உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, February 25, 2015

08.03.2015 அன்று காரைக்காலில் மார்க்க விளக்க நிகழ்ச்சி



தவ்ஹீத்வாதிகளே! வாதப்பிரதிவாதங்களைக் களைந்து அகீதாவில் தெளிவுபெற முன்வாருங்கள்

27.02.2015 வெள்ளி அன்று ராசல்கைமாவில் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி




அன்பார்ந்த UAE வாழ் சகோதரர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.....


இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி, 27 பிப்ரவரி' 2015 அன்று ராசல்கைமா, அல் நக்கீல் ஏரியாவில் உள்ள வீனஸ் டீலக்ஸ் ரெஸ்டாரென்ட் முதல் மாடியில் இன்ஷாஅல்லாஹ் நடைபெறும்.

இலங்கையைச் சேர்ந்த மவ்லவி. T.முஹம்மது நாஸர் அவர்கள் அல் அகீதா அஸ் ஸஹீஹா ( இஸ்லாத்தின் தூய அடிப்படை கொள்கைகள் ) என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள்.
  • வாழ்வில் வணக்கம் மட்டும் போதாது, வாழ்வே வணக்கமாய் தேவை
  • அல்லாஹ்வின் விருப்பமும் நபியவர்களின் வழிகாட்டுதலும்..... நமது விருப்பங்களையும் வாழ்க்கையின் பாதைகளையும் தீர்மானிக்க வேண்டும்.
  • உள்ளங்களே! நம் வாழ்வின் ஒவ்வொன்றையும் தீர்மானிக்கும் சக்தி இஸ்லாமாக, அல்லாஹ்வாக இருக்கட்டும்
ஒவ்வோர் அசைவையும் இஸ்லாமாக மாற்ற முயற்சி செய்வோம் 
இன்ஷாஅல்லாஹ் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்..
 

with DUA's
Madukkur Thowheed Chartiable Trust
UAE

Thursday, February 19, 2015

துபையில் அடுத்த வாரம் முதல் இஸ்லாமிய அடிப்படை பாடத்திட்டம் துவங்குகிறது



Al Manar Basic Diploma in Islamic Studies- Start's From Next Week 27th Feb'2015


அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ் வ பரகாதுஹூ,

நாம் திட்டமிட்டபடி இன்ஷா அல்லாஹ் நமது இரண்டாம் பாடத்திட்டம் இந்த மாதம் 27-02-2015  இறுதி வாரத்தில் இருந்து தொடங்க உள்ளது ,அதன் விவரங்கள் பின்வருமாறு :-

بسم الله الرحمن الرحيم

Al Manar Basic Diploma in Islamic Studies

கால அளவு :- 6 மாதம்(3+3)

நேரம்  :- பிரதி வெள்ளிக்கிழமை காலை 7.00 முதல் 8.00 மணி வரை 

இடம்அல் மனார் சென்டர், அல் பரஹா

ஆசிரியர் : மௌலவி அப்துல் பாஸித் புஹாரி 

பயிற்று மொழி : தமிழ் 


திட்டங்கள் :-

*120 மாணவர்கள் மட்டுமே அனுமதி ,

* முன்பதிவு கட்டாயம்,

* அனைத்து தர கல்வியுடைய  மக்களுக்கும் ஏற்ற பாடத்திட்டம் , ஆண் பெண் இருவருக்கும் தனித்தனி இட வசதி.

பாடத்திட்டம் பற்றி :-

*அரபி மொழியுடன் இஸ்லாமிய அடிப்படை கல்விகளை தெளிவான குர்ஆன்  மற்றும் சுன்னாவின் ஆதாரங்களுடன் விளக்க கூடிய எளிய  பாடத்திட்டம் .

*இஸ்லாமிய கல்வியாளர்களால் ஏற்றுகொள்ளபட்ட 
பாடப் புத்தகங்களை கொண்டும்ஏற்றுகொள்ளபட்ட  கல்வியாளர்களின்  விளக்கங்களை கொண்டும் அமைக்கப்பட்ட பாடத்திட்டம் .

பாடத்திட்டங்கள் :-

ஆறு மாத கால இப்பாடத் திட்டம்  இரண்டு Semester - ஆக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு Semester -ம் மூன்று மூன்று மாதமாக நடத்தப்படும்.

