உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, December 29, 2014

02.01.2015 - துபை - அல் மனார் சென்டரில் மௌலவி.அப்துல் பாஸித் புஹாரி மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி


04.01.2015 அன்று அதிரையில் அப்பாஸ் அலி, ததஜவினருக்கு அறிய வாய்ப்பு!

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இன்ஷா அல்லாஹ், அதிரையில் எதிர்வரும் 04.01.2015 ஞாயிறு அன்று மஃரிப் தொழுகையை தொடர்ந்து...


ததஜவினருக்கு அறியதோர் வாய்ப்பு

1.    ஒரு சில மாதங்களுக்கு முன் மவ்லவி. இஸ்மாயில் ஸலஃபி அவர்கள் காரைக்கால் நகருக்கு வருகை தந்திருந்தபோது, ததஜவினர் 'சூனியம்' குறித்து தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும், தெளிவுபெற வேண்டி சிறப்பு கேள்வி பதில் நேரத்தை ஒதுக்கித் தரும்படியும் பகிரங்கமாக ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி வேண்டிக் கொண்டிருந்தனர். எனவே, அவர்களும் அவர்களின் மனநிலையில் உள்ள ஏனைய ததஜவினரும்...

2.    ததஜ தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தபடி, மவ்லவி அப்பாஸ் அலி அவர்கள் பேசும் இடங்களில் எல்லாம் சூனியம் சம்பந்தமாக கேள்வி கேட்டு அவரை திணறடிக்க விரும்பும் ததஜவினரும்...

3.    மார்க்கத்தை அதன் தூய வடிவில் விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கேள்வி கேட்க விரும்பும் ததஜ சகோதரர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும்...இந்த அறிய வாய்ப்பை தவறவிடாதீர்.

மவ்லவி. அப்பாஸ் அலி அவர்களின் உரைக்குப்பின் நேரடியாக கேள்வி கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்.

மவ்லவி. அப்பாஸ் அலி அவர்களின் உரை கீழ்க்காணும் தளங்களில் நேரலை செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்.

www.tmclivetelecast.com
www.qurankalvi.com
www.suvanacholai.com

www.jubaildawahtamil.blogspot.com

Sunday, December 28, 2014

'நல்லாசிரியர்' விருது பெற்ற முதுகலை ஆசிரியர் 'மீரா' என்கிற அதிரை சாகுல் ஹமீது !


அதிரையை சேர்ந்தவர் F. சாகுல் ஹமீது. அனைவராலும் 'மீரா' என அன்புடன் அழைக்கப்படுபவர். இவர் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ள முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சிறுவயது முதல் மார்க்க பற்றுதலை பேணி நடக்கும் இவர் கல்வி பணியில் எந்நேரமும் மூழ்கி இருப்பவர்.

இந்நிலையில் கேஎஸ்ஆர் குரூப் ஆஃப் இன்ஸ்ட்டியூஷன் சார்பில் தமிழகமெங்கும் பணிபுரியும் சாதனை நிகழ்த்திய தலைசிறந்த ஆசிரியர்களுக்கு 'நல்லாசிரியர்' விருது வழங்குவதற்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பரிசிலீனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். இறுதியில் விருதுக்காக 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் நமதூர் மேலத்தெருவை சேர்ந்தவரும், மர்ஹூம் ஷரீஃப் அப்பா அவர்களின் பேரனுமான சாகுல் ஹமீது அவர்களும் ஒருவர். அதிக மதிப்பெண்கள்  - அதிக தேர்ச்சி - சிறந்த கல்விப்பணி - மாணவர்கள் நலனில் அதிக அக்கறை உள்ளிட்ட தகுதியின் அடிப்படையில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். (ஷரீஃப் அப்பா அவர்கள் குறித்து நமது தளத்தில் இந்த மாதம் வெளிவந்த குறும் நினைவூட்டலை படிக்க):
http://adiraiaimuae.blogspot.ae/2014/12/blog-post_71.html


இவருக்கு திருச்செங்கோட்டில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய தேசிய அறிவியல் அகாடமி தலைவர் ( INSA ) டாக்டர் ராகவேந்திரா கடாகர் அவர்களிடமிருந்து பெற்றார். நல்லாசிரியர் விருது பெற்ற சாகுல் ஹமீது அவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள் , குடும்பத்தினர், ஊர் பிரமுகர்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்தினர்.

Saturday, December 27, 2014

அப்பாஸ் அலியை கண்டு வெருண்டோடிய ததஜ எனும் காட்டுக்கழுதை எங்கே?


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பான சகோதரர்களே !

டிஎன்டிஜே என்னுடன் விவாதிக்க வராமல் ஓட்டமெடுத்ததை அறிவீர்கள். நான் குறிப்பிட்ட எட்டு டிஎன்டிஜே அறிஞர்களில் ஒருவருக்கு கூட என்னிடம் விவாதிக்க தெம்பில்லை. திராணியில்லை. மாறாக சையது இப்ராஹீமை அனுப்பி விவாதத்தை அர்த்தமற்றதாக்கும் முயற்சியை செய்தார்கள்.

நான் இந்த அறிஞர்களை தொடர்ந்து விவாதத்திற்கு அழைத்தேன்.ஆனால் எந்தப் பயனுமில்லை. என்னுடைய அழைப்பிற்கு பதிலளிக்காமல் வழக்கம் போல் நான் விவாதத்திலிருந்து ஓடிவிட்டதாக அவர்களாகவே அறிவித்துக்கொண்டு அவர்களே ஓட்டமெடுத்தார்கள்.

அவர்கள் இவ்வாறு அறிவித்த பிறகும் வலியுறுத்தினேன். அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இதன் மூலம் விவாதத்திற்கு வரமாட்டோம் என்பதை தெரிவித்துவிட்டார்கள்.
 
விவாதத்தில் பீஜேவை எதிர்கொள்ளத் துணிந்த எனக்கு கேள்வி பதில் நிகழ்ச்சியில் டிஎன்டிஜே தொண்டர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது பெரிய விசயமில்லை. இதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் என்னிடம் இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இன்ஷாஅல்லாஹ் நான் பதிலளிப்பேன். ஆனால் நான் கேட்கின்ற கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் இவர்கள் திணறுவதை நீங்கள் காண்பீர்கள்.

