பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!
கடந்த 10.1.2015 அன்று அதிரையில் ததஜ நடத்திய பொதுக்கூட்டத்தில், "இந்த ஊருக்குத் தவ்ஹீது வந்து 35 வருடங்கள் ஆகிவிட்ட பிறகும் பெண்களுக்கான மத்ரஸா இல்லாததால் ததஜ சார்பாக விரைவில் ஒரு பெண்கள் மத்ரஸாவை நாம் ஆரம்பிக்க இருக்கிறோம்" என்று ததஜவின் மாநிலச் செயலாளர்களுள் ஒருவரான அஷ்ரஃப்தீன் அறிவிப்புச் செய்தார்.
முஸ்லிம் மகளிருக்காக இன்னும் எத்தனை மத்ரஸாக்கள் நமதூருக்கு வந்தாலும் அவை வரவேற்கத் தக்கவையே. நாங்கள் மட்டுமே மார்க்கம் சொல்வதற்கும் போதிப்பதற்கும் ஒரே அத்தாரிட்டி என்று சிறுபிள்ளைத் தனமாகப் பிதற்றுவோர் நாங்கள் அல்லர்.
ததஜ பெண்கள் மத்ரஸா தொடங்குவதற்காக மகளிர் கல்வி மேம்பாடு அல்லது கல்விக் கூடங்கள் போதாமை போன்றவை காரணங்களாக வைக்கப்படாமல், அதிரை தாருத் தவ்ஹீத் நடத்தி வருகின்ற 'அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி'யில் தவ்ஹீதுக்கு எதிரானவை போதிக்கப்படுகின்றன என்ற அவதூறானக் குற்றச்சாட்டைக் காரணமாக அஷ்ரஃப்தீன் வைத்திருப்பதால் இந்தத் தன்னிலை விளக்க / விழிப்புணர்வுப் பதிவை நாங்கள் பதிய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டோம்.
தன்னிலை விளக்கம்:
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் தவ்ஹீது ஆலிமாக்களை உருவாக்குவதற்காகப் பயிற்றுவிக்கப்படும் காயல் 'அன்னை ஆயிஷா ஸித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி'யின் பாடத் திட்டம்தான் 'அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி'யில் ஆலிமாக்களுக்காகப் பயிற்றுவிக்கப்படுகின்றது. அதிரை ததஜ ஆதரவாளர்கள் குடும்பத்தில் ஆலிமா பட்டம் பெற்றுள்ள மகளிர் பலரும் எமது கல்லூரியின் மாணவிகளே.
விழிப்புணர்வு:
"ததஜ சார்பாக விரைவில் ஒரு பெண்கள் மத்ரஸாவை நாம் ஆரம்பிக்க இருக்கிறோம்" என்று அஷ்ரஃப்தீன் அறிவிப்புச் செய்திருப்பதால் அவருடைய 'தகுதி'கள் 'முன் அனுபவங்கள்' குறித்து விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் பெற்றோர்கள் உள்ளனர். அவற்றுள் சில:
1. அஷ்ரஃப்தீனைப் பற்றி குறிப்பிடும்போது, அவருடைய பெயருடன் 'ஃபிர்தவ்ஸி' என்று தவறாமல் ஒரு பட்டம் சேர்க்கப்படுகிறது. உண்மையிலேயே அவர் ஃபிர்தவ்ஸியாவில் பட்டம் பெற்றவரா? இல்லையெனில், ஃபிர்தவ்ஸியாவில் முழுமையாகப் பயின்று பட்டம் பெறாதவர்களின் பெயருக்குப் பின் 'ஃபிர்தவ்ஸி' என்று போடுவது கூடுமா?
2. மதுரையிலிருந்து அதிரைக்கு வந்து தற்போது கத்தீபு தொழில் செய்துவரும் அஷ்ரஃப்தீன், இதற்கு முன்னர் பணியாற்றிய அல்ஃபுர்கான் பெண்கள் மத்ரஸாவிலிருந்து விலக்கப்பட்டவரா? எனில், என்ன காரணத்துக்காக விலக்கப்பட்டார்?
3. தன்னோடு பணியாற்றிய ஆலிமா ஆஃபியா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) அவர்களின் விதவை அக்காவுக்கும் அஷ்ரஃப்தீனுக்கும் தொடர்பு ஏதும் இருந்ததுண்டா? எனில், அது என்ன விதமான தொடர்பு?
4. ஆலிமா ஆஃபியா அக்கா விவகாரத்தால் அஷ்ரஃப்தீனின் குடும்பத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லையா?
5. ஆலிமா ஆஃபியா அக்கா ஒரு கட்டத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா?
6. உடல் நலமில்லாமல் அல்லது தற்கொலை முயற்சியில் தோல்வியுற்று மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆலிமா ஆஃபியா அக்காவுக்கு ஆறுதலாக இருந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து, தலைவாரி விட்டு, உணவூட்டி உதவி செய்த, திருமணமான ஆண் யார்?
7. ஆலிமா ஆஃபியா அக்கா விவகாரம் பற்றி ததஜ தலைமை அஷ்ரஃப்தீனை விசாரணை செய்ததா? அதை வீடியோ பதிவு செய்து கொண்டதா?
8. அந்த விசாரணைப் பதிவு அஷ்ரஃப்தீனைப் பாராட்டுகிறதா? மிரட்டுகிறதா?
9. விசாரணையின் முடிவில் வழங்கப்பட்ட வரலாற்றுப் புகழ் மிக்க விசித்திரத் தீர்ப்பு என்ன?
போன்ற கேள்விகளுக்கான பதில்களை அஷ்ரஃப்தீன் தொடங்குவதாக அறிவித்துள்ள மத்ரஸா ஆரம்பிப்பதற்கு முன்னர் விசாரித்துத் தெரிந்து கொள்வது எல்லாருக்கும் - குறிப்பாக - பெண் மக்களின் பெற்றோருக்கு நன்மை பயக்கும்.
"ஒரு மூஃமின் ஒரே பொந்தில் தெரிந்துகொண்டே இருமுறை கொட்டுப்பட மாட்டான்" என்பது நபிமொழி.
இந்தப் பதிவு எங்கள் மீது கூடுதல் கடமையாக சுமத்தப்பட்ட விழிப்புணர்வுப் பதிவாகும். எங்கள் மீது கூடுதல் சுமைகளை சுமத்திவிடாதே! என்று அல்லாஹ்வை இறைஞ்சுகின்றோம்.
No comments:
Post a Comment