முதல் Semester :- 3 Month

1.அரபி மொழிப் பாடம் 

-மக்கா உம்முல் குரா பல்கலை கழகத்தின் ஆரம்ப அரபி மொழி புத்தகத்தில் இருந்து நடத்தப்படும் பாடத்திட்டம் -

இதன் மூலம் அடிப்படை அரபி மொழியின் கல்வி அறிவை பெற முடியும் .

2.அகீதா தஹாவிய்யா 

இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை கொள்கைகள்  எளிய முறையில் தொகுக்கப்பட்டு  அனைத்து தரப்பு மார்க்க கல்வியாளர்களாலும் ஏற்றுக்கொள்ளபட்ட புத்தகம் 

-சிறந்த கல்வியாளர்களின் விளக்க குறிப்புகளோடு இப்பாடம் அமையும்-

3.சூரத்துல் ஹுஜ்ராத் விளக்க உரை 

இஸ்லாமிய மார்கத்தின் அடிப்படை சட்டங்களையும் முக்கிய ஒழுக்கங்களையும்  உள்ளடக்கிய சூரத்துல் ஹுஜ்ராத் விளக்க உரை 

-ஏற்றுகொள்ளபட்ட குர்ஆன்  விரிவுரையாளர்களின் விளக்க குறிப்புகளோடு இப்பாடம் அமையும் -


 இரண்டாம் Semester :- மூன்று மாதம்

1. அடிப்படை தஜ்வீத் சட்டங்கள் 

-மக்கா உம்முல் குரா பல்கலை கழகத்தின் ஆரம்ப தஜ்வீத் சட்டங்கள் புத்தகத்தில் இருந்து நடத்தப்படும் பாடத்திட்டம் -

2. உசூலுச் சுன்னா 

ஒவ்வொரு முஸ்லிமும் வாழ்வில் தெரிய வேண்டிய மார்க்கத்தின்  னைத்து துறைகளையும்  தெளிவான  முறையில் எடுத்துக்கூறும் பிரசித்தி பெற்ற கல்வியார்களில்  ஒருவரான இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்களின் முக்கிய புத்தகம் 


3.சூரத்துல் கஹ்ஃப் விளக்க உரை 

ஏற்றுகொள்ளபட்ட விரிவுரையாளர்களின் விளக்க குறிப்புகளோடு இப்பாடம் அமையும் .

வகுப்பு நடத்தப்படும் முறை :-

*ஒவ்வொரு மாணவருக்கும் Student ID card வழங்கப்பட்டு அவர்களின் Attendance  கண்காணிக்கப்படும் .

*பாடத்திட்டத்தின் புத்தகங்கள்  னைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் .

*6 மாதத்தின் முடிவில்  அல் மனாரின் சார்பாக மாணவர்களின் மதிப்பெண்  அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும்.

*வகுப்புகளுக்கு முன்னால் வரவிருக்கும் பாடத்தின்  பாடங்களும் குறிப்புகளும் மாணவர்களுக்கு E-Mail மூலமாக  அனுப்பப்படும் .

*மாதம் ஒருமுறை மாதத் தேர்வு நடத்தப் படும் .

*நடத்தப்படும் வகுப்புகளுடைய  Audio மாணவர்களுக்கு  அனுப்பப்படும்.

*வகுப்புகள் தொடர்ச்சியாக இடைவெளிகள் இல்லாமல் நடத்தப்படும் இன்ஷா அல்லாஹ்.

குறிப்புகள் :- 

இன்ஷா அல்லாஹ் இந்த மாதம் இறுதி வாரம் 27-02-2015 வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு சரியாக முதல் அறிமுக வகுப்பு அல்மனார் பரஹா சென்டரில் தொடங்கும்

-யார்  27-02-2015 -அன்று இன்ஷா அல்லாஹ் நடக்கவிருக்கும்முதல் வகுப்பில்  கலந்து கொண்டார்களோ அவர்களே இந்த பாடத் திட்டத்தில் தங்களை இணைத்து  கொள்ள முடியும் -

 -முன் பதிவு செய்தவர்கள் - 27-02-2015 -அன்று  நடக்கவிருக்கும் வகுப்பில்  கலந்து கொள்ள முடியவில்லை என்றால் தகுந்த காரணம்  வகுப்பின் ஆசிரியருக்கு தெரிவிக்க வேண்டும் , இல்லை என்றால் அவர்களாலும் இந்த வகுப்பை தொடர முடியாது -

வகுப்புகளில்  தவறாமல் கலந்து கொள்வது அவசியம் ,

*நேரம் தவறாமல் மாணவர்களின் வருகை அமைய வேண்டும் ,
...