உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, January 28, 2015

இன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் 'கற்க கசடற' நேரலை நிகழ்ச்சியில் அதிரை மீரா

இன்று (28.01.2015) மாலை இந்திய நேரப்படி மாலை 5.30 மணிமுதல் 6 மணிவரை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ள 'கற்க கசடற' என்ற நிகழ்ச்சியில் 'அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி? (HOW TO SCORE MORE MARKS/) என்ற பொருளின் கீழ் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்கள் அதிரை மேலத்தெருவை சேர்ந்தவரும், சென்னை திருவல்லிக்கேணியில் செயல்படும் முஸ்லீம் உயர்நிலைப் பள்ளியின் முதுகலை ஆசிரியருமான 'மீரா' என்கிற F.சாகுல் ஹமீது அவர்கள்.

இந்த நிகழ்ச்சி நாளை (29.01.2015) வியாழன் அன்று அதிகாலை 5.30 மணிமுதல் 6 மணிவரை மறுஒளிபரப்பு செய்யப்படும்.

'நல்லாசிரியர்' விருதை சென்ற மாதம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற விழாவில் KSR GROUP OF INSTITUTION மற்றும் TIMES OF INDIA இணைந்து வழங்கிய விழாவில் இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் (INSA) தலைவர் டாக்டர் ராகவேந்திரா கடாகர் அவர்களாலும், சென்னை மயிலாப்பூரில் இயங்கும் SRINIVASA YOUNGMEN ASSOCIATION என்ற அமைப்பினராலும் 'SYMA' என்ற விருதை மயிலாப்பூர் போலீஸ் துணை ஆணையர் மூலமும் பெற்று தனது கல்விப்பணிக்காக சிறப்படைந்துள்ளார்கள்.


ஒரு முஸ்லீமாக மார்க்கத்தை பின்பற்றியும், தோற்றத்தில் வெளிப்படுத்தும் நிலையிலும் பல சிறப்புக்களை பெற முடியும் என சக முஸ்லீம்களுக்கும் நல் உதாரணமாக திகழும் 'நல்லாசிரியர்' மீரா என்கிற சாகுல் ஹமீது அவர்கள் மென்மேலும் சிறப்புற ஏகன் அல்லாஹ் துணை நிற்பானாக!

K.M.N. முஹம்மது மாலிக்
தலைவர் / TIYA

Monday, January 26, 2015

துபை MTCT கல்வி கருத்தரங்கில் CMN.சலீம் அவர்களின் சிறப்புரை சுருக்கம்



அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

24/01/2015
சனி அன்று மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையின் துபை கிளை சார்பாக நடத்தப்பட்ட கல்வி கருத்தரங்க நிகழ்ச்சியில் சமூக நீதி அறக்கட்டளையின் நிறுவனரும் தமிழ்நாடு முஸ்லீம் கல்வி இயக்கத்தின் தலைவருமாகிய CMN சலீம் அவர்கள் வழங்கிய உரையின் சுருக்கம்:-


சமூக மாற்றம் என்பது சாதாரணமானது அல்ல, அது தானாக நிகழும் நிகழ்வும் அல்ல. பொருளாதாரத்தைப் பெருக்கி சொகுசாக வாழ்வதே இன்றைய வாழ்வின் இலக்குஎன்ற சிந்தனை புகுத்தப்பட்டுள்ள முதலாளித்துவ வாழ்க்கைச் சூழலில், தெளிவான மேற்கத்திய சூழ்ச்சியும் அதில் அகப்பட்டுக் கிடக்கும் நமது அரசின் கொள்கை முடிவுகளும் சேர்ந்து ஒரு சாதார முஸ்லீமை எவ்வாறு பாதிக்கின்றன. நமது சமூக அமைப்புக்களின் பங்களிப்பு அம்மக்களை நோக்கி எவ்வாறு இருக்க வேண்டும்.

மேலும் இன்றைய முஸ்லிம் சமூகத்தில் அறிவு ஜீவிகள் என்று அறியப்பட்டவர்களுக்கும் முஸ்லிம் பொது மக்களுக்கும் மத்தியில் ஒரு மிகப் பெரிய தொடர்பு இடைவெளி நிலவுகிறது.

கல்வியாளர்கள் தங்களால் இயன்றதை, தங்களுக்குச் சரி என்று பட்டதை இது தான் சரியான பாதை என்று சமூக மக்களிடம் திணிக்கின்றனர். அப்படிப்பட்ட கல்விச் சேவையை சிறந்த செயல்முறையாகச் செய்து தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கின்றனர்.

