ப வைத்துள்ள ஷைத்தானின் தோழர்களான ஷாதுலியா தரீக்காகாரர்களின் 'புஹாரி ஷரீஃப் மஜ்லீஸ்' எனும் தீய வழிகேடு பல்லாண்டுகளாக அதிரை மக்களின் ஆதரவை பெற்றுள்ளதோடு நமது அண்டை ஊரான முத்துப்பேட்டையையும் சில ஆண்டுகளாக வழிகேட்டில் கொண்டு விட்டுள்ளது. காரணம் நமதூர் ஆலிம்களுக்கிடையே ஏற்பட்ட நீயா? நானா? போட்டி என்பது ஊரறிந்த தனிக்கதை.

இந்த வழிகேடு குறித்து மக்களை எச்சரிக்கை வேண்டிய ஆலிம்களே முன்னிற்று இந்த வழிகேட்டை நடத்துவதால் அவர்களை நம்பி ஒரு பயனுமில்லை, வேண்டுமானால் ஏட்டிக்குப் போட்டியாக களமிறங்குவார்களே ஒழிய இந்த சமூக தீமையை ஒழிக்க முன்வர மாட்டார்கள்.

நமதூர் பொதுமக்களிடம் வேண்டுவதெல்லாம் இதுதான், நம்மில் ஊடுறுவியுள்ள நவீன முஃதஸ்ஸிலா கூட்டமொன்று புஹாரி இமாம் போன்ற பெரும் பெரும் மேதைகளின் கடும் தியாகத்தினால் சேகரிக்கப்பட்ட பலநூறு ஹதீஸ்களை பகுத்தறிவுக்கு ஒத்துவரவில்லை என கூறி படிப்படியாக முழுங்கி வருகின்றனர். இந்த நிலையில் இதுபோன்ற வெட்டி சடங்குகளை கைவிட்டு விட்டு ஹதீஸ்களை வாழ்வில் பின்பற்றி பாதுகாப்பதே முக்கியம் என்பதை முஸ்லீம்கள் உணர வேண்டும்.

அதிரை தாருத் தவ்ஹீத் குழுவினர், நன்மையின் பெயரால் செய்யப்படும் கந்தூரி, மவ்லீது போன்ற அனாச்சாரங்களை, இணைவைப்பு சடங்குகளை எதிர்ப்பது போல், அதற்குரிய விளக்கங்களை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் வழங்கி வருவதுபோல் இந்த 'ஜாவியா' எனும் ஷாதுலியா தரீக்கா வழிகேட்டையும் மக்கள் மத்தியில் இன்னும் தெளிவாக அம்பலப்படுத்தி, மக்களை தீமையிலிருந்து தடுக்க முன்வர வேண்டும். 

உள்ளூர் இஸ்லாமிய இணைய தளங்களுக்கும் இத்தீமைகளை எடுத்துச் சொல்லி தடுக்கும் பொறுப்பிருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

நன்றி: 
இஸ்லாம் கல்வி, சுவனத் தென்றல், ரீட்இஸ்லாம், தமிழில்குர்ஆன் ஆகிய தளங்களின் உதவியுடன் தொகுக்கப்பட்டது.