தற்போது நான் சூனியம் தொடர்பாக பீஜே செய்த பித்தலாட்டத்தையும் வழிகேடுகளையும் அம்பலப்படுத்தும் நுால் ஒன்றை தயார் செய்துகொண்டிருக்கிறேன். பாதி வேலை நிறைவுற்றுவிட்டது. இன்னும் சில தினங்களில் இன்ஷாஅல்லாஹ் அது வெளிவரும் துஆ செய்யுங்கள்.

அப்பாஸ் அலி

28.12.2014 ஞாயிறு அன்று மேலப்பாளயத்தில் அப்பாஸ் அலி உரையாற்றுகின்றார்

அன்பார்ந்த சகோதரர்களின் கவனத்திற்கு , 

மேலப்பாளையம் "மஸ்ஜித்தவ்பா " ஜமாஅத் சார்பாக ,

"ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் , குர்ஆனுக்கு முரண்படுமா ? "

என்ற தலைப்பில் 
மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 
வ௫ம் ஞாயிறு (28.12.2014) அன்று மஃரிப் தொழுகையை தொடர்ந்து மஸ்ஜித் தவ்பா பள்ளிவாசலில் வைத்து நடைபெறவுள்ளது.

மேற்படி சிறப்புரையை ,

_Tntj. வின் முன்னாள் 
மேலாண்மைக்குழு உறுப்பினர் 

சகோதரர் , "மௌலவி . அப்பாஸ் அலி Misc. " அவர்கள் ஆற்றவுள்ளார் .

சகோதரர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு , உரையின் இறுதியில் நடைபெறும்  "கேள்வி - பதில்" நிகழ்ச்சியில்  மேற்படி தலைப்பு  தொடர்பாக  எழும் சந்தேகங்களை கேட்டு மார்க்க விளக்கம் பெற அன்புடன் அழைக்கிறது.

"மஸ்ஜித் தவ்பா ஜமாஅத் ".

 
 

அன்பார்ந்த சகோதரர்களின் கவனத்திற்கு , 

மேலப்பாளையம் "மஸ்ஜித்தவ்பா " ஜமாஅத் சார்பாக ,

"ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் , குர்ஆனுக்கு முரண்படுமா ? "
என்ற தலைப்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

வ௫ம் ஞாயிறு (28.12.2014) அன்று மஃரிப் தொழுகையை தொடர்ந்து மஸ்ஜித் தவ்பா பள்ளிவாசலில் வைத்து நடைபெறவுள்ளது.

மேற்படி சிறப்புரையை Tntj. வின் முன்னாள்
மேலாண்மைக்குழு உறுப்பினர்
சகோதரர் , "மௌலவி . அப்பாஸ் அலி Misc. " அவர்கள் ஆற்றவுள்ளார் .

சகோதரர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு , உரையின் இறுதியில் நடைபெறும் "கேள்வி - பதில்" நிகழ்ச்சியில் மேற்படி தலைப்பு தொடர்பாக எழும் சந்தேகங்களை கேட்டு மார்க்க விளக்கம் பெற அன்புடன் அழைக்கிறது.
"மஸ்ஜித் தவ்பா ஜமாஅத் ".

Wednesday, December 24, 2014

அதிரையில் அப்பாஸ் அலி அவர்கள் மார்க்க விளக்க பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்கள்


அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இன்ஷா அல்லாஹ், மிக மிக விரைவில்... அதிரையில்...

1.    வழிகெட்ட முஃதஸ்ஸிலா கொள்கையா? குர்ஆன் ஹதீஸா?

2.    ஒரு தனி மனிதனின் (நுணுக்கமாக) திணிக்கப்பட்ட பகுத்தறிவா? குர்ஆன் ஹதீஸா?

என்கின்ற நிலை ஏற்படுத்தப்பட்ட போது துணிந்து ஷைத்தானிய சக்திகளை விட்டும் ஒதுங்கிக் கொண்டு, குர்ஆன் ஹதீஸ் மட்டுமே இம்மை மறுமைக்கான வெற்றிக்கு ஒரே வழி என தேர்வு செய்து கொண்ட 

சகோதரர் அப்பாஸ் அலி Misc. அவர்கள் 

மார்க்க விளக்க பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகின்றார்.

முழு விபரங்கள் விரைவில் இன்ஷா அல்லாஹ்...

'குர்ஆனை புரிந்து கொள்ளுங்கள்' அதிரை ALM பள்ளியில் நடைபெறும் சிறப்பு முகாம்


அதிரையில் உள்ள பள்ளிக்கூட நிறுவனர்களில் ALM பள்ளியின் தாளாளர் சகோதரர் அப்துல் ரஜாக் அவர்கள் சற்று வித்தியாசமான சிந்தனை கொண்டவர்கள். பொதுவாக பள்ளிக்கூட நிறுவனர்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை மாணவர்களின் கல்வித்திறனை அதிகரிக்கச் செய்யும் ஒரு நவீன கருவியாக மட்டும் கருதும் இக்காலத்தில் சகோதரர் அப்துல் ரஜாக் அவர்கள் ஆசிரியர்களின் நலன், அறிவுத்திறன், கல்வியை போதிக்கும் மாண்பு, உலகம் மற்றும் மார்க்க அறிவு ஆகியவற்றையும் அதிகரிக்க அக்கறை கொள்வது வியப்பான ஒன்றே.

தன்னுடைய ALM பள்ளி மாணவர்கள் சிறந்தவர்களாக உருவாவது போலவே அவர்களை உருவாக்கும் ஆசிரியைகளுக்கும் தேவையான மேலதிக பயிற்சியை, மனோபலத்தை உருவாக்க வேண்டும் என்ற நன்னோக்கில் ALM பள்ளிக்கூடத்தில் பணியாற்றும் ஆசிரியைகளுக்கு பல்வேறு காலகட்டங்களில் பயனுள்ள பல நிகழ்ச்சிகளை நேரிடையாகவும் பவர்பாயிண்ட் திரையிடல்கள் வழியாகவும் ஏற்பாடு செய்துள்ளார்.