ஆனால் முஸ்லிம்களின் கல்வி மற்றும் அறிவுசார் தேவைகள், எதிர்பார்ப்புகள் வேறுவிதமாக இருக்கிறது. இஸ்லாமிய (ஷரீஅத்) அடிப்படையிலான கல்வி, சமூக, பொருளாதாரம் போன்ற வாழ்வியல் தேவைக்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அவை அத்துணையையும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் இன்றைய கல்வியாளர்கள் மற்றும் செல்வந்தர்கள் மீது மட்டும் சுமத்தப்பட்டுள்ளது என்று நினைக்காமல் நமது சமூக  அமைப்பு & ஜமாஅத் மூலங்கள் வாயிலாகவும் அதனை எவ்வாறு கொண்டு செல்வது போன்ற ஆலோசணைகளையும் வழங்கி இந்த பொறுப்புகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டால் - தங்களுக்கான கடமைகளைச் சரியாக நிறைவேற்றாவிட்டால் - முஸ்லிம் சமுதாயத்தில் மாற்றம் வருதற்கு வாய்ப்பில்லை என தனது விளக்கவுரையின் மூலம் தெளிவுபடுத்தினார்.


மேலும் வியாபார சமூகமாயிருந்த முஸ்லீம் சமூகம் எங்கே வீழத்தொடங்கியது நவீன உலகின் மாறுதல்களை உள் வாங்கிகொண்டு இஸ்லாமிய அடிப்படையில் அதனை எவ்வாறு மீட்டெடுக்கலாம்  என மிகச்சிறந்த ஆரோக்கியமான உரையை வழங்கினார்கள்

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

MTCT
DUBAI

வளைகுடாவை ஆண்ட இந்திய ருப்பியாக்கள்



பெட்ரோலும், தங்கமும் உலக பொருளாதாரத்தின் நேரடி செலாவணியாக இருக்க வேண்டிய இடத்தில் மறைமுகமாக திணிக்கப்பட்ட டாலரும், யூரோவும் இன்று கோலோச்சிக் கொண்டுள்ளதை கண்டுவருகிறோம் ஆனால் ஒரு காலத்தில் தந்திரமான நிர்ப்பந்தங்கள் ஏதுமின்றி இந்திய ரூபாய்கள் பல வளைகுடா நாடுகளில் பண்டைய காலம் தொட்டு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை டாலர், யூரோக்களுக்கு இணையாக அந்தந்த நாட்டு அதிகாரபூர்வ வளைகுடா ருப்பியாக்களாக அங்கீகரிக்கப்பட்டிருந்தன.


1965 ஆம் ஆண்டு தான் முதன்முதலாக, துபை தனிநாடாக (ஐக்கிய அரபு கூட்டு நாடுகளாக இணையுமுன்) இருந்தபொழுது தங்களுக்கென தனியான கரன்சி நோட்டுக்களை 'ரியால்' என்ற பெயரில் கத்தார் நாட்டுடன் இணைந்து அச்சிடத் துவங்கினர் இன்னும் சில வளைகுடா நாடுகள் 1970/71 ஆம் ஆண்டுகளில் தான் ருப்பியாக்களுக்கு மாற்றாக சுய கரன்சிகளை அச்சிட்டனர். 1972 ஆம் ஆண்டு முதல் தான் அமீரகத்தில் இன்றுள்ள வலுவான திர்ஹங்கள் தோன்றின.

 துபையும் கத்தாரும் இணைந்து 1965ல் அச்சிட்ட ரியால்கள் மற்றும் முதலில் அச்சிடப்பட்ட திர்ஹம்கள்

நமது பாட்டன் முப்பாட்டன் கால பொத்தல் காசு, வீசை, தோலா, அணா என அரசர்கள் கால, ஆங்கிலேய மற்றும் சுதந்திர இந்திய அச்சிட்ட இந்திய நாணயங்கள் மற்றும் நோட்டுக்கள், சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலும் இங்கும் புழக்கத்தில் இருந்த 1 காசு, 2 காசு, 3 காசு, 5 காசு, 10 காசு, 20 காசு, 25 காசு, 50 காசு, 1 ரூபாய் நாணயம், ரூபாய் தாள்களாக 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய், 20 ரூபாய், 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் என நாம் கேள்விப்பட்ட, படாத அனைத்தும் சேகரிக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட்டுள்ளன அதாவது துபையில் இவை அனைத்தும் புழங்கிய பணங்கள் என்ற உயரிய அந்தஸ்துடன், இன்றைக்கு உள்ள இந்திய பணத்தை எக்ஸ்சேஞ்காரன் கூட வாங்க மறுத்து மூஞ்சை திருப்பிக் கொள்கிறான்.

