அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பான சகோதரர்களே !
டிஎன்டிஜே என்னுடன் விவாதிக்க வராமல் ஓட்டமெடுத்ததை அறிவீர்கள். நான்
குறிப்பிட்ட எட்டு டிஎன்டிஜே அறிஞர்களில் ஒருவருக்கு கூட என்னிடம்
விவாதிக்க தெம்பில்லை. திராணியில்லை. மாறாக சையது இப்ராஹீமை அனுப்பி
விவாதத்தை அர்த்தமற்றதாக்கும் முயற்சியை செய்தார்கள்.
நான் இந்த அறிஞர்களை தொடர்ந்து விவாதத்திற்கு அழைத்தேன்.ஆனால் எந்தப் பயனுமில்லை. என்னுடைய அழைப்பிற்கு பதிலளிக்காமல் வழக்கம் போல் நான் விவாதத்திலிருந்து ஓடிவிட்டதாக அவர்களாகவே அறிவித்துக்கொண்டு அவர்களே ஓட்டமெடுத்தார்கள்.
அவர்கள் இவ்வாறு அறிவித்த பிறகும் வலியுறுத்தினேன். அவர்களிடமிருந்து எந்த
பதிலும் இல்லை. இதன் மூலம் விவாதத்திற்கு வரமாட்டோம் என்பதை
தெரிவித்துவிட்டார்கள்.
விவாதத்தில் பீஜேவை எதிர்கொள்ளத் துணிந்த
எனக்கு கேள்வி பதில் நிகழ்ச்சியில் டிஎன்டிஜே தொண்டர்களின் கேள்விகளுக்கு
பதிலளிப்பது பெரிய விசயமில்லை. இதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் என்னிடம் இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இன்ஷாஅல்லாஹ்
நான் பதிலளிப்பேன். ஆனால் நான் கேட்கின்ற கேள்விகளுக்கு பதிலளிக்க
முடியாமல் இவர்கள் திணறுவதை நீங்கள் காண்பீர்கள்.
தற்போது நான்
சூனியம் தொடர்பாக பீஜே செய்த பித்தலாட்டத்தையும் வழிகேடுகளையும்
அம்பலப்படுத்தும் நுால் ஒன்றை தயார் செய்துகொண்டிருக்கிறேன். பாதி வேலை
நிறைவுற்றுவிட்டது. இன்னும் சில தினங்களில் இன்ஷாஅல்லாஹ் அது வெளிவரும் துஆ செய்யுங்கள்.
அப்பாஸ் அலி
No comments:
Post a Comment