கடந்த சில மாதங்களுக்கு முன் மவ்லவியும் மனோவியல் ஆலோசகருமான அப்துல் ஹமீது ஷரயி அவர்களை கொண்டு 'மாணவர்களை கையாள்வது மற்றும் கல்வியில் நாட்டமுள்ளவர்களாக மாற்றுவது' குறித்து சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள், அதில் ஆசிரியைகள், ஊழியர்கள், மாணவ மாணவியர் என அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

அந்த அடிப்படையிலேயே தற்போதும் ஆசிரியைகளுக்கு பிரயோஜனம் அளிக்கக்கூடிய வகையில், 'அல்குர்ஆனை எவ்வாறு எளிதாக ஓதுவது மற்றும் புரிந்து கொள்வது' என்ற கருத்தின் கீழ் 3 நாள் பாடத்திட்டம் ஒன்றை மவ்லவி மதார்ஷா ஃபிர்தவ்ஸி அவர்கள் பவர் பாயிண்ட் திரை விளக்கம் மூலம் வழங்கி வருகிறார்கள்.

நேற்று துவங்கிய இவ்வகுப்புக்கள் நாளையுடன் (25.12.2014 வியாழன் அன்று) இந்த வகுப்புக்கள் நிறைவடையவுள்ளன. பயனுள்ள இந்த வகுப்பில் ஆசிரியைகள், வழமைபோல் அதிகமான மாணவிகள், மாணவர்கள் மட்டுமின்றி பொது அழைப்பு விடுக்கப்பட்டு பொதுமக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.



பள்ளியின் சார்பாக நடைபெற்ற இந்த 3 நாள் சிறப்பு முகாமுக்கான ஏற்பாடுகளை சகோதரர் அப்துல் ரஜாக் அவர்களுடன் இணைந்து சகோதரர் மீடியா மேஜிக் நிஜாமுதீன், அப்துல் ரஹ்மான் ஆகியோர் செய்திருந்தனர். சகோதரர் கமால் வீடியோ பதிவு செய்தார். இதன் வீடியோ பதிவுகள் இனி வரும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கான ஒரு காணொளி பாடமாக தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

செய்தி வடிவம்
அதிரை அமீன்
படங்கள்
ஆசிக் அஹமது

குறிப்பு: ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'UNDERSTAND AL-QURAN ACADEMY' எனும் இந்நிறுவனம் இதுவரை எண்ணற்ற குர்ஆனிய கல்வியாளர்களை உருவாக்கியுள்ளது. இதன் கிளை நிறுவனம் சென்னையிலும் செயல்பட்டுக் கொண்டுள்ளது, மாதாந்திர வகுப்புக்களும் நடைபெற்று வருகின்றன. இதுபோன்றதொரு தொடர் வகுப்பு கடந்த 2 வருடங்களாக வெள்ளிதோறும் துபை, தெய்ரா, அல் பரஹாவிலுள்ள அல் மனார் சென்டரில் சகோதரர் (திருத்துறைபூண்டி) ஜலால் அவர்களால் நடத்தப்பட்டு பெண்கள் உட்பட நூற்றுக்கணக்காணோர் பயன்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகுப்பு குறித்து வெளிவந்த விளம்பரமொன்றை மறுபதிவு செய்கின்றோம்.


Tuesday, December 23, 2014

துபையில் அதிரையர் அர்ப்பணிப்பு, செயல்திறனுக்காக கௌரவிப்பு


கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் துபையில் செயல்பட்டு வரும் Explorer என்கிற நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த வணிகரீதியான வரைபடங்கள், வழிகாட்டி கையேடுகள், சிறப்பு மலர்கள் மற்றும் வளைகுடா நாடுகள் குறித்த புகைப்பட புத்தகங்கள் போன்ற 150 வகையான தயாரிப்புகளை வழங்கிவரும் நிறுவனமாகும்.



இந்த நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஆபிஸ் அஸிஸ்டெண்ட்டாக இணைந்து இன்று தனது அர்ப்பணிப்பு மற்றும் செயல்திறனால் Printing Organizer என்கிற பொறுப்புக்கு உயர்ந்துள்ள அதிரை மேலத்தெருவை சேர்ந்த சகோதரர் சபீர் அஹமது S/o. ஹமீது சுல்தான் அவர்களை பாராட்டி கடந்த வாரம் நற்சான்றிதழுடன் ஐபேட் ஒன்று மற்றும் திர்ஹம் 1000 ஆகியவற்றை வழங்கி கௌரவித்தார் Explorer நிறுவனத்தின் CEO Mr. Alister Mckenzie.

ஒரு அயல்நாட்டு நிறுவனத்தின் தனிநபர் கௌரவிப்பாக இருந்தாலும் இதுவும் அதிரைக்கும், அதிரையர்களுக்கும் பெருமை சேர்க்கின்ற, ஊக்கம் தருகின்ற ஒரு நிகழ்வே. கௌரவிக்கப்பட்ட சகோதரர் சபீர் அஹமது அவர்களையும் கௌரவித்த Explorer நிறுவனத்தையும் பாராட்டுகின்றோம், அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துகின்றோம்.

அதிரைஅமீன்






Saturday, December 20, 2014

அபுதாபியில் நடைபெற்ற TIYAவின் சிறப்பு மலர்க்குழு ஆலோசணை கூட்டம்

அமீரகம் மற்றும் அதிரை மேலத்தெருவில் செயல்படும் அதிரை தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்க அமைப்பு அல்லாஹ்வின் அருளால் தனது 10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற நிகழ்வை சிறப்பிக்கும் வண்ணமும் TIYAவின் சேவைகள் எதிர்கால தலைமுறைக்கான வரலாறாய் மக்கள் மத்தியில் பதியப்பட வேண்டும் என்பதற்காகவும் சிறப்பு மலர் ஒன்றை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
இச்சிறப்பு மலர் சம்பந்தமான ஆலோசணை கூட்டம் 19.12.2014 வெள்ளியன்று மாலை அஸருக்குப்பின் அபுதாபி, முஸஃபாவில் தலைவர் முகமது மாலிக் அவர்கள் தலைமையிலும், நிர்வாகிகள், உறுப்பினர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையிலும் நடந்தேறியது. 
 
