உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, January 22, 2015

துபையில் போக்குவரத்தை நிறுத்திய பூனைக்குட்டி!

பொதுவாக போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்திணருகின்ற மாநகரம் துபை. அதிலும் நேற்று பரபரப்பான வியாழன் இரவுடன் தற்போது துபையில் நடைபெற்று வரும் 'வர்த்தக திருவிழா' கூட்டமும் கூடுதலாக இணைந்து கொள்ள துபை சாலைகளில் போக்குவரத்தின் நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை நீங்களே உங்கள் மனக்கண் முன் கொண்டு வாருங்கள்.




நேற்றிரவு சுமார் 10.15 மணியளவில், மிகவும் பரபரப்பாக காணப்பட்ட நைஃப் சிக்னலில் தான் குட்டிப்பூனை ஒன்று புகுந்து போக்குவரத்தை களேபரப்படுத்தியது. சிக்னலில் நின்று கொண்டிருந்த கார்களுக்கடியில் புகுந்து பயத்தில் அங்குமிங்கும் ஓடிய பூனைக்குட்டியை காப்பதற்காக போக்குவரத்து போலீஸார் முதல் பாதசாரிகள் வரை அதனுடன் போராடி பிடித்து வெளியே விட அது மீண்டும் பழையபடி வாகனங்களுக்கு அடியில் சென்றது.

இந்த குட்டிப்பூனையை வாகனங்களில் அடிபடாமல் காக்கும் போராட்டத்தால் நைஃப் போலீஸ் நிலையத்தை ஒட்டியுள்ள சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்ததும், வாகன ஓட்டிகள் பொறுமையாக பூனைக்குட்டி மீண்டும் பிடிபடும் வரை பொறுமையுடன் காத்திருந்து சென்றதும் சிலிர்ப்பான சம்பவமாக அமைந்தது.

ஒருவழியாக பூனைக்குட்டியை பிடித்து விட்டாலும் அந்த பூனைக்குட்டியை படம் புடிக்க முடியலியே என்ற ஆதங்கத்துடன்...

மதினாப்பா பேரன்

No comments:

Post a Comment