 துபை அருங்காட்சியகங்கள் தொடர்பான பதிவுகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம், அதன் தொடர்பில் முக்கியமான ஷேக் சயீத் அல் மக்தூம் அவர்களின் மாளிகை சம்பந்தமாக விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும் என முன்பு அறிவிப்பு செய்திருந்தோம். அந்த மாளிகை தான் இந்தியா ருப்பியாக்களின் அருமை பெருமைகளை தன்னத்தே சுமந்து கொண்டுள்ளது.

 ஷேக் சயீத் அல் மக்தூம் மாளிகை







இன்றைய துபையின் ஆட்சியாளரும் அமீரகத்தின் துணை அதிபரும் பிரதமருமான ஷேக் முஹம்மது அவர்கள் இந்த மாளிகையில் தான் 1949 ஆம் ஆண்டு பிறந்தார்கள், காலப்போக்கில் சிதிலமடைந்த இந்த மாளிகை மீண்டும் 1983 ஆம் ஆண்டு மீண்டும் புனர்நிர்மானம் செய்யப்பட்டு இன்று ஓர் அருங்காட்சியமாக மாறி துபையின் பண்டைய வரலாற்றையும், அரச பரம்பரையின் குடும்ப வரலாற்றை எடுத்தியம்பும் புகைப்படங்களையும், 1965 ஆம் ஆண்டு வரை புழங்கிய மதிப்புமிக்க இந்திய கரன்சிகளையும் சேகரித்து வைத்துள்ளனர்.

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க, வாங்க! துபை வரலாற்றையும் சுருக்கமாக பார்த்து விடுவோம். 1833 ஆம் ஆண்டு அபுதாபி பிரதேசத்திலிருந்து வந்த 'பின் யாஸ்' குடும்ப வழித்தோன்றல்களான அல்மக்தூம் அரச பரம்பரையினர் துபை பிரதேசத்தை கைப்பற்றி சுமார் 180 ஆண்டுகளாக இன்றும் ஆட்சி செலுத்தி வருகின்றனர்.

துபை பிரதேசம் பண்டைய வணிக கடல்வழியின் பிரதான தடத்தில் அமைந்திருப்பதால் பல நாடுகளும் இதை தங்களின் வணிக விருத்திக்காக கைப்பற்ற முயன்றுள்ளனர் என்பதால் அன்றைய துபை ஆட்சியாளர்கள் பிரிட்டீஷ் அரசாங்கத்துடன் ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக தான் பிரிட்டீஷ் இந்தியாவின் கரன்சிகள் வணிகம் மூலம் இப்பிரதேசத்தின் உள்ளே புகுந்து விளையாடியுள்ளது மேலும் சுதந்திர இந்தியாவிலும் பல ஆண்டுகள் தொடர்ந்த 'துபை அஞ்சல்துறை' போன்ற அரசு நிறுவனங்களையும் பிரிட்டீஷ் இந்திய அரசாங்கமே நடத்தி வந்துள்ளது.

ஆர்வமுள்ள மகாஜனங்களே! 3 திர்ஹம் செலுத்தி உள்ளே வந்துதான் பாருங்களேன், இன்னும் நெறைய தெரிஞ்சுகுவீங்க!

அதிரைஅமீன்

 துபையில் பல்வேறு காலகட்டங்களில் குறிப்பாக விக்டோரியா மகாராணி, ஐந்தாம் மற்றும் ஆறாம் ஜார்ஜ் மன்னர்கள், ஏழாம் எட்வர்ட் காலத்திய பிரிட்டீஷ் இந்திய காசுகள் (இன்னும் உண்டு ஏராளம்)




















 ஸ்டாம்ப் கலெக்ஷன்ஸ்






குறிப்பு: 
புகைப்படங்கள் அதிகமாகிவிட்டதால் அரச குடும்பத்து படங்களை பதிய இயலவில்லை

Sunday, January 25, 2015

அதிரை A.L.மெட்ரிக் பள்ளியில் குரானை ஓதவும், புரிந்து கொள்ளவும் குறுகிய கால பயிற்சி !

அதிரை சிஎம்பி லேன் பகுதியில் அமைந்துள்ள ஏஎல் மெட்ரிக் பள்ளியில் குரானை ஓதவும், புரிந்து கொள்ளவும் குறுகிய கால பயிற்சி முகாமின் முதல் பகுதி கடந்த மாதம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இந்நிலையில் பயிற்சி முகாமின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ( 30-01-2015 ), ( 31-01-2015 ) ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற இருக்கிறது. பயிற்சி வகுப்புகள் சரியாக காலை 9.30 மணிக்கு துவங்க இருக்கிறது.