இந்நிகழ்வுக்கு அபுதாபி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும் மேலத்தெருவை சேர்ந்த மூத்த சகோதரருமான M. காதிர் முகைதீன் காக்கா அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்கள், அவர்களிடமிருந்து பயன்மிக்க பல ஆலோசணைகள் பெறப்பட்டன.
 
இவ்வாலோசணை அமர்வில் சிறப்பு மலர் குறித்து பல்வேறு கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. மேலும் இச்சிறப்பு மலருக்கான வேலைகளை முன்னெடுத்து செல்வதற்காக அறுவர் கொண்ட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது. 
 
இறுதியாக, கஃபாராவுடன் ஆலோசணை அமர்வு நிறைவுற்றது.
தகவல்
அபுசுமையா
 
Thanks to : TIYA

09.01.2015 வெள்ளியன்று சவூதியில் CMN சலீம் அவர்களின் மாபெரும் கல்வி நிகழ்ச்சி


Friday, December 19, 2014

தொடர் - 5: (பீஜேயின்) ஒரு துரோக வரலாறு மீண்டும் திரும்புகிறது

Saleem Karaikal

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு
த.மு.மு.க. விலிருந்து பி.ஜே. அவர்கள் வெளியேற்றப்பட்டப்பிறகு, அவர் வைத்த குற்றச்சாட்டுகளில் பிரதானமான குற்றச்சாட்டு த.மு.மு.க. வளர்ச்சிக்கு தவ்ஹீத் தடையாக இருக்கிறது என்று ஜவாஹிருல்லாஹ் கூறினார். அதை எழுத்துப்பூர்வமாகவும் தந்தார். ஆகவே தான் விலகுவதாக சொன்னார். உண்மையில் த.மு.மு.க. வளர்ச்சிக்கு தவ்ஹீத் தடையாகத்தான் இருந்ததா? பி.ஜே. அவர்கள் வைத்த குற்றச்சாட்டு உண்மைதானா? என்பது குறித்தெல்லாம் யூகத்தின் அடிப்படையில் இல்லாமல், விருப்பு வெறுப்பு இல்லாமல் தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் பார்க்க வேண்டும்.
என்பதை அறிவதற்கு முன் ஒன்றை நாம் தெளிவாக தெரிந்துக்கொள்ள வேண்டும்.

த.மு.மு.க. என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் தவ்ஹீதை பிரச்சாரம் செய்வதற்காக அல்ல. முஸ்லிம்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒட்டுமொத்த முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க ஆரம்பிக்கப்பட்டதுதான் த.மு.மு.க. இந்த அஜெண்டாவை பி.ஜே. அவர்களும் ஒப்புக்கொண்டு, தவ்ஹீதை சமரசம் செய்துக்கொண்ட நிலையில்தான் அதன் நிறுவனராக இருந்தார் என்ற உண்மை த.மு.மு.க. வின் ஆரம்ப நிலை நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொண்ட அனைவருக்கும் தெரியும். தவ்ஹீதை பிரச்சாரம் செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கமாக இருந்து, அங்கே தவ்ஹீதை பேசவிடவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்தால் அதிலே நியாயம் இருந்திருக்கும் என்பதை மக்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
த.மு.மு.க. வின் நிறுவனர் என்றவுடன், த.மு.மு.க. என்ற இயக்கம் பி.ஜே. அவர்களின் சிந்தனையில் உதித்தது என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மை அதுவல்ல. முஸ்லிம்களுக்கு வலுவான ஒரு அரசியல் இயக்கம் வேண்டும் என்று சிந்தித்தவர்கள் ஜவாஹிருல்லாஹ் அவர்களும், பாக்கர் அவர்களும்தான். சிந்தனைக்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்தபோதுதான் பி.ஜே. அவர்களை இதில் சேர்த்துக்கொள்ளலாமா? வேண்டாமா? என்பதே பேச்சுவார்த்தையில் இருந்தது. தவ்ஹீத் என்ற பெயரில் சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்துகிறார். இந்த இயக்கத்திற்கு இவர் பொருத்தமானவர் இல்லை என்பதே அப்போதைய கருத்தாக இருந்தது. பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகு சமுதாயம் குறித்த அக்கறையுடன் வலிமையாக தன் கருத்துக்களை அல்ஜன்னத்தில் எழுதுகிறார். தவ்ஹீத் கொள்கையை மட்டும் எழுதவில்லை.அவருடைய சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று பாக்கர் அவர்கள்தான் இவருக்காக பரிந்துரைத்தார். இறுதியாக பாக்கர் அவர்களின் வற்புறுத்தல் காரணமாகவே பி.ஜே. இதில் ஒருவராக சேர்த்துக்கொள்ளப்பட்டார். இந்த உண்மையை பி.ஜே. அவர்களால் கூட இன்றைக்கு மறுக்க முடியாது.
அப்போதைய நிலையில் பி.ஜே. அவர்களுக்கும் தன் பாதுகாப்புக்காக ஒரு அரசியல் இயக்கம் தேவைப்பட்டது. தவ்ஹீதை பிரச்சாரம் செய்ய தடை விதிக்கிறார்கள், த.மு.மு.க. வளர்ச்சிக்கு தவ்ஹீத் தடையாக உள்ளது என்றெல்லாம் இன்றைக்கு குற்றச்சாட்டுகளை வைக்கும் பி.ஜே. அவர்கள் அன்று தன்னுடைய பாதுகாப்புக்காக தவ்ஹீத் கொள்கையை சமரசம் செய்துக்கொண்ட நிலையில்தான் அதில் தன்னை இணைத்துக்கொண்டார் என்ற உண்மை த.மு.மு.க. வின் ஆரம்ப நிலை நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொண்ட அனைவருக்கும் தெரியும்.
வில்லாபுரம் என்ற ஊரில் முஸ்லிம் பேரவை என்ற பெயரில் முஸ்லிம்களுக்கான அரசியல் இயக்கம் தோற்றுவிப்பது குறித்து பேசுவதற்காக ஒன்று கூடினார்கள். இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்களில் முக்கியமானவர்கள் ஜவாஹிருல்லாஹ், பாக்கர், ஜே.எஸ்.ரிபாய் ஆகியோர் ஆவார்கள். பி.ஜே. அவர்களும் அதில் கலந்துக்கொண்டார்கள். தவ்ஹீதை பிரச்சாரம் செய்வதற்காக கூடிய கூட்டம் அல்ல இது என்பது அப்பொழுதே பி.ஜே. அவர்களுக்கு நன்றாக தெரியும். எப்படி சொல்கிறோம் என்றால், அதில் கலந்துக்கொண்டவர்கள் அத்தனை பெரும் தவ்ஹீத் சிந்தனை உள்ளவர்கள் கிடையாது. அதில் பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பதினைந்து பேரில் திண்டிவனம் இடிமுரசு இஸ்மாயில் போன்றவர்கள் அப்பொழுது இஸ்லாத்தின் அடையாளங்களிருந்தே தூரமாகி இருந்தவர்கள். மௌலவி இஸ்மாயில் நாஜி அவர்கள் மத்ஹபை பின்பற்றக்கூடியவர்கள். ஜாக் அமைப்பில் இருந்தபோதும், இப்பொழுது ததஜ வில் செயல்பட்டுக்கொண்டிருக்கும்போதும் இந்த பின்னணி உள்ளவர்களுடன் பி.ஜே. அவர்கள் தன்னை இணைத்துக்கொள்வாரா? நிச்சயமாக மாட்டார். பிறகு ஏன் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டார் என்பதை மக்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
அதன் பிறகு த.மு.மு.க. இறுதி செய்யப்பட்டு அதன் அறிமுக நிகழ்ச்சி மெஜெஸ்டிக் ஹோட்டலில் நடைபெற்றபோது நிகழ்ச்சி ஆரம்ப கிராஅத் ஓதியபோதும், நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் முழக்கங்கள் எழுப்பியபோதும் அதை ஆட்சோபிக்காமல் மேடையில் பி. ஜே. அவர்கள் அமர்ந்திருந்தது த.மு.மு.க.விற்காக தவ்ஹீத் கொள்கையை சமரசம் செய்துக்கொண்ட நிலையில்தான் என்பதை இப்பொழுது தவ்ஹீதுக்காகத்தான் பி.ஜே. பிரிந்து வந்தார் என்பதை நம்பிக்கொண்டிருக்கும் தவ்ஹீத் சகோதரர்கள் புரிந்துக் கொள்ளவேண்டும். அதுமட்டுமல்ல மாநில, மாவட்ட அளவில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளில் தவ்ஹீத் கொள்கையை ஏற்றுக்கொள்ளாதவர்களும் இருந்தனர். பி.ஜே. அவர்கள் இதை ஒப்புக்கொண்டுதான் த.மு.மு.க. தலைமை பொறுப்பை ஏற்றிருந்தார்கள்.
அதுமட்டுமல்ல இவர் தவ்ஹீதை மட்டும் பிரச்சாரம் செய்துக்கொண்டிருந்த காலத்தில் தமிழகத்தில் பல ஊர்களில் இவர் உள்ளேயே நுழையமுடியாத நிலை இருந்ததை யாரும் மறுக்க முடியாது. த.மு.மு.க. ஆரம்பிக்கப்பட்ட பிறகுதான் த.மு.மு.க. பேனரில் பல ஊர்களுக்கு சென்று தவ்ஹீதை பிரச்சாரம் செய்ய இவரால் முடிந்தது என்ற உண்மை இன்றைக்கு தந்திரமாக மறைக்கப்பட்டு, தவ்ஹீதிற்கு த.மு.மு.க. தடையாக இருந்தது என்ற பொய்யை தவ்ஹீத் சகோதரர்களை நம்பவைத்து இன்றைக்கு சமுதாயத்தை இரண்டாக பிளந்து ஒரு வரலாற்று துரோகத்தை பி.ஜே.அவர்கள் செய்திருக்கிறார் என்பதை மக்கள், குறிப்பாக தவ்ஹீத் சகோதரர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
உண்மை நிலை என்னவென்பதை ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சற்று மாற்றி சொல்லிவிட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். த.மு.மு.க. வளர்ச்சிக்கு தவ்ஹீத் ஒருபோதும் தடையாக இல்லை. ஆனால் பி.ஜே. என்ற தனி மனிதர் இந்த சமுதாயத்தில் எப்படி அறியப்பட்டார், பெரும்பாலான முஸ்லிம்களிடத்தில் அவர் குறித்தான பார்வை எப்படி இருந்தது என்பதுதான் தடையாக இருந்தது. தார்மீக முறையில் இதை சொல்வதற்கு எனக்கு கடமை இருக்கிறது. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நான் சொல்கிறேன் என்றால் உணர்வு நிருபராக நானும், புகைப்பட நிபுணர் சகோதரர் உசேன் ( இவர் தற்போது விகடன் குழுமத்தில் முதன்மை புகைப்பட நிபுணராக உள்ளார் ) அவர்களும் களத்தொகுப்பு செய்திகளுக்காக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களுக்கு சென்றபோது சமுதாயத்தில் இவர் மீதான பார்வை எப்படி இருந்தது என்பது கண்கூடாக தெரிந்தது. குறிப்பாக பழனிபாபா அவர்கள் கொலை செய்யப்பட்டு தமிழகத்தில் கொந்தளிப்புகள் ஏற்பட்டபோதும், கே.கே.நகர் இமாம் கொலை செய்யப்பட்டபோதும், கோவை குண்டுவெடிப்பு நிகழ்ந்து அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டபோதும்.........
இன்ஷா அல்லாஹ் உண்மை வரலாறு தொடரும்....