ஆர்வமுள்ளவர்கள் பதிவு செய்துகொள்ளவும், மேலதிக விவரங்களுக்கும் கீழ்கண்ட அலைப்பேசி வாயிலாக தொடர்புகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு : 9952201791

Thanks to: http://www.adirainews.net/2015/01/blog-post_973.html

Saturday, January 24, 2015

உங்கள் ஊரில் ஒரு இஸ்லாமியப் பள்ளி துவங்குவதற்கான அருமையான வாய்ப்பு

“3 – Days workshop on " ISLAMIC SCHOOLS ”
Inshaa Allah.... to be held on
13, 14 & 15 – February – 2015,

VENUE – ANNAI KHADEEJA ARTS &SCIENCE
COLLEGE FOR WOMEN - AMMAPATTINAM

TRAINERS :
DR. KAMAL ABDUL NASIR M.Sc., M.Phil., Ph.D
H.O.D Chemistry Dept. New college – Chennai
Topic : Government Proceedings & Basic
requirements to start a School

Sister. A. JAHITHA BEGUM M.A(Eng)., M.A (Pol.Sci).,M.Ed.,
M.Phil.PGDCA., H.O.D – Department of Education,
Gandhigram Rural University – Dindugal
Topic : TEACHER – The real asset of a School

Br.UMAR SHARIFF - DIET – Bangalore
Topic : An Ideal Islamic School

Br. S.A.MANSOOR ALI M.A
Facilitator in Human Resource Development
Topic : Educational Administration – An Islamic Perspective

Br. CMN SALEEM M.A
Founder – Tamilnadu Muslim kalvi Iyakkum - Chennai
Topic : History of Islamic Education

Sister. M.SHAIDHA BANU M.A., B.Ed.
Correspondent – Annai Khadeeja Arts & Science
College for women – Ammapatinam
Topic : Role of School in the Life of children

For Registration
Contact : 75984 61650 | 9600444088

துபையில் நடைபெற்ற CMN சலீம் அவர்களின் கல்விக் கருத்தரங்கம்

நேற்று (23.01.2015) வெள்ளி மாலை மாலை மஃரிப் தொழுகைக்குப்பின் துபை, நாஸர் ஸ்கொயர் பகுதியில் அமைந்துள்ள லேண்ட் மார்க் ஹோட்டலில் மிகக் குறுகியகால எற்பாடான CMN சலீம் அவர்களின் பயன்மிக்கதொரு கல்விக் கருத்தரங்கம் மிகச்சிறப்புடன் பவர்பாயிண்ட் திரை விளக்கத்துடன் நடந்தேறியது.


எதிர்காலம் இனி விவசாயத்திற்கே என்ற நிறுவலுடன் துவங்கிய நிகழ்ச்சியில் முஸ்லீம்கள் நம் எதிர்கால சந்ததியினருக்காக மிகக்கவனம் செலுத்த வேண்டிய சில முக்கிய விடயங்களான மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் ஆய்வுடன் கூடிய இயற்கை உணவுமுறை கல்வி, இஸ்லாம் கூறும் இயற்கை மருத்துவக்கல்வி, இயற்கை சக்தி, இஸ்லாமிய வங்கிமுறை மற்றும் இஸ்லாமிய சிந்தனையுடன் கூடிய ஆசிரிய பெருமக்களை வார்த்தெடுக்கும் பணி என்பன போன்ற நீண்டகால திட்டங்களை செயல்படுத்த ஊர்கள் தோறும் தியாக உணர்வின் அடிப்படையில் இஸ்லாமிய கோட்பாட்டுடன் அமைய வேண்டிய பாலர் கல்வி நிலையங்கள், உயர் கல்வி மற்றும் கலைக்கல்லூரிகளின் தேவைகளை உணர்த்தினார். 

பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை வேளாண்துறையில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வுப்படிப்பு என முழுமையாக படிக்கவைத்து அவர்களின் 26 வது வயதில் மனிதகுலத்திற்கு தீர்வு தரும் ஒரு இயற்கை வேளாண் விஞ்ஞானியாக உருவாக்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். கல்வி ஆளுமை நிறைந்த மனிதர்களை உருவாக்க வேண்டும் மாறாக ஊதியத்திற்கு வேலை பார்க்கும் அடிமைகளை அல்ல என்பது CMN சலீம் அவர்களின் உரையின் மையப்பொருளாக இருந்தது.