முந்தைய தொடர்களை வாசிக்க கீழுள்ள சுட்டியை சுட்டுங்கள்.

தொடர்-4: (பீஜேயின்) ஒரு துரோக வரலாறு மீண்டும் திரும்புகிறது


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு
இந்த கட்டுரையை நான் தொடர்ந்து எழுதுவதன் நோக்கத்தை மறுபடியும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்தை அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வழி நடத்த ஒரு தலைவர், ஒரு இயக்கம் என்ற நிலை இருந்திருக்குமேயானால் இந்த சமூகம் என்றோ அனைத்து மட்டங்களிலும் தன்னிறைவையும், அரசு அதிகாரங்களில் தன் பங்களிப்பையும், தனது சமூக பாதுகாப்பையும் உறுதி செய்துகொண்டிருக்கும். ஆனால் முக்கியமான ஒரு கால கட்டத்தில் இந்த சமூகம் இரண்டு தலைவர், இரண்டு இயக்கம் என்று உடைந்தது. அப்துஸ் சமது அவர்கள் தலைமையில் ஒன்றும், அப்துல் லத்தீப் அவர்கள் தலைமையில் ஒன்றுமாக இரண்டாக உடைந்தது. மற்றுமொரு அரிய சந்தர்பமாக தமிழ் பேசும் முஸ்லிம்களின் எழுச்சியாக உருவாக ஆரம்பித்த த.மு.மு.க. மறுபடியும் ஒரு சாபக்கேடாக இன்று இரண்டு தலைமைகளில் ஒன்று த.மு.மு.க. வாகவும் மற்றொன்று த.த.ஜ வாகவும் உடைந்து நிற்கிறது. எந்த அளவிற்கு என்றால் இரண்டு இயக்கங்களும் பரம எதிரிகளாக, ஸலாம் கூட சொல்லக்கூடாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. சாந்தியையும் சமாதானத்தையும் போதித்த மார்க்கத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட மக்கள் நாங்கள் என்று சொல்லிக்கொள்வதற்கு வெட்கமாக இருக்கிறது.
இன்றைக்கு முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற அச்சுறுத்தல்களை கண்முன்னே காணும்போது சற்றே பயமாகத்தான் இருக்கிறது. இனி எதிர் காலத்தில் நம் பிள்ளைகள் எப்படிப்பட்ட சவால்களை சந்திக்க இருக்கிறார்களோ என்று நினைக்கும்போது எங்கோ மனதின் ஒரு ஓரத்தில் வலிக்கிறது. நாளை நம் இன பெண்கள் பொது இடத்தில் மானபங்கப்படுத்தப்பட்டால் கூட இது த.மு.மு.க. வீட்டுக்காரன் பெண்கள், இது சுன்னத்ஜமாத் வீட்டுக்காரன் பெண்கள் என்று தரம்பிரித்து ஒதுங்கிக்கொள்ளும் நிலைக்கு தவ்ஹீத் என்ற பெயரில் சமுதாயத்தில் வெறுப்புணர்வு விதைக்கப்பட்டு உள்ளது. தவ்ஹீத் என்று வந்துவிட்டால் உன் தந்தையானாலும் வெட்டி சாய்த்துவிடு, உன் சகோதரனாக இருந்தாலும் அவனை தள்ளிவைத்துப்பார். அவன் மானம் மரியாதையோடு விளையாட தயங்காதே என்று போதிக்கப்பட்டுள்ளது. தவ்ஹீதை சரியாக போதித்தார்கள் என்று நியாயம் பேசினாலும் அதன் அணுகுமுறை தவறாக போதிக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்த நிலை என்று நினைக்கும்போது, சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சமூக தன்னிறைவு, சமூக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று வரும்போது ஓரணியில் உறுதியாக நிற்பதற்கு பதிலாக ஒரு சமுதாயம் பிளவுபட்டு நிற்பதற்கு அதன் மக்களோ, தொண்டர்களோ காரணமல்ல. எந்த காலகட்டத்திலும் இரண்டு தலைவர்களில் ஒரு தலைவர்தான் காரணமாக இருந்திருக்கிறார். ஒரு உரையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது என்று சொல்வார்கள்.
த.மு.மு.க. ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஆரம்ப செயல்பாடுகளை கிட்டே இருந்து பார்க்கக் கூடிய வாய்ப்பை உணர்வு நிருபர் என்ற வகையில் அல்லாஹ் எனக்கு ஏற்படுத்தி தந்திருந்தான். சிறப்பாக தன்னுடைய சமுதாய பணியை துவக்கிய த.மு.மு.க. ஏன் உடைந்தது என்று பலநாள் நான் யோசித்திருக்கிறேன். சமூக அக்கறை கொண்ட ஒரு நிருபரின் பார்வையில் எதை நான் கண்டேனோ அதை இனி வருங்கால சந்ததிகள் இதிலிருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக பதிவு செய்கிறேன். யூகங்கள் செய்தோ, இட்டுக்கட்டியோ, மிகைப்படுத்தியோ எழுத முற்படவில்லை. நீங்கள் உன்னிப்பாக படித்துக்கொண்டு வந்தீர்களானால் நான் சொல்லக்கூடிய அனைத்து செய்திகளுக்கும் சம்பவங்களுக்கும் அதில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களையும் முடிந்தவரை பதிவு செய்து வருகிறேன். இன்றைக்கும் அவர்களிடம் கேட்டால் நான் சொல்வதை உண்மைபடுத்துவார்கள். இன்ஷாஅல்லாஹ்.
த.மு.மு.க. உடைந்ததற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாக இருந்தவர்கள் என்று நாம் இரண்டு பேரைத்தான் சொல்ல முடியும். ஒன்று அதன் தலைவராக இருந்த ஜவாஹிருல்லாஹ். மற்றொன்று அதன் நிறுவனராக இருந்த பி.ஜே. அவர்கள். த.மு.மு.க. வை மக்கள் மத்தியில் எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்ற சிந்தனைபோக்கில் இரண்டு பேரும் இருவேறு துருவங்களாக செயல்பட்டார்கள் என்பதுதான் என்னுடைய பார்வை.
ஜவாஹிருல்லாஹ் அவர்கள் த.மு.மு.க. வை அரசியல்ரீதியாக அங்கீகாரம் பெறக்கூடிய ஒரு வெகுஜன மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல நினைத்தார்கள். அரசியல் தலைவர்களின் கவனஈர்ப்பும், மனித உரிமை, தமிழ் மொழி ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் தோழமையுடனும், ஊடகங்களின் முக்கியத்துவத்துடனும் த.மு.மு.க. வை வழி நடத்திச் செல்லும் நோக்கம் தெரிந்தது. பி.ஜே. அவர்களை பொறுத்தவரையில் பொதுவாகவே அவர்களுடைய கடந்த கால வாழ்க்கை மார்க்க ரீதியான செயல்பாடுகளிலும், அதுகுறித்தான அறிவு, ஆய்வுகள் என்று இருந்ததனால் அதை தாண்டி வெளி உலக பரிச்சயங்களோ, தொடர்புகளோ பெரும்பாலும் இல்லை என்பது தெரிந்தது. ஆகவே அவர்கள் தன்னை மட்டுமே முன்னிறுத்தியும், தன் சீர்திருத்த கருத்துக்களை ஏற்றுக்கொண்டவர்களையும், தன் விசுவாசிகளையும் மட்டுமே பக்க பலமாக கொண்டும் த.மு.மு.க. வை வழி நடத்திச் செல்லும் நோக்கம் தெரிந்தது. த.மு.மு.க. மக்களிடம் செல்வாக்கு பெற ஆரம்பித்திருந்த நேரத்தில் இருவேறு துருவங்களாக இருவரின் சிந்தனைகளும் செயல்பாடுகளும் இருந்தது என்பது என்னுடைய பார்வை. இதை நான் யூகம் செய்து சொல்லவில்லை. தகுந்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே சொல்லுகிறேன்.
இவர்களின் இந்த மாறுபட்ட சிந்தனை போக்கு உணர்வில் இடம்பெறுகின்ற செய்திகளிலும் எதிரொலித்ததை காண முடிந்தது.
ஜவாஹிருல்லாஹ் அவர்களை பொறுத்த வரையில் அனைத்து தரப்பு முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்துடன் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தும் செய்திகளை எழுதியும், அதுபோன்ற செய்திகளுக்கு முக்கியத்துவமும் கொடுப்பார். பி.ஜே. அவர்களை பொறுத்தவரையில் சமுதாயமாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும், நாட்டு நடப்பாக இருந்தாலும் தனக்கு எந்த கருத்து சரி என்று படுகிறதோ அதை எழுதி மக்களும் அந்த கருத்துக்கு இசைந்து வரவேண்டும் என்று எதிர்பார்ப்பார். மற்றவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோ, அதன் மூலம் அவர்கள் பிரபலம் அடைவதையோ அவர் ஒருக்காலமும் விரும்பமாட்டார். நான் இப்படி சொல்வதற்கு ஆதாரமாக வைக்கக்கூடிய செய்திகளை சீர்தூக்கி பார்த்துவிட்டு பி.ஜே. அவர்களின் குணாதிசயத்தையும், பி.ஜே. என்கின்ற ஒரு தனி மனிதரின் மனஇச்சை போக்கினாலும், தான் இருக்கக்கூடிய இடத்தில் தனக்கு இரண்டாவது இடத்தில் கூட இன்னொருவர் வந்துவிடக்கூடாது என்ற இறுமாப்பினாலும், தானே எல்லாம் என்ற அகம்பாவத்தினாலும் த.மு.மு.க. உடைந்தது என்ற உண்மையை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வார நாட்களில் வாணியம்பாடி கல்லூரிக்கு சென்றுவிட்டு சனி, ஞாயிறுகளில் அலுவலகத்திற்கு வருவார்கள். அந்த வாரம் உணர்வில் இடம்பெற வேண்டிய செய்திகளை எழுதி கொடுத்துவிட்டு, அதில் முக்கியத்துவம் பெற்ற செய்தி இருந்தால் அதை தலையங்கமாக போடுங்கள் என்று சொல்லி விட்டு செல்வார்கள். உண்மையில் அந்த செய்திகள் சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ள செய்திகளாக இருக்கும். தலையங்கத்தில் போடுவதற்கு தகுதியான செய்தியாக இருக்கும். உணர்வு பத்திரிக்கையில் இடம்பெறும் செய்திகளை பொறுத்தவரையில் இறுதியாக பி.ஜே. அவர்கள்தான் முடிவு செய்வார். எழுத்துப்பிழைகளையும் ( PROOF ) அவர்கள்தான் திருத்துவார்கள். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் எழுதித்தந்த செய்திகளில் பாதிக்கு மேற்பட்டதை தவிர்த்துவிட்டு தலையங்கத்திலும், மற்ற பக்கங்களிலும் தான் எழுதிய செய்திகளை போட்டு நிரப்பிவிடுவார்கள்.
ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ஒரு சிறந்த பத்திரிக்கையாளர். ஊடகம் சம்பந்தமான அறிவும், அனுபவமும் அவர்களுக்கு சிறப்பாக இருந்ததை நான் அறிந்திருக்கிறேன். பி.ஜே. அவர்களை பொறுத்தவரையில் மார்க்கம் சம்பந்தமான பத்திரிகையில் சிறந்த அனுபவம் பெற்றவர்கள். இந்த இரண்டு இருவேறுபட்ட நிலையில் உணர்வில் எது போன்ற செய்திகள் இடம்பெற வேண்டும் என்பதில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததை மறுக்க முடியாது. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை சொல்லலாம்.
குளோனிங் முறையில் ஆட்டு குட்டி ஒன்றை உருவாக்கிய விஞ்ஞானிகளின் சாதனையை அப்போது ஊடகங்கள் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டுக்கொண்டிருந்தன. இந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு, திருக்குர்ஆன் இதை உண்மைபடுத்துகிறது என்ற கருத்தில் ஈஸா ( அலை) அவர்கள் பிறப்பு குளோனிங் முறையில் ஏற்பட்டதுதான் என்று ஒரு கட்டுரையை பி.ஜே. அவர்கள் எழுதி உணர்வில் வெளியிட்டார். பொதுவாக ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வார நாட்களில் வாணியம்பாடி கல்லூரிக்கு சென்றுவிட்டு சனி, ஞாயிறுகளில் அலுவலகத்திற்கு வருவார்கள். வந்தவுடன் அன்றைய வார உணர்வு பத்திரிக்கையை படிப்பார்கள். அதேபோன்று அன்றைய வார உணர்வில் வெளியான குளோனிங் கட்டுரையை படித்துவிட்டு, என்னை அழைத்து, இந்த கட்டுரையை அண்ணன் உணர்வில் போடச் சொல்லி தந்தார்களா? என்று கேட்டார். ஆமாம் என்று சொன்னவுடன் வேறு எதுவும் பேசாமல் மௌனமாக இருந்துவிட்டார்கள். பத்திரிகை வெளியாகி சில நாட்களில் இந்த கட்டுரை குறித்து மார்க்க அறிஞர்களிடமிருந்து விமர்சனம் வந்தது. ஈஸா ( அலை) அவர்கள் பிறப்பு குறித்த குர்ஆன் வசனத்தை பி.ஜே. தவறாக புரிந்துக்கொண்டு விளக்கம் தந்திருக்கிறார் என்றும், உணர்வில் ஏன் இதுபோன்ற செய்திகளை போடவேண்டும் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
பொதுவாக பி.ஜே. அவர்களிடத்தில் ஒரு குணாதிசயம் உண்டு. தன்னை மையப்படுத்தி செயல்படுகின்ற ஒரு இடத்தில் தன்னை விமர்சனம் செய்தாலோ அல்லது தன் கருத்தை ஏற்கவில்லை என்றாலே கோபித்துக்கொண்டு தொடர்புகளை துண்டித்துக்கொண்டு வனவாசம் போல் சென்றுவிடுவார். சமயத்தில் இந்த வனவாசம் சில மாதங்கள் கூட நீடிக்கும். தன்னை கொண்டே த.மு.மு.க. இயங்கிக்கொண்டிருக்கிறது. தான் இல்லை என்றால் த.மு.மு.க. இல்லை என்பதுபோல் நடந்துக்கொண்டு, தன் எடுத்த முடிவை நிலைநிறுத்த மறைமுகமாக நிர்பந்திப்பார் என்பதுதான் அவருடன் பழகிய அனைவரும் அறிந்த உண்மை. இன்னொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் மிரட்டும் தொனியில் நடந்துக்கொள்வார். சில நாட்களுக்கு பிறகு பாக்கர் அவர்கள் சென்று சமாதானப்படுத்தி அழைத்து வருவார்கள். அவரை தூர நின்று பார்த்து, அவருடைய மார்க்க பயான்கள் மூலம் கவரப்பட்டு, அவரை தன் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டவர்களுக்கு வேண்டுமானால் இதை நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும். இதுதான் உண்மை என்பதற்கு அவர் தந்த வாக்குமூலமே சாட்சியாக இருக்கிறது.
த.மு.மு.க. விலிருந்து அவர் பிரிவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு தன்னிலை விளக்க கடிதத்தை உணர்வில் வெளியிட்டிருப்பார். அந்த உணர்வு பிரதி கிடைக்கப்பெற்றால் படித்துப்பாருங்கள். நான் சொல்வதன் உண்மை தெரியும். ஒரு தடவை அல்ல இரண்டு தடவை அல்ல பலமுறை இதுபோல் நடந்திருக்கிறது என்பது அங்கிருந்த அனைவரும் அறிந்த ஒன்றுதான். நான் போய் விடுவேன், நான் போய் விடுவேன் என்று அடிக்கடி மிரட்டிக்கொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நிர்வாகிகள் போனால் போய் கொள்ளுங்கள் என்று சொன்னதன் விளைவுதான் த.மு.மு.க. உடைந்து ததஜ பிறந்தது என்ற உண்மையை இந்த சமுதாயம் தெரிந்துக்கொள்ளவேண்டும்.
அன்றைய த.மு.மு.க. நிலைமையும் அப்படித்தான் இருந்தது. பி.ஜே. மட்டுமே மக்களிடத்திலே பிரபலமானவராக இருந்தார். அவரை மையப்படுத்தியே த.மு.மு.க.வில் கணிசமான தொண்டர்களின் பலமும், செயல்பாடுகளும் இருந்தன. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் உண்மை.
த.மு.மு.க. விலிருந்து பி.ஜே. அவர்கள் வெளியேற்றப்பட்டப்பிறகு, அவர் வைத்த குற்றச்சாட்டுகளில் பிரதானமான குற்றச்சாட்டு த.மு.மு.க. வளர்ச்சிக்கு தவ்ஹீத் தடையாக இருக்கிறது என்று ஜவாஹிருல்லாஹ் கூறினார். அதை எழுத்துப்பூர்வமாகவும் தந்தார். ஆகவே தான் விலகுவதாக சொன்னார். உண்மையில் த.மு.மு.க. வளர்ச்சிக்கு தவ்ஹீத் தடையாகத்தான் இருந்ததா? பி.ஜே. அவர்கள் வைத்த குற்றச்சாட்டு உண்மைதானா? என்பது குறித்தெல்லாம் யூகத்தின் அடிப்படையில் இல்லாமல், விருப்பு வெறுப்பு இல்லாமல்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் பார்க்க வேண்டும்.
இதன் தொடர்ச்சியை த.மு.மு.க. வளர்ச்சிக்கு தவ்ஹீத் தடையாக இருந்தது என்பது உண்மையா என்ற தலைப்பில் உள்ள பதிவில் தொடர்ந்து படிக்கவும்.
இன்ஷாஅல்லாஹ் உண்மை வரலாறு தொடரும்.....


முந்தைய தொடர்களை வாசிக்க கீழுள்ள சுட்டியை சுட்டுங்கள்.