மேலும், வரலாற்று பக்கங்களிலிருந்து இரண்டாம் உலகப் போருக்குப் பின் கீழத்தேய நாடுகளில் 1965க்குப்பின் திணிக்கப்பட்டுள்ள விஷ உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகள், மரபணு மாற்ற விதைகளால் ஏற்படும் கேடுகள், அரசின் அலட்சிய போக்குகளால் தற்கொலை செய்து கொண்டுள்ள 4 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் மற்றும் அதற்கான காரணங்கள், எதிர்கால உணவு பாதுகாப்பின் தேவையையும் விவசாயத்தின் அருமையையும் உணர்ந்துள்ள பாலைநாடுகளான அரபுநாடுகள் ஆப்ரிக்க நாடுகளில் பல லட்சம் ஏக்கர் நிலங்களை விவசாயத்திற்காக குத்தகைக்கு எடுத்துள்ள முன்னேற்பாடுகள், கடல்நீரை ரசாயனங்கள் மூலம் சுத்திகரிக்கும் நிலையங்கள் பெருகிவரும் நிலையில் ஓர் தமிழ்ச்சகோதரி இயற்கை முறையில் கடல்நீரை சுத்திகரிக்க மேற்கொண்டு வரும் ஆய்வுகள், ஆந்திராவை சேர்ந்த பாத்திமா என்ற முஸ்லீம் சகோதரி 5 கிராமங்களை ஒருங்கிணைத்து இயற்கை விவசாயத்திற்கு மாற்றி வெற்றி கண்டுள்ள விபரங்கள், குமார் என்ற ஆந்திரா இளைஞர் பாலைவனமான அல் அய்ன் மண்ணில் நெல் விளைவித்து அறுவடை செய்துள்ள புரட்சி, ஆங்கிலேயரின் மனனம் செய்து வாந்தியெடுக்கும் மதிப்பெண் கல்வி முறையால் ஏற்பட்டுள்ள கேடுகள் போன்ற அரிய பல தகவல்கள் வழங்கியதுடன் முஸ்லீம்களால் மட்டுமே தீமைகளை ஒழித்து இஸ்லாம் வழிகாட்டியுள்ளபடி மனிதகுலத்திற்கு தேவையான கல்வியின் பக்கமும் உண்மையான வளர்ச்சியின் பக்கமும் கொண்டு செல்ல முடியும் என நம்பிக்கையை ஏற்படுத்தி அதற்கேற்றவாற நமது சந்ததிகளை தயார்படுத்த வேண்டி நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சிக்கான எற்பாடுகளை தமிழ்நாடு முஸ்லீம் கல்வி இயக்கம் - துபை கிளையை சேர்ந்த சகோதரர்கள் இம்ரான் கரீம், முஹமது மாலிக், சிராஜூதீன், தாஜூதீன் ஆகியோர் செய்திருந்தனர். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

















========================================================================

முன்னதாக, 22.01.2015 வியாழன் பின்னேரம் துபை, தெய்ரா பகுதியில் அமைந்துள்ள மலபார் ஹோட்டல் அரங்கில் 'தமிழ் மீடியா ஃபோரம்' அமைப்பினரால் பத்திரிக்கை துறையில் ஆர்வமுள்ளவர்களுக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ' ஊடகமும் முஸ்லீம்களின் இன்றைய தேவையும்' என்ற பொருளில் சலீம் அவர்கள் விழிப்புணர்வு கருத்துரை வழங்கினார்.

1885 ஆம் ஆண்டுகளில் தயானந்த சரஸ்வதி என்பவரால் விதைக்கப்பட்டு 1925 ஆம் ஆண்டுகளில் அமைப்புரீதியாக இந்தியாவெங்கும் கட்டமைக்கப்பட்டு இன்று பெரும்பான்மை பலத்துடன் மனிதகுல விரோத 'அந்த இந்துத்துவ' கனவு ஆட்சி கட்டிலில் ஏறியுள்ளதையும், அவர்களை முறியடிக்க அவர்கள் பாணியிலான நீண்டகால செயல்திட்டமும் அதற்கான தியாகமும் தேவை என்பதை எடுத்துரைத்தார்.


குறைந்தபட்சம் முஸ்லீம் செய்தியாளர்களை ஒருங்கிணைக்கும், உலகிற்கு உண்மை செய்திகளை எடுத்துச் சொல்லும் நம்பகமாகதொரு ஊடக கட்டமைப்பு விரைவில் கட்டமைக்கப்பட வேண்டிய அவசியத்தை ஆதாரங்களுடன் வலியுறுத்தி பேசினார்.


களத்திலிருந்து
S. அப்துல் காதர் & அதிரை